“தமிழ் இனிது“ - நூலாகிறது! நன்றி!!

(நன்றி - இந்து தமிழ் - 16-6-2024)

வலைப்பக்கத்தில் என்னைத் தொடரும்                                                      வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

“இந்து தமிழ்“ நாளிதழில் 06-06-2023முதல் -ஓராண்டாக-

வாரம்தோறும் செவ்வாய் அன்று வெளிவந்த நமது

“தமிழ்இனிது” தொடர், இன்றைய (16-6-2024-ஞாயிறு)

50ஆவது கட்டுரையுடன் நிறைவடைகிறது.

அடுத்த வாரம்

இந்துதமிழ் பதிப்பக வழி                           

நூலாக வருகிறது.

“இந்துதமிழ் இயர்புக்“ அளவில் 160பக்கங்கள்.

மதிப்பிற்குரிய கவிஞர் சிற்பி அய்யா,

அன்பிற்குரிய அண்ணன் சுப.வீரபாண்டியன் இருவரும் 

சிறப்பான மதிப்புரைகளை  வழங்கியுள்ளனர்.

நானும், நன்றி கூறி, என்னுரை எழுதியிருக்கிறேன்.

தொடரில் வெளிவந்த படங்களும் இடம்பெறுகின்றன.

இன்றைய கட்டுரை பற்றி மட்டுமல்ல, வெளிவந்த 50கட்டுரைகளைப் பற்றிய உங்கள் கருத்தை, இந்த வலைப்பக்கப்பின்னூட்டத்திலோ , எனது மின்னஞ்சல் வழியோ பகிர்ந்தால், அது ஆக்கம் தரும் “நூல் அறிமுகமாக” இருந்தால், தமிழ் இதழ்களுக்கு – அவரவர் பெயரிலேயே - அனுப்ப உதவியாக இருக்கும். அடுத்த பதிப்பில் நல்ல கருத்துகளையும், சரியான திருத்தங்களையும் அவரவர் பெயருடன் வெளியிட எண்ணியிருக்கிறேன்.(செல்பேசி எண் அவசியம். பொதுவில் எண் பகிர விரும்பாதவர் கீழுள்ள எனது எண்ணில், மின்னஞ்சலில் விவரம் தரலாம்)

தமிழ்ச் சமூகத்திற்கு இன்று தேவையான ஒரு நல்ல நூலைத் தந்த நிறைவு எனக்கு. அதை ஊக்கப்படுத்தி வளர்த்த பெருமை உங்களுக்கு!

இதுவரை எனது வலைப்பக்கத்தின் பின்பற்றுவோர் பட்டியலில் இணையாத நண்பர்கள் ‘Follower பெட்டியில் உங்கள் மின்னஞ்சலைத் தந்து இணைந்து எனது அடுத்தடுத்த படைப்புகளைப் பெற அழைக்கிறேன்.

நூலோடும், மற்றொரு   -                                                                                                      மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியோடும்                                                            அடுத்த வாரம் சந்திப்போம், 

நன்றி நன்றி நன்றி வணக்கம்.

என்றும் தங்கள் தோழமையுள்ள,

நா.முத்துநிலவன்,

புதுக்கோட்டை – 4

செல்பேசி – 94431 93293

மின்னஞ்சல் –muthunilavanpdk@gmail.com  

6 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி தோழர், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் சார்

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா! இந்த முக்கியமான நூலில் உங்களோடு இணைந்து பணியாற்றியதும் இதில் என்னையும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதும் எனக்குக் கிடைத்த அரிய பெருமைகள்! நூல் நல்ல வரவேற்பைப் பெறும் என்பது உறுதி! விரைவில் நீங்கள் இந்தத் தொடரை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் அவா! பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அரிய முயற்சி
    வாழ்த்துகிறேன்.
    நூல்தொகுப்பை எதிர் நோக்குகிறோம் பேராவலுடன்.
    நன்றி.
    வணக்கம்.
    9865565534
    ஆறுமுகம் வன்மீகலிங்கம்

    பதிலளிநீக்கு
  5. உங்களுடைய தமிழ்ப்பணிக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு