ஏன் இந்தக் கொலைவெறி? -- பாடல்


ஏன் இந்தக் கொலைவெறி?
(இந்த “உலகப்புகழ்“ பெற்ற பாடலை இதே இசையில் கிண்டல் செய்து> பள்ளிவிழாவில் பாடவேண்டி மாணவர்கள் கேட்க எழுதித்தந்த பாடல்)

ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறிய்யா? – திருக்
குறள்நெறி தமிழில் இருப்பதும் தெரியலயா?

இனிக்கும் தமிழ்வகை மூனு! மூனு! - இப்பக்
கணினி சேர்ந்தா நாலு!
பெருந் தொகைய நீ நெனச்சு, நெனச்சு – சங்கக்
குறுந்தொகைய நீ மறந்தே!           
-- ஏனிந்தக் கொலவெறி கொலவெறி

பத்துப் பாட்டுக் கேட்ட மண்ணெ - நீ
குத்துப் பாட்டுல கொன்னே!
ஆங்கி லத்தை வாந்தி யெடுக்க
அன்னைத் தமிழை ஏன் தின்னே?
-- ஏனிந்தக் கொலவெறி கொலவெறி  

வெக்கம் மானம் யாருக்கும் கெடல - நீ
வெவரம் தெரிஞ்ச விடல!
பெத்த தாயின் சதைய உடல -மகன்
பிச்சுத் திங்கிற கதைய விடல?       
-- ஏனிந்தக் கொலவெறி கொலவெறி
----------------------------------(23-01-2012)---------------- 

13 கருத்துகள்:

 1. அன்பு நண்பரே தங்கள் வலைப்பக்கத்துக்கு இன்று தான் முதலாவதாக வருகிறேன்..

  மகிழ்ச்சி..

  நல்ல முயற்சி..

  சிந்திக்கும்விதமாச் சொன்னீங்க..

  பதிலளிநீக்கு
 2. தங்கள் இடுகையோடு தொடர்புடைய

  அடங்காத கொலை வெறி..

  என்னும் இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் நண்பரே.
  http://gunathamizh.blogspot.com/2012/01/blog-post_12.html

  பதிலளிநீக்கு
 3. நன்றி குணா.
  தங்களின் வலைப்பக்கமும் வந்தேன்.
  எனது “ஏனிந்தக் கொலைவெறி“ பாடலைவிடவும் தங்களின் “அடங்காத கொலைவெறி“ உரை ஆழமாகவும் அருமையான நையாண்டியுடனும் உள்ளது.
  தங்கள் பணியும் நமது தோழமையும் வளரட்டும்.
  நன்றியும் வாழ்த்துகளும்.
  நா.மு.

  பதிலளிநீக்கு
 4. குறுந்தொகை பத்துப்பாட்டுன்னு உங்கள் பட்டிமன்ற பேச்சு மறு ஒலிபரப்பு
  பார்த்தேன் சார் . ரொம்பவும் அருமையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 5. நன்றி நண்பரே,

  “திரைப்படத்திற்குப் பாட்டெழுதுவது நமக்குப் பிழைப்பு,
  கவிதை எழுதுவதுதான் என் வாழ்க்கை” அப்படின்னு வைரமுத்து சொல்வாரே - நாம வைரமுத்து இல்லன்னாலும், நமக்கும் இதுமாதிரிதான்... ஊடகங்களில் வரவேண்டியது நம் சமகாலக் கடமை, அது சமூகப்பிழைப்புக்கு,
  இந்தமாதிரி எழுதுறோம் பாருங்க அதுதான் நம் வாழ்க்கைக்கு.
  உங்கள மாதிரி உள்ளவங்க ரெண்டையும் பார்த்து என்ன சொல்றீங்களோ அதுதான் விமர்சனம்.
  மீண்டும் நன்றிங்க... வணக்கம்.

  பதிலளிநீக்கு
 6. முத்துநிலவன் அவர்களுக்கு

  இந்தக் கொலைவெறி ஏன் என்பதற்கு விடை வேறு எங்கோ இருக்கிறது என்று கருதுகிறேன்.
  இப்போது சந்தைப் பண்டமாக இந்தப் பாடல் மாறிவிட்டது என்றாலும், இப்படியான பாடல் எப்படி மலர்ந்தது என்று கொஞ்சம் யோசிக்கலாம்..
  நான்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழில் ஆங்கிலக் கலப்போடு திரைப்பாடல்கள் வந்து 'கதி கலக்கி' இருக்கின்றன. பல பாடல்களை அதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்ல முடியும்.
  ஹலோ மிஸ் ஹலோ மிஸ் தொடங்கி எத்தனை நடிகர்களுக்காக தங்கிலீஷ் பாடல்கள் வந்து சக்கை போடு போட்டிருக்கின்றன.
  சண்டே பீச், மண்டே சர்க்கஸ் என்ற சொற்கள் பெருகி இருக்கும் என்ன வேகம் சொல்லு பாமா (குழந்தையும் தெய்வமும்...) பாடல்..
  ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
  சிங் சிங் உனது பாடல் நான் (வணக்கத்திற்குரிய காதலி..) பாடலை என்ன சொல்வது?
  ஒரு முழு பாடலை சிவாஜி கணேசன் கவரவ நடிகராக நடித்த படப் பாடலில் அவருக்காக டி எம் எஸ் இப்படி பாடினாரே: ஐ வில் சிங் ஃபார் யூ, ஐ வில் டான்ஸ் ஃபார் யூ.. என்ன செய்வது?
  ஆங்கிலச் சொற்களை இட்டிலிக்குச் சட்டினி மாதிரியோ, பரோட்டாவுக்கு சால்னா மாதிரியோ அடித்துப் போட்டு நிமிர்த்தி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்..
  அது அந்த வயசு காலத்தில் பேச்சு வழக்கில் உள்ள மொழியில் புனையப்படும் பகடி, நகைச்சுவை ரசனை கொஞ்சம், ரவுசு கொஞ்சம், கோமாளி வேலை கொஞ்சம் இவ்வளவு தான்..

  ஆனால் இந்தப் பாடல் ஹிட் ஆனதற்கு அந்த ரிதம், பீட் அதாவது கட்டிப் போடும், சுண்டி இழுக்கும் லய சுகம் ஊடாடிக் கிடக்கிறது பாடல் முழுவதும்..

  எந்தப் பிரபல் பொருளையும் சந்தைப் படுத்துவோர் கொலைவெறியையும் சந்தைப் படுத்தினர். அது பாடல் எழுதியவன், பாடியவன், இசை அமைத்தவன் பிழையன்று..அமைப்பின் பிசகு.
  ஒய் திஸ் பண வெறி பண வெறி பண வெறி, பண வெறிடி என்று இருக்கிறது

  எனது தாழ்மையான கருத்து, இதனால் தான் மெல்லத் தமிழின் சாகும் என்று சொல்வது சரியன்று என்பது. வசனங்கள் எப்போதோ மாறிவிட்டன, நடுத்தர வர்க்கத்தின் மொழி வேகமாக மாறி வந்திருக்கும் கட்டம் இது. தமிழ் மட்டுமல்ல உலகமய காலத்தில் பல மொழிகளையும் ஆதிக்க மொழிகள் பாடுபடுத்திக் கொண்டிருக்கின்றன. அதைக் காப்பதான போராட்டம் நியாயமானது, ஆனால் அந்தப் போராட்டத்தை இந்தப் பாடல் ஏதோ மலினப்படுத்துகிறது என்று நாம் நினைக்க முடியாது..

  வாழ்த்துக்கள்..

  எஸ் வி வேணுகோபாலன்
  Venugopalan SV sv.venu@gmail.com

  பதிலளிநீக்கு
 7. மெல்ல தமிழினி சாகும் என்று ஏற்கெனவே எல்லாம் தெரிந்து தான் பாரதி பாடி சென்று விட்டான்.பாட்டின் அர்த்தம் தெரியாமல் பிள்ளைகளை ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் பெற்றோரும்,ஆண்டு விழாக்களில் ஆடவைக்கும் பள்ளி ஆசிரியர்களும் ,பணவெறி பிடித்து தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும் திரைப்பட துறையினரும் தொல்லைகாட்சி நிறுவனங்களும் இருக்கும் வரை கொலை வெறி இருக்கத்தான் செய்யும்.ஆதங்கத்தையும் கோபத்தையும் கூட யாரும் காட்டாத நிலையில் தங்களது கவிதை ஆறுதலாய் இருந்தது.........

  பதிலளிநீக்கு
 8. murugesh mu haiku.mumu@gmail.com
  9:58 பிற்பகல்

  பெறுநர் எனக்கு
  நல்ல சாடலான வரிகள்.
  அசத்திட்டீங்க...தோழர்.
  -மு.மு

  பதிலளிநீக்கு
 9. செல்வா,
  உங்கள் கருத்துக்கு நன்றி.
  ஏன் இந்த ஒரே கருத்தை ஐந்து அஞ்சல்களில் அனுப்பியிருந்தீர்கள்?

  நல்ல வேளை, நான் “வடிகட்டி” வைத்திருந்தது நல்லதாயிற்று.

  மு.மு.உங்கள் கடிதம் பார்த்து மகிழ்ந்தேன்.
  நா.மு.

  பதிலளிநீக்கு
 10. ஒரு வேளை கொலைவெறியின் பாதிப்பாக இருந்திருக்கும்.நன்றி......

  பதிலளிநீக்கு
 11. அனுப்புனர்: Karuppiah Ponnaiah pavalarponka@yahoo.com
  பதிலளி: Karuppiah Ponnaiah
  பெறுநர்: "நா.முத்து நிலவன்"
  தேதி: 2 பிப்ரவரி, 2012 8:25 பிற்பகல்
  தலைப்பு: Re: [வளரும் கவிதை] ஏன் இந்தக் கொலைவெறி? -- பாடல்

  ஆடுறமாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டைப் பாடித்தான் கறக்கணுமுங்கிற மாதிரி இந்தத் தலைமுறை போகுற போக்குலயே நம்ம கருத்தை ஊட்ட வேண்டியிருக்கு.. என்ன செய்றது? பத்துப் பாட்டு மிளிர்ந்த மண்ணுல குத்துப் பாட்டு மலிஞ்சு போச்சே.. வருத்தம் கலந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. //இனிக்கும் தமிழ்வகை மூனு! மூனு! - இப்பக்
  கணினி சேர்ந்தா நாலு!//...இனிக்கிறது!

  பதிலளிநீக்கு
 13. நன்றி கவிஞர் வெண்மணிச் செல்வன்,
  எப்படி இருக்கிறீர்கள்?
  எனது வலையில் இட்டிருக்கும் - “மேலாண்மை பொன்னுச்சாமியின் கொலை-சிறுகதை ஓர் ஆய்வு” என்னும் (தீக்கதிர் பொங்கல் மலர்-2012இல் வெளிவந்த) எனது கட்டுரை பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவல்.
  அப்பாவுக்கு எனது அன்பான வணக்கத்தைத் தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு