இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் –2016 - நிகழ்ச்சி நிரல்

18-12-2016 ஞாயிறு அன்று  புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஒருநாள் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் அழைப்பிதழ் இதோ-

வருவோர் கவனத்திற்கு -
மௌண்ட் சீயோன் பொறியியற் கல்லூரிப் பேருந்து, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேற்குநோக்கிச் செல்லும் சாலையில் 50மீ தூரத்தில் உள்ள, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்பும் இடத்தில் (Sathyam Hotel எதிரில்) நிற்கும். 50பேர் வரை அதில் போக முடியும்.

கவனம் -  அந்தப் பேருந்து சரியாக 9மணிக்குக் கிளம்பிவிடும். அதன்பிறகு மதுரைச்சாலையில் திருமயம் வழித்தடத்திலிருக்கும் மௌண்ட் சீயோன் கல்லூரிக்கு, நகரப் பேருந்தில்தான் வரமுடியும். திருமயம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிற்கும் (10கி.மீ.,தூர லேணாவிலக்கு நிறுத்தத்தில் இறங்கி 200மீ.தூரம் நடக்கவேண்டும்)
சரியாக வந்து சேருங்க மக்களே!

மௌண்ட் சீயோன் கல்லூரிக்கு வந்தவுடன்,
எந்த அறையில்  தொடக்கவிழா, எந்த அறையில் பயிற்சி வகுப்பு என்னும் விவரம் கல்லூரி அலுவலக நுழைவாயில் அறிக்கைப் பலகையில் தெரிவிக்கப்பட்டிருக்கும். எளிதாக வந்துவிடலாம்.
-------------------------------------------------------
தொடக்கவிழா - கூட்ட அரங்கு அறைஎண் – 1006 (முதல்மாடி)
பயிற்சி வகுப்புகள் - அறை எண் A-210 (இரண்டாவது மாடி) 
மற்றும் அதன் எதிர் அறை
---------------------------------------------------
வருக வருக!
இதோ நிகழ்ச்சி நிரல்
இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்

(1) வலைப்பக்கம்(உருவாக்கமும், விரிவாக்கமும்) ஆசிரியர்கள் முனைவர் மு.பழனியப்பன், தேவகோட்டை
திண்டுக்கல் தனபாலன் திண்டுக்கல்
முனைவர்.சு.துரைக்குமரன், மீரா.செல்வக்குமார் புதுகை

(2)  விக்கிப்பீடியா – (எப்படி எழுதுவதுஎதைஎழுதக்கூடாது) ஆசிரியர்கள் 
   பிரின்சு என்னாரெசுப் பெரியார், சென்னை
   முனைவர் பா.ஜம்புலிங்கம், தஞ்சை 
   மது.கஸ்தூரி ரெங்கன், புதுக்கோட்டை

(3)  யூட்யூப் பயன்பாடு (வலை காணொலி இணைப்பு) ஆசிரியர்கள் – 
   ரமேஷ் டி.கொடி (Codess Technology) திருச்சி          
   கவிஞர் புதுகை செல்வா(ஒளி ஓவியர்)
   பேரா.பா.சக்திவேல் (மௌண்ட் சீயோன் கல்லூரி)
   R.அதிபதி, V.உதயகுமார் (LK Institute) புதுக்கோட்டை

(4)  செல்பேசியில் (புத்தகம், இதழ்களை PDF கோப்பாக்க, சுவரொட்டி, பதாகை (Poster,Notice) தயாரித்தல்,  வலையேற்றுதல் முதலாயின..) ஆசிரியர்கள் –   
   N.M.கோபிநாத் (GTech Eduction) புதுக்கோட்டை
ராஜ்மோகன் (ஆசிரியர், புதுக்கோட்டை
சண்முகராஜா (நிஷா டிஜிட்டல்ஸ்)புதுக்கோட்டை
----------------------------------------------------------------------
எந்த வகுப்பிலும் கணினித்தமிழ்ப் பயன்பாடு பற்றிய
எந்த ஐயத்தையும் கேட்டுத் தெளிவடைந்து கொள்ளலாம்
--------------------------------------------------------- 
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தின் கிழக்கு வாயிலருகிலும்,
லெணா விலக்கு பேருந்து நிறுத்தத்திலும்,
கல்லூரி வாயிலிலும்
 வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகை
 --------------------------------------------------- 
தொடக்கவிழா அரங்கின் பதாகை (BackDrop)
 ---------------------------------------------
விவரங்கள் தேவைப்பட்டால்
தயங்காமல் அழைக்க 
பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் 
சிலரது எண்கள்
நா.முத்துநிலவன்-9443193293
ராசி.பன்னீர்செல்வன்-7373002837
மு.கீதா-9659247363
மீரா.செல்வக்குமார்-8870394188
இரா.ஜெயலட்சுமி-9842179961
மது.கஸ்தூரிரெங்கன்-9842528585
க.மாலதி-9659584845
முனைவர் மகா.சுந்தர்-9442232678
பொன்.கருப்பையா-9442211096
பேரா.சக்திவேல்-7373000601
------------------------------------------------------------ 
அவ்வளவு தான்!
மற்றவை நேரில்!
----------------------------------------------------------

13 கருத்துகள்:

  1. இந்த முறை இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் வெளிமாவட்ட நண்பர்கள் அதிகம் கலந்து கொள்ள இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பங்கேற்போர் எதிர்பார்ப்புகளை இயன்றவரை நிறைவேற்ற முயல்வோம்.

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள மிகவும் ஆசை தான். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் கலந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக விக்கிப்பீடியாவில் எழுதுவது எப்படி என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆசை. விழா நிகழ்வுகளைத் தொகுத்துப் பதிவேற்றினால் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கும். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அண்ணா! இணையத் தமிழை முன்னெடுத்துச் செல்லும் தங்கள் குழுவினர்க்குப் பாராட்டுக்க்ளும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  3. தெளிவான அழைப்பிதழ், சரியான முன்தயாரிப்புகள். அனைவராலும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது ஐயா. மிக்க மகிழ்ச்சியுடன் என் நன்றிகளும், விழா சிறப்படைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகிறோம்

    பதிலளிநீக்கு
  5. பயிற்சி முகாம் இனிதே நடைபெற வாழ்த்துகள். நானும் எனது பெயரை பதிவு செய்துள்ளேன். இணையப் பயிற்சி முகாம் முடிந்த பிறகு, பயிற்சிவகுப்பு ஆசிரியர்கள் தரும் பாடங்களை, அப்படியே மின்நூலாக அல்லது அச்சு நூலாக கணினி தமிழ்ச் சங்கம் சார்பாக வெளியிட்டால் இன்னும் நல்லது.

    பதிலளிநீக்கு
  6. அருமையான திட்டமிடல் அண்ணா..உங்களிடம் இருந்து கற்றுக்கொள்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  7. அருமையான திட்டமிடல்...
    விழா மிகச் சிறப்பாக இன்று நடந்து முடிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்...
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  8. பலரும் ஒன்றாய் இணைய, தமிழ் ஒன்றே விளங்க- இணையத்தால் இணைவோம் ...

    பதிலளிநீக்கு