தமுஎகச - பொன்விழா நிறைவு - சென்னை - தலைவர்கள் அழைப்பு

 கடந்த 1975ஆம் ஆண்டு

அவசர நிலைக்கால இருளில் 

மதுரையில் ஏற்றப்பட்ட அறிவுஒளி!

கலை-இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில்

கடந்த 50ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் 

ஆயிரக்கணக்கான மேடைகளில்

மக்கள் இலக்கியச் சுடரேந்தி

பொதுமேடைகளில் மறுக்கப்பட்ட பறையிசையை

மக்கள் அனைவரும் ஏற்கச் செய்த 

மாபெரும் கலை-இலக்கிய அமைப்பு

அதன் பொன்விழாவின் தொடக்க நிகழ்வு 

கடந்த 12-07-2024 அன்று

மதுரையில் நடந்தது,

அந்த நாளில், நான்,

வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை ("ஃபெட்நா")

நடத்திய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் பேசினேன்.

தமிழ்ச்சங்க நிர்வாகிகளிடம் இதேநாளில்

மதுரையில் தமுஎகச

பொன்விழாவின் தொடக்கவிழா 

நடப்பதைச் சொல்லி

தமுகஎச வெளியிட்டிருந்த சிறு நூலை 

நியூயார்க் தமிழ்ச்சங்க இலக்கியக்குழுத்

தலைவரும் எழுத்தாளருமான 

திரு.ஆல்ஃபி (எ) ஆல்பிரட் தியாகராஜன் அவர்களின் 

உதவியோடு  வழங்கி மகிழ்ந்தேன்.

இதோ - இப்போது -

பொன்விழா நிறைவு விழா 

சென்னை - நிகழ்ச்சிகளுக்கான

அழைப்பிதழ் வந்திருக்கிறது! 

நான் 1975இல் திருவையாறு அரசர் கல்லூரி மாணவன்!

அப்போதே அங்கே ஒரு கிளை தொடங்கி

கவிஞர் தணிகைச் செல்வனை அழைத்து 

நிகழ்ச்சி நடத்தியதும், அங்கிருந்து

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின்

முதல் மாவட்ட மாநாடு - நாகையில் நடந்தபோது

பிரதிநிதிகளோடு சென்று

கலந்து கொண்டதும் நினைவிலாடுகிறது!

பிறகு 1978இல் புதுக்கோட்டை வந்து,

முதல் கிளையைத் தொடங்கியதும்,

மாவட்டம் முழுவதும் கிளைபரப்பியதும்

1982இல் பாரதி நூற்றாண்டு விழாவை 

இரண்டு நாள் விழாவாக

புதுக்கோட்டை TELC பள்ளியில் நடத்தியதும்,

1983இல் கந்தர்வன் வந்தபின், வேகமெடுத்து

பல்வேறு நிகழ்ச்சிகளில், பல்வேறு 

கலை-இலக்கிய இளைஞர்களோடு இணைந்து 

தமுஎச வளர்ந்ததும் வளர்த்ததும், நான்

மாநிலத்துணைச் செயலர், துணைப்பொதுச் செயலர்

இப்போது மாநிலத் துணைத் தலைவர் என 

தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன்..

-----------------------------------------------------

இதோ எனது பொதுவாழ்வின் 50ஆம் ஆண்டு,

தமுஎகச - பொன்விழாவோடு இணைந்து..

-------------------------------------------------








பொன்விழா நிறைவுக் கொண்டாட்டத்திற்கு  

தலைவர்களின் காணொலி  அழைப்பு :

-----------------------------------------------

தமுஎகச மூத்த தலைவர்களில் ஒருவரான

தோழர் எஸ்.ஏ.பெருமாள்  உரை : 

 https://www.youtube.com/watch?v=xO04GN1A5Mg

 

தமுஎகச முன்னாள் தலைவரும்

எழுத்தாளரும், வழக்குரைஞருமான

தோழர். சிகரம் ச.செந்தில்நாதன்  உரை :  https://www.youtube.com/shorts/qNPLSC01lJ0


தமுஎகச முன்னாள் தலைவரும்

எழுத்தாளரும் தமிழ்ச் சமூகவியல் அறிஞருமான

தோழர். அருணன்  உரை : 

https://www.youtube.com/shorts/G29g6LfNHzU

 

தமுஎகச முன்னாள் தலைவரும் எழுத்தாளருமான தோழர்.ச.தமிழ்ச்செல்வன்  உரை : 

https://www.youtube.com/shorts/YTR0y-dZZvI

 

தமுஎகச தலைவரும் பேச்சாளரும், எழுத்தாளரும் ஊடகவியலாளருமான

தோழர். மதுக்கூர் ராமலிங்கம் உரை

https://www.youtube.com/shorts/K9P1L2_NYkM

 

தமுஎகச பொதுச்செயலரும் 

எழுத்தாளருமான

தோழர் ஆதவன் தீட்சண்யா உரை- 

https://www.youtube.com/shorts/1Ly6HoHIerc

 

தமுஎகச மாநிலத் துணைத் தலைவரும் 

திரைக்கலைஞருமான 

தோழர் ரோகிணி  உரை  

https://www.youtube.com/shorts/x07eMOy_3vQ

 

தமுஎகச துணைப் பொதுச் செயலரும்

எழுத்தாளருமான 

தோழர் களப்பிரன்  உரை  

https://www.youtube.com/shorts/eZBuXlxdX7w

 

தமுஎகச பொன்விழாக் குழுத் தலைவரும்

தொல்லியல் தமிழறிஞரும், எழுத்தாளருமான

முனைவர் ரெ.பாலகிருஷ்ணன்  உரை 

 https://www.youtube.com/shorts/C5iDrUwrAVA

 ================================================

வாருங்கள் கலை-இலக்கியத் தோழமைகளே!

சாதி-மதமற்ற, சமத்துவ சமூகத்துக்கான

கலை-இலக்கியத்தை உயர்த்துவோம்!

புதியதோர் தமிழ்நாடு!

புதியதோர் இந்தியா!!

புதியதோர் உலகம்!!! படைக்க 

தொடர்ந்து எழுவோம் எழுதுவோம்!

------------------------------------------- 

--- கடந்த ஆண்டு இதே நாள் ---

2024 சூலை 1 முதல் 15வரை

அமெரிக்காவில் இருந்ததால்

தமுஎகச பொன்விழாத் தொடக்க நிகழ்வில்

நான் கலந்து கொள்ள இயலாது போனது

அமெரிக்க (ஃபெட்நா) நிகழ்வுகளை

இன்னும் நான் நமது

வலைப்பக்கத்தில் எழுத வில்லை!

விரைவில் எழுதுவேன் -

அந்த நிகழ்வுகளில் ஒன்று -

------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக