எனது வாழ்வும் இலக்கியமும்


எனது வாழ்வின் 
முக்கியமான 
நேர்காணல் காணொலி இது

அண்மையில் அறம் தமுஎகச நண்பர்கள் 
ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது 
01-03-2020 அன்று எடுக்கப்பட்டது

இலக்கியச் சகோதரி இவள்பாரதிக்கு நன்றி.

எனது  
இலக்கிய வாழ்வு,
தனிவாழ்வு, சமூக-அரசியல் வாழ்வு என 
என்னைப்பற்றிய, 
எனது வாழ்வின் நோக்கம் பற்றிய 
சில முக்கியமான பகுதிகள்-

இணைப்புக்குச் செல்ல -
நா.முத்துநிலவன் நேர்காணல் 
பகுதி-1https://youtu.be/sWnuwXXJEVA
 பகுதி-2- https://youtu.be/8KaIQZxSu9w
பகுதி-3- https://youtu.be/5idBgOIKX8g

பார்த்து, 
கேள்வி கேட்கும், 
கூடுதல் விவரம் அல்லது
தவறான கருத்துப் பற்றிக் கேட்கும் 
நண்பர்களுக்கு 
நன்றியுடன் பதில் தருவேன்
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

26 கருத்துகள்:

  1. ஆகா அருமை ஐயா
    இதோ இணைப்புகளின் வழி காணொலிகளைக் காணச் செல்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. பிரமாதம் அண்ணா... ஆர்வமாய் இருக்கிறது.. பார்த்து விட்டு மீண்டும் வருவேன் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரோனா அமெரிக்காவில் பாடாய்ப் படுத்துவதாகச் செய்திகள் வரும்போதெல்லாம் உன்னையும் உன்கணவர், பிள்ளைகளையும் நினைத்துக் கவலை கொள்கிறேன். கவனமாக இருங்கள். மெதுவாக நேரம் கிடைக்கும்போது பார்த்தால் போம்மா

      நீக்கு
    2. வணக்கம் அண்ணா. முதல் இணைப்பிற்கு : அருமையான நேர்காணல். இயல்பா உள்ளத்திலிருந்து நீங்கள் பகிர்ந்து கொண்டவை மிக நன்று. சில இடங்களில் என் அப்பாவைப் பார்த்தேன், அவர் சொல்லியிருக்கும் அவருடைய பள்ளி, கல்லூரி நினைவுகள். உங்க வீட்டு மேல் மாடியில் இருக்கும் புத்தகங்களை விட உங்கள் 'மேல் மாடியில்' :-) இருக்கும் புத்தகங்கள் 10 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். அவற்றை அழகாகப் பகிரவும் செய்கிறீர்கள். எத்துனை வாசிப்பு!! மரியாதை கலந்த அன்பு வணக்கங்கள் அண்ணா. (பொறாமை கலந்தது என்பதைச் சொல்ல மாட்டேன் :-) )

      நீக்கு
    3. ஆமாம் அண்ணா, அதிகமாகத்தான் இருக்கிறதே.. அட்லாண்டாவிலும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.
      வீட்டிலேயே இருக்கிறோம் அண்ணா. நாங்கள் இருவரும் வீட்டில் இருந்து பணி. பிள்ளைகளுக்கு இணையவழிக் கல்வி ஏப்ரல் இறுதி வரைக்கும். கவனமாக இருக்கிறோம் , உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா. நீங்களும் கவனமாக இருங்கள். நான் அங்கு இருப்பவர்களைப் பற்றி நினைக்கிறேன்.

      நீக்கு
    4. மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டது, உங்கள் முக பாவனைகள், சிரிப்பு - சிறப்பு அண்ணா, ரசித்துப் பார்த்தேன்.

      நீக்கு

    5. உங்கள் கட்டுரையை படித்துத்தான் ண்,ன் பற்றியும் ஒற்றல் நகரம், வருடல் ளகரம் என்று சொல்லக் கற்றுக் கொண்டேன். நண்பர்களின் குழந்தைகளுக்குக் கற்றும் கொடுத்திருக்கிறேன், அவர்கள் தெரியவில்லை என்று கேட்டபொழுது. உங்களைப் போல் ஆசிரியர்கள் இருந்தால் சிறப்பாகக் கற்றுக் கொள்வர்.
      அருமை அண்ணா. பலதரப்பட்ட நூல்களையும் வாசித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னது சிறப்பு. நிறைய படிக்கவும், பொறுப்பாக எழுதவும் வேண்டும் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் சிறப்பான பேட்டி. பேட்டி கண்டவருக்கும் நம் தமிழ் மீடியாவிற்கும் நன்றி.

      நீக்கு
    6. நன்றி மா.
      உனது “சங்க இலக்கியம் - ஆங்கிலக் கவிதையாக்கம்” முயற்சி என்ன ஆயிற்று? உரைநடையில் தந்தவர் பலருண்டு. கவிதையைக் கவிதையாகவே மொழியாக்கம் செய்யப் பயிற்சியும் முயற்சியும் தேவை அதுதான் படைப்புகளிலேயே நெடுங்காலப் புகழோடு நிற்கும் பெண்கள் எழுதுவதே பெருஞ்சோதனையைச் சாதனையாக்குவதுதான் இதழல் இதுபோலும் முயற்சிக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்புத்தான் மிக முக்கியம் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக வினோத், அவருக்கு எனது அன்பான வணக்கத்தையும் குழந்தைகள் இருவருக்கும் என் அன்பான வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்.

      நீக்கு
  3. அங்கங்கு தரும் விளக்கம் அசர வைக்கிறது... அருமை ஐயா...

    முக்கியமாக 'ழ' பற்றிய உச்சரிப்பு விவரங்கள்...

    பதிலளிநீக்கு
  4. மகளுக்காக எழுதிய கட்டுரை என்ற தொடங்கும் ஆரம்பப்பகுதி முதல் மூன்று பகுதியையும் முழுமையாகக் கேட்டேன். உங்களைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை இந்த நேர்காணல் தந்தது. படிக்க வேண்டிய புத்தகங்கள், நூலகத்தில் ஆரம்ப காலத்தில் படித்த சூழல், படக்கதைகள் மூலமாக வாசிப்பு அனுபவ மேம்பாடு, 1980இல் பெற்ற எம்.ஏ., இப்போது பொருந்தி வருமா?, பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியங்களைப் படிக்கக் கிடைத்த வாய்ப்பு, தேர்ந்தெடுத்த நூல்கள், மக்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான கவிதை மற்றும் புதினம், தற்போது படிக்கும் நூல், தமிழாசிரியர்கள் குழந்தைகளுக்கு ழ எழுத்தைச் சொல்லித் தரவேண்டிய அவசியம், அனைத்துத் தரப்பினருக்கும் செல்லும் வகையில் புதிய நூல்களைப் படிக்கும் வாய்ப்பு தரும் புத்தகக் கண்காட்சி, பிரச்சாரத்தின் தாக்கம், எளிமையான சொற்களில் புரியும் கவிதை, சமூகத்தைப் பற்றிய பார்வையின் முக்கியத்துவம், மொழியாசிரியர்கள் படைப்பாளியாக இல்லை என்ற ஆதங்கம், தேர்வு இல்லாத தேர்வு முறை, விண்ணப்பித்து வாங்கப்படும் விருதுகள் உள்ளிட்ட பலவற்றை அலசி பேசிய விதம் சிறப்பாக இருந்தது. நிறைய படிங்கள், எழுதுங்கள், சமூக மாற்றம் பார்வையாளராக இல்லாமல் பங்கேற்பாளராக இருங்கள் என்ற அறிவுரையோடு சிறப்பாக அமைந்த நேர்காணல் மூலமாக பல புதிய செய்திகளை அறிந்தேன். வாழ்த்துகள்.
    இந்த மூன்று பகுதிகளையும் விக்கிப்பீடியாவில் உங்கள் பக்கத்தில் இணைத்துள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். (நம் தமிழ் மீடியா தளத்தில் உங்களுடைய இந்த நேர்காணலைப் பற்றிய தலைப்போ, குறிப்போ தமிழில் இல்லாததால் மேற்கோளாக இணைப்பைப் பதிய சற்று சிரமப்பட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. தாங்கள் சத்தம் போடாமல் செய்துவருவதை நான் கொஞ்சம் மேடை, எழுத்து, அமைப்பு மற்றும் இதுபோலும் நேர்காணல் எனச் செய்துவருகிறேன். தங்களின் பெருந்தன்மையான வாழ்த்தும் பெருமைப் படத்தக்க பணிகளும் என் நன்றிக்குரியன.

      நீக்கு
  5. வணக்கம். மிக அருமையான விரிவான பேட்டி. முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே புத்தகத்தின் வெற்றியில் ஆரம்பித்து, நண்பர்களைப் பற்றி 'ஒரு நண்பன் 100 புத்தகத்திற்குச்சமம், மிகப்பிடித்த வால்கா முதல் கங்கைவரை புத்தகம்,மறக்க முடியாத கோபால் அய்யர்,பாரதிப்பித்தன்,பாலா,கந்தர்வன் பாதித்த ஆளுமைகள் என சொன்னவிதம் நன்றாக இருந்தது. பாலா, கந்தர்வன் அவர்களோடு பழகியது பற்றி தனிப்புத்தகமே நீங்கள் போடலாம். புத்தகத்திருவிழா,ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.அவர்களின் சிந்துவெளி நாகரிகம் பற்றிய புத்தகம்,தமிழ் ஆசிரியர்களுக்குத் தெரிய வேண்டியவை,சமச்சீர் கல்வித்திட்டம்,நீங்கள் எழுதிய 6-ம் வகுப்பு தமிழ்ப்பாடம் ,இறுதியில் 'ழ'வின் உச்சரிப்பு என ஆகச்சிறந்த பேட்டி...வாழ்த்துகள் தோழர். ஆங்கிலம் கற்பிக்க நிறைய யூ டியூப் வீடியோக்கள் உள்ளன. நீங்கள் அப்படி ஒரு ஆன்லைன் தமிழ் இலக்கணம் கற்பித்தல், இலக்கியம் அறிமுகப்படுத்துதல் பற்றி யோசிக்கலாம். செயல்படுத்தலாம். வாழ்த்துகள் தோழர் மீண்டும்..குடும்பத்தினர் ஒத்துழைப்பு பற்றியும் கொஞ்சம் பேட்டியில் சேர்த்திருக்கலாம்..கேட்க மறந்துவிட்டார்கள் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி தோழர். உங்கள் விமர்சனத்தை ஏற்கிறேன். என் குடும்பம் குறிப்பாக என் இணையர் மல்லிகா இல்லையெனில் இன்றைய முத்துநிலவன் இல்லை என்பதே அடிப்படை உண்மை. அவர்கள் கேட்கவில்லை என்பதாலேயே நான் விட்டிருக்கக் கூடாது. நம் அறம் - தமுஎகச கிளை நண்பர்கள் இதுபோலும் கேள்விகளைக் கேட்டு பதில்பெற்று வெளியிட ஒரு நூலே தயாரிக்கிறார்கள். அதில் இன்னும் விரிவாக எனது தனி வாழ்வுப் போராட்டங்கள் பற்றியும் நிச்சயம் தெரியப்படுத்த உங்கள் கேள்வி அடிப்படைத் துண்டுதலாக அமைந்ததற்கு எனது நன்றியும் வணக்கமும்.

      நீக்கு
  6. தகவலுக்கு நன்றி ஐயா. சுட்டிகள் வழியே அங்கே சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பார்த்தேன் ஐயா! தங்களுக்கே உரித்தான கம்பீரமான தெளிவான குரலில் கருத்துக்களை கேட்க இனிமை

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு. திருமணத்திற்கு முன் கூடவே திரிந்தான். பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம். கடமையும் வந்தது. கவலையும் வந்தது.ஆரம்பத்தில் தமிழுக்காக அர்ப்பணித்தவர் கள் யாருக்கும் உள்நோக்கம் மற்றும் வன்மம் இல்லை. பின்னர் கழகங்களாக வந்தவர்கள் கற்பிதங்களை உண்டுபண்ணி இன்றுவரை அரசியல் வியாபாரம் செய்கிறார்கள். P.R புத்தகத்தில் படித்தது. சிறந்த பொதுடமைவாதியான தாங்கள், அர்ப்பணித்தவர் நீங்கள் தயவு செய்து வர்க்க பார்வையில் புதிய புத்தகத்தைத் தாருங்கள். முப்பத்தாறு வருடங்களாக உங்களை ரசிப்பவன். மிகுந்த தோழமையுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன முப்பத்தாறு வருடம் கணேஷ்? என் இதயத் தோழா! நீ கடந்த பல பிறவியிலும் (அப்படி ஒன்று இருந்தால்) நாம் தோழர்கள் அல்லவா என் இனியவனே? உன் அருமையை இந்த உலகம் இன்னும் அறியுமளவு நீ செயற்படவில்லையே என்பதுதான் என் வருத்தம். உன்னையன்றி என் முன்னேற்றமில்லை என்பதே என் பாக்கியம்

      நீக்கு
  9. அருமையான பதிவு. கூடவே 30 வருடங்கள் திரிந்தவன்.மலரும் நினைவாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை P.R புத்தகத்தின் படி கழகங்க தான் நிறைய கற்பிதங்களை ஏற்படுத்தியது. Survival மற்றும் அரசியல் காரணமாக. இந்த ஊரடங்கு தங்களுக்கு பொருந்தாது. புதிய புத்தகம் ஏப்ரல் 14ல் எதிர் பார்க்கலாமா? எல்லா போராட்டங்களிலும் குவளையாய் இருந்ததால் நேர்காணல் ஒரு பயண அனுபவமாக இருந்தது. தோழமையுடன் கணேசன்.

    பதிலளிநீக்கு
  10. பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு நேச வணக்கம்!

    பதிவுலகின் பெருந்தாமதனான நான் வழக்கம் போலவே எல்லாருக்கும் பின்னர் வந்திருக்கிறேன். உங்கள் நேர்காணலின் மூன்று பகுதிகளையும் பார்த்த நிறைவோடு சுடச் சுட இந்தக் கருத்துரையை எழுதுகிறேன்.

    உண்மையிலேயே சொல்கிறேன், இந்த நேர்காணலைப் பார்த்தது மிக மிகச் சிறப்பான துய்ப்பாக இருந்தது!

    இதுநாள் வரை உங்களை நேரில் பார்க்காத என்னைப் போன்றவர்களுக்கு முத்துநிலவன் என்பவர் ஒரு புகழாளர், கண்டிப்பான தமிழாசிரியர், த.மு.எ.க.ச-இல் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பெரும்புள்ளி என்பதுதான் மனத்தோற்றம். உங்கள் பட்டிமன்ற உரைகள் சிலவற்றை நான் பார்த்திருக்கிறேன் என்றாலும் அதில் நீங்கள் சிரித்த முகத்துடன் எளிமையாகப் பேசும் முறை கூட ஒருவித மேடை நாகரிகமாகத்தான் கருதத் தோன்றியது. ஆனால் இந்த நேர்காணலில் நீங்கள் பேசிய விதமும் உங்கள் உடல்மொழியும் இவ்வளவு எளிமையானவரா நீங்கள் எனும் வியப்பை ஏற்படுத்தின. எந்தவிதப் பகட்டும் மிடுக்கும் இல்லாமல் ஏதோ தனிப்பட்ட முறையில் ஒரு நண்பருடன் பேசுவது போல் நீங்கள் உரையாடிய விதம் மிகவும் கவர்ந்தது.

    ஒரு மணி நேரத்துக்கும் மேலான நேர்காணல். ஆனால் எந்த ஓரிடத்திலும் துளியும் அலுப்பு ஏற்படவில்லை. அதற்கு முதல் காரணம், உங்கள் சிரித்த முகத்துடனான அந்தப் பேச்சு. அடுத்து, ஒவ்வொன்றையும் நீங்கள் விவரித்த விதம். குறிப்பாக, எழுத்தாளர் கந்தர்வன் அவர்கள் பற்றியும் மற்றுமுள்ள உங்கள் தோழர்கள் பற்றியும் நீங்கள் கூறிய தகவல்கள் சுவை! "கந்தர்வனின் படைப்புகளை ஈரம் காயாமல் படித்த வாய்ப்பு எனக்குக் கிடைத்து" என்று சொன்னபொழுது புகழ் பெற்ற எழுத்தாளர் ஒருவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற இளம் எழுத்தாளரின் குழந்தைத்தனமான குதூகலம் உங்கள் முகத்தில் பளிச்சிட்டது.

    பதிலளிநீக்கு


  11. படக்கதை படிக்கும் சிறுவனாக உங்கள் வாழ்க்கை தொடங்கியதில் துவங்கி, படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்ட முறை, அதற்குக் காரணமாக இருந்த நண்பர்கள், மாணவர் தேர்தல் வெற்றி, கந்தர்வன் போன்றோரின் நட்பு, தி.வே.கோபாலையர் - பாரதிபுத்தன் என ஆசிரியர்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம், சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தில் பங்களிப்பு, திண்டுக்கல் இலியோனி அவர்களுக்கான நன்றி நவிலல், போராளியாக இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கை முறை என வாழ்வின் எல்லா முக்கிய கட்டங்களையும் நேற்றுப் படித்த கதையிலிருந்து எடுத்துரைப்பது போல் மறவாமல் அடுக்கடுக்காக, ஆற்றொழுக்காக நீங்கள் கூறியது பெருவியப்பாக இருந்தது! ஒரு கதை படிக்கும்பொழுது அதில் வரும் காட்சிகள் மனத்திரையில் ஓடுவது போல நீங்கள் சொல்லச் சொல்ல உங்கள் வாழ்க்கைக் காட்சிகள் மனக்கண்ணில் விரிந்தது உண்மை!

    இப்படி ஒரு சிறப்பான நேர்காணலாக இஃது அமையக் கேள்வி எழுப்பிய இவள் பாரதி அவர்களும் மிக முக்கிய காரணம் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த கேள்விகளைத் தொடுத்திருந்தார். குறிப்பாக, நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நூல் எது, இலக்கியங்களில் பரப்புரைத்தனம் இருக்கலாமா, தமிழைப் பிழையின்றிப் பயன்படுத்துவது எப்படி ஆகிய கேள்விகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. இவற்றில் இரண்டாவதுக்கு நீங்கள் அளித்த மறுமொழி எனக்குப் பல காலமாக இருந்த ஐயத்தைத் தெளிவுபடுத்தியதோடு இது தொடர்பாக நான் கொண்டிருக்கும் நிலைப்பாடும் உங்களை ஒத்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    செயமோகனின் எழுத்துக்களை நீங்கள் நேரடியாகவே விளாசியது எதிர்பாராத அதிரடி! இலக்கியம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டாக நீங்கள் ஆத்மாநாமின் ஒரு கவிதையைப் பயன்படுத்தியது இன்னும் அதிர்ச்சி!! எனினும் இரண்டுக்கும் இடையிலான வேறுபாடும் புரியும்படியாகவே சொன்னீர்கள். முதலாவது சமுக அக்கறையுள்ள இலக்கியப் போராளி ஒருவரின் கண்டனம்; ஆனால் இரண்டாவது, பெரும்படைப்பாளி ஒருவரின் சிறு சறுக்கலைச் சுட்டிக் காட்டும் திறனாய்வாளரின் பாணி.

    தொடர்ந்து சிறந்த படைப்பு என்பது எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என ஒட்டக்கூத்தர் முதல் பாரதியார் வரை அழகழகான எடுத்துக்காட்டுக்களுடன் நீங்கள் அளித்த அந்த விளக்கத்தை "எது இலக்கியம்?" எனும் தலைப்பில் தனிக்கட்டுரையாகவே நீங்கள் வெளியிடலாம். மொத்த நேர்காணலிலேயே இந்தப் பகுதி எனக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தது.

    அதே போலத் தமிழிலக்கணம் பற்றிய உங்கள் தகவல்களும் மிகவும் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருந்தன. அதாவது டகரத்தை ஒட்டி எப்பொழுதும் ணகரம்தான் வரும்; னகரம் வராது என்றும் னகரத்தை ஒட்டி எப்பொழுதும் றகரம்தான் வரும் ரகரம் வராது என்றும் நீங்கள் கூறிய செய்திகளை முன்பே இங்கே உங்கள் வலைப்பூவில் படித்த ஞாபகம். ஆனால் நினைவில் சரியாக இருத்திக் கொள்ளவில்லை. இன்னொரு முறை அதைப் படிக்க வேண்டும். கூடவே, தமிழ் அரிச்சுவடி ஒழுங்குமுறைக்கே ஒரு காரணம் இருப்பதாகவும் கூறினீர்கள். ஆனால் அஃது என்ன, ஏது என விளக்கமாகச் சொல்லாதது ஏமாற்றமாக இருந்தது.

    மொத்தத்தில் மிகவும் பயனுள்ள நேர்காணல்! அரிய தகவல்கள்! இப்படி ஒரு நேர்காணலை வழங்கியமைக்காகத் தங்களுக்கும் இவள் பாரதி அவர்களுக்கும், நம் தமிழ் உயூடியூபு வலைக்காட்சி ஊடகத்தினருக்கும் அன்பான நன்றி!

    பதிலளிநீக்கு
  12. நண்பர்க்கு வணக்கம். சரியாகப் பார்த்ததோடு, விரிவாகவும் கருத்துரைக்க அன்பும் அறிவும் தேவை. இரண்டும் உள்ள தங்களின் கருத்து எனக்குள் சில நம்பிக்கைகளை வளர்த்திருக்கிறது. பார்க்கலாம்... “தமிழ் என்பது வெறும் இலக்கியமல்ல...” என்றொரு கட்டுரை, பேச்சுக்குத் தயாரித்துவருகிறேன். விரைவில் வெளியிட உங்கள் கருத்துரை ஊக்கமளித்துள்ளது. நன்றி தோழரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுத்தருள வேண்டும் ஐயா! இப்பொழுதுதான் உங்கள் மறுமொழி பார்க்கிறேன். இந்தக் கருத்துரைத் திரியைப் பின்தடமறியப் பதிந்திருந்தேன். ஆனால் ஏனோ உங்கள் மறுமொழி வரவில்லை.

      //விரிவாகவும் கருத்துரைக்க அன்பும் அறிவும் தேவை. இரண்டும் உள்ள தங்களின் கருத்து எனக்குள் சில நம்பிக்கைகளை வளர்த்திருக்கிறது// - ஆகா! இதை விட வேறென்ன வேண்டும்! மிக்க நன்றி ஐயா!

      //“தமிழ் என்பது வெறும் இலக்கியமல்ல...” என்றொரு கட்டுரை, பேச்சுக்குத் தயாரித்து வருகிறேன். விரைவில் வெளியிட உங்கள் கருத்துரை ஊக்கமளித்துள்ளது// - ஐயா, உங்களுக்கே ஊக்கம் அளிக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவன் இல்லை. சிறியவனே! உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை; தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சிறு பொறியையும் பெருநெருப்பாக்க வல்லவர்கள் என்பதால் சிறியேனின் எளிய கருத்துரையே உங்களை இன்னொரு பெருமுயற்சிக்குத் தூண்டியிருக்கிறது என நினைக்கிறேன். அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  13. அ.அறிவுடைநம்பி. TNSF பொருளாளர் பொன்னமராவதிசெவ்வாய், ஏப்ரல் 07, 2020

    நன்றிகள் பல தோழர்...

    மூன்று பகுதிகளையும் முழுமையாக கேட்டேன். ஒரு நூலகமே பேசக் கேட்ட அனுபவம். பல நூல்களை ஒரே நேரத்தில் வாசித்த அனுபவம்... இந்த நேர்காணலின் மூலம் என்னுடைய தற்போதைய நிலை என்ன என்பதை சுயபரிசோதனை செய்து கொண்டேன். கையில் கிடைத்ததை வாசிப்பதல்ல சிறந்த வாசிப்பு...
    அதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன என்பதை தங்களால் தெரிந்து கொண்டேன். எப்போதும் தங்கள் பேச்சுகளை கேட்பது வழக்கம். உங்கள் இயல்பான பேச்சு என் கவனத்தை முழுமையாக ஈர்த்தது தோழர்..

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட நான்காவது புத்தகத் திருவிழாவில் தங்களோடு களம் நின்று பணியாற்றியதும், பொன்னமராவதியில் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கில் தங்களோடு பேச வாய்ப்பு கிடைத்ததும் நான் பெருமையாக நினைத்த தருணங்கள் தோழர்...

    மனம் நிறைந்த நன்றி தோழரே எனக்கு உங்களின் நேர்காணலைக் காண பரிந்துரை செய்தமைக்காக...

    பதிலளிநீக்கு
  14. தொடர்க ...முழு வாசிப்பில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறன்

    பதிலளிநீக்கு