உலகம் ரொம்ப வேகமாத்தான் போவுது! -விடியோ பாருங்க..

அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது!
ஆனால்... எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பது
நமக்குத் தெரிவதிலலை அல்லவா?

1969இல் ஆர்ம்ஸட்ராங்கும், ஆல்ட்ரினும் நிலவில் இறங்கியபோது, கூடப்போயிருந்த காலின்ஸ் என்பவரைத் தரையில் இருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள்  “இந்த அனுபவம் எப்படி?” என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்-
“ஒரு நாளில் 4முறை சூரியன் உதித்து மறைவதைப் பார்த்தேன்“
(அதாவது பூமி சுற்றும் வேகத்தைப்போல 4மடங்கு வேகத்தில் அந்த விண்கலம்  “அப்பல்லோ-13(?)“ சுற்றியதைத்தான் அப்படிச் சொன்னாராம்!

இப்ப சூப்பர் ஃபாஸ்ட் பஸ், புல்லட் ட்ரெயின் எல்லாம் வந்தாச்சு..
(இன்னும் கொஞ்சநாளில் அரைமணிநேரத்தில் 500கிமீ. போய் சென்னை அமிஞ்சிக்கரை பாவா கடையில டீ குடிச்சிட்டு அடுத்த அரைமணி நேரத்துல வீட்டுக்கு சாப்பிட வந்திடலாம்..
என்ன ஒரே பிரச்சினை... துட்டு-டப்பு-காசு-பணம் வேணும்..)

ஜப்பானியத் திரைப்படம் “புல்லட் ட்ரெயின்” பார்த்தவங்களுக்கு நான் சொல்றது ஆச்சரியமாப் படாது  (இ்ல்லையா கஸ்தூரி..?)

சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நம்ம வீட்டுப் பரணியில கிடக்குற 40வருடம் முந்தி பள்ளிக்கூடத்துல படிச்சப்ப வாங்குன(?) ஆட்டோகிராஃப் புத்தகத்தை எடுத்துப் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா?
எனக்கு உண்டு-1970ல அதிராம்பட்டினம் காதர்மொகிதீன் உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படித்தபோது வாங்கினது இன்னும் இருக்கு...)

அந்த அனுபவம் வேணும்னா... இதப் பாருங்க..
என்ன ஒரு காமெடியா இருக்கு.. ???!!!

உலகம் ரொம்ப வேகமாத்தான் போவுது! இதப்பாத்தா தெரியுது!

தனது முகநூலில் எடுத்துப் போடடு எனக்கும் அனுப்பிய என் மகள் அ.மு.வால்கா(துபை), மற்றும் நெல்லை ராஜன் ஆகியோர்க்கு நன்றி..

சரி... விடியோப் படத்தைப் பார்க்கலாமா..
https://www.facebook.com/anbuvolga/posts/930731426942814
அல்லது -  
https://www.facebook.com/photo.php?v=808419199192347&set=vb.100000728228619&type=2&theater

9 கருத்துகள்:

 1. மனிதர்களெல்லாம் வேகமாக நடந்துகொண்டு வாகனங்களெல்லாம் மெதுவாகச் சென்றால் நீங்கள் சென்னை வந்துவிட்டீர்கள் என்று பொருள் என்று எங்கோ படித்த நினைவு...

  எல்லோருமே ஓடுகிறோம்..

  பதிலளிநீக்கு
 2. கண்டிப்பாக பாத்துடறோம்......பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.
  நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் உண்மையில் வேகமாகத்தான் செல்லுது வீடியோவை பார்த்து இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வீடியோ பார்த்தேன் ஐயா
  வியப்பு இன்னும் அடங்கவில்லை
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 5. அந்த படத்தோட you tube லிங்க் கொடுத்திருக்கலாமே அண்ணா!
  எனக்கும் ஆட்டோகிராப் எடுதுப்படிக்கிறது பிடிக்கும் அண்ணா!

  பதிலளிநீக்கு
 6. நீங்களுமா இப்படி பல்பு கொடுப்பீங்க ?

  பதிலளிநீக்கு
 7. ஐயா,

  வணக்கம்...
  நல்ல பகிர்வு...
  வீடியோவைப் பார்த்து ரசிக்கிறேன்...

  பதிலளிநீக்கு