இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது!




சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கூகுள்படிவ வழிப் பதிவுசெய்தோர், செல்பேசிக் குரல்வழிப் பதிவுசெய்தோர் என,  இதுவரை சுமார் 100பேர் பதிவு செய்துள்ளனர். எவ்வாறாயினும் வழக்கம்போல முன்பதிவு செய்யாமலேஉரிமையுடன்- வந்துநிற்கும் நண்பர்கள் ஒரு 25 பேராவது இருக்கும் என நினைக்கிறேன். (நாளை தெரியும் பாருங்களேன்!?!)


இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்றே அதைத் தெரிவு செய்துவைத்தோம். நம் அரசு இப்போது வேலைநாளாக அறிவித்திருக்கிறது. விடுப்புச் சிரமம் என முதல்நாள் வர இயலாதவர்கள் இரண்டாம்நாள் ஞாயிறு வரலாம். இதையும் முன்கூட்டியே எனக்கோ மு.கீதாவுக்கோ தெரிவித்தால் 
திட்டமிட நல்லதுதான்.

12.10.2019 காலை 8.30மணிக்கு வந்து சேர்வோரை சேர்த்து அழைத்துச் செல்ல ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிப் பேருந்து (புதுக்கோட்டைப் பேருந்து நிலையம் அருகிலுள்ள) இம்பாலா ஓட்டலின் எதிர்புறச் சாலையில் காத்திருக்கும். 
நம் நண்பர் மேனாள் சாகித்திய அகாதெமி உறுப்பினர்- அருமைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் தாளாளராகவும் முதல்வராகவும் உள்ள பள்ளி என்பதால் அது நமது பள்ளி! இரண்டாம் நாளும் இதேநேரம் பேருந்து புறப்படும்.


அதற்காக நேரம் தாழ்த்தி வந்தால் 9-00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிடும் பதிவுப் படிவம் நிரப்பித்தரும் முதல் 50பேருக்கு, சிறப்புப் பரிசுகள் நூல்களுடன் காத்திருக்கின்றன! (சஸ்பென்ஸ்!)

(தவற விடுபவர் புதுக்கோட்டை- திருமயம் நகரப்பேருந்தில் ஏறி 
10 நிமிடத்தில் ஜெஜெகல்லூரி வாசலில் இறங்கிவிடலாம்
Late is better than never)

இது வணிக நோக்கிலான முகாமல்ல. 
வளர்தமிழை நோக்கமாகக் கொண்டு நடத்தப் படுவது. 
எனவே தான் இரண்டுநாள் மதிய உணவு நான்கு வேளை தேநீர், பிஸ்கட், குறிப்பேடு, பேனாவுக்கு ரூ200 மட்டுமே வாங்க எண்ணியுள்ளோம். மாணவர் அருமை கருதி அதையும் பாதியாக்கியுள்ளோம்

நன்கொடை தருவோர் தரலாம்
(ஏற்கெனவே தந்திருப்போருக்கு நன்றி
முகாம் முடிந்ததும், வரவு-செலவு அறிக்கை இணையத்தில் தெரிவிக்கப்படும்.
மற்றவை நேரில் வணக்கம்.

பின்வருமாறு வல்லுநர்களின் வகுப்புகள் நடைபெறும் – 
பயன் பெற வருக! இணைய வசதியுள்ள மடிக்கணினி, செல்பேசி வைத்திருப்போர் எடுத்துவரவும்.
---------------------------------------------------------------------------
(வெளிமாவட்டத்திலிருந்து வருவோர், மற்றும் வல்லுநர்கள் 12.10.19 இரவு தங்க, நமது நண்பர்களின் வீடுகளில் ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி, இதுவும் ஒரு புதிய பண்பாட்டு முயற்சியே! இல்லையெனில் பொருளாதாரச் சிக்கல் எழும், பயிற்சிமுகாம் தடை படும்)
------------------------------------------------------------------------

12-10-2019 சனிக்கிழமை காலை 9-00 மணிக்கு பயிற்சி முகாம் தொடக்கவிழா! வாங்க!  வாங்க!
காத்திருக்கிறோம்!
அன்புடன்,
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்-2019, புதுக்கோட்டை
ஒருங்கிணைப்பாளர்கள் சார்பான தொடர்புக்கு
நா.முத்துநிலவன் - 94431 93293,   மு.கீதா – 96592 47363 
கணினித் தமிழ்ச்சங்கம், வீதி கலைஇலக்கியக் களம்
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம்  வகுப்புகள்
பயிற்சி வகுப்புகளும் அவற்றை நடத்தும் வல்லுநர்களும்
(1)  ஆரம்பநிலை கணினிப் பயன்பாடு அறிதல், வலைப்பக்க உருவாக்கம்
முனைவர் மு.பழனியப்பன்,  திண்டுக்கல் தனபாலன்,

(2) குரல்வழிப் பதிவேற்றம், கிண்டில், தமிழில்-பிழை திருத்தி,
நீச்சல்காரன் ராசாராம், கஸ்தூரிரெங்கன்

(3) முகநூல், இன்ஸ்டாகிராம், சுட்டுரை, புலனம்
யு.கே.கார்த்தி, ராஜ்மோகன்,

(4)QR-Code, Apps Download   (5) மின்னூலாக்கம், Pdf ஆக்கம்  
.ரேவதி, ஸ்ரீமலையப்பன், திவ்ய பாரதி   LK உதயகுமார், அரவிந்தன்,

(6) யூட்யூபில் பதிவேற்றல்வணிக வாய்ப்புகள்
எஸ்.பி.செந்தில்குமார்,   முனைவர் மலர்விழி மங்கையர்க்கரசி

(7) மின்சுவரொட்டி (ஃப்ளெக்ஸ் போஸ்டர்) தயாரித்தல்
எம்.எஸ்.ரவிராஜ்மோகன்,

விக்கிப்பீடியா பயன்பாடும், கட்டுரை எழுதப்பயிற்சியும்
பிரின்சு என்னாரெசுப்பெரியார், முனைவர் பா.ஜம்புலிங்கம், கரந்தைஜெயக்குமார்   

பார்க்க வேண்டிய குறும்படங்கள்
எஸ்.இளங்கோ,  புதுகை செல்வா (மாலை4மணிக்கு கூட்டஅரங்கில்)

( இரண்டாம் நாள் மட்டும்
வல்லுநர்கள் சிவ.தினகரன், பிரின்ஸ் என்னாரெசுப் பெரியார், எம்.எஸ்.ரவிமுனைவர் ஜம்புலிங்கம் இரா.வெங்கடேசன் ஆகியோர் இணைந்துகொள்வார்கள் எனவே விக்கிப்பீடியா வகுப்பு மட்டும் இரண்டாம் நாள் நடைபெறும்)

பயிற்சி முகாம் தொடர்பிற்கு  

நா.முத்துநிலவன்-9443193293, மு.கீதா-9659247363
-------------------------------------------------------------------------------- 

முக்கியமான பின் குறிப்பு-

மேற்காணும் இணையத் தமிழ்ப் பயிற்சிக்கான குறிப்பேடு ஒன்று 
12 பக்கத்தில் தயாராகிறது. இதைத் தயாரித்து வழங்கும் பணியை மேற்கொண்டிருப்பவர்-
வழக்கம்போல 
நமது வலைச்சித்தர்
திண்டுக்கல் திரு தனபாலன் அவர்கள்!
இதற்காகவே நண்பர்கள் வரலாம்!
------------------------------------------------------------------------------------ 
அழைப்பிதழ் காண

4 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி ஐயா. சிறப்பாக நடை பெற வாழ்த்துகள்.சிறப்பான கருத்தாளர்கள் நல்லதொரு நிகழ்வில் ப்கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். சீன அதிபர் வருகை காரணமாக இன்றும் நாளையும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மாத காலமாக இதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வந்ததால் வருகையை உறுதிப் படுத்த இயலவில்லை. மன்னிக்கவும் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சிறப்பான ஏற்பாடுகள்.
    பள்ளி வேலை நாள் என்பதால் மதியம் வந்து கலந்து கொள்கிறேன்.
    வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. இனிமையான நிகழ்வு. விக்கிபீடியா தொடர்பான அனுபவத்தைப் பகிர வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. சந்திப்போம்.

    பதிலளிநீக்கு