பார்த்தாச்சா, சிரிச்சுட்டுப் போயிடணும்... அரசியல் பண்ணக் கூடாது...“இதுதான் அம்மா மெஸ்”

நான் இணையத்தில் நுழைந்த போது, நிறைய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள், ஏனெனில் பெரும்பாலும் அக்கப்போரே நிகழும் இணையத்தில் பாலைவனச் சோலை போல சிலபல இலக்கியவாதிகளும் உண்டு. அதிலும் “புரியும் தமிழில்“ பெரிய பெரிய விஷயங்களை எழுதும் வல்லமை கொண்டவர்கள் மிகமிகவும் குறைவு. இதைச் சொல்லி என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்ற -வெகுசில- நண்பர்கள் சொன்னது உண்மைதான் என்பதை விரைவிலேயே நானும் புரிந்து கொண்டேன்.
அதனால்தான் முகநூல், கூகுள் ப்ளஸ், மற்றும் ட்விட்டரிலும் இருக்கும் நான், அவற்றை வெகுவாகப் பயன்படுத்துவதில்லை. எனது வலையில் எழுதுவதை மட்டும் அவ்வப்போது அதில் போடுவதைத் தவிர...
ஆனாலும் அந்த ஒரு சில நண்பர்கள் ரசித்தவற்றை நானும் ரசித்தபோது இதை ஏன் நமது வலையிலும் மறுபதிப்புச் செய்யக் கூடாது என்று தோன்றியது. இதோ நான் ரசித்த சில படங்கள், செய்திகள்,
இதைப் பார்ப்பவர்கள் பாரத்தது, ரசித்து, சிரித்துவிட்டுப் போயிடணும் அவ்வளவுதான் 
இதற்குமேல் இதை ஆராய்ச்சி செய்து அரசியலாக்கிவிட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டு இங்கு 3 படைப்புகளை மட்டும் மறுபதிப்பாக இடுகிறேன்.
இவற்றை உருவாக்கியவர் யாரென்று தெரியவில்லை எனவே, இணையத்திற்கே இவற்றை சமர்ப்பணம் செய்கிறேன், நண்பர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதான் “அம்மா மெஸ்”!


2 கருத்துகள்:

  1. ஹா... ஹா...

    1 - Click செய்யாமலே படிக்க முடிகிறதே...!

    பதிலளிநீக்கு
  2. முக நூல் நண்பர்களில் அக்கப்போரே அதிகம் என்றாலும், ரசனையானவர்களும் உண்டு என்பதற்குச் சாட்சிகள் தாம் இவை... நமக்கும் ரசிக்கத்தெரியணும்ல...?

    பதிலளிநீக்கு