உங்க BIGG-BOSS உம் ஜல்லிக்கட்டும் ஒன்னாலே?

சிநேகன்  சக்தி, கணேசிடம் சொல்கிறார் 
"நா அவள்(ஜூலி)கிட்ட இப்ப வரைக்கும் 
ஜல்லிக்கட்டப் பத்திப் பேசல, ஏன் தெரியுமா
பேசுனா, அவ இங்கயே தூக்குப் போட்டு செத்துடுவா!?!?"


BIGG-BOSS படத்தில், நாள் நேரத்தப் பார்த்துக் கொள்ளுங்கள்
(அதாவது 14-7-2017 காலை 9.45 மணியாம்! நா இந்தக் கருமத்தத் தொடர்ந்து பாக்குறதில்ல.. Hot-Starஇல் நேரமிருக்கப்ப பார்க்குறது.. உலகத்துல என்னதான் நடக்குதுன்னு நமக்கும் தெரியணுமில்ல?)

அட என்னாங்கடா இது!
டிஆர்பி ரேட்ட ஒசத்த அடுத்த அம்ப வீசுறீங்களாடா
உங்க பிக்-பாஸூம் 
ஜல்லிக்கட்டுப் போராட்டமும் 
ஒன்னாடா
உங்கள வரலாறு மன்னிக்காதுலே!
 
"உங்கள் மேடை உங்கள் நாக்கு!
எதுவேண்டுமானாலும் பேசுங்கள்!
உங்கள் கவிதை உங்கள் பதிப்பகம் 
எதுவேண்டுமானாலும் போடுங்கள்!

ஆனால்,
காலத்தின் விமர்சனம்

உங்கள் பிணங்களைக் கூட
தோண்டி எடுத்து வந்து தூக்கில் போடும் 
என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்" -
-வைரமுத்து கவிதை
இப்போது நினைவில் வருவது ஏன் நண்பர்களே?

இதிலுள்ள உளவியல், “சேரி பிகேவியர்”என்னும் காயத்திரியின் கீழ்த்தரமான பிகேவியர், பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்..காசு பண்ணவும் பேர்வாங்கவும் எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஆண்-பெண் இளசுகள், அவர்களைப் பகடைக்காயாக வைத்தாடும் ஸ்டார் விஜய்யின் தந்திரம், அதற்கு இரையாகிவிட்ட “உலக நாயகன் கமல்” என்று சொல்லப்பட்ட கலைஞன் இதைப்பற்றியெல்லாம் பிறகு விரிவாக எழுதுவேன். 

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் 
புகழ் என்பதற்கு ஆங்கிலத்தில் Famous என்று சொல்வார்கள் அதாவது நல்லவிதமாகப் பெயர் பெற்றவர் என்று பொருள்! 
கிட்டத்தட்ட இதே போலும் மற்றொரு சொல்  Notorious           இதற்குக் கீழ்த்தரமாக அறியப்பட்டவர் என்று பொருள்

இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல், 
நம்ம மந்திரிகள், காவல்துறை வண்டியில் ஏற்றப்படும் போதும் கையாட்டுவார்களே அதுமாதிரி பிக்-பாஸ் பற்றி நினைக்கிற நினைப்புகள் எவ்வளவு தவறு என்பது போகப்போகப் புரியும்

மற்ற மொழிகளில் இது வெற்றிபெற்றிருக்கலாம் 
அது நொட்டோரியஸ்! ஆனா,
தமிழில் இது “வௌங்காத பயக வேலை” 
என்பது விரைவில் புரியும்!

5 கருத்துகள்:

  1. ஆகா...சிங்கம் களத்துல இறங்கியாச்சு...
    இப்ப வாங்கடே...

    பதிலளிநீக்கு
  2. அநேகமாக அடுத்த பகுதி நடக்காது என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல வேளை ஐயா. அந்தப் பக்கம் நான் செல்வதேயில்லை.

    பதிலளிநீக்கு
  4. சிலர்தான் பொங்கிக்கொண்டிருக்கிறோம்
    ஒருமுறை கூட பார்க்கவில்லை ...

    பதிலளிநீக்கு
  5. இந்த நிகழ்ச்சியை எப்படித்தான் பார்க்கிறார்களோ தெரியவில்லை. விஜய் டிவி பல(எதிர்மறை) விளம்பர தந்திரங்களை செய்து நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய முனைகிறது

    பதிலளிநீக்கு