எமது இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம்! பொதுவெளியில் பேசாப் பொருளில் பேச வருகிறோம்!

கரோனாக் காலத்தில் குவிய நிகழ்வாகத் தொடங்கி, பிறகு சென்னை தாம்பரம் தமுஎகச சார்பிலும், புதுக்கோட்டை திருக்குறள் பேரவை சார்பிலும் நேரில் நடத்தியிருந்தாலும், மாவட்டப் புத்தக விழாப் போலும் பொது நிகழ்வில் இத் தலைப்பில் பேசப் போவது இதுவே முதன்முறை!

வரும் 13-02-2023 திங்கள் மாலை இராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் எங்களது இலக்கியப் பட்டிமன்றம்! பொதுநிகழ்வில் இலக்கியப் பட்டி மன்றம்  என்று போடுவதே வியப்புக்குரியதாகி விட்டது, இதில் இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம் என்றால்..? எனவே நிகழ்வுத் தலைப்பில் ஆய்வு போய்விட்டது! ஆனால், பேச்சில் இலக்கிய ஆய்வே எழுந்து வரும்!

மக்களை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு கீழிறக்குவதாகப் பொது ஊடகதிரை, தொலைக்காட்சி - நிகழ்வுகள் நடப்பதைப் பார்த்து வருந்துகிறோம்! பொதுவெளியில், பழந்தமிழ் பேசும் சிலர் புதிய தமிழ் இலக்கியங்களை ஏற்பதில்லை, நவீன இலக்கிய வாதிகளில் பழந் தமிழில் என்ன இருக்கிறது என்று கேலி பேசுவோர் இருக்கிறார்கள்!

அவ்வளவு ஏன்பாரதியைப் பேசும் சிலர் பாரதிதாசனை ஏற்பதில்லை, பாரதிதாசனைப் பேசும் பலர் பாரதியை ஏற்பதில்லை! (பாரதிதாசன் நூற்றாண்டு நிகழ்வுகளில், மாட்டைக் கொண்டு வந்து மரத்தில் கட்டிய பேச்சாளர்களை நேரில் பார்த்த அனுபவம் நிறைய உண்டு எனக்கு!)

(1)  அரசியல் பொதுக் கூட்டங்களில் இலக்கியம் பேசிய அண்ணா, ஜீவா, கலைஞர், நாவலர்களின் வாரிசுகள் இன்று சுருங்கிவிட்டார்கள்.  (சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்தோர் அதிகமாகிவிட்டனர்!)

(2)  இலக்கியக் கூட்டங்களில் சமூகச் செய்திகளைச் சொன்ன அடிகளார் போலும் தமிழறிஞர்கள் இப்போது பட்டிமன்றம் பேசுவதில்லை!

(3)  பட்டிமன்றம் சிறக்கப் பேசுவோர் இலக்கியத்தை ஊறுகாயை விடவும் குறைவாகப் பயன்படுத்தி  நகைச்சுவை உணவையே  பரிமாறுகிறார்கள். (மதுக்கூர் ராமலிங்கம் போல இதில் விதிவிலக்குண்டு!)

(4)  இலக்கியத்தை மட்டுமே பட்டிமன்றப் பொருளாகப் பேசிவந்த கம்பன் கழகம், திருக்குறள் கழகம் போன்றவையும் பெரும்பாலும் இன்றைய சமூகத்திற்குத் தொடர்பில்லாத வகையில் பேசப் பழகிவிட்டனர்.

(5)  தமுஎகச, கலைஇலக்கியப் பெருமன்றம் முதலான சமூக அக்கறை கொண்ட இலக்கிய அமைப்புகளில் இலக்கியத் தலைப்புகளிலான பேச்சு குறைந்துவிட்டது. முக்கியமாக பழந்தமிழ் குறைந்தே விட்டது

(6)  எனவே தான், இலக்கியத்தை முன்னெடுத்து, சமகாலத்திற்கும் மது பழந்தமிழ் பயன்படும் என இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள ஒரு தலைப்பை யோசித்து முன்வைத்தேன்-  கரோனாக் காலத்தில் நான் பேசிய நூற்றுக்கும் மேற்பட்ட குவிய நிகழ்வுகளின் நிறைவாக இதை அறிமுகப் படுத்தினோம். அந்நிகழ்வின் வெற்றி தொடர்கிறது.

இதோ பொது நிகழ்வில் இதுவரை 

பேசாப்பொருளில் பேச வருகிறோம்

13-02-2023 திங்கள் மாலை 7மணி, இராமநாதபுரம் 

இராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்

அன்னைத் தமிழின் அடையாளம் யார்?

என இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றம் நடக்கிறது.

“தொல்காப்பியரே” என முனைவர் மு.பாலசுப்பிரமணியன்,

“வள்ளுவரே” என முனைவர் ஜெயங்கொண்டான்,

“கம்பரே” என முனைவர் மகா.சுந்தர்,

“பாரதியே” என முகவை இளமதி பானுகோபன்

ஆகியோர் வழக்காட,

நடுவராக

நா.முத்துநிலவன்

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருக! 

மற்றவர்கள் இதையே பகிர்ந்து உதவுக!!

--------------------------------- 

15 கருத்துகள்:

  1. மிகச்சிறப்பு அய்யா , நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகள்
    வரும்காலங்களில் இலக்கியத்தலைப்பிலான. பட்டிமன்றங்களில் இந்த எளியவனுக்கும் ஓர் வாய்ப்பு வழங்குங்கள் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நா.முத்துநிலவன்செவ்வாய், பிப்ரவரி 07, 2023

      பெயரில்லாதவர்க்கு எப்படி வாய்ப்பளிப்பது? தங்கள் பெயர்?

      நீக்கு
  2. ஆகா... ஆய்விலக்கியப் பட்டிமன்றம் கேட்கவே முகவைக்கு வரவேண்டுமென்கிற ஆசை முகிழ்க்கிறதே... தோழர். அன்பின் கனிந்த வாழ்த்துகள். சிறப்பான முன்னெடுப்பு. இன்னும் தொடரட்டும்.
    - மு.முருகேஷ்

    பதிலளிநீக்கு
  3. ஆகா ஆகா 👌 அண்ணா.. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  4. ஆகா! ஆகா! 👌 அண்ணா.. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் . முகவையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்கிறேன் அண்ணா.

    இதற்கு முன்பு கருத்திட்ட போது அனாமதேயராகப் பதிவாகியிருக்கிறது அண்ணா. கூகிள் செய்யும் மாற்றங்கள்!!

    பதிலளிநீக்கு
  5. வணக்கங்களும்.....வாழ்த்துக்களும்...🎉🙏👍

    பதிலளிநீக்கு
  6. சிறந்த முன்னெடுப்பு. ஆனால் தலைப்பு நான்கு பேரளவில் சுருக்குவது கடலைக் கடுகுக்குள் அடைப்பது போல. இதில் சாதாரணனும் சொல்லிடுவான் தமிழின் அடையாளம் திருவள்ளுவர் என. நன்றி🙏💕

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. இளவல்! ஆகா உங்கள் பெயரைச் சொல்லும்போதே இனிக்கிறதே! முடிவுக்கு வர காரணங்களை அடுக்குவதே இந்த இலக்கியப் பட்டிமன்ற நோக்கம் நன்றி

      நீக்கு
  7. சிறப்பு ஐயா.. அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லாஞாயிறு, மே 28, 2023

    Nice post thank you Samantha

    பதிலளிநீக்கு