நமது மதிப்பிற்குரிய அய்யா முனைவர் வெ.இறையன்பு இஆப அவர்கள் நமது ‘தமிழ்இனிது” நூலுக்கு அருமையானதொரு விமரிசனம் எழுதி சில வாரம் முன்பே எனக்கு அனுப்பியிருந்தார்கள்.
‘அய்யா, இதை ஏதாவது ஓர் இதழுக்கு அனுப்பலாமே?” என்ற என் கேள்விக்கு, ‘நான் ராணி வார இதழில் ஒரு ‘வாழ்வியல் தொடர்”எழுதி வருகிறேன். அதில் வரும். பொறுங்கள்” என்று பதில் தந்திருந்தார்.
இதோ இன்று வந்துவிட்டது!
நானோ, இன்று முற்பகலில், புதுக்கோட்டை தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய ‘தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் நினைவு போற்றும்” கருத்தரங்கில் புதுகை ஜெஜெ கல்லூரியில் பேசப் போய்விட்டேன்!
மதியம் கருத்தரங்கம் முடித்து, வெளியில்
வரும்போது, மதுரை நண்பர் முனைவர் ஞா.சந்திரன் அழைத்து,
‘அய்யா ‘தமிழ்இனிது” நூல் பற்றி இறையன்பு
அய்யா இவ்வார ராணி வார இதழில் எழுதி வந்து விட்டது பார்த்தீர்களா?” என்று கேட்டார். இன்ப அதிர்ச்சி!
கருத்தரங்கம் முடித்து, வரும்
வழியில் ராணி வார இதழை வாங்கிக் கொண்டு வந்து பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்தேன்.
இதோ அது –
-----------------------------------------------------------------------------------------------------------
அதோடு,
இன்றைய தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கில்
நான், ‘அன்னை முத்துலட்சுமி” பற்றிப் பேசிய ஒளிப்படங்களும் உடன்
உள்ளன.
அன்பு நண்பர்கள் கும.திருப்பதி தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் பற்றியும், பேரா.சா.விஸ்வநாதன் எழுத்தாளர் அகிலன் பற்றியும் எனது அன்புத் தங்கையும் ‘வீதி” கலைஇலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளருமாக கவிஞர் மு.கீதா, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றியும் பேசினோம் –
அந்தப் படங்கள் இதோ -
கவிஞர் மு.கீதா அவர்கள்
நான் தான் (!)
![]() |
பேரா .சா.விஸ்வநாதன் அவர்கள் |
![]() |
புலவர் கும.திருப்பதி அவர்கள் |
நன்றி –
தமிழ்வளர்ச்சித் துறையின்
புதுக்கோட்டை துணை இயக்குநர்
திருமிகு சீதாலட்சுமி் அவர்கள்,
மற்றும்
ஜே.ஜே.கல்லூரி நிர்வாகம்.
----------------------------------------------------------
மொத்தத் 'தமிழ் இனிது' புத்தகத்தையும் மூன்று பக்கக் கட்டுரையில் அடக்கும் முயற்சி! இறையன்பு ஐயாவின் இந்தப் பாராட்டுரை புத்தகத்தை இன்னும் மக்களிடம் சேர்ப்பிக்கும் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குவிழாப் படங்களும் அருமை ஐயா!
மகிழ்ச்சி அய்யா... 💓🙏
பதிலளிநீக்குமிக அருமையான நூல் மதிப்புரை.நூலுக்குள் இருக்கும் பல செய்திகளை நுணுக்கமாக அணுகி் திரு.இறையன்பு அவர்கள் விளக்கியிருக்கிறார்.தோழர் முத்துநிலவனுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் இந்த மதிப்புரை.வாழ்த்துகள் தோழர் முத்துநிலவனுக்கு.மனதாராப் பாராட்டியிருக்கும் திரு.இறையன்பு சார் அவர்களுக்கு வணக்கங்கள்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி சிறப்பு அண்ணா... எனக்காக உங்கள் நேரத்தை குறைத்துக் கொண்டீர்கள்.ஒரு தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான. உதாரணமாக நீங்கள் அண்ணா.கற்றுக் கொள்கிறேன் நன்றி அண்ணா
பதிலளிநீக்குஅதெல்லாம் ஒன்றுமில்லை தங்கை கீதா. நீங்கள் அடுத்தடுத்து இன்னும் பல உயரங்களை உயரச் சிகரங்களைத் தொடவேண்டும். உ ங்கள் அறிவு முயற்சியும் அதைச் சாதிக்கும். வாழ்த்துகள் மா
நீக்குதமிழ்இனிது நூலுக்கு அருமையான மதிப்புரை, படிக்க பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழர்
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குதங்களின் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா..
பதிலளிநீக்கு