“நம்மொழி செம்மொழி” - எனது வானொலி உரை கேட்க வருக!

வரும் 06-06ஆம் தேதி

சனிக்கிழமை, 

நம்மொழியாம் தமிழ்மொழி

செம்மொழி என 

(இந்தியாவின் முதல் செம்மொழியாக)

அறிவிக்கப்பட்ட நாள்!

இந்தியாவில் இதுவரை 11 மொழிகள் 

செம்மொழிகளாக 

(Classical Languages) 

இந்திய அரசினால்

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன!

அவை யாவை?

தமிழ் (2004)

சமஸ்கிருதம் (2005)

தெலுங்கு (2008)

கன்னடம் (2008)

மலையாளம் (2013)

ஒடியா (2014)

மராத்தியம் (2024)

வங்காளம் (2024)

பாலி (2024)

பிராகிருதம் (2024)

அசாமியம் (2024)

---------------------------------------------------


உலக அளவில் ஒரு மொழியை

செம்மொழி 

என்பதற்கான தகுதிகள் என்னென்ன?

உலக, இந்திய செம்மொழிகள் யாவை?

இந்த வரலாறுகளையெல்லாம்

நாம் அறிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக இன்றைய “ஜென்-ஸிக்கள்”

அறிந்து கொள்ள வேண்டும்

இவற்றைக் குறிப்பாகவும்,

தமிழின் செம்மொழிநூல்களாக 

அறிவிக்கப்பட்டுள்ள

41 பழந்தமிழ் நூல்கள் யாவை?

எனும் பட்டியலோடு

அவற்றின் சாரம் பற்றியும்

நான் பேசியுள்ள

நம்மொழி செம்மொழிஎன்னும் 13நிமிட உரை

வரும் 06-06-2026 சனிக்கிழமை

காலை 08-02 மணிக்கு (செய்திக்குப் பிறகு)

திருச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது.

இதனை

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நகரங்களான 

சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி

மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வானொலி நிலையங்கள்

அதே நேரம், பகிர்ந்து ஒலிபரப்ப உள்ளன.

--------------------------------------

இதே உரை,

திருச்சி வானவில் பண்பலை நிலையத்தில்

ஒலிபரப்பாகும் நேரம்:

நண்பகல் 01-30

(அது இல்லன்னா இது! 

என்னும் நண்பர்களும்

எனது உரையை மீண்டும் கேட்க விரும்பும் 

அன்பர்களும்

(அப்படி யாரும் இருக்கீங்க?!)

கேட்டுக்கலாம்!)

-------------------------------------- 

நம் நண்பர்களைக் கேட்டு மகிழவும்

தம் நண்பர்களுக்குப் பகிர்ந்து மகிழவும்

அன்புடன் வேண்டுகிறேன்

உங்கள் நண்பன்

நா.முத்துநிலவன்

நா.முத்துநிலவன்

நா.முத்துநிலவன்

(அட இது எதிரொலிங்க...! 

வானொலியல்லவா?!?!?!)

புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293

---------------------------------------------------- 

நன்றி:

அகில இந்திய வானொலி நிலையம்

திருச்சிராப்பள்ளி

மற்றும்

சென்னை, மதுரை, கோவை, நெல்லை,

புதுச்சேரி வானொலி நிலையங்கள்,

திருச்சி வானவில் பண்பலை

--------------------------------------------------- 

3 கருத்துகள்:

  1. பெயரில்லாஞாயிறு, மே 31, 2026

    செம்மொழியாம் தமிழ் மொழியை போற்றி உலகம் முழுக்க கொண்டு செல்லும் நம் புதுகை மண்ணின் கவிஞர் திருமிகு முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. செ.வினோத், பொய்யப்பாக்கம், விழுப்புரம் மாவட்டம்திங்கள், ஜூன் 01, 2026

    மொழிக்கான சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா! உண்மையிலேயே இது ஒரு மகிழ்ச்சியான செய்தி ஐயா! நீங்கள் இதற்கு முன் இதே திருச்சி வானொலியில் வழங்கிய 'கவிதையின் கதை' உரையே ஒரு தலைசிறந்த காலவரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது! அதைக் கேட்டு நான் கண்கலங்கி உறைந்திருந்த நிமையங்களை இப்பொழுது நான் நினைத்துப் பார்க்கிறேன். இப்பொழுது செம்மொழி பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் அதுவும் ஒரு ஆகச் சிறந்த ஒலியாவணமாகத் திகழுமே எனும் ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சி ஐயா!

    பதிலளிநீக்கு