முனைவர் பா.ஜம்புலிங்கம், பதிவர் கில்லர்ஜியைக் கௌரவித்து மகிழ்ந்தோம்

08-07-2015 புதன் மாலை நம் வீட்டில் ஒரு சிறிய பதிவர் சந்திப்பு நடந்தது. அபுதாபியிலிருந்து வந்த தேவகோட்டைப் பதிவர் திரு கில்லர்ஜி புதுக்கோட்டை வருவதாகச் சொன்னதும் நம் புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்க நண்பர்களையெல்லாம் அழைத்து அவரோடு பேசலாம் என்று திட்டமிட்டோம்.

மிகுந்த அன்போடு, தஞ்சைப் பதிவர்கள் கரந்தை ஜெயக்குமார் அய்யாவும், முனைவர் பா.ஜம்புலிங்கம் அய்யாவும், திருச்சி தமிழ்இளங்கோ அய்யாவும் வந்து சேர்ந்து கொள்ள, அந்தச் சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்தது.

(கடிகாரச் சுற்றில்.. நண்பர்கள் மகா.சுந்தர், வைகறை, மது(கஸ்தூரி),நான், கரந்தைஜெயக்குமார்(நடுவில்),முனைவர் ஜம்புலிங்கம், கில்லர்ஜி, தமிழ்இளங்கோ, செல்வா, ஜலீல்,மு.கீதா,ஏஇஓஜெயா,மாலதி,ஆர்.நீலா,மற்றும் மீனாட்சி
-------------------------------------------------------------------- 
இதில் கலந்து கொண்ட புதுக்கோட்டை நண்பர்கள் சார்பாக, அண்மையில் தமிழ்-விக்கிப்பீடியாவில் தனது 200ஆவது பதிவை முடித்திருக்கும் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களைப் பாராட்டி “இந்திய அரசியல் சட்டம்” எனும் நூலைப் பரிசாக வழங்கினோம்.

வெளிநாட்டில் இருந்துகொண்டே வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் பதிவர் கில்லர்ஜி அவர்களுக்கு எனது நூல்களை அன்புடன் வழங்கினேன்.

இதில் கலந்து கொண்ட புதுக்கோட்டை நண்பர்கள்-

தேவகோட்டை கில்லர்ஜி  http://killergee.blogspot.com
முனைவர்  B. ஜம்புலிங்கம் http://www.ponnibuddha.blogspot.com
கரந்தை ஜெயக்குமார்  http://karanthaijayakumar.blogspot.com
தி.தமிழ் இளங்கோ http://tthamizhelango.blogspot.com
கவிஞர்  முத்துநிலவன்  http://valarumkavithai.blogspot.com
ஜெயலட்சுமி, கல்வி அதிகாரி http://jayalakshmiaeo.blogspot.in
ஆசிரியை மு.கீதா http://velunatchiyar.blogspot.com
ஆசிரியர்  மது  ( கஸ்தூரிரங்கன்  http://www.malartharu.org
கவிஞர் வைகறை  http://kavi-vaikarai.blogspot.in
கவிஞர் . ஆசிரியர் மகா.சுந்தர்  http://mahaasundar.blogspot.in
ஆசிரியை மாலதி   http://malathik886.blogspot.in
மீனா என்கிற மீனாட்சி சுந்தரம்
கவிஞர் ஆர். நீலா
கவிஞர் செல்வா என்ற செல்வகுமார்
(வலைப்பதிவர் செ.சுவாதி அவர்களது கணவர்)
ஆசிரியர் அப்துல்ஜலீல்,
கவிஞர் சோலச்சி
மற்றும் என் துணைவியார் மல்லிகா, மகள்கள் அ.மு.வால்கா, மு.லட்சியா. (துபையில் இருக்கும் என் மகள் வால்கா, தன் குடும்பத்தினருடன் நேற்றுமுன்தினம்தான் -15நாள் விடுமுறையில்- புதுக்கோட்டை வந்திருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி)

இது பற்றிய விரிவான தகவல்களை  
அருமையான படங்களுடன் பின்வரும் தளங்களில் பார்க்க-
திரு தமிழ் இளங்கோ - (படச்சித்தர் என்று பட்டம் தரலாமோ?)
http://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post_9.html

திருமிகு மு.கீதா -
http://velunatchiyar.blogspot.com/2015/07/bloggers-meet.html

வந்திருந்த அனைவரும் 
மாநில அளவிலான 4ஆவது வலைப்பதிவர் சந்திப்பை, 
நமது மூத்த பதிவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, 
வரும் அக்டோபர் மாதம் 10ஆம்தேதி
(அதாவது 10-10-2015 சனிக்கிழமை) 
புதுக்கோட்டையில் நடத்தலாமா என்பது பற்றிப் பேசினோம்..
அதுபற்றிய இறுதி முடிவை மூத்த பதிவர்களிடம் கலந்து செயல்படுவது என்று முடிவெடுத்தோம்... விரைவில் பேசுவோம்.

இதில், எனது நோக்கமறிந்து செயல்பட்ட 
எனது அன்பான குடும்பத்தினர்-
(என் மூத்த மகள் அ.மு.வால்கா BA.BL.,MBA , என் துணைவியார் மு.மல்லிகா BSc PGDCA,  என் இளைய மகள் மு.லட்சியா BE ,உடன் நான்
படங்களுக்கு நன்றி  “புகைப்படச் சித்தர்” தி.தமிழ் இளங்கோ)
-----------------------------------

20 கருத்துகள்:

  1. பதிவர்களை ஒன்றாக பார்ப்பது மகிழ்ச்சி.
    இந்த வருடம் பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. இவ்வாறான ஒரு வாய்ப்பினை உண்டாக்கித் தந்த திரு கில்லர்ஜிக்கு முதல் நன்றி. நம் சந்திப்பை நல்லதொரு சந்திப்பாக அமைக்க உதவிய தங்களுக்கும் பிற நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தங்களின் அன்பு என்னை மென்மேலும் எழுத வைக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் மகிழ்ச்சி ஐயா... விரைந்து செயல்படுவோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. அனைவரையும் சந்தித்தது நிறைவான விசயம்

    வெளியிடப்பட்ட படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது
    எடுத்தது வெகு திறமையானவராக இருக்க வேண்டும்!
    தம+

    பதிலளிநீக்கு

  5. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்.

    என்பது திருவள்ளுவர் தரும் சேதி. அன்று உங்கள் இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் சந்திப்பு போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டும்..உங்கள் மூத்த மகள் பெயர் ‘வால்கா’ என்று கேள்விப்பட்டவுடன், ராகுல சாங்கிருத்தியாயனின் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூல் நினைவுக்கு வந்தது. வாழ்த்துக்கள்.

    என்னைப் பற்றியும்,, எனது பதிவினைப் பற்றியும் இங்கு சுட்டிக் காட்டி பாராட்டியதற்கு நன்றி

    த.ம.5

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜி மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கும்போது மகிழ்வாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. மீசைக்கார நண்பர் திரு கில்லர்ஜி அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் ஐயா
    அவரால் ஏற்பட்ட சந்திப்பு இது
    புதுகையில் தங்கள் அனைவரையும் சந்தித்த நினைவுகள் பசுமையாய் என்றென்றும் நெஞ்சில் நீடித்து நிற்கும் ஐயா
    நன்றி
    தம =1

    பதிலளிநீக்கு
  8. முன்னோட்ட பதிவர் சந்திப்பு . மகிழ்ச்சி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. நல் அறிஞர் சந்திப்பு
    நன்மையிலே முடிவுறும்
    நாளைய விடியல்
    நல்லதாகவே விடியட்டும்!

    பதிலளிநீக்கு
  10. சந்திப்பை மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஆஹா! அருமையான சந்திப்பு....மகிழ்வான தருணங்கள்...இல்லையா ஐயா...புகைப்படங்கள் அருமை....இதோ செல்கின்றோம் புகைப்படச் சித்தர் திரு இளங்கோ ஐயா அவர்களின் தளத்திற்கு....

    மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  12. பதிவர் மாநாட்டுக்கு ஒரு வெள்ளோட்டம்!
    சிறப்பன சந்திப்பு பற்ரி அறிந்து மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் அய்யா,
    புதுக்கோட்டை சந்திப்பு நல்லபடியாக நடந்தது மகிழ்ச்சியே,
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. கீதா மற்றும் கரந்தை ஜெயக்குமார் அண்ணா அவர்களின் பதிவுகளில் படித்தேன் அண்ணா.
    இனிமையான சந்திப்பு. படங்கள் அருமை அண்ணா. இளங்கோ ஐயாவின் தளம் பார்க்கச் செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. பெரிய சந்திப்புக்கு கட்டியம் கூறுவதுபோல்
    அருமையான மினி சந்திப்பு நடந்திருக்கிறது என
    நினைக்கிறேன்
    படங்களுடன் பகிர்வு அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அபுதாபி பதிவர் கில்லர்ஜி அவர்களை இன்று புலவர் இராமானுஜம் ஐயா அவர்கள் இல்லத்தில் சென்னைப் பதிவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சந்தித்து உரையாடினோம். புதுக்கோட்டையில் தாங்கள் முந்திக்கொண்டீர்கள்!
    - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு