ஸ்டெர்லைட் வந்த கதையும்.. மக்கள் வீதிக்கு வந்த கதையும்!


இந்தியாவில் வேதாந்தா- ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்ட அனில் அகர்வால், அதற்கான இடத்தை குஜராத்தில் தேடினார். ஆனால், அந்த மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது.  அடுத்து அவரது பார்வை கோவா மாநிலத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் அங்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை.
 
அடுத்து 1994ல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க திட்டமிட்டார். மாநில அரசின் அனுமதியுடன் தொடங்கிய திட்டம் முழுமை பெறுவதற்குள் சோதனையை சந்தித்தது.
‘‘இந்த ஆலை வெளியிடும் நச்சுப்புகையால், அங்கே விளையும் அல்போன்சா மாம்பழங்கள் நஞ்சாகியது. அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது என்பதால், பல்லாயிரக்கக்கான விவசாயிகள் திரண்டு, கடப்பாரை சம்மட்டிகளைக் கொண்டு, 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலை இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். 
அதாவது, பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பயந்து போன அப்போதைய மகாராஷ்டிர முதல்வரான சரத்பவார், ‘இந்த ஆலை பற்றி மாநில சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்என சமாளிக்க பார்த்தார். 
ஆனால் தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்க மறுத்த அந்த மாநில மக்கள், ‘ஆலையை அகற்ற வேண்டும்என்கிற ஒற்றை கோரிக்கையிலேயே விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களால் நிலை குலைந்த மகாராஷ்டிர அரசு, ஆலை பணிகளை நிறுத்த உத்தரவிட்டது.
இதனால் அங்கிருந்து கிளம்பிய ஸ்டெர்லைட் நிறுவனம் கர்நாடகா, கேரளாவில் இடம் தேடி அலைந்தது. அந்த மாநில அரசுகள் ஆலைக்கு அனுமதி கொடுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டன.

போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு பிறகு பல மாநிலங்களிலும்ஆபத்து மிகுந்த ஆலைகளை அமைக்க எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசுகள் பின்வாங்கின. இதனால் சோர்ந்து போயிருந்த அனில் அகர்வாலுக்கு பச்சை கம்பள வரவேற்பு கொடுத்தது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசாங்கம் 30.10.1994 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு அடிக்கல் நாட்டியது.
துறைமுக நகரான தூத்துக்குடியில் ஆலையை அமைக்க அனுமதி தர முதல்வர் ஜெயலலிதா சம்மதித்தார். அகர்வாலுக்கு அடித்த இந்த அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது? காரணம், தூத்துக்குடியில் ஆலையை அமைத்தால் ஆஸ்திரேலியாவில் வேதாந்தா நிறுவனம் வெட்டி எடுக்கும் தாமிர தாதுக்களை அப்படியே கப்பல் மூலம் கொண்டு வந்துவிட முடியும். 

இந்த ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது பை ப்ராடக்ட்என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய, தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் மக்களின் எதிர்ப்புகளை மீறி 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.
இப்படி விதிமுறைகளை மீறி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் 22 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

2010-ல் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஏ கே பட்னாயக், எச் எல் கோகலே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மேற்கண்டபடி தீர்ப்பளித்தது.
‘1997 முதல் 2012 வரை ஸ்டெர்லைட் இழைத்த சேதங்களுக்கு நிவாரணமாகவும், உரிய அனுமதிகள் பெறாமல் தொழிற்சாலையை நீண்ட காலம் நடத்தியதற்கு அபராதமாகவும் ரூ 100 கோடி கட்ட வேண்டும். 2010-11ல் கம்பெனியின் லாபமான ரூ 1,043 கோடி முந்தைய நிதி ஆண்டில் கிடைத்த ரூ 744 கோடியை விட 40 சதவீதம் அதிகம். அதனால் ரூ 100 கோடி ரூபாய் அபராதம் என்ற கடும் தண்டனையை விதிக்க வேண்டியிருக்கிறதுஎன்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கும் வேலை வாய்ப்புகள், அரசுக்கு செலுத்தும் வரித் தொகைகள், அது உற்பத்தி செய்து நாட்டுக்கு அளிக்கும் தாமிரத்தின் முக்கியத்துவம் இவற்றைக் கருத்தில் கொண்டு அபராதத்தைக் கட்டி விட்டு அது தனது நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கிறோம்என்பது அரசுக்கு வருவாய் வருவதால் அரசை நம்பி இருக்கும் மக்கள் அழிவதொன்றும் தப்பில்லை" என்பது மாதிரியான நீதியே இங்கு கிடைப்பதால் இப்போது மக்களே தங்களுக்கான நீதியைத்தேடி வீதிகளில் இறங்கிவிட்டனர்;

தூத்துக்குடி துவக்கி வைத்திருக்கிறது 
தமிழகமே எழுந்துவா 
ஸ்டெர்லைட்டிற்கு முடிவுரை எழுதுவோம்.
நன்றி: நாணல் நண்பர்கள் இயக்கம்.  
வழி -  Nalini Shanmugam அவர்களின் முகநூல்
----------------------------------

(இப்படி உருப்படியான செய்திகளைப் பகிர்வதும் 
முகநூல் அலப்பறைகளில் நடப்பதுண்டா?! எனும் 
வியப்புடனும் நன்றியுடனும் – நா.மு)

படத்திற்கு நன்றி – கூகுளார்  
-----------------------

4 கருத்துகள்:

  1. இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும்....

    பதிலளிநீக்கு
  2. ஸ்டெர்லைட் ஆலை பற்றிய இந்தப் பதிவு இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது. இதை நிறையவும் பகிர வேண்டியது நம் கடமை!

    அதே நேரம், தொடக்கத்திலிருந்தே இந்த ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் களத்திலும் போராடி, சட்டப்படியும் போராடிய வைகோ அவர்களைப் பற்றிப் பதிவில் துளியும் குறிப்பிடப்படாதது வருத்தமளிக்கிறது! தமிழ்நாட்டின் இன்றைய தலைமுறையினர் முன்பு போல் இல்லாமல் மிகுந்த விழிப்புணர்வும் போராட்டக் குணமும் நிறைந்தவர்களாக இருப்பதைக் கண்டு நமக்கு அளவில்லாத மகிழ்ச்சி! ஆனால், தங்களுக்கு முன் இதே பிரச்சினைகளுக்காக யாரெல்லாம் எப்படியெல்லாம் போராடியிருக்கிறார்கள் என்பது பற்றிய வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்ள இன்றைய இளைஞர்கள் ஆயத்தமாக இல்லாததும், அப்படியே எடுத்துச் சொன்னாலும் நீ திராவிடன், தமிழ்த் தேசியன், தேசியவாதி எனவெல்லாம் முத்திரை குத்துவதும் மிகுந்த மனச் சோர்வை உண்டாக்குகிறது.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு. ஸ்டெர்லைட் ஒழிந்து மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கட்டும். வாழ்த்துக்கள்.

    #085/2018/SigarambharathiLK
    2018/03/31
    சிகரம் வலைப்பூங்கா - 01
    https://newsigaram.blogspot.com/2018/03/SIGARAM-VALAIP-POONGAA-01.html
    பதிவு : சிகரம்
    #sigaram #sigaramco #tamil #tamilblogs #reading
    #வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா
    #சிகரம்

    பதிலளிநீக்கு