“வேறுவேறு வண்ணப் பூக்கள் சேர்ந்த வாச மாலை நாங்கள்” என்பதே மதச்சார்பற்ற இந்தியாவின் அழகு! , மத
நல்லிணக்கமே இந்தியாவின் பலம்! இதுவே இன்றும் நம் பெருமை! சுதந்திர இந்தியா இப்போது தன் 70ஆம் ஆண்டில் நடைபோடும்போது இந்த மதச்சார் பின்மைக்குப் பற்பல அச்சுறுத்தல்
உருவானபோதிலும், தொடர்ந்து மதச்சார்பற்ற நாடாகவே இருந்து வருகிறது.
ஆனால், விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்திலிருந்து நாம்
பெற்றிருந்த மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்ற பார்வைக்கு முற்றிலும் முரணான
வகையில், பெரும்பான்மை வகுப்புவாத அடிப்படையில், மற்ற அடையாளங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு
இந்தியக் குடிமக்களின் மதரீதியான அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தும் ஒரு கருத்தும்
அரசியலில் ஒரு பிரிவினரிடையே உள்ளது. இந்த அரசியல்
பிரிவு விடுதலைக்குப் பிறகும் பல்லாண்டுகளாக நாட்டின் அரசியலில் மிகச்சிறிய
பிரிவாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. நாட்டின்
விடுதலைப் போராட்டத்திலிருந்து அது கிட்டத்தட்ட விலகியே நின்றிருந்ததும் அதற்கு
ஒரு காரணமாகும்.
எனினும் சமீப ஆண்டுகளில் இந்த அரசியல் பிரிவு வலுப்பெற்று வருகிறது. அரசியல் அமைப்புச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவும் இந்தியாவின்
உச்சநீதிமன்றம் வலியுறுத்திக் கூறியுள்ளதைப் போலவும், இந்தியா என்பது
மதச்சார்பற்றதொரு நாடு என்ற கருத்தை இந்தப் பிரிவு ஏற்றுக் கொள்வதில்லை; மாறாக, இதர மத நம்பிக்கை
கொண்டவர்களையும் மத நம்பிக்கையேதும் இல்லாதவர்களையும் விலக்கி, ஒதுக்கி வைத்து
விட்டு பெரும்பான்மை மதரீதியான, வகுப்புவாத ஒற்றை அடையாளத்தைக் கொண்ட, “ஒரே நாடு, ஒரே மதம்” எனும் இந்து ராஷ்ட்டிரா
கருத்தோட்டத்தையே அது தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
இந்த கருத்தோட்டத்திற்கு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க் (ஆர்எஸ்எஸ்) அரசியல்-தத்துவார்த்த
தலைமையை வழங்குவதோடு, பல்வேறு வடிவங்களில் அதை வெளிப்படுத்தியும் வந்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ்-இன் அரசியல்
அங்கமான பாரதிய ஜனதா கட்சி மக்களவையில் பெரும்பான்மை இடங்களை வென்று
ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்த்தும், மகத்தான விடுதலைப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட --இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ள-- இந்தியாவின் தொலைநோக்கிற்கு, முற்றிலும் நேரெதிரான இந்து ராஷ்ட்டிரா என்ற
கருத்தோட்டத்தை பரப்புவதற்கான முயற்சிகளுக்கு கணிசமான உந்துதலை பா.ஜ.க. வழங்கிவருகிறது.
அண்மைக்காலமாக முஸ்லீம், கிறித்துவ சிறுபான்மை மதப்பிரிவினர்
மீதும், பசுப்பாதுகாப்பு எனும் பெயரில் தலித்துகளின்
மீதும் நடத்தப்பட்டு வரும் தாக்குதல் அபாயம் அதிகரித்த
வண்ணமுள்ளது!
“இந்துராஷ்ட்ரா” கருத்தை --குறிப்பாக
அவர்களது ‘தேசியவாதம்’ என்ற
வகுப்புவாதப் பார்வையை-- ஏற்காதவர்களுக்கெதிராக நாளொரு
கொலையும் பொழுதொரு தாக்குதலும் அதிகரித்து வருகிறது
“பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்” எனும் சிந்தனை கொண்டதாக, மதச்சார்பற்றதொரு
மாநிலமாக நெடுங்காலமாக விளங்கிவரும் தமிழ்நாட்டை, சங் பரிவாரின்
பல்வேறு அமைப்புகளும் வகுப்புவாதத்தில் மூழ்கடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு
வருகின்றன. இந்த வகுப்புவாத முயற்சிகளைத் தடுக்க சமூக முற்போக்கு இயக்கங்கள் ஒன்று
சேரவேண்டியுள்ளது
அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கு எதிராகவும், அவை
வளர்த்தெடுக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக, அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து, நமது ஜனநாயகத்தின்
மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையை
உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்திய மக்களின் விரிவான ஒற்றுமையை வளர்த்தெடுப்பது
இன்றைய நமது அத்தியாவசியக் கடமையாகும்.
விரிவானதொரு மதச்சார்பற்ற மேடையை
உருவாக்க வேண்டிய அவசரத்தேவை இன்று உள்ளது. இந்த மேடையானது
பல்வேறு மதநம்பிக்கைகளைக் கொண்டவர்கள், அத்தகைய நம்பிக்கை
எதுவும் இல்லாதவர்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மதச்சார்பின்மை
நோக்கங்கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பே ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------------
தமிழக
மக்கள்
ஒற்றுமை
மேடை
–
புதுக்கோட்டை
தொடக்கவிழா
30-09-2018 ஞாயிறு மாலை 5 மணி
நகர் மன்றம், புதுக்கோட்டை
தலைமை கவிச்சுடர் கவிதைப்பித்தன் (திமுக
இலக்கிய அணி)
வரவேற்புரை - தோழர் மு.அசோகன் ஒருங்கிணைப்பாளர்
தொடக்கவுரை -கவிஞர் நா.முத்துநிலவன் ஒருங்கிணைப்பாளர்
---- சிறப்புரை ----
பேராசிரியர்
அருணன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
முனைவர் ஜெ.ராஜாமுகமது மாநில
(ஆலோசனைக்குழு)
----------------------
முன்னிலை ----------------------
மதிப்புமிகு மதிப்புமிகு மதிப்புமிகு
உ.சவரிமுத்து அமானுல்லா இம்தாதி தயானந்தசந்திரசேகரன்
(பங்குத்தந்தையார்) (தலைவர் ஜமாஅத் உலமா) (தலைவர்-சாயிமாதா
சிவமடம்)
--- வாழ்த்துரை ---
ஜனாப் எம்.லியாகத்அலி திரு
சேவியர், திரு சண்முக.பழனியப்பன்,
ஐங்கரன் அருண்மொழி, திரு எச்.ஸலாகுதீன், திரு ஏ.ஆர்.சுல்தான்,
எஸ்.ஏ.முகமதுஅஸ்ரப்அலி, திரு மு.கா.ஷாஜகான், திரு. எம். ஹக்கீம்
திரு வ.மனோகரன், கவிஞர் சந்திரா ரவீந்திரன், பாடகர் வெள்ளைச்சாமி
--------------------------
முன்னிலை
வகிக்கும் அமைப்புகள், தலைவர்கள்
(1) புதுக்கோட்டை வர்த்தகர் கழகம்,-
ஜனாப் சாகுல் அமீது
(2) இந்தியத் தொழிற்சங்க மையம்
– திரு மா.ஜியாவுதீன்,
(3) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
– திரு எஸ்.பொன்னுச்சாமி,
(4) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் – சகோ.சலோமி
(5) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – திரு
துரை.நாராயணன்,
(6) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – திரு.அ.மணவாளன்,
(7) தீண்டாமை ஒழிப்பு முன்னணி- திரு
அன்புமணவாளன்,
(8)
தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்கம் – திரு ஆர்.ரெங்கசாமி,
(9)
தமிழகத்
தமிழாசிரியர் கழகம் – திரு கும.திருப்பதி,
(10) தமிழ்நாடு
ஓய்வூதியர் சங்கம் – திரு ஜெகந்நாதன்
(11) ஓய்வுபெற்ற அனைத்துஆசிரியர் சங்கம் – திரு சரவணன்,
(12) முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் –சு.மதியழகன்
(13) கலைஇலக்கியப் பெருமன்றம் – திரு அண்டனூர் சுரா
(14) நாணயவியல்
கழகம் – ஜனாப் எஸ்.டி.பஷீர்அலி
(15) வாசகர்
பேரவை – பேரா.சா.விஸ்வநாதன்,
(16) பகுத்தறிவாளர்
கழகம் – திரு அ.சரவணன்
(17) அபெகா
பண்பாட்டு இயக்கம்- திரு மரு.ஜெயராமன்,
(18 மாற்றுத் திறனாளிகள் சங்கம் - திரு
சரவணன்,
(19) இந்திய மாணவர் சங்கம் – திரு விக்கி
மற்றும் கல்வியாளர், பல்துறை அறிஞர், எழுத்தாளர், ஊடகத்துறையினர், மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர், சமூகஆர்வலர், நகரப்பிரமுகர்கள் உரையாற்றுவர்
மதச்சார்பற்ற மக்கள்
ஒற்றுமை மேடையின் குறிக்கோள்கள்
1. மக்களிடையே
மதச்சார்பின்மைத் தத்துவங்களை எடுத்துச் செல்வதோடு, அனைத்து
வகுப்புவாத அமைப்புகளின் திட்டங்களுக்கு எதிராகவும் சிறப்பான வகையில் தலையிடுவது.
2. அனைத்து வகையான
வழிபாட்டுத்தலங்களிலும், நிறுவனங்களிலும் வகுப்புவாத சக்திகளின் நடவடிக்கைகளை ஒன்றுபட்டு, எதிர்த்துப்
போராடுவது.
3. மதச்சார்பின்மைக்
கண்ணோட்டத்தை வளர்த்தெடுப்பது; வகுப்புவாத கருத்துக்கள்
பரவுவதைத் தடுக்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் மாணவரிடையே நெருக்கமாகச்
செயல்படுவது.
4. மாணவர், இளைஞரிடையே மட்டுமின்றி
வர்த்தக பிரிவினர் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் வகுப்புவாத மயமாதலைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வது.
5. மத விழாக்களை வகுப்புவாத மோதல் களங்களாக மாற்றும் முயற்சியைத் தடுப்பது.
6. சாதிய அமைப்புகளை
வகுப்புவாத அமைப்புகளாக
மாற்றும் முயற்சிகளை தடுப்பது.
7. அனைத்து மக்களிடையிலும் பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளை
எடுத்துச் செல்வது.
8. பல்வேறு மதநம்பிக்கையுள்ளவர்களையும், அத்தகைய நம்பிக்கை
எதுவும் இல்லாதவர்களையும் ஒன்றிணைத்து அவ்வப்போது நிகழ்ச்சிகளை மாநிலம்
முழுவதிலும் நடத்துவது. மக்களிடையே
நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பது; அதன் மூலம்
சமூகத்திற்குப் பயனுள்ள நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வது.
--------------------------------------------------------------------------
ஒருங்கிணைப்பாளர்களின்
தொடர்பு எண்கள்
நா.முத்துநிலவன் - 9443193293,
மு.அசோகன் - 9443589606
------------------------------------
“சாதிமதங்களைப் பாரோம்!
அனைவரும் வருக!”
-----------------------------------------------------
குறிக்கோள்கள் சிறப்பு...
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துகள் ஐயா...