சாகித்திய அகாதெமி நிகழ்ச்சி! வாய்ப்பிருப்போர் வருக!


 வணக்கம் நண்பர்களே!

நெடுங்காலம் கழித்து, சாகித்திய அகாதெமி நிகழ்ச்சி!

வாய்ப்பிருப்போர் வருக!

வர இயலாதோர், வருவோர்க்குச் சொல்லுக! 


இடையில் அய்யா சிற்பி அவர்களால்

ஓர் இணையவழி அகாதெமிக் கவியரங்கில் 

கலந்து கொண்டாலும்

நினைத்ததைப் பேச முடியாத நிகழ்ச்சி!

----------------------------------------

25ஆண்டுகளுக்கு முன்னதாக,

கவிஞர் பாலா அவர்களோடு, திருவனந்தபுரம் போய்,

சாகித்திய அகாதெமி நடத்திய

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனும் நான்கு மொழிப் படைப்பாளிகளுக்கான மண்டல வெள்ளிவிழா நிகழ்வில்

தமிழ் மொழியின் சார்பாக

கவிதைப் போக்குகள் பற்றிப் பேசினேன்.

நான் தமிழில் எழுதி, கவிஞர் பாலா அவர்களின் உதவியோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படித்த கட்டுரை அது!

(அதன் பிறகு சாகித்திய அகாதெமி விருதுக்கான முதற்கட்டத் தேர்வு நூல்களைத் தேர்ந்தெடுத்து 10நூல்களைப் பரிந்துரைக்கும் முதற்கட்ட நடுவர் குழுவில் இரண்டு முறை பணியாற்றி இருக்கிறேன். என்றாலும் அதை வெளியில் சொல்வது முறையல்ல என்பதால் சொல்லவில்லை)

இப்போது

தமிழ்க் கவிதையின் 

தற்போதைய போக்குகள் பற்றி..!

நன்றி – கவிஞர் தங்கம் மூர்த்தி!

          அவர் தலைவராக இருந்து சிறப்பாக நடத்திவரும்  

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கமும் சாகித்திய அகாதெமியும் 

நடத்தும் நிகழ்வில் என்னைத் தலைமையேற்க வைத்து,  

அவர் ஒரு தலைப்பில் பேசுகிறார்!

அவர் நினைத்திருந்தால், அவரே தலைமை தாங்கியிருக்க முடியும்.

இதைத்தான் வள்ளுவர் பணியுமாம் என்றும் பெருமை'  என்றார்!

அவரது உயரத்துக்கான காரணங்களில் இது முக்கியமானது.

மூர்த்தி என்றாலே நேர்த்தி என்பது பலரும் அறிந்ததே

இன்ன பிற பண்புகளால்,

உங்களுக்கான உயரம் 

இன்னும் காத்திருக்கிறது மூர்த்தி!

-----------------

சரி நண்பர்களே!

வாய்ப்பிருப்போர் வருக!

வர இயலாதோர் வருவோர்க்குச் சொல்லுக!

வணக்கம்.

--------------------------------------------------------- 

நமது 18-6-2025 புத்தக வெளியீடு பற்றி 

இன்னும் வலைப்பதிவு எழுத வில்லை!

படங்கள், காணொலியைப் பார்த்து, 

பதிவிட வேண்டும்.

அடுத்த வாரம் பதிவிடுவேன்.

-----------------------------------------------

“கீழடி அறிக்கையை முழுமையாக வெளியிடுக”! தொடர் முழக்க நிகழ்ச்சி

இந்திய ஒன்றியத் தொல்லியல் துறையே

'கீழடி' யின் தொன்மையைக் குறைக்காதே!

ஆய்வு அறிக்கையைத் திருத்தாதே!

எனும் கோரிக்கையை முன்வைத்து

த.மு.எ.க.ச. நடத்தும்

மண்டல அளவிலான தொடர்முழக்கம்!

(ஏற்கெனவே சென்னை, மதுரை மண்டலங்களில் நடத்தப்பட்டது

இப்போது திருச்சி மண்டல அளவிலான நிகழ்ச்சி)

------------------------------------- 

         தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்            கிழக்கு மண்டல நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்!

(திருச்சிராப்பாள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள்)

நிகழ்நிரல்

புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச அழைப்பு : -


மண்டல அளவிலான த.மு.எ.க.ச. அழைப்பு

 

 


---------------------------------------------------------------------------- 

இப்போது வந்திருக்கும் செய்தி - கீழடி போலப் பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைக்கக் கூடிய புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக் கோட்டை அகழாய்வுப் பணிகளை நிறுத்தப் போவதாக...!

இது தொடர்பான எனது மற்றொரு கட்டுரை படிக்க

புதுக்கோட்டையில் ஒரு கீழடி, பொற்பனைக் கோட்டை

இந்து தமிழ் நாளிதழில் வந்த எனது கட்டுரை பார்க்க

https://valarumkavithai.blogspot.com/2021/09/blog-post.html

(நன்றி - 03-9-2021 இந்து-தமிழ் திசை நாளிதழ)

------------------------------------------