வலைப்பக்க வாசகர்கள் மன்னிக்க...
“நாய்க்கு வேலை இல்ல, உட்கார நேரமில்ல“ என்னும் பழமொழி எனக்காகவே உருவானதோ என்னும் நினைவு கடந்த ஒருமாதமாக (நான் அரசுப்பணி ஓய்வு பெற்றதிலிருந்து) ஓடிக்கொண்டிருக்கிறது.
வரும் செப்டம்பர் ஏழு (07-09-2014-ஞாயிறு மாலை) புதுக்கோட்டையில் எனது 3 நூல்களின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...
புதுக்கோட்டையின் பிரபல கல்வியாளரும், சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினருமான என் இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் இந்த எனது நூல் வெளியீட்டுவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன....
(1) “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!”
( கல்விச்சிந்தனைகள், 16 கட்டுரைகளின் தொகுப்பு)
(2) கம்பன் தமிழும் கணினித் தமிழும்”
(இலக்கியச் சிந்தனைகள்,18 கட்டுரைகளின் தொகுப்பு)
(3) “புதிய மரபுகள்” (கவிதைத் தொகுப்பு)
(1993இல் கவிஞர் மீரா வெளியிட்டதன் மறுபதிப்பு)
ஆக 3 நூல்களின் வெளியீட்டு விழா... வரும் 07-09-2014-ஞாயிறு மாலை.
வெளியீடு -திரு.கதிர்மீரா அவர்களின் அன்னம்-அகரம் பதிப்பகம், தஞ்சை
(சிவகங்கையிலிருந்து செயல்பட்ட “வானம்பாடிக்கவிஞர்” மீரா அவர்களின் மகன், தந்தையார் காலமான பிறகு, அவர் செய்த நூல்வெளியீட்டுப் பணிகளைத் தற்போது தஞ்சையிலிருந்து தொடர்கிறார்)
இனிவரும் ஒரு மாதமும் அனேகமாக இந்தப் பணிகள்தான்...
சென்னை சென்று ஓவியர் திரு மருது அவர்களிடம் அட்டைப்படம் வரைந்து வாங்கலாம் என்றொரு யோசனை உள்ளது... பார்க்கலாம்..
(இடையில் ஆகஸ்ட்டு 15 சுதந்திர தினக் கலைஞர் தொலைக்காட்சிக்காக திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களுடனான பட்டிமன்றப் பதிவு வேறு உள்ளது)
எனவே.... எனது வாசக நண்பர்கள் பொறுத்தருள வேண்டும்..
பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி சொல்லவோ, நண்பர்களின் வலைபக்கப் படைப்புகளில் சென்று பின்னூட்டம் இடவோ இப்போது இயலவில்லை எனும் கூடுதல் தகவலுடன் அதற்காக என்னை மன்னிக்கவும் வேண்டுகிறேன்.
சரீ....
“அட என்னப்பா இதுக்கெல்லாம் போய் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு.. நாங்க நன்றியில்ல சொல்லணும் உன் தொல்லை ஒரு மாசத்துக்கு இல்லாததுக்கு”
எனும் சிலரின் “மனஓசை” கேக்குது... சரி..வுடுங்க...
அக்கம் பக்கம் இருக்குறவுங்க செப்-7 அன்று புதுக்கோட்டை வர இப்பவே குறிச்சு வச்சிக்கணும்னு கேட்டுக்கிறேனுங்கோ...
(அழைப்பிதழை அனைவர்க்கும் தனித்தனியே அனுப்ப விரும்புகிறேன்..
தங்கள் முகவரியை எனது மின்னஞ்சலுக்குத் தெரிவித்தால் நமது இந்திய நண்பர்களுக்கு, உறுதியாக எனது நூல்-வெளியீட்டுவிழா அழைப்பிதழை அனுப்பி வைப்பேன்)
எனது மின்னஞ்சல் - muthunilavanpdk@gmail.com
எனது செல்பேசி எண் - 94431 93293
அப்பறம்..?
பாக்கலாம்..
தற்காலிகமாக,
நன்றி வணக்கம்..
--------------------------------------------------------------------- .
நூல்வெளியீட்டு விழா திட்டமிட்டபடி சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துகள் ஐயா. ஓய்வு பெற்றபின்னர்தான் உங்களுக்கான உங்களுக்கே உங்களுக்கான பொழுதுகள் வாய்க்கப் பெறுகின்றன. எழுத்துடனான பந்தம் என்றென்றும் நீடித்திருக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குநூல்கள் வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு தயாராய் காத்திருக்கிறேன்
நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல நூல்கள் வெளியிடவும் தான்......
பதிலளிநீக்குபிரதர் சென்னை வந்தால் என்னை 90030 36166 என்ற எண்ணில் அழைக்கவும். இங்குள்ள நண்பர்களை நீங்க அவசியம் பார்க்கணும். மூன்று புத்தகங்கள் வெளியாவது மகிழ்ச்சியான விஷயம். மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். விழாவில் பங்கேற்க இயன்ற வரை நிச்சயம் முயல்கிறேன்.
பதிலளிநீக்குஎங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! தங்கள் புத்தக வெளியீட்டு விழா இனிதே நடக்கவும், தாங்கள் மேன்மேலும் எழுதவும்!
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஇந்தப் பழமொழி இங்கே உங்களுக்கு எதற்கு ஐயா!
எத்தனை சிறப்பு மிக்க செயலாற்றி வருகிறீர்கள்.
நினைக்கவே பெருமைதான் ஐயா!
திட்டமிட்டபடி நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக அமைய
என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
தங்கள் நூல்கள் வெளியீட்டு விழா
பதிலளிநீக்குவெற்றி பெற எனது வாழ்த்துகள்
உட்கார நேரமும்,பார்ப்பதற்கு வேலையுமாய் கொடுத்துவிட்ட புத்தகங்களின் வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆவலுடன் நூலகளை எதிர்பார்க்கிறேன் சார்.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநூல் வெளியீட்டு விழா வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசகோதரரே! கவலை வேண்டாம் புரிந்துணர்வுள்ளவர்கள் நாங்கள் எனவே, நீங்கள் நூல் வெளியீட்டு விழாவில் கவனம் முழுதையும் செலுத்துங்கள். அனைத்தும் சிறப்புற இத் தங்கையின் உளம் கனிந்த வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குஅய்யா....
பதிலளிநீக்குஓய்வு பெற்றுவிட்டீர்களா??
காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. கடந்த முறை புதுகை வந்தபோது 2 நாள் பொழுது ஓடுவதே தெரியாமல் ஓடிவிட்டது. சொன்னபடி வர இயலவில்லை.
நன்றி.
பாண்டியன்
புதுகை.
இவ்ளோ தன்னடக்கம் ஆகாது அண்ணா!!
பதிலளிநீக்குநூல்களை
நுகரும் நொடிக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்:) படங்கள் மருது வா? அட்டகாசமாய் இருக்குமே! ஜமாய்ங்க:)
மனஓசை வேறு யாரோடதோ போலிருக்கு:(
தங்களின் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமையவும், நீங்கள் இன்னும் பல நூல்களை வெளியிடவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
உங்க இந்த வலைப்பக்கத்தை காப்பி அடிச்சு என்னோட முகநூலில் வெளியிட்டுவிட்டேனே... இப்ப என்ன பண்ணுவீங்க.....
பதிலளிநீக்குநூல்கள் வெளியீடு என்பது பாராட்டத்தக்கவேண்டிய பெருமுயற்சியாகும். விழாவில் கலந்துகொள்வேன். சந்திப்போம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதுவக்க விழா என்ன ஆனது...
எவ்வளவு பிசி என்று புரிகிறது
ஏதும் பணிகள் இருந்தால் பகிரலாமே..