இந்தத் தலைப்பில்
ஒரு நீண்ட கட்டுரை எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக நெஞ்சுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது. கட்டுரை எழுது முன் பேசிவிடும் ஒரு
வாய்ப்பைக் காரைக்குடிக் கம்பன் கழகத்தார் எனக்குத் தந்திருக்கிறார்கள். வரும் 01-12-2012
சனிக்கிழமை மாலை, காரைக்குடிக் கம்பன் மணிமண்டபத்தில் என்னை இந்தத் தலைப்பில் பேச வரும்படி அழைத்திருக்கிறார்கள்.
எத்தனையோ –நூற்றுக்கும்
மேற்பட்ட- கட்டுரைகள் எழுதியாயிற்று, எத்தனையோ –மூவாயிரத்திற்கும் மேற்பட்ட-
மேடைகளில் பேசியாயிற்று. இதில் என்ன “முன்னோட்டம்“ என்கிறீர்களா? தலைப்புத்தான்
காரணம்.
தமிழ் இலக்கிய வரலாற்றைக்
கம்பனை விட்டுவிட்டு எழுத எந்தக் கொம்பனாலும் இயலாது. போகிற போக்கில் –சேக்கிழார்
போலும் மதவெறி பிடித்த புலவர்களை- தட்டிவிட்டுப் போவதுபோலக் கம்பனையும்
தட்டிவிட்டுப் போகலாம் என்று எண்ணுகிறவர்கள்தாம் ஏமாந்து போவார்கள்.
கம்பனை- “தீ பரவட்டும்” என்று
கொளுத்தியதும் தவறு.
தேரெழுந்தூரில் அவனைத் தெய்வமாக்கியதும் தவறு.
இரண்டையும் செய்தவர்கள், சென்னை உலகத் தமிழ் மாநாட்டின்போது கம்பனுக்குச சிலையும்
வைத்தார்கள்!
வள்ளுவன், கம்பன், பாரதி மூவரும் தமிழின் முப்பெரும்
மகாகவிகள். இதை நான் பல மேடைகளிலும் எனது கட்டுரைகளிலும் திரும்பத் திரும்பச்
சொல்லி வருகிறேன். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் கம்பனைப் பற்றிய ஆய்வுகள்
இடம்பெற வேண்டும் எனக் கோரி நான் எழுதிய கட்டுரை 17-05-2010 “ஜனசக்தி“ நாளிதழ் கடைசி முழுப்பக்கம் வெளியானது. இந்த வலைப்பக்கத்திலும் பார்க்கலாம் http://valarumkavithai.blogspot.in/2012/01/blog-post.html
நண்பர் பட்டிமன்றப் பேச்சாளர் இனியவனும் தனது வலையில்
அதை எடுத்து இட்டிருக்கிறார். http://iniyavanin.blogspot.in/2010/05/blog-post_26.html
கம்பனை ஒப்பிட்டு ஏராளமான ஆய்வுநூல்கள் வந்திருந்தாலும், “கம்பனும் கார்ல்மார்க்சும்“ எனும் தலைப்பில் இதுவரை வரவில்லை என்றே நினைக்கிறேன். நாம்தான் தொடங்க வேண்டும். இது மார்க்சிய வாதிகளுக்கு மட்டுமல்ல, கம்பனின் தமிழை உண்மையாக நேசிப்பவர்களுக்கும் நல்லதுதான் என்று நான் நம்புகிறேன்.
இது ஒரு புதியவம்புதான்.... கலகம்பிறக்காமல் நியாயம் இல்லையே!
ஆனாலும் நமக்குச் சரியென்று பட்டதைச் சரியென்று
சொல்லித்தானே பழக்கம்? அதைத்தானே மார்க்சும், பெரியாரும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறார்கள்? அவர்கள் வழியே இயங்குவோம்.
”மானுடம் வென்றதம்மா!” - என்று மன்னராட்சிக்காலத்திலேயே பாடிய மகாகவி கம்பனின் தமிழ் சரியான பார்வையோடு புரிந்துகொள்ளப் பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
”மானுடம் வென்றதம்மா!” - என்று மன்னராட்சிக்காலத்திலேயே பாடிய மகாகவி கம்பனின் தமிழ் சரியான பார்வையோடு புரிந்துகொள்ளப் பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
--------------------------------------
கட்டுரை உள்ள நம் வலைப்பக்க இணைப்புக்குச் சொடுக்குக -
http://valarumkavithai.blogspot.in/2013/03/blog-post_754.html
-------------------------------------------------------------------
கட்டுரை உள்ள நம் வலைப்பக்க இணைப்புக்குச் சொடுக்குக -
http://valarumkavithai.blogspot.in/2013/03/blog-post_754.html
-------------------------------------------------------------------
தனி மின்னஞ்சலிலும், தொலைபேசி வழி அழைத்தும் ஆலோசனைகள் சொன்ன நண்பர்கள், தோழர்களுக்கு எனது நன்றியைப் பேச்சு-கட்டுரை இரண்டையும் சிறப்பாகச் செய்வதில் காட்டுவேன்.
பதிலளிநீக்குமீண்டும் நன்றிகள்
அன்புடன்,
நா.முத்துநிலவன்
(பின்னூட்டம் இடும்போது, அந்தந்தப் படைப்பின் பக்கம் சென்று இடாமல், தனியே இடுவதால் வரும் சிக்கலிது... கொஞ்ச நேரத்தை நண்பர்கள் இதற்காகக் கூடுதலாகச் செலவிட்டால் இதைத் தவிர்க்கலாம்!)