சென்னை-அருகில் இருக்கும் நண்பர்களுக்கு ஓர் அன்பான அழைப்பு

வலை நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி -மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் செந்தமிழ் அறக்கட்டளை’  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது.


புதியமாதவி எழுதி அண்மையில் (dec - 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் “பெண் வழிபாடு“ சிறுகதை நூலுக்கு சிறந்த சிறுதைக்கான விருது வழங்கப்பட உள்ளது.

2013-ம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய என் பெயர்நாவலும், திரு ஏக்நாத் எழுதிய கெடை காடுநாவலும் ஜெயந்தன் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாடக நூலுக்கான விருது திரு க. செல்வராஜ் அவர்களின் நரிக்கொம்புநூலுக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த சிறுகதை நூல்களுக்கான விருதுகள்புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடுநூலுக்கும், ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் என்கிற நூலுக்கும் வழங்கப்படுகிறது.
சிறந்த கவிதை     நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய தோட்டக் காட்டீதொகுப்பிற்கும்ஜான் சுந்தர் எழுதிய சொந்த ரயில் காரிதொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமா வின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் நாள், சனிக்கிழமை, மாலை சென்னை தி. நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.  மாலை 4.00 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், 5.30 மணிக்கு, ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் மனுஷா மனுஷாநாடகமும் நடைபெறும்.  இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 
 ---------------------------------------------------------------------------------------
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நண்பர்கள் கலந்துகொள்ளக் கேட்டுக்கொள்கிறேன் – நா.முத்துநிலவன்.
தகவல் அறிய புதியமாதவியின் வலைப்பக்க இணைப்பு - 

ஜெயந்தன் விருது - பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு 

http://www.puthiyamaadhavi.blogspot.in/2014/07/blog-post_21.html 
---------------------------------------------------------------------------------
நமது வலைநண்பர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான மும்பை எழுத்தாளர் புதிய மாதவி அவர்களின் கவிதைத் தொகுப்புக்கு நான் தந்திருந்த முன்னுரை படிக்க - http://valarumkavithai.blogspot.in/2014/01/blog-post_2809.html
----------------------------------------------------------------------------------------

11 கருத்துகள்:

 1. விருது பெறவிருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
  தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 2. விருது பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு

 3. வணக்கம்!

  இனிய பதிவினை இன்றளித்தீர்! கன்னல்
  கனியைக் கருத்தில் கலந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 4. சகோதரி புதிய மாதவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 5. ஜெயந்தன் மணப்பாறையின் பெருமை, ஒரு கொடுமை என்வென்றால் நான் சமீபத்தில் தான் அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன். புதியமாதவி அவர்களின் பக்கத்தை தாங்கள் ஒரு கட்டுரையில் பரிந்துரைததனால் படித்திருக்கிறேன், ஆழமான கருத்துக்கள் கொண்டவர்! விழா வெகு சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த அறகட்டளை நான் படித்த லக்ஷ்மி மெட்ரிக் பள்ளியில் செழுமையாக நடத்தபடுகிறது! அமைப்பாளர்கள் அப்பாவின் நண்பர்கள் அண்ணா! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா!

  பதிலளிநீக்கு
 6. மகிழ்ச்சி.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. புதிய மாதவி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ....! சகோ

  பதிலளிநீக்கு