கிராமத்துக் கிழவி சொல்லும், ”ஆட்டுக்கு
உடம்பு சரியில்லன்னு ஒருத்தன் வைத்தியம் பாக்கப் போனானாம், அவஞ் சொன்னானாம், “ஆட்டுக்கு
சூப் வச்சிக் குடுத்தா சரியாயிடும்“னு. உடனே ஆட்டுக்கார முட்டாப்பய சூப்
வக்கிறேன்னு அந்த ஆட்டு வாலையே வெட்டி சூப் வைக்கப் போனானாம்”
இந்த மாதிரித்தான் இருக்கு... நம்ம மத்திய அரசு நெய்வேலி நிலக்கரி
ஆலைப் பங்குகளைப் “பொது மக்களுக்கு“ விற்க முடிவெடுத்திருப்பதும். அதற்கு இவர்கள்
சொல்லும் காரணம், “பொதுத் துறை கம்பெனிகள் சிலவற்றின் பொருளாதாரப் பிரச்சினையை சமாளிக்க“
அதுசரி... அப்பறம் வாலை வெட்டுறதால. ஆடே செத்துப் போற அளவுக்கு நிலைமை போயிரும்கிறது
அந்தப் படிக்காத முட்டாப் பயலுக்குத்தான் தெரியல, இந்த “பொருளாதார மேதை“களுக்குமா
தெரியல...
புதிய தலைமுறை தொலைக்காட்சியில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன்
சொன்னாரு 5சதவீதப் பங்குகள் தானேன்றது முக்கியமில்ல, அடுக்கு வீட்டுல ஒரு
செங்கல்தானே புடுங்கப்போறம் கிற மாதிரி இருக்குன்னது நல்ல உதாரணம். அதுலயே,
தொலைபேசி வழியா மதிமுக வை.கோ.வும் ஆவேசமாச் சொன்னாரு, தந்தி தொலைக்காட்சி விவாதத்துல
மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் அ.சௌந்தர்ராஜன் “பொதுமக்களுக்கு
விற்பனைன்னு சொல்லிட்டு யாருக்கு விற்பீங்க.. சாதாரண ஜனங்களா வாங்கப்போறாங்க,
பன்னாட்டு முதலாளிகளும் உள்நாட்டுப் பெருமுதலாளிகளும்தான் பொதுமக்களா?“ ன்னு
கேட்டது சுறுக்னு தச்சுது. நம்ம முதலமைச்சர் அம்மாவும் காட்டமா ஒரு கடிதத்த தட்டிவிட்டிருக்காங்க...
ஆனா,
இதெல்லாம் அந்த மத்திய அரசுக்குக் காதுல விழணுமே! விழவே விழாது, அப்பறம்
ஓட்டுமட்டும் விழுமாங்கிற அடுத்த வருசம் இந்த நேரம் தெரிஞ்சுக்கலாம்... நம்ம பேராசிரியர் அருணன் “காலந்தோறும் பிராமணியம்“னு
ஒரு –எட்டுத் தொகுதியா- ஒரு பெரிய புத்தகம் போட்டிருக்காரு... அதுல ஒரு அத்தியாயத்
தலைப்பு – “ராஜிவ்- ராவ் காலம்“ இந்தியாவின் “ராவுகாலம்“ ன்னு இருந்தது, சரிதான்ல?
முந்தி வாஜ்பேயி அரசாங்கமும் இந்த முயற்சியச் செஞ்சது நினைவிருக்கிறது...
அப்ப ஆளாளுக்குக் கத்தி முடிவ மாத்த வச்சாங்க.. இப்ப சத்தம் போடாம வேலை
நடக்குது...
யாரு எத வித்தா நமக்கென்ன?
சிங்கம்
பார்ட்-2 வந்திருச்சில்ல.. அந்த செய்திகளைப் பார்ப்போம்..
உறரி-சூர்யா
வின் வெற்றிக் கூட்டணி சும்மா கர்ஜிக்கிறாருல்ல சூர்யா...
சிங்கம்-2வின் பெரும்பாலான படப்பிடிப்புகள்
முடிந்து விட்டன. ஆனாலும் இன்னும் படம் பற்றிய தகவல்களை ரகசியமாகவே
வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. இருந்தாலும் கிடைத்த சில தகவல்கள் இதோ...
* சென்னை, ஐதராபாத், தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி, பகுதிகளில் இரண்டு கட்டமாக வசன பகுதிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது.
* அனுஷ்காவும், ஹன்சிகாவும் போட்டி போட்டு கிளாமராக நடித்திருக்கிறார்கள்.
* அஞ்சலி நடித்த ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ஒரு கோடி செலவு செய்திருக்கிறார்கள். அஞ்சலிக்கு சம்பளம் 20 லட்சம்.
* தெலுங்கில் "யடுகு-2" என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது.
* படத்தின் இந்தி உரிமையை தயாரிப்பாளரே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். இந்தியில் அவரே தயாரிக்க இருக்கிறாராம்.
* நடுக்கடலில் கடற் கொள்ளையரும் சூர்யாவும் போடும் சண்டைக் காட்சி தூத்துக்குடி கடலில் 10 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் கடற் கொள்ளையர்கள் முஸ்லிம்கள் என்பதற்கு அடையாளமாக அவர்கள் முஸ்லிம் பெயர்களை சொல்லிக் கொள்வது போல காட்சி இருந்ததாம். இது வெளியில் கசிந்து எதிர்ப்பு கிளம்பியதால், டப்பிங்கில் அதை மாற்றி வேறு புரியாத பெயர்களை பயன்படுத்த இருக்கிறார்கள்.
* 3வது கட்ட படப்பிடிப்பு முழுவதும் பாடல் காட்சிகள்தான் படமாக்கப்படுகிறது. கென்யா, தான்சானியா நாடுகளுக்கு சென்று இயக்குனர் ஹரி லொக்கேஷன் பார்த்து திரும்பி உள்ளார். பாடல் காட்சிக்காக சூர்யா தான் வைத்திருந்த ஸ்பெஷல் மீசையை எடுத்து விட்டார்.

“ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு”
(இது சிங்கம் படத்துல சூர்யா சொல்ற (புரமோ)வசனமாவும் வச்சிக்கலாம், நெய்வேலி பங்குவிற்பனை பற்றிய -தேர்தலுக்காகக் காத்திருக்கும்- மக்களின்முடிவாகவும் வச்சிக்கலாம்ல?
------------------------------------
தாரளமயம்,தனியார்மயம், உலகமயம் ன்னு நாட்டை மாயமாக்கிட்டு... பன்னாட்டு நிழல்ல பதுங்கி வாழ நினைக்கிற ஆள்வோரின் போக்கைப் பத்தி அடித்தட்டு மக்களுக்கு என்ன கவலை? சிங்கம்-2 நாயகனும் நாயகியும் நம்ம வீட்டு டி வி யில தெரிஞ்சாப் போதுமே. நல்லால்லே நல்லால்லே நாடு போற போக்கைப் பாத்தா எதுவும் நல்லால்லே..ன்னு பாடத்தான் தோனுது.
பதிலளிநீக்குராசீவ் - ராவ் காலம் ராவு காலம் மட்டுமல்ல. அது RAW ன் கால மும் கூட.
பதிலளிநீக்குஅய்யா சினிமா எக்ஸ்பிரஸ் செய்தியாளரே உங்கக்கிட்டதான் செய்தி வாங்குவாரு போல !