புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிக் கல்வித்துறையின் இணைய தளம்


               புதுக்கோட்டை மாவட்டப் பள்ளிக் கல்வித்துறைக்கென்று புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க-நடுநிலை-உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பற்றிய தகவல்கள், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த செய்திகள் இடம்பெறும்.
                புதுக்கோட்டை மாவட்டத்தின் முதன்மைக்கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றிருக்கும் முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் வழிகாட்டுதலில் நான் உட்பட்ட நண்பர்களின் குழு இதற்கெனப் பணியாற்றி வருகிறது.
               அய்யா அருள் முருகன் அவர்கள் நல்ல தமிழறிஞர், கூர்மையான தமழிலக்கிய ஆய்வாளர் மற்றும் நேர்மையான கவிஞர் என்பது குறிப்பிடத் தக்கது. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான “நீலகேசி“ பற்றி ஆய்வு செய்து இளமுனைவர் பட்டமும், நேமிநாதம் -இலக்கணநூல்- பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். சிறிது காலம் “காலச்சுவடு” பதிப்பகத்தில் நூல்வெளியீடுகளின் “தமிழ்நடை“சரிபார்ப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். வாசிப்பில் சுவைகண்டவர். கணித்தமிழிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
             ஆசிரியர்கள் மட்டுமின்றி நல்ல கல்வி வளர்ச்சியில் ஆர்வமுள்ள யாரும் தொடர்பு கொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

இணையத் தொடர்பிற்கு - http://pudhukaischools.com/

              இப்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கணினியும் கல்வியும் படைப்பாளிகளோடு இணைந்துவிட்டால் நமது தமிழ் நாடு முன்னேற்றப் பாதையில் விரைந்து, வேகநடைபோடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்லது நடக்கட்டும். நீங்களும் உதவுங்கள்.


1 கருத்து:

 1. மு.இளங்கோவன்
  புதுச்சேரி -
  அன்புள்ள ஐயா வணக்கம் முனைவர் நா.அருள்முருகனார் அவர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்
  தமிழ்ப்பற்றாளர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள். செய்திகள் ஆங்கிலத்தில் இருப்பது நல்லதுதான். தமிழிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
  ஆங்கிலத்தை விரும்பினால் பார்க்கும்படி செய்யுங்கள்.
  தமிழ்நாட்டு அரசின் தளத்தை முன்மாதிரியாகக் கொள்ளவும்

  அன்புள்ள
  மு.இளங்கோவன்
  புதுச்சேரி

  பதிலளிநீக்கு