இளவரசன் மரணம் - கொலைதான்!


          தருமபுரி நத்தம் இளவரசன் கொலைதானோ எனும் சந்தேகம் –இந்தச் செய்தியை நேற்று மாலை- தொலைக்காட்சியில் பார்த்த உடனே எனக்கும் எழுந்தது. என்றாலும், இளவரசனது காதல் மனைவி திவ்யா, தன் தாயாருடன் போவதாகச் சொன்ன வார்த்தை எனக்கே இடியாக இறங்கியது. அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? அந்தக் கோணத்திலேயே இரவெல்லாம் தூக்கமில்லாமல்... யோசித்துக் கிடந்ததில், காலையில் எழுந்தவுடன் –செய்தித்தாள்களைக் கூடப் புரட்டாமல்- எழுதிய கவிதையை(?)த்தான்  உடனே வலையேற்றிவிட்டுப் போய்விட்டேன். 
அப்போதும் அவன் ரயிலில் அடிபட்டு இறந்ததாக நான் நம்பவில்லை...
அப்புறம் யோசித்துப் பார்த்ததில் ரயில்பாதையில் கிடந்தாலும் இளவரசன் ரயிலில் அடிபட்டு இறந்த்தாக எந்த மடையனும் நம்ப முடியாத அளவிற்கு அவன் உடல் பூ போலக் கிடந்ததை மறுபடி செய்தித்தாள்களிலும் இணையப்பக்கங்களிலும் மறுபடி பார்த்தேன்...
நமது தோழர் –தலித்திய இயக்கங்களில் சரியாகவும் கூர்மையாகவும் செயல்பட்டு வரும்- ஆதவன் தீட்சண்யா இதுபற்றி என்ன எழுதியிருக்கிறார் எனத் தேடியதில் அவரது வலைப்பதிவு சுள்ளென உறைத்தது. 
உண்மைதான். ஆதவன் கருத்தில் மட்டுமல்லாமல், அதை அவர் சொன்ன சொற்களின் உக்கிரமான வார்த்தை வெப்பத்திலும் நான் உணர்ந்துகொண்டேன்.
பல நூறு ஆண்டுகளாக நம் ரத்தத்தில் ஏற்றப்பட்டுவிட்ட அடிமைப் புத்தி இந்த விஷயத்தில் எனக்குள் செயல்பட்டு, நான் சரியான கருத்தைச் சரியானபடி பதிவு செய்ய விடவில்லை என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினேன்.
“தற்கொலைதான் என்னும் தொனி கவிதைக்குள் கலந்திருப்பதை நான் ஏற்றுக்கொண்டு, அதை இப்போது மாற்றிவிடும் கருத்திற்கு வந்திருக்கிறேன். இது ஒன்றும் தவறல்ல என்றும் நம்புகிறேன்.
தெளிவு படுத்திய என் தோழன் ஆதவனுக்கு நன்றி.
இளவரசன் கொலை என்னும் செய்தி இன்னும் சில நாள்-வார-மாதங்களில்(?) உறுதிப்படும். அதற்கு எத்தனை இழப்பு காத்திருக்கிறதோ தெரியவில்லை!
ஆனாலும் –
“உண்மை ஒருநாள் வெளியாகும் – அதில்
 உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும்
 பொறுமை ஒருநாள் புலியாகும் – அதற்குப்
 பொய்யும புரட்டும் பலியாகும்” 
                    -- பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்.

நன்றி தோழர் ஆதவன் உங்கள் உண்மையின் வெப்பம் தமிழர்களுக்கு சூடு சுரணையைக் கிளறிவிடட்டும். 
மீண்டும் நன்றி. தவறுக்கு மன்னியுங்கள்.
அன்புடன் நா.மு.
---------------------------------------------------- 


இளவரசன் தற்கொலையா? கொலையா?

இளவரசே!
அதற்குள் என்ன அவசரம்?
அரசாள வேண்டிய நீ
அதற்குள் ஏன் அவசரப்பட்டாய்?

உன்னைக் குழப்பவும்
உன்காதலைக் குதறவும்
ஓராயிரம் கதைகள்
இன்று நேற்றா...
ஈராயிரம் ஆண்டுகளாய்
இட்டுக் கட்டப்பட்டதுதானே
எம் நாட்டு வரலாறு?

லைலா மஜ்னு
சாஜகான் மும்தாஜ்
அம்பிகாபதி அமராவதி
வரிசையில்
இளவரசன் திவ்யா என
எழுதப்பட்ட வரலாறு
இப்படியா முடியவேண்டும்?
வாழ்ந்து வெற்றிபெற்றால்
வரலாற்றில் இடமில்லை என்று
இறந்துபோய்
வரலாற்றில் இடம்பிடிக்க
நினைத்தாயா?

தற்கொலை அல்ல இது
தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் எனில்
கொலை என்றல்லவா கூறவேண்டும்.
கொலையின் பின்னணயில்
குதிக்கும் குரங்குகளைப் பார்த்தே
கூறிவிடலாமே?

நீங்கள் இருவரும்
நெடுநாள் வாழ
நினைத்தவர் லட்சமிருக்க
ஒருசிலரின் ஊதுகுழலாய் மாறிய
உன் காதல் மனைவியின்
ஒரு வார்த்தையிலா நீ
உடைந்து போனாய்?

இரும்புக்கும் உடையாத
உன் இதயம்
இருங்க(கா)தலித் தண்டால்
உடைந்ததோ?

அவளை மாற்றவும்
உன்னைத் தேற்றவும்
புதிய வரலாறுகள்
புறப்படும்,
அதற்குள் எத்தனை
அப்பாவி திவ்யாக்களோ?
அநியாய அப்பாக்களோ?
அவசர இளவரசுகளோ?

எரிந்த குடிசைகள்
இழந்த சொத்துகள்
என்ன பாவம் செய்தன?
இன்னும் என்ன –
அடுத்த காதல் வரும்,
அடுத்த அழிவும் வரும்.
அந்தச் சாம்பலிலிருந்து
ஒரு புதிய பூ பூத்துவரும்.

உன் காதலி மாறலாம்.
நீ கூட ஏமாறலாம்.
வரலாற்றை மாற்றி எழுத
எந்த வன்முறையாலும் முடியாது.
அது புதிய காதலைத் தேடி
புறப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.
உன் சாவால் அதைத்தடுக்க
ஒருநாளும் முடியாது.
அதற்கு மொத்த வரலாற்றின்
ரத்த சாட்சியாக நீயும் இருப்பாய்.

-----------------------------------------------  

5 comments:


திண்டுக்கல் தனபாலன் said...
இந்தக் சாதிக் கொடுமை - மாற வேண்டிய மாற்றம் ஒவ்வொரு மனதிடமிருந்தும் தோன்ற வேண்டும்...
Raja Ganesh said...
நாம் ஒரு தலைமுறையால் தவறாக வழி நடத்தப்படுகிறோம் அல்லது ஒரு தலைமுறையை தவறாக வழி நடத்துகிறோம்...இத்தகைய சூழல் கவலை அளிப்பதையும் மீறி பயமளிக்கிறது
MUTHU NILAVAN said...
FACE BOOK COMMENTS -

Indira Palanichamy, Judi Jerald, Ramachandran Nedunjelian and 2 others like this.

Mohamed Meera nice
11 hours ago · Like

Anu Varatharajan : unfortunate happening. they made this as story not as history.
7 hours ago · Like

Indira Palanichamy: எம் மனதின் குமுறல்கள் தங்களது சொல் வீச்சுக்களாய்..
MUTHU NILAVAN said...
அனுப்புனர்: sa.tamil Selvan
பெறுநர்: MUTHU NILAVAN
தேதி:6 ஜூலை, 2013 8:28 PM
தலைப்பு:[வளரும் கவிதை] இளவரசன் தற்கொலையா?

நாம் தோற்றுப்போனோம் தோழா
MUTHU NILAVAN said...
இல்லை தமிழ்.
நாம் தோற்கவில்லை.
தோற்கக் கூடாது.
தோற்கவும் மாட்டோம்,
இது நமக்குப் பின்னடைவு என்பது உண்மைதான்.
ஆனால், உங்களைப்போல என்னைப்போல உண்மையை ஒத்துக்கொண்டு, திருத்திக்கொண்டு மீண்டும் உறுதியாக சரியாக சமநீதி நோக்கித் தொடர்வோர் எண்ணிக்கை உயர உயர நம் வெற்றியும் உறுதியானதுதான்.
நாம் வறட்டு வேதாந்திகள் அல்ல, சாபம் கொடுக்கவும், சாந்தியடையவும்.
நாம் விஞ்ஞான ரீதியாக உலகைச் செலுத்தும் உந்து சக்திகள்... நமக்குத் தோல்விவந்தால், அது... “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து“ குறள் கூறும் பின்னடைவுதான். உறுதியாக நடைபோடுவோம் தோழா...

5 கருத்துகள்:

 1. இளவரசன் மரணம் பற்றிய என் சக ஆசிரயைகள் சிலரது கருத்து என்னை அதிர்ச்சிக்குஉள்ளாக்கியது!சிலர் வித்யா தன் பெற்றோருக்கு அவமானம் தேடித்தந்துவிட்டதாய் குற்றம் சாட்டினர் அல்லது காதலனுக்கு துரோகம் இழைத்து விட்டதை புலம்பினர்.ஆனால் அவர்கள் பேச்சில் பலரும் சாதிமீறியதும்,அதற்கு கிடைத்த தண்டனையும் சரிதான் என்பதுபோலவும் ஒரு மறை பொருள் இருந்தது.அவர்கள் மாணவர்களிடம் சாதி பார்க்கமாட்டார்கள் என்று எப்படி நம்புவது!

  பதிலளிநீக்கு
 2. திண்டுக்கல் தனபாலன் said...
  இந்தக் சாதிக் கொடுமை - மாற வேண்டிய மாற்றம் ஒவ்வொரு மனதிடமிருந்தும் தோன்ற வேண்டும்...

  Friday, July 05, 2013
  Raja Ganesh said...
  நாம் ஒரு தலைமுறையால் தவறாக வழி நடத்தப்படுகிறோம் அல்லது ஒரு தலைமுறையை தவறாக வழிநடத்துகிறோம்...இத்தகைய சூழல் கவலை அளிப்பதையும் மீறி பயமளிக்கிறது

  Friday, July 05, 2013
  MUTHU NILAVAN said...
  FACE BOOK COMMENTS -

  Indira Palanichamy, Judi Jerald, Ramachandran Nedunjelian and 2 others like this.

  Mohamed Meera nice
  11 hours ago · Like

  Anu Varatharajan : unfortunate happening. they made this as story not as history.
  7 hours ago · Like

  Indira Palanichamy: எம் மனதின் குமுறல்கள் தங்களது சொல் வீச்சுக்களாய்..

  Friday, July 05, 2013

  sa.tamil Selvan said -
  தேதி:6 ஜூலை, 2013 8:28 PM
  நாம் தோற்றுப்போனோம் தோழா
  Saturday, July 06, 2013

  MUTHU NILAVAN said...
  இல்லை தமிழ்.
  நாம் தோற்கவில்லை.
  தோற்கக் கூடாது.
  தோற்கவும் மாட்டோம்,
  இது நமக்குப் பின்னடைவு என்பது உண்மைதான்.
  ஆனால், உங்களைப்போல என்னைப்போல உண்மையை ஒத்துக்கொண்டு, திருத்திக்கொண்டு மீண்டும் உறுதியாக சரியாக சமநீதி நோக்கித் தொடர்வோர் எண்ணிக்கை உயர உயர நம் வெற்றியும் உறுதியானதுதான்.
  நாம் வறட்டு வேதாந்திகள் அல்ல, சாபம் கொடுக்கவும், சாந்தியடையவும்.
  நாம் விஞ்ஞான ரீதியாக உலகைச் செலுத்தும் உந்து சக்திகள்... நமக்குத் தோல்விவந்தால், அது... “ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து“ குறள் கூறும் பின்னடைவுதான். உறுதியாக நடைபோடுவோம் தோழா...
  Saturday, July 06, 2013

  பதிலளிநீக்கு
 3. ஆம் சகோதரி... நுனிப்புல் மேயும் பொறுப்பற்றவர்களால்தான் தவறுகள் நியாயப் படுத்தப் படுகின்றன...
  இவர்களோடும் நாம் போராட வேண்டியிருக்கும் நம் நிலை எவ்வளவு சிக்கலுக்கு உள்ளாகிறது பாருங்கள்... ஆனாலும் “மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை விடுவதில்லை“ தானே? நமது பணிகள் தொடரத்தான் வேண்டும்... தொடர்வோம்.

  பதிலளிநீக்கு
 4. "உன் காதலி மாறலாம்.
  நீ கூட ஏமாறலாம்.
  வரலாற்றை மாற்றி எழுத
  எந்த வன்முறையாலும் முடியாது.
  அது புதிய காதலைத் தேடி
  புறப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்." என்ற
  அடிகளில் உள்ள உண்மையை
  எல்லோரும்
  ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்!

  பதிலளிநீக்கு
 5. இங்கு காதல்கள் காமமாக பார்க்கப்படுவதுதான் நம் சாபக்கேடு. இது நாடகக்காதல் இல்லை என்று நிருபித்து விட்டான் தம்பி என்றாலும் கொடுத்த விலை சரியானது இல்லையே அய்யா. உயிரோடு இருந்து தன் காதலின் அழுத்தத்தை ஆழத்தை சொல்லி இருக்கலாமோ என்றே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு