கரிசல் திருவுடையான் -தனித்த குரலும், தாளமிடும் விரலும்!

கரிசல்  திருவுடையான்
“ஆத்தா ஒன் சேலை” என்னும்
தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத
தமிழர்கள் இருக்க முடியாது.
பாசத்தையும்
பணத்தால் அளக்கநினைக்கும்
இன்றைய நம் பணநாயகச் சமூகத்தில்,
ஏகாதசி பாடலில்
கரிசல் கருணாநிதி இசையில்,
திருவுடையான் குரலில்
“ஆத்தா ஒன் சேலை” 
பாடலைக் கேட்டவர்கள்
தாய்ப்பாசத்தை  எண்ணித்
தமக்குள் கசிவதைத் தவிர்க்க முடியாது!

அந்தக் குரல்,
”ஆத்தா ஒன் சேலை”யை
அனாதையாக்கிவிட்டு
நம்மைப் பிரிந்து போய்விட்டது!

அந்த மக்கள் கலைஞன் திருவுடையான் நேற்று (28-08-2016) சேலம் நிகழ்ச்சி முடித்து, வரும்போது சாலைவிபத்தொன்றில் அகால மரணமடைந்தான் என்னும் செய்தி காதுகளைத் தாக்கி என் இதயத்தை நொறுக்கியது! பாடல் கேட்கத் தொடர்க...

தொலைக்காட்சிப் பட்டிமன்ற ஒளிப்பதிவை நேரில் பார்க்க வருக!

  

   வரும்  05-9-2016 திங்களன்று காலை 9மணிக்கு       
     கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள                  
பட்டிமன்ற ஒளிப்பதிவுக்காக சென்னை வருகிறேன்.

27-8-2016 சனிக்கிழமை மாலை 6மணி,
தேனாம்பேட்டை கலைஞர் அறிவாலயத்தில் ஒளிப்பதிவு.

பார்க்க விருப்பமுள்ளோர் நேரில் வருக!

அச்சமில்லாத இளம் எழுத்தாளர் ரானா அய்யூப்!


 'குஜராத் வழிகாட்டுகிறது என்று முழங்கி, இந்தியா முழுவதும் இப்போது வழிகாட்டிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தில் முதல்வராக இருந்த காலத்தில் நடந்த திட்டமிட்ட அரசியல் கொலை, கலவரங்களை மூடி மறைத்து விட்டார்கள்' என்று சொல்லிச் சொல்லி ஓய்ந்துபோனார்கள் பலரும்.

பிரதம வெளிச்சம் இவர்களின் கண்களைக் 
கூசச் செய்துவிட்டது என்பது, இப்போது தெரிகிறது!

இதோ எவ்வளவு பெரிய குஜராத் குகைகளை இவர் காட்டுகிறார்! 

அச்சமில்லாத இளம்பெண் எழுத்தாளர் ஒருவர், இவற்றில் இறங்கிக் குடைந்து எடுத்து, ரத்தமும் சதையுமான நூலாகவும் கொண்டுவந்து வியப்பூட்டுகிறார். இல்லை இல்லை மோடிக்கே பேதி கொடுக்கிறார்.

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக குஜராத் மாநில உள்துறை அமைச்சராகவும் முதல்வர் மோடியின் வலது கரமாகவும் இருந்த அமித்ஷா கைதுசெய்யப் படக் காரணமான எழுத்து இவருடையது! 

புதிய கல்விக்கொள்கை பற்றிய சில கருத்துகள்..

“ I.T.I.உங்களுக்கு... I.I.T.எங்களுக்கு...”
--நா.முத்துநிலவன்--
இந்திய அரசு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் “வரைவு  தேசிய கல்விக்கொள்கை – சில உள்ளீடுகள்” என்றொரு அறிக்கையினை வெளியிட்டு, (தமிழில்99பக்கம்) இதுபற்றிய மக்கள் கருத்தைக் கேட்டுள்ளது.பார்க்க -

இதைப்படித்து முடித்ததும்,  நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில்,             
‘கத்தரிக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு
கைலாசம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு
வாழைக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு                   
வைகுந்தம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு” - என்று துக்க வீடுகளில் பறை இசைக் கலைஞர்கள் பாடக் கேட்டது நினைவிலாடியது. 

மோடி அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள “தேசிய” கல்விக் கொள்கையின்படி பாடுவதானால், வெகுசிலர் மிகப்பலரைப் பார்த்து,                        
“ஐ.ட்டி.ஐ உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு
ஐ.ஐ.ட்டி. எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு”-என்று பாடுவதாகவே படுகிறது! 
அதாவது, இந்தப் புதிய கல்விக்கொள்கை –இந்தத் திட்டத்தில் உள்ளபடியே- செயல்பாட்டுக்கு வந்தால் மேல்தட்டு வர்க்கத்தவர்க்கு மட்டுமே இனி உயர்கல்வி கிடைக்கும், உயர்கல்வி இனி, ஏழைக்கு எட்டாக்கனியாகவே போய்விடும்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாரதீ? (இந்தியாவின் 70ஆவது சுதந்திர தினக் கவிதை)


தாயின் மணிக்கொடி ஏற்றி,
தாழ்ந்து பணியச் சொன்னாய்!
கொடியேற்றிவிட்டு
மிட்டாய் தருகிறார்கள்!
மிட்டாய் தந்து பிள்ளை பிடிப்பதில்
எங்கள் தலைவர்கள் கில்லாடிகள்!

“பொழுதெலாம் எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு போகவோ? –நாங்கள்- சாகவோ?
என்றாயே பாரதி?
ஒரு நாடு
கொள்ளையடித்ததற்கே நீ
குமுறினாய்!
இப்போது
உலக நாடுகளின் கொள்ளைக்காடாய்
உனது இந்தியா..!
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாரதீ?

அழுதுகொண்டு இருப்போமா நாங்கள்
ஆண்பிள்ளைகள் அல்லமோ? –உயிர்- வெல்லமோ?”
என்றாய்,
ஆனால் நாங்கள் அழவில்லையே பாரதீ?
சிரிக்கிறோம்!
தாயின் நோயறியாக் குழந்தையாக..
சிரிப்பாய்ச் சிரிக்கிறோம்!

அறிவொளி இயக்க வெள்ளிவிழா இன்று!

இதோ நேற்று நடந்ததுபோல் உள்ளது!
ஆனால் 25ஆண்டுகள் ஓடிவிட்டன! சரியான மழையில் பெரும் ஊர்வலம்! அடித்துப் பெய்த மழைக்கு அசராமல், மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த அறிவொளித் தொண்டர்கள், புதிய கற்போர், ஒருங்கிணைப்பாளர்களின் பெரும் ஊர்வலம்! மழையை வரவேற்று ஊர்வல முழக்கம் விண்ணதிர எழுந்தது!
“வானம் எங்களை வாழ்த்துதே! வாழ்த்து மழை தூவுதே!” என்று! ஆண் பெண் குடும்பமாய்.. அலுவலர்களுடன் கலந்து உற்சாகப் பெருவெள்ளம்!
வருக வருக என அழைக்கிறோம்!
11-8-1992அன்று நிறைவுபெற்ற புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்திற்கு இப்போது(11-8-2016இன்று) 25வயது! வெள்ளிவிழா நடக்கிறது!
அறிவொளி இயக்கத்தி்ன் தாயான அறிவியல் இயக்கம், புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இதை எளிய விழாவாக, ஆனால் மகிழ்ச்சி பொங்கும் இனிய விழாவாக இன்று மாலை நகர்மன்றத்தில் ஏற்பாடு செய்துள்ளது!

என்னிடம் பரிசுபெற்ற மாணவியை விட எனக்கு மகிழ்ச்சி!



எத்தனையோ கல்லூரிகளில், நூற்றுக்கணக்கான மாணவ- மாணவியர்க்கு, அந்தக் கல்லூரி நிர்வாகிகள் தரும் பரிசுப் புத்தகங்களை மேடையில் வழங்கியிருக்கிறேன்.

ஆனால், முதன்முறையாக நான் கேட்ட கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்ன ஒரு மாணவியை மேடைக்கு வரவழைத்து, என் பையிலிருந்து ரூ.100 பரிசாகத் தந்தேன்.
எனக்குப் பெருமகிழ்ச்சி! அந்த மாணவிக்கும் பெருமை!
இனி, இதை என் பேச்சுகளிடையே தொடர எண்ணம்!

கபாலி – ரஜினிக்கு மரியாதையா? அவமரியாதையா?

வெற்றிப்படமா? தோல்விப்படமா?
ரஞ்சித் படமா? ரஜினி படமா?
அரசியல் படமா? வணிகப் படமா?

கபாலி பற்றித்தான் 
எத்தனை எத்தனை கேள்விகள்!

தினமணி நாளிதழ் தோல்வி என்கிறது
வைரமுத்து தோல்வி என்கிறார்.

“கபாலி யாருடைய முகம்? நேராகச் சொல்லுங்கள் ரஞ்சித்என 
தினமணி நாளிதழ்கேட்டிருக்கிறது (31-7-2016)

“ஆறிலிருந்து அறுபது வரை”, “முள்ளும் மலரும்” பட்டியலில் இப்போது வந்திருக்கும் அருமையான ரஜினி படம்,
சிவாஜிக்கு முதல்மரியாதை மாதிரி, ரஜினிக்கு கபாலி,
இதுதான் ரஜினிக்கு மரியாதை என்கிறார்களே? இது சரியா?