சிறந்த நூல்கள், திரைப்பட- குறும்பட விருதுகளுக்கான அறிவிப்பு!


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 
மூன்றாவது ஆண்டாக, 
2018இல்,
 நவம்பர்-24 சனிக்கிழமை முதல் 
திசம்பர்-03 திங்கள்கிழமை வரை 
பத்துநாள்கள்
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 
சிறப்பாக நடக்கவுள்ளது.

புதிய விருதுகள் 
சிறந்த திரைக்கலைஞர்களை,
எழுத்தாளர்களைக் கௌரவிக்க
காத்திருக்கின்றன! 
முழுவிவரம் இதோ...


கடந்த ஆண்டு, 
சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு சிறந்த திரைப்படம், குறும்படங்களுக்கான 
புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!
எனவே,
2017இல் புதிய நூல் வெளியிட்ட 
எழுத்தாளர்கள், பதிப்பகங்கள்,
2017இல் புதிய படம், குறும்படம் வெளியிட்ட 
கலைஞர்கள் மகிழலாம்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் மட்டுமல்ல, 
வாசகர், ரசிகர்களும் இந்தச் செய்தியைப் 
பரவலாகக் கொண்டு சென்று 
சிறந்த படைப்புகளை உலகறியச் செய்ய 
அனுப்புங்க! அனுப்புங்க! அனுப்பிக்கிட்டே இருங்க!

ஆனா-
கடைசித் தேதி 
நவம்பர்-10, 2018க்குள் அனுப்ப உதவுங்க.

இனி விவரம் வெளிவந்த செய்தித் தாள்கள் இதோ-தி இந்து-தமிழ், தினமணி, தீக்கதிர் நிர்வாகத்திற்கும் 
இதனைச் செய்தியாக வெளியிட உதவிய செய்தியாளர்கள் 
 தோழர்கள் சுரேஷ், மதி, ம.மு.கண்ணன், மற்றும் 
செய்தியாளர் அனைவர்க்கும் நன்றியும் வணக்கமும்.
---------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக