தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

புதன், 20 ஜூலை, 2016

ஏரிகளின் காதலர் பியூஷ் மனுஷ்-க்கு ஏனிந்தக் கொடுமை?

''சேலம் சிறையில் என் கணவரை 30 பேர் சேர்ந்து அடித்து உதைத்தனர்'' 

-- பியூஷ் மனுஷ் மனைவி கதறல்... 

யார் இந்த பியூஸ் மனுஷ்?  

ஏரிகளின் காதலருக்கு ஏனிந்தக் கொடுமை?

முக்கியத் தகவல்கள் - 

பியூஷ் மனுஷ் -
சேலம் தருமபுரி மாவட்டங்களில் பணியாற்றி வரும் 
சூழலியல் செயற்பாட்டாளர், விருது பெற்ற சமூக சேவகர். 

ஏரிகளை மீட்டு எடுத்தும்காடுகளை உருவாக்கியும் 
சாதனை புரிந்த முன்னுதாரண மனிதர்.

சேலம் சிறையில் காவல்துறையினரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சமூக சேவகர் "பியூஸ் மனுஷ்" -க்கு தோள் கொடுக்க சமூக வலைத்தள இளைஞர்படை தயாராகி வருவதாகச் செய்திகள் வருகின்றன. 


ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர், அவரது தாத்தா காலத்திலேயே தமிழகத்தின் சேலம் நகருக்கு குடிபெயர்ந்த வியாபாரக்  குடும்பத்தை சேர்ந்தவர் பியூஷ் மனுஷ்.

தனது சாதிப் பெயரை துறந்து மனிதத்தை குறிக்கும் 'மனுஷ்' என்ற பெயரை சேர்த்துக் கொண்டவர்.

பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சேலத்தில்தான். 2010ஆம் ஆண்டு அவரைப் போல்  சூழலியல் நண்பர் சிலருடன்  கை கோத்து, Salem Citizen's forum எனும் இயக்கத்தை தொடங்கினார்.

தர்மபுரியின் கஞ்சமலையில், நடந்து வந்த சட்டவிரோதச் சுரங்கத் தொழிலை எதிர்த்து, கூட்டுறவு காடுகள் திட்டத்தை தொடங்கி, 100 ஏக்கரில்,  1.30,000 மரக்கன்றுகளை  நட்டு ஒரு காட்டை உருவாக்கியவர்.

இவரின் கடின உழைப்பின் பலனாக உருவான அக்காட்டில் 
8 குளங்கள்,    2 ஏரிகள்,   17 தடுப்பணைகள்உள்ளன 
அதில் மூங்கில், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்ற -இயற்கையை சுரண்டாத வகையிலான- தொழில்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அது, மக்களுக்கான நீராதாரமாய் உள்ளது.

சென்னை, கடலூர் வெள்ளச் சேதத்திற்கு சேலம் மக்களை ஒன்று திரட்டி   35 கண்டைனர் முழுக்க தேவையான பொருட்களை சேலம் மக்களிடம் பெற்று சென்னைக்கும் கடலூருக்கும் இரவு, பகல் பாராமல் அனுப்பியது பியூஸ் மற்றும் சேலம் மக்கள் குழு.

சேலத்தில் நீர்ப் பிடிப்பு மலைகளான கவுத்திமலை, கல்வராயன் மலையின் கீழ் இரும்பு இருப்பதை கண்டு, அந்த மலைகளை தகர்த்து எறிந்து விட்டு அடியில் இருக்கும் இரும்பைக் எடுக்க முயன்ற ஜிண்டால் நிறுவனத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர்

இவரின் அரிய பணிக்காக 2015ஆம் ஆண்டிற்கான
CNN-IBN Indian of the year என்ற விருதை பெற்றுள்ளார்.

சேலத்தில் இதுவரையில் நான்கு ஏரிகள்(மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி), இரண்டு தெப்பக்குளங்களை (அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி) அழிவில் இருந்து மீட்டெடுத்து இன்று அந்தப்பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாக மாற்றியதும் இவர்களே!

வினுப்பிரியா , போலீசின் பொறுப்பின்மையால்தான்  தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, சேலம் எஸ்.பி. அமித்குமார் சிங்கை பொதுமக்கள் முன்னிலையில் பியூஷ் மன்னிப்பு கேட்கவைத்தார்.

இந்நிலையில்,  
சேலம், முள்ளுவாடி கேட் பகுதி ரயில் பாதையில்  பொதுமக்களுக்கு இடையூறு  இல்லாமல் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 8ஆம் தேதி போராட்டம் நடத்தினார். இதையடுத்து  அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
--------------------------------------------------------------------------------------
படம் மற்றும் தகவல்களுக்கு நன்றி - கூகுளார், 
நன்றி - http://thamizhselva.blogspot.in/2016/07/blog-post_19.html
-------------------------------------------------------------------------------------------------------------
“விநாசகாலே விபரீத புத்தி” 
என்கிறார்களே? அதுஇதுதானா?

“நல்லதுசெய்யத்தான் முடியல, 
கெட்டதையாவது செய்யாம இருங்கடா” 
(நல்லது செய்தல் ஆற்றீராயினும் 
அல்லது செய்தல் ஓம்புமின்”) என்று 
2000வருட முன்பே 
சங்கப் புலவன் சொன்னதும் இதைத்தானா?

5 கருத்துகள்:

 1. புதிய தலைமுறையில் இவரைப் பற்றி படித்திருக்கிறேன். என்ன அற்புதமான மனிதர்.அவரது சாதனைகளை பட்டியலிட்டுக் காட்டியமைக்கு நன்றி. அவருக்கு ஆதரவு தரவேண்டியது நமது கடமை

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லாபுதன், ஜூலை 20, 2016

  TN IS NOT WORTH......OUR PEOPLE DOESNOT HAVE SENSE...

  பதிலளிநீக்கு

 3. ஏனிந்த கொடுமை என்று கேட்டு அவர் என்னென்ன செய்தார் என்று லிஸ்ட் போட்டு சொல்லி இருக்கிறீர்கள் இப்படி எல்லாம் செய்வது "தமிழ்நாட்டில் குற்றம் "என்பது கூட தெரியாமல் இவர் இருந்திருக்கிறார். இவர் செய்த தவறுகளுக்கு இப்படி சிறையில் அடைத்து கொடுமை மட்டும் பண்ணி இருக்கிறார்கள் இனும் இவர் உயிரோடு இருப்பது போன ஜென்மத்தில் இவர் செய்த புண்ணியமாக இருக்கும்

  பதிலளிநீக்கு
 4. தமிழ்நாட்டில் இதெல்லாம் சேவையா என்ன? நல்லவராக சமூக அக்கறை கொண்டு நல்ல மனம் படைத்தவராக இருந்தால் அது தவறு பிழைக்கத் தெரியாத மனிதர்!!!

  இப்படி நம் தமிழ்நாட்டு அதிகாரிகள் இருப்பதால்தான் நல்ல மனம் இருந்தும் பலரும் சமூக சேவைக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள். பாவம் மனிஷ் இந்த அற்புதமான மனிதருக்கு நாம் எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டியது நம் கடமையே. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா/அண்ணா

  பதிலளிநீக்கு
 5. சமூக சேவை செய்தவரை சிறையில் அடைத்து துன்புத்துவதும் கொலை செய்தவருக்கு ராஜ வைத்தியம் தந்து பிரியாணி வாங்கி கொடுப்பதும் நமது தமிழ் நாட்டு காவல்துறை செய்யும் வேலை. யார் தூண்டினார் என்பதும் தெரியவில்லை.எதற்காக டித்தனர் என்பதும் தெரியவில்லை எல்லாம் மர்மம் அந்த ஆண்டவன்க்கு அடுக்காது..

  பதிலளிநீக்கு