அடுத்தொரு இணையக் கருத்தரங்கம் காண வருக!



'கரோனாக் காலத்தில்' எனது

மூன்றாவது 

இணைய உரையாடல் நிகழ்வு

காண, உரையாட வருக!
ஏற்கெனவே 
இரண்டு தலைப்புகளில் பேசிவிட்டேன்.
என்றாலும்,
இப்போது, திருப்பரங்குன்றத்தில் வாழும், நமது
புகழ்பெற்ற ஓவியர் வெண்புறா 
அழைத்த நிகழ்வு இது!
ஒருங்கிணைக்கும் தோழர்கள் - 
காளிதாஸ்,அருணகிரி, முத்துஅழகேசன், சிவா
நேரலையில் கேட்க, இணைய வானொலி-
26-04-2020 ஞாயிறு 
பிற்பகல் 3மணி
(ஒரு மணிநேர உரை 
பின்னர் குழு உறுப்பினர் கேள்வி-பதில்)

எனது தலைப்பு
“நாடென்ப நாடா வளத்தன…”

நீங்களும் கலந்துகொள்ளலாமே!
இணைப்பு கீழுள்ளது-
வருக நண்பர்களே!


குழு இணைய இணைப்பு
 ------------------------------------------------------ 
முன்னர் நான் பேசியுள்ள தலைப்புகள்-
(1) தமிழ்என்பது வெறும் இலக்கியமல்ல
(2) தமிழால் முடியும் தமிழரால் முடியாதா? 
இப்போது
(3) நாடென்ப நாடா வளத்தன...
(திருக்குறள் -எண்-739ஐ முன்வைத்து
கரோனா தீநுண்மி வரையான 
நமது வாழ்வின் செயற்கை பற்றியதாக உரையாடத் திட்டம்) 
தமிழறிஞர் மு வரதராசனார் இக்குறளுக்கு 
எழுதியுள்ள பொருள் :
 “முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் நாடுகள் அல்ல!”  
சேர்ந்து சிந்திப்போம் 
செயல்படுவோம் வாருங்கள்!

--------------------------------------------------- 

4 கருத்துகள்:

  1. அற்புதமான சிந்தனைகள் தொடரட்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கோரோணாவுக்கு,
    இந்தியா மேலும் ஒருதலையாய் காதல் போல.
    நாமோ இளைஞர்,இளைஞியர் பலம் வளமாக கொண்டுள்ளோம்.
    இப்போது இந்த ஒரு தலை ராகம் தடுக்கப்படனும்..

    பதிலளிநீக்கு