நேர்மையாளர் உ.சகாயம் அய்யா நூல் வெளியீட்டு விழா

                                  இவ்வளவு அநியாயங்கள் நடக்கும் இவ்வுலகம்

இன்னும் அழியாமல் இருக்கிறதே! என்று

அவ்வப்போது நாம் பயந்தும் வியந்தும்

நினைத்துக் கொள்கிறோம் அல்லவா?

இந்தக் கேள்வி  ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே

நமது தமிழ்ப் புலவன் ஒருவனுக்கும் வந்திருக்கிறது!

அவன் பாடுகிறான் –

... இவர்களால்தான் இந்த உலகம்

இன்னும் அழியாமல் இருக்கிறது?

உலகத்தையே தருகிறேன் என்றாலும் 

தவறு செய்யாதவர் சிலர் 

இன்னும்

 இருப்பதால் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது 

என்கிறார்!

இதோ அந்தப் பாடல் (புறநானூறூ182)

உண்டால் அம்ம இவ்வுகலம் இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும்

இனிதுஎனத் தமியர் உண்டலும் இலர்!

துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி

புகழ்எனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின்

உலகு உடம்பெறினும் கொள்ளலர், அயர்விலர்

அன்ன மாட்சி அனையர் ஆகி,

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’

எழுதியவர் வெறும் புலவர் அல்ல,

கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி எனும் மன்னன்

கடைசி வரியோடு, பாடலின்

முதல்வரியைக் கொண்டு சேர்த்தால்தான்

முழுமையாகப் புரியும் - இதுவொரு கவிதை உத்தி!)

-----------------------------------------------

இந்தப் புறநானூற்றுப் பாடல் உண்மைதான் என்பதை

நம் கண்முன்னே  போராடி வாழ்ந்துகொண்டும்

வழிகாட்டிக் கொண்டும் இருப்பவர்

நேர்மையாளர்  உ.சகாயம் இஆப (வி/ஓ) அவர்கள்

அவர்களின் தனது அலுவல் சார்ந்த போராட்ட அனுபவங்களை

நூலாக வெளியிடுகிறார்கள்

நேர்மையில் நம்பிக்கை உள்ள

நண்பர்கள், நண்பர்களோடு வருக

இதோ அழைப்பிதழ்-

வர விரும்புவோர் 

அழைப்பிதழில் உள்ள எண்களில் ஒன்றில்

முன்பதிவு செய்து வருக!

 


அப்படியே - மறக்காமல்

நூல்களை வாங்கிப் படிக்கவும்

நண்பர்களுக்கு

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்தோடு

வழங்கவும் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்

---------------------------------------------------- 

விழாவில் சந்திப்போம்

வணக்கம்.

'நா.முத்துநிலவன் படைப்புலகம்' - இணையரங்க நிகழ்ச்சிக்கு வருக

 

வணக்கம் நண்பர்களே!

நமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 

போலவே, தமிழ்நாட்டில் செயல்படும் 

மற்றோர் இடதுசாரிக் கலை-இலக்கிய அமைப்பு  

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

அதன் மதிப்பிற்குரிய தலைவர்கள் 

வாரந்தோறும் -புதன் மாலை- நடத்திவரும் 

         தொடர்நிகழ்வுக்கான பள்ளி          

'ஜீவா – நாவா சிந்தனைப் பள்ளி" (JNCP)

கடந்த கொரோனாக் காலத்தில் தொடங்கி இப்போது வரை, இணையவழி வாராந்திர நிகழ்வாக நடத்திவருகிறார்கள்.

அதன் 317ஆவது நிகழ்வாக 

நமது தமிழ்இனிது” நூல் அறிமுகத்துடன் 

‘’எனது படைப்புலகம்” எனும் 

எனது உரையரங்கையும் நடத்துகிறார்கள்.

வரும் 18-12-2024 புதன் மாலை 6-00 மணி.

--------------------------- 

இணைந்துள்ள அழைப்பிதழில் விவரம் அறிக!

வாய்ப்புள்ள நண்பர்களை 

இணைய வழி வருகை தர வேண்டுகிறேன்.

-- முக்கியமான குறிப்பு --

"வெபெக்ஸ்"  (webex) எனும் இலவசச் செயலியை

உங்கள் செல்பேசி, கணினியில்

இப்போதே பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள்

    மேடை எண் - 2644 154 6220     

கடவுச் சொல் - 123456

-------------------------------------- 

இதோ அழைப்பிதழ் 


அப்படியே நமது கலை-இலக்கிய நண்பர்களுக்கும்

பகிர்ந்து, அழைக்கவும் வேண்டுகிறேன்.

18-12-2024 புதன் மாலை 6மணிக்கு சந்திப்போம்

வணக்கம்

-------------------------------------- 

மரபுக் கவிதைப் பயிற்சி - ஆசிரியர் - நா முத்துநிலவன்

                              மரபுக் கவிதை எழுதலாம் வாங்க!

வீதி & கணினித் தமிழ்ச்சங்கம் புதுக்கோட்டை

தமுஎகச அறம் கிளை

இணைந்து வழங்கும்

மரபுக் கவிதைப் பயிற்சி    

-------------------------------------------------

    தமிழில் மரபுக்கவிதை எழுத,                 

இலக்கணம் இனிது”,  தமிழ் இனிது”  நூல்களையும், நூலாக்கம்

பெறவுள்ளமறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்” நூலையும் எழுதியுள்ள

கவிஞர் நா முத்துநிலவன் பயிற்சி  தர உள்ளார்.

-------------------------------

2025 சனவரி மாதம் திருவள்ளுவர் தினம் (15.1.25 புதன்) அன்று மாலை 7மணிக்கு  "மரபுக் கவிதை எழுதலாம் வாங்க"  பயிற்சி தொடங்குகிறது

----------------------------------------------------------------------- 

                ஒவ்வொரு வாரமும் புதன் மாலை 7 மணி முதல் 8 மணி வரை          

ஜூம் செயலி வழியாக வகுப்பு நடைபெறும்.

---------------------------------------- 

20 வகுப்புகள் திட்டமிடப் பட்டுள்ளன.

                                 கட்டணம் - ரூ.200/ மட்டும்                                        

(பள்ளி/ கல்லூரி/ஆய்வு மாணவர்களுக்கு ரூ100)

தொகை செலுத்த ஜிபே எண்: +919443136267

                 கட்டணம் செலுத்தி விட்டு, அந்தத் தகவலை                பின்வரும் எண்களில் தெரிவித்தால்

      அதற்கான குழுவில் இணைக்கப் படுவர்.

சி.பேரின்ப ராஜன்

தமுஎகச அறம் கிளை

செல்பேசி எண் +919443136267

மு. கீதா, ஒருங்கிணைப்பாளர்,

"வீதி - கலை இலக்கியக் களம் , புதுக்கோட்டை

செல்பேசி எண் – 919659247363

-------------------------------------------

மரபுக்கவிதை எழுத விரும்பும் 

உங்கள் நண்பரகளுக்குப்  பகிருங்கள்

-------------------------------------------- 



பயிற்சி முடிவில் 

தேவைப் படுவோர்க்கு,   சான்றிதழ் வழங்கப்படும்

---------------------------------------------------------------------------------