இருபது லட்சம்பேர் பார்த்த குறும்படம்!

காதல்கதைதான்
என்றாலும் இன்றைய இளைய இணையரின் ஈகோ வை மையப்படுத்தி அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள் குழுவினர் (20நிமிடம்) 

திரைமொழியும் இசையும், தொகுப்பும் பட்டுக் கத்தரித்த மாதிரி...நடிப்பும் மிக இயல்பு! 
வாழ்த்துகள் சொல்லி என் வலைப்பக்கத்தில் 
பகிர்கிறேன் நன்றி

இளமையான இனிய கதையை, படமாக்கிய குழுவினர் அனைவர்க்கும் – வாழ்த்துகள் 
முக்கியமாக இயக்குநர் –சீனிவாசஸ் அவர்களுக்கு.
நாம் எதிர்பார்க்கும் காட்சிகளைப் புரிந்து கொண்டு, அதைத்தாண்டித்தாண்டி யோசித்து வைத்த புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது!

நீங்களே பாருங்களேன் – 

இணைப்பிற்குச் செல்ல -

(கீழே பார்வையாளர் எண்ணிக்கையைப் பாருங்கள்,
 21லட்சத்தைத் தாண்டி விட்டது...)

(முதல்காட்சி மட்டும்தான். . .
 பிறந்தநாளை இரண்டுபேர் மட்டுமே கொண்டாடுகிறார்கள்?

நண்பர்கள் எல்லாம் லீவா நண்பா?)

3 கருத்துகள்:

  1. ஈகோ இன்றைய இளஞ்ஜோடிகளை பல சிக்கலுக்கு ஆளாக்கி விடும் வேர் அதை ஆரம்பத்திலேயே இருவரும் பிடுங்கி எறிந்து விடவேண்டும் விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை இதை இருவரும் உணரவேண்டும் இருவரில் யாரும் பெரியவர், சிறியவர் அல்ல இருவரும் இணைந்தாலே மூன்றாவதை உருவாக்க முடியும் அற்புதமான கருத்தை சொன்ன குறும்படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்

    குறையென்றால் அது டெலிவிசனை இடும் கிஷோர் அட நம்ம தலைவர் என்று சொல்வது சின்னத்தனமாக ஆகி விட்டது அவர்களும் சராசரி மனிதர்கள்தான் என்பதை பிரதிபலித்து விட்டார்கள்

    தளம் சென்று கண்டு கருத்துரையும் பதிந்தேன்
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. பார்த்தேன் ரத்தின சுருக்கமாக விபரித்திருக்கிறார்கள் மிக நன்று . பகிர்வுக்கு தங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு