அண்ணல்
காந்தியின் 150-ஆவது
பிறந்த ஆண்டையொட்டி
ஆண்டு
முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்!
புதுக்கோட்டை
மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்
     புதுக்கோட்டை, அக்-01 அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஆண்டுமுழுவதும்
மக்கள் ஒற்றுமை மதநல்லிணக்க ஆண்டாக கொண்டாடுவது என புதுக்கோட்டை மாவட்ட மக்கள்
ஒற்றுமை மேடை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 
    புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை தொடக்கவிழா
ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திமுக
இலக்கிய அணிச் செயலாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன் தலைமை வகித்தார். 
        திரு இருதய ஆண்டவர் ஆலயப் பங்குத் தந்தை உ.சவரிமுத்து, புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத் தலைவர் மௌலவி
எம்.அமானுல்லா இம்தாதி, மச்சுவாடி சாயிமாதா சிவமடத்தின் தலைவர் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் ஆகிய முப்பெரும் சமயத்தலைவர்கள் முன்னிலை
வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார்.
      மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில
ஒருங்கிணைப்பாளரும் “காலந்தோறும் பிராமணியம் (எட்டுப் பகுதிகள்) உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களின் ஆசிரியரும், மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் அருணன் சிறப்புரையாற்றினார். 
    மாநில ஆலோசனைக்குழு
உறுப்பினர் ஜெ.ராஜாமுகமது மற்றும் திமுக சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் எம்.லியாகத்அலி, முன்னால் வர்த்தகர் கழகத் தலைவர் சேவியர், ஆம்.ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் ஐங்கரன் அருள்மொழி, எஸ்டிபிஐ தலைவர் ஸலாஹ_தீன், அகிலஇந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஏ.ஆர்.சுல்தான், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் முகமது
அஸ்ரப்அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் உஞ்சை அரசன், மு.கா.ஷாஜகான், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹக்கீம், அம்பேத்கார் மக்கள் இயக்கத் தலைவர் வ.மனோகரன்,  மருத்துவர்கள்  எட்வின், இரவீந்திரன், ராமதாஸ், அம்பேத்கார் பெரியார் மார்க்ஸ் பண்பாட்டு இயக்க நிறுவுநர் மரு.ஜெயராமன் ஆகியோர் உரையாற்றினர். 
        கூட்டத்தில் அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை
முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஆண்டுமுழுவதும் மக்கள் ஒற்றுமை மதநல்லிணக்க
ஆண்டாக கொண்டாடுவது. ஊர்தோறும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசளிப்பு
விழாக்களை மக்கள் ஒற்றுமை கலைவிழாக்களாக நடத்துவது, ஆண்டு நிறைவு
விழாவை மாவட்ட அளவில் மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவது அதில் புதுக்கோட்டையின் மக்கள் ஒற்றுமைச் சான்றுகளைத் திரட்டி ஒரு சிறப்பான “மக்கள் ஒற்றுமைக் கலைமலர்” வெளியிடுவது எனும் தீர்மானத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மாவட்டச்
செயலர் சகோதரி சலோமி முன்மொழிய, திருக்குறள் கழகப் பரப்புரையாளர் கவிஞர் சந்திரா ரவீந்திரன் வழிமொழிந்தார். 
      வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக கோவையில்
நடத்தவிருந்த ‘150-ஆவது காந்தி ஜெயந்தி மதசார்பின்மை பாதுகாப்போம்’ என்ற
கருத்தரங்கை திட்டமிட்ட இடத்தில் நடத்த விடாமல் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை புதுக்கோட்டை
மக்கள் ஒற்றுமை மேடை கண்டிப்பதோடு, கருத்தரங்கை கோவை சிவானந்தா சாலையிலேயே நடத்த தமிழக அரசும், காவல்துறையும்
அனுமதிக்க வேண்டும் எனும் தீர்மானத்தை, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் அ.மணவாளன் முன்மொழிய, தமிழ்நாடு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அன்புமணவாளன் வழிமொழிந்தார். 
    இவ்விரண்டு தீர்மானங்களும், கலந்து கொண்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட ---அனைத்து சமயத் தலைவர்கள், பல்வேறு சங்கங்கள், அமைப்புகளின் தலைவர்கள் உட்பட--- வருகைதந்த அனைவரின் கரவொலியோடு
ஏகமனதாக நிறைவேறின. 
       மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமை விழாக்களை நடத்த விரும்பும்
கல்வி நிறுவனம் மற்றும் ஊர் அமைப்பாளர்கள், மேல்விவரம் அறிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
நா.முத்துநிலவன், மு.அசோகன் இருவரையும் -94431 93293,
 94435 89606 ஆகிய செல்பேசி
எண்களில் தொடர்பு கொள்ளுமாறு  கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    முன்னதாக, வந்திருந்தோர் அனைவரையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.அசோகன் வரவேற்க, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் த.ஜீவன்ராஜ் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
       விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கு பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் சிறு நூல் வழங்கப்பட்டது, 
நிகழ்ச்சியில்
தமிழாசிரியர் கரு.சண்முகம், மாணவர் ஜனா ஆகியோர் மக்கள் ஒற்றுமைப் பாடல்களைப்
பாடினர்.
 
  
|  | 
| வரவேற்புரை - மு.அசோகன் (ஒருங்கிணைப்பாளர்) | 
|  | 
| தொடக்கவுரை - நா.முத்துநிலவன் (ஒருங்கிணைப்பாளர்) | 
|  | 
| தலைமை உரை - கவிச்சுடர் இரா.சு.கவிதைப்பித்தன் | 
|  | 
| வர்த்தகர் கழக முன்னாள் தலைவர் சேவியர் | 
|  | 
| அபெகா பண்பாட்டு இயக்கத்தலைவர் மரு.ஜெயராமன் | 
|  | 
| தொல்லியல் அறிஞர் முனைவர் ஜெ.ராஜாமுகமது | 
|  | 
| சாயிமாதா சிவமடத்தின் தலைவர்   தவத்திரு தயானந்த சந்திர சேகரன் அவர்கள் |  |  |  | 
 | 
 | 
|  | 
| ஜமாஅத் உலமா தலைவர் மௌலவி எம்.அமானுல்லா இம்தாதி அவர்கள் | 
|  | 
| திரு இருதய ஆண்டவர் ஆலயப் பங்குத் தந்தையார் உ.சவரிமுத்து அவர்கள் | 
|  | 
| தீர்மானம்-1, முன்மொழிந்தவர் - மாதர்சங்கம் சகோதரி சலோமி |  | 
|  | 
| வழிமொழிந்தவர் - திருக்குறள் கழகப் பரப்புரையாளர் சந்திரா ரவீந்திரன் | 
|  | 
| தீர்மானம்-2, முன்மொழிந்தவர் - அறிவியல் இயக்கம்  அ.மணவாளன் | 
|  | 
| வழிமொழிந்தவர் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி அன்புமணவாளன் | 
|  | 
| ஜமாஅத் தலைவர் லியாகத் அலிக்கு, ஆம் ஆத்மி அருண்மொழி... | 
 | 
|  | 
| அருண்மொழிக்கு,  இயூமுலீ முகமது அஸ்ரப் அலி... | 
|  | 
| முகமது அஸ்ரப் அலிக்கு, CPI நகரத் துணைச்செயலர் அ. ரமேஷ் | 
|  | 
| வர்த்தகர் கழக சேவியருக்கு, வி.சி.க. முகா.ஷாஜகான்... | 
|  | 
| வி.சி.க. ஷாஜகானுக்கு “வீதி” மு.கீதா... | 
|  | 
| அ.இ.மஜ்லீஸ் கட்சி ஏ.ஆர்.சுல்தானுக்கு திருக்குறள் கழகம் சந்திரா ரவீந்திரன்... | 
|  | 
| மனிதநேய மக்கள் கட்சி எம்.ஹக்கீமுக்கு ஏ.ஆர்.சுல்தான்...
 | 
|  | 
| மார்க்சியக் கம்யூனிஸ்டு் தலைவருக்கு  எம்.ஹக்கீம்.. | 
|  | 
| சிஐடியூ தலைவர் ஜியாவுதீனுக்கு மாதர்சங்கம் சலோமி... | 
|  | 
| தமிழாசிரியர் கழகத் தலைவர் கும.திருப்பதிக்கு ஜெகந்நாதன் | 
|  | 
| ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஜெகந்நாதனுக்கு AIIEA கணேசன்... | 
|  | 
| நாணயவியல் கழகத் தலைவர் எஸ்.டி.பஷீர்அலிக்கு  பேரா.விஸ்வநாதன் | 
|  | 
| பேராசிரியர் விஸ்வநாதனுக்கு மாணவர்சங்கத் தலைவர் விக்கி | 
|  | 
| பேரா.அருணனுக்கு வி.சி.க. மாநிலச் செயலர் உஞ்சை அரசன்.. | 
|  | 
| தொல்லியல் அறிஞர் முனைவர் ராஜாமுகமதுவுக்கு மரு.இரவீந்திரன்... | 
|  | 
| மருத்துவர் எட்வினுக்கு கவிச்சுடர் கவிதைப் பித்தன்... | 
|  | 
| மருத்துவர் இராமதாசுக்கு, த.ஜீவன்ராஜ் | 
|  | 
| த.ஜீவன் ராஜ்க்கு கவிஞர் சுரேஷ்மான்யா.. | 
|  | 
| மௌலவி அவர்களுக்கு, பங்குத்தந்தை அவர்கள்... இதுதான் இந்தியா! இதுதான் தமிழ்நாடு!
 | 
|  | 
| பங்குத் தந்தையார்க்கு, சிவமடத்தின் தலைவர்... “எல்லாரும் சமம் என்பது உறுதியாச்சு”
 | 
|  | 
| சிறப்புரை - பேராசிரியர் அருணன் அவர்கள் | 
|  | 
| நன்றி - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - த.ஜீவன்ராஜ் | 
-------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - செய்தியாளர் சு.மதியழகன்,      படங்கள் டீலக்ஸ் ஞானசேகரன்
 -------------------------------------------------------------------------------------------------------------
நிகழ்வின் காணொலி (YOUTUBE) இணைப்பு வேண்டுவோர்
எனது +91 9443193293 எனும் காண்செவி(வாட்சாப்) எண்ணிற்கு வருக!
--------------------------------------------------------------------------------------------------------------------  
 நம் நண்பர்கள், இதனைத் தமது
சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன்.
இது இன்றைய நம் காலத்தின் கடமை! 
 ------------------------------------------------------------------ 
வெளியீட்டுக்கு நன்றி -
தீக்கதிர் நாளிதழ்
“மேன்மை” மாத இதழ், அக்.2018 
----------------------------------------------------------------- 
 
 
சிறப்பு...
பதிலளிநீக்கு