இன்றைய நம் உலகமே, வெற்றிபெற்றவர்களின் பின்னால் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது, அவர்கள் எத்தகைய கேவலமான பின்னணியில் அந்த வெற்றியைப் பெற்றிருந்தாலும்!
ஆனால், தோல்விகளில்
இருந்துதான் பற்பல சாதனையாளர்கள் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை நுட்பமான பார்வையுள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும்!
குறிப்பாக நமது கல்விமுறை, தோல்வியாளர்களை உற்பத்தி செய்வதற்காகவே -அல்லது எப்படியாவது, என்ன அயோக்கியத் தனம் செய்தும் வெற்றிபெற வேண்டும் என்பதைக் கற்பிப்பதற்காகவே- பள்ளிகளை உற்பத்தி செய்கிறது!
இதிலும் குறிப்பாக, நம் கல்விமுறையில் தோற்றுப் போனவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள், ஆசிரியர்களைப் பழிவாங்கவே பயன்படுகின்றன.
எனவே வெற்றியில் மகிழ்வதும், தோல்வியில் துவள்வதுமே மாணவ உலகிற்கு அவர்கள் தரும் கொடை!
வெற்றிபெற்றவர், தோல்வியடைந்தவர் இருவரைப்பற்றியும் கவலைப்பட யாராவது இருக்கிறார்கள்! ஆனால், பள்ளியில் படித்தும் தேர்வே எழுதாமல் காணாமல் போனவர்களைப் பற்றி, இதுவரை யாரும் கவலைப் பட்டதில்லை!
|
புதுக்கோட்டை பதிவர் திருவிழாவில் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள். பின்னால்...திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள் ------------------------------------------------------ |
நுட்பமான தமிழறிஞரும்,
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநரும்,
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான ,
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்,
தேர்வெழுதாமலே காணாமல் போகும் நம் குழந்தைகளைப் பற்றிய ஓர் ஆய்வைத் தமது வாழ்விலிருந்தே
வரைந்திருக்கும் ஓவியம் அற்புதமானது!
படியுங்கள்,
நமது கல்விமுறை மேலும் புதிய வழித்தடத்தில் பயணிக்கட்டும்! அவர்கள் வாழ்க!