புதுக்கவிதை -- வெற்றிபெற்ற வரலாற்றுச் சுருக்கம்

அப்துல் ரகுமான்
புதுக்கவிதை தோன்றிய சமூகப் பின்னணி:
அளவு மாற்றம் குணமாற்றத்தை நிகழ்த்தும் எனும் மார்க்சிய விஞ்ஞானம் கலை இலக்கியத்திலும் மெய்ப்பிக்கப்பட்டது.
குழுமக்கள் சமுதாய நிலையின் இறுதியில் படிப்பாளிகள் காதே கருவியாய்த் தத்துவ விளக்கம் தந்து பெற்றுக் கொண்டமைக்கு சுருதிகள் (காதால் கேட்கப்பட்டவை என்பது பொருள்) எனும் சொல் வழக்கு சான்றாகும்.

 அன்றைய இந்தச் சமுதாய நிலையில் வெகு சிலரே படிப்பாளிகள் என்பதும் தவிர்க்க முடியாமலிருந்தது
பின்னர் குறுமன்னர்-பெருமன்னர் காலத்தில்-(நிலப்பிரபுத்துவ சமுதாய நிலையில்) ஏடுகளும் எழுத்தாணிகளுமே கருவிகளாய்க் கற்று வந்தனர். இப்போது வட்டம் சிறிதே வரிவடைந்து நின்றது. என்றாலும் அது வெகு ஜனங்களைப் பாதிக்கவில்லை. 

கல்வியும் புலனெறி வழக்க- கலைஇலக்கியமும். ஒரு சிலருக்கு என்றிருந்த நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் விளைச்சல் முதலாளியத்தின் வரவால் நெகிழ்ச்சியுற்றது. 17.18 ஆம் நூற்றாண்டுகளில் சமூக உறவுகளில் பெருத்த மாற்றங்கள் நிகழவே அதன் தவிர்க்க முடியாத விளைவாக-கல்வி கலாசார விளைச்சல் வெகு ஜனங்களைப் பாதிக்கத் தொடங்கியது-அதில் அச்சு இயந்திர வரவு குறிப்பிடத்தக்கது. வெகுஜனப் படிப்பிலும் கலை இலக்கிய அரசியல் தொடர்புகளிலும் அளவு மாற்றம் நிகழவே கலை இலக்கியத்திலும் குணமாற்றம் நிகழ்வது இயல்பானதே.

இதுவே கடந்த நூற்றபண்டின் ஆரம்ப முதல் நாவல் சிறுகதை கவிதை பற்றிய திறனாய்வு இலக்கியங்களையும் புதுக்கவிதைகளையும் விளையச் செய்தது. நிலப்பிரபுத்துவத்தின் குறுகிய எல்லைகளோடிருந்த கலை இலக்கிய மரபுகள் முதலாளியத்துக்குரிய விரிந்த –முதலாளித்துவ ஜனநாயக- களத்துக்கேற்றவாறு மாறின.

வெகு அண்மையில் -ஒரிரு நூற்றாண்டுக்குள் குடியரசுகள் தோன்றிய (முதலாளிய சமுதாய நிலையில்) அச்சும் நுணுக்கான எழுதுபொருள் கண்டுபிடிப்புகளும் பெருகிவிட்ட நிலையில் சந்தைக்காக வேணும் படிப்பைப் பரவலாக்குவது வெகுஜனங்களையும் படிப்பையும் தவிர்க்க முடியாமல் இணையச் செய்துவிட்டது இது கலை இலக்கியப் புதுமைகளுக்கு அடிப்படையில் சமூக மாறுதல்கள் இருப்பதை தெளிவு படுத்துவதாகும்.

புதுக்கவிதை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பின்னணி
1910 களில் மேலைநாடுகளில் நிகழ்ந்த இலக்கிய மாற்றங்களை 'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ்மொழியில் பெயர்க்க'ச் சொன்ன-பாரதிதான் தமிழில் சிக்கெனப் பிடித்துக் கொண்டு எழுதத் தொடங்கினான்.
          ஆனால் தமிழின் முதல் புதுக்கவிதைத் தொகுதியை வழங்கிய பெருமைக்குரிய (புதுக்குரல்கள் -1962)  சி.சு.செல்லப்பா அவர்கள் பண்டிதர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு ஃபிராய்டியத்தில் சிக்கி புதுக்கவிதையை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லவும் தலைப்பட்டார்.
           தமிழில் புதுக்கவிதைக்காகவும் விமரிசன இலக்கியத்திற்காகவும் என எழுத்து இதழைத் தொடங்கிப் பெரும்பங்காற்றிய பெரியவர் சி.சு.செல்லப்பா அவர்கள்  அகவுலகம் ஃபிராய்டிசத்தினால் விசாலமடைந்து உள்ளததைத் துழாவி இந்தக் கவிஞர்கள் ஏதோ புதிய உண்மையைக் கொணர்ந்தவர்கள்“ என்பதாக முன்னுரையில் கூறுவது புதுக்கவிதைக் குழந்தையைப் பாதுகாத்து வேறு எங்கோ அழைத்துச் செல்ல முனைவதைத் தானே காட்டுகிறது?
         இதனால்தான்-
         புதிய தடம் காணுதற்கு
         பொழுதில்லை ஆதவினால்
         விதிவழியே செய்த
         வினைவழியே போகின்றேன் – (ஞா.மாணிக்கவாசகம்) என்பன போன்ற விரக்திக் கவிதைகளைப் புதுக்கவிதை வடிவத்தில் அறிமுகப் படுத்துகிறார். (நூல்-புதுக்குரல்கள்)
       பிறந்தது முதல் பேசாதிருந்த ஒரு பிள்ளை பெரும்பாடுபட்டு மருத்துவம் செய்த பிறகு முதல்முதலாகப் பேசத் தொடங்கியதுமே பெற்றவனைப் பார்த்து எப்போது தாலியறுப்பாய்? என்று கேட்டதாகச சொல்லும் கதையை நினைவுறுத்துகிறது இத்தொகுதியின் சில கவிதைகள்.
    இது போன்ற பழங்கருத்தை - உலுத்துப்போன ஒப்பாரிகளைச் சொல்வதற்கு எதற்கு இந்தப் புதிய வடிவம்விலங்கை உடைத்த கைகள் விரக்தியில் துவள்வதா?
       அசைநிலையும் சீர்-தளையும் இயல்பான உணர்ச்சிகளை மக்களின் அன்றாடச் சுமை-சுவையுணர்வுகளை இயல்பாகக் கூறத்தடையாக இருப்பதாகக் கருதியே சுவை குறையாமல் அதே நேரம் தளைச் சுமையை உதறிவிட்டு வசன கவிதையும் புதுக்கவிதையும் பிறந்தன. 

மீண்டும் பழைய குருடி நிலை ஏன்?
       இது மாறிவரும் உலகத்தின் புதிய வெளிச்சங்களைக் காண முடியாத கருத்துக் குருடர்களின் நிலையேயன்றி வேறென்ன? இதற்கு அக உலக மதிப்பீடு பிராய்டிசத் உன்னதம் எனும் தத்துவப் பிகற்றல் வேறு!
இதுபற்றி சொறிந்து சுகம் காணுகிற சொறிசிரங்கு நோயாளி பிறருக்கு அச்சுகம் இல்லையே என்று கர்வம் கொண்டு கூறுவது போல இருக்கிறது இவர்களின் அக உலக மதிப்பீடுகள். இவர்கள் போராட்டங்களைக் கண்டு வெருளுவதால் தாங்கள் அக ஒட்டங்களையே கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று போராசிரியர் நா.வானமாமலை அவர்கள் கூறுவது மிகப் பொருத்தமே.
        மரபுக் கவிதையாகட்டும் புதுக்கவிதையாகட்டும் இந்த உன்னதத் தத்துவங்களில் சிக்கிக் கொள்ளாமல் நமது வர்க்கக் கவிஞர்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள் கவிஞர் கந்தர்வன் பிரகடனப்படுத்துவது போல. சாராம்சத்தில் அந்தத் தத்துவங்கள் என்பவை “ விவரம் தெரிந்தவனே வீட்டிற்குள்ளேயே இரு என்பது தானே?..... அது எங்கள் வாழ்க்கை முறையில்லை. அதனால் அது பாடுபொருளும் இல்லை.விரக்தியை விதைக்க வேண்டியவர்க்கு கஞசா விற்கட்டும். எதற்குப் பேனாவை எடுக்கவேண்டும்?  என்று நாம் உரக்கவே சொல்லிக் கொண்டுதான் ஒரு போராளிக்குரிய கம்பீரத்தோடு பேனாவை ஏந்துகிறோம்.
       புதிய உள்ளடக்கத்திற்கான போராட்டத்தில் பிறந்த புதுக்கவிதையின் வடிவத்தில் பழையகள் புதிய மொந்தை போல- சிலர் கவிதைகளை வழங்கிய கொண்டிருக்க 'கணையாழி' முதலிய (புதுக்கவிதைக்கு முக்கியத்துவ தந்துவந்த) இதழ்களோ உளறுவாயனைவிட ஊமையனே தேவலாம் என்றாக்கி விடடன.
      ஆம் சிலநேரம் இவர்கள் இருண்மை படிவம் குறியீடு இவற்றின் பின்னணியில் தரும் கவிதா உத்திகள் சிலரது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியதன்றி வேறு வெகுஜனப் பயன் விளைவித்தாகத் தெரியவில்லை.

           விக்கா வுக்கா வித்தா விப்போய் 
                 விட்டா னட்டூர்; சுட்டூர் புக்கார் 
           இக்கா யத்தா சைப்பா டுற்றே 
                        இற்றோ டிப்போய் வைப்பீர் நிற்பீர் - பழைய ஒட்டத்தரின் மரபுப்பாட்டாவது விளங்கிலிடும் போலுள்ளது. புதுக்கவிதையில் ஆத்மா நாம் தருகின்ற-
      நிஜம் நிஜத்தை நிஜமாக 
நிஜமாக நிஜம் நிஜத்தை
      நிஜத்தை நிஜமாக நிஜம் 
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்   
நிஜம் நிஜம் நிஜம்- என்னும் கவிதையின் தத்துவ விளக்கத்தை எந்த அறிவு ஜீவியிடம் போய்க் கேட்பதோ தெரியவில்லை. ஆனால் எதுவும் புரியவில்லை என்பது மட்டும் நிஜம்.

         இவ்வாறு புதுக்கவிதையின் தோற்றமும் அவசியமும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டும் தவறாக வழி நடத்தப்பட்டும் வந்ததால் மரபுக் கவிதைகளின் மீது மக்களின் நம்பிக்கை 1970 களிலும் கூட நீடித்து நிற்க முடிந்தது.
   
வானம்பாடிகளின் பிதாமகர்
கவிஞர் சிற்பி
 
அதே நேரத்தில் 70களில் கோவை வானம்பாடிகளின் 'வெளிச்சங்க'ளாலும் பாப்லோ நெருடா, மாயகாவ்ஸ்கி, பாரதி ஆகியோரின் அடியொற்றிய முற்போக்குக் கவிஞர்களின் கருத்தாழமும் உருவ எளிமையும் கொண்ட தமிழ்க் கவிதை முயற்சிகளாலும் மக்களின் நம்பிக்கை புதுக்கவிதைகளின் மீது வலிமையடைந்து வந்தது. ஆனாலும் இது பழம்பண்டிதர்களுக்கு அதிர்ச்சிய+ட்டுவதாகவே நீடித்தது. 
       எனவேதான்.
      புதுக்கவிஞர்கள் சிலர் கூடி இலக்கணக் கட்டுக் கோப்பை உடைத்தெறி என்கிறார்கள். இந்தப் போக்கு நீடித்து மரபுகள் கெட்டு ஒரு தாறுமாறான நிலை ஏற்படும் இதைத்தடுப்பது புலவர் குழுவின் பொறுப்பு என்று 1977 ஆம் ஆண்டில கூட புலம்பிக் கொண்டிருந்தார்கள்

புதுக்கவிதையின் பலமும்-பலவீனமும் 
      இந்தச்சீருக்கு அடுத்த சீரும் அடியும் இப்படித்தான் அமையவேண்டும். என மரபுக்கவிதையின் வழக்கம். இது எழுதுவோரின் எண்ண ஒட்டத்திற்கு இடையூறு எனினும் படிப்போர் நினைவில் நிறுத்தற்கு எளிது. எந்தச் சீரும் எந்த அடியும் மிகுந்தும் குறைந்தும் வரலாம் என்பது புதுகவிதையின் வழக்கம். இது எழுதுவோரின் எண்ண ஒட்டத்திற்கு எளிது எனினும் படிப்போரின் நினைவில் நிற்காமல் வார்த்தைகள் மாறிப்போகும்.

         எனினும் சுமார் மூவாயிரம் ஆண்டுக்கால மரபுக்கவிதைகள் தராத தாக்கத்தையும் சமூக மாற்றத்துக்ககான கருத்து மோதல்களையும் சுமார் முப்பது நாற்பது ஆண்டுக்கால புதுக்கவிதைகள் தந்துவிட்டன என்றால் மிகையில்லை. இது கவிஞரின் பலவீனமல்ல கட்டமைப்பின் பலவீனம் .
        பாரதி கம்பன் வள்ளுவர் போன்ற சிறந்த கவிகளும் கூட இலக்கணத்திற்கு வளைந்து கொடுப்பதற்காகக் கூறியது கூறல் என்ற குற்றத்திற்கு ஆளாகிறார்கள். செல்வத்துள் செல்வம் செவிச்வெல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்ற குறளைப் பாருங்கள். முதல் முன்று சொற்களிலேயே கவிதையின் அர்த்தம் புலப்பட்டுவிடுகிறது. வெண்பா இலக்கண நிறைவிற்காக கடைசி நான்கு சொற்களைக் கவிஞர் பிடித்து இழுக்க வேண்டியுள்ளது. யாப்பு இலக்கண மரபுப்படி எழுதும்போது எவ்வளவு பெரிய கவிஞனுக்கும் இந்த இடைஞ்சல் வந்து விடுகிறது. என்கிற விமரிசகர்
பாலா அவர்களின் கூற்று மரபின் பலவீனத்தையும் புதுக்கவிதையின் பலத்தையும் எடையிடுவதாக உள்ளது.

        இதனால்தான் ஆசிரியப்பாவுக்குரிய நாற்சீர் ஓசையில் பாரதிதாசன் எழுதிய
இரவில் வாங்கும் இந்திய விடுதலை 
என்று விடியுமோ யார் அறிகுவரே எனும் மரபுக்கவிதை பெறாத வெற்றியை. அதே கருத்தை எடுத்தாண்ட சேலம் அரங்கநாதனின்
இரவில் வாங்கினோம் 
 விடியவே இல்லை எனும் புதுக்கவிதை பெற்று,  பிரபலமாகிவிட்டது.

புதுக்கவிதை வெற்றியும் தத்துவத் தோல்விகளும்: 
        வடிவபலத்தோடு புதுக்கவிதை எழுதியவர்களும்கூட தத்துவ பலவீனங்களால் வெற்றி பெறாமல் போனதுதான் விபரீதம் 
பாரதிக்குப் பின்னால் புதுக்கவிதை முயற்சிகளில் வெற்றிபெற்ற வந்தவராகிய நா.பிச்சமூர்த்தி அவர்கள்.
ந.பிச்சமூர்த்தி
பகுத்தறிவுச் சந்தையில்
ஓவ்வொருவரும் கையில்
முற்றுப் புள்ளிகளை
மூர்க்கமாய் வைத்துக்கொண்டு
மனத்தில் பட்ட துறையில்
முளையடித்துக் கொண்டிருந்தார்
சிலர்-சுருதியுடன்
சிலர் வருணாசிரமத்துடன்
சிலர் சங்க இலக்கியத்துடன்
சிலர் மார்க்ஸ் என்கல்சுடன்
வேறுசிலர் எதனுடனோ
என் கையைப் பார்த்தேன்,
கமாத்தான் இருந்தது
(6)  என்று எழுதி எதிலும் சேர்ந்துவிடாதே! நீ நீயாகவே இரு! என்பது போல உபதேசிக்கிறார். நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான யுத்தத்தில் நீ நியாயத்தைச் சாராமலே 'நடுநிலைமை'க் காப்பாற்று, தனியாக இரு! ஸ்தாபனமாகி விடாதே நான் அப்படித்தான் இருக்கிறேன். என்பதாக எழுதுவது யாரை பலப்படுத்த?  நியாயத்தைச் சாராத நடுநிலை அநியாயத்திற்கான ஆதரவல்லவா? அரசியல் பேசாதே என்பதற்குள்ளிருக்கும் அரசியல் சார்பு போன்றதல்லவா இது? கவிஞா நீ எந்தக் கருத்தையும் பிராச்சாரம் செய்யாதே! எதையும் சார்ந்து நிற்காதே என்கிற 'தூய்மை வாதம்' யாருக்குச் சார்பானது? பிரச்சினைகளில் ஈடுபடாதே! தீர்க்கத் தூண்டிவிடாதே பேசாமலிரு! எனும் கருத்து காட்டுமிராண்டி காலத்து தவம் அல்லவா? 'துட்டரைக்கண்டால் தூரவிலகு' எனும் பழங்கருத்தைக் தூக்கி எறிந்துவிட்டு.
  பாதகம் செய்பவரைக் கண்டால்-நீ
   பயங்கொள்ளல் ஆகாது பாப்பா!
   மோதி மிதித்துவிடு பாப்பா! -அவர்
  முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்ற பாரதியின் பிரிணாமம் பாரதிக்குப் பிறகு நம் காலத்திலேயே- இதுபோன்ற புதுக்கவிதைகளால் பின்னோக்கி இழுக்கப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்?
இதுபோலவே புதுக்கவிதையிலும் புதுப்புது உத்தித அழகியல் சோதனைகளில் ஈடுபட்ட
காதிக வீதியிலே
கருட வாகனத்தில்
உலோகப் பறவைகள்
ஒலி மலர் தூவ
வெண்புறாச் சிறகு
தோரண மாட
சுமாதான தேவதை
ஊர்வலம் வருகிறாள்
என்பது போன்றும் விளக்கு விசாரிக்கப்படுகிறது என்னும் ஆசிரியப்போராட்டத்தில் சிறைக்குள்ளிருந்தும் சிறந்த கவிதைகளை எழுதிய அப்துல் ரகுமான் அவர்கள் - 
தத்துவ சித்தாந்தம் லட்சியம் என்று ஒவ்வொருவனுக்கு ஓவ்வொரு சிறை (7) என்று எழுதி எந்த சுதந்திரத்திற்காக கவிதாயுதம் ஏந்தி நிற்கிறோம் என்பதை மறந்துவிடுகிறார்.

         ஆனால் இன்னொரு பக்கம் கூர்மையான சொற்ளோடும்  தொலைநோக்கு விஞ்ஞானப் பார்வையோடும் வரும் கவிதைகளை வெறும் கோஷம் என்று உதட்டைப் பிதுக்குவோர் இருப்பதும் கவனித்தற்குரியது. 
பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல் கண்ணனையோ வர்ணணையோ பாடினால் ஆகா இதுவன்றோ உயர்ந்த கவிதை என்பதும் எதார்த்தமாகவும் கலையழவோடும் இருந்தால்கூட உள்ளடக்கம் பிரச்சனைகளையோ தீர்வுகளையோ கொண்டருந்தால் அது வெறும் கோஷம் என்பதும் ஏமாற்றல்லாமல் வேறென்ன
இந்தவகை தூய இலக்கியவாதிகள் கபடவேடத்தையும் இனங்கண்டு.
ஓம்சக்தி ஒம்சக்தி என்றேன்-இது
                  உயர்ந்த கவிவார்த்தை என்றார்!
ஒங்குக புரட்சியெனச் சொன்னேன்-இது
                  உளறல் வெறுங்கோலும் என்றார் என்று. கவிதையாலேயே தோலுரித்துக் காட்டுகிறார் நமது கவிஞர் நவகவி

எளிமைப்படுத்துவது வேறு மலினப்படுத்துவது வேறு:-
       இளமைக்கு உரிய எள்ளலும் துள்ளலும் புதுக்கவிதைக்கும் பொருந்தி வருவது கண்டு வெம்பி போகின்றனர் வேடதாரி விமரிசகர்கள். பேருந்தின் ஒரு பக்கத்தில் அடுத்த குழந்தை தாமதப்படுத்துங்கள் என்றும் எதிர்பக்கத்தில் கால தாமதம் ஊழலை வளர்க்கும் என்றும் எழுதியிருப்பதைச் சொல்லி இரண்டு வரிகளையும் அடுத்தடுத்ப்படியுங்கள் என்ன? சிரிக்கிறீர்களா? இதுதான் புதுக்கவிதை என்றுமேடையில்கிண்டல் செய்து காலட்சேபம் நடத்தும் புலவர் கீரன்களின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள்.
       இந்த வெறும் கிண்டல் சிரிப்பாக இருக்கலாம். ஆனால் புதுக்கவிதையே இப்படித்தான் என்று கிண்டல் செய்வது எந்தநோக்கத்தில்?

கிண்டலுக்குப் பெயர் பெற்ற நமது கவிஞர் கந்தர்வன் 
எம்.ஏல்.ஏ.சட்டையில்
சில பைகள் தைத்தார்
எம்.பி.சட்டையில்
ஏராளம் பை தைத்தார்
மந்திரி-
பையையே சட்iயாய்த் தைத்து
மாட்டிக் கொண்டார் - என்று மேடையில் முழங்கும்போது சிரிப்பும் வருகிறது. சிந்தனையும் எழுகிறதே! இந்த வெற்றியைப் புதுக்கவிதையின் வெற்றியாக அங்கீகரிக்க மறுப்பது ஏன்?

ஆனால் பெரிய விஷயங்களைக்கூட கிண்டலாகச் சொல்வதாக எண்ணித் தடுமாறிப் போகும் பெரிய கவிஞர்களும் உண்டு.
புதுக்கவிதை-
சொற்கள் கொண்டாடும்
சுதந்திர தின விழா  (திருத்தி எழுதிய தீர்ப்புகள்) என்று நறுக்காகச் சொல்லிப் புதுக்கவிதையிலும் வெற்றி பெற்ற மரபுக்கவிஞர் வைரமுத்து அவர்கள் நல்ல பல கவிதைகளைத் தந்தவர்தான் ஆனானலும் இலங்கைப் பிரச்சனைக்கு எளிதாகத் தீர்வு சொல்வதாக எண்ணி.
அவன் தீர்க்க தரிசி தான்!
இந்திய தேசப்படத்தில்
இலங்கையையும் சேர்த்து
எழுதினானே!(9) என்று எழுதி இலங்கையை இந்தியாவோடு இணைத்துவிடுவதுதான் பிரச்சனைக்குத் தீர்வு என்றும் எழுதி விடுகிறாh. இது என்ன? இந்தியாவில் ஏற்கனவே எத்தனை பிரச்சினைகள்? இந்தியாவின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டது போலவும் இலங்கையை இணைத்துக் கொண்டால் அதன் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்பது போலவும். சரிதானா தீர்வு?

       கிண்டல் செய்யும்போதும் பிரச்சினைகளைப் பாடும்போதும் தத்துவத்தெளிவோடும் இலக்கியப் பயன்பாட்டோடும் பாடுகிற கவிஞர்களால்தான் மொழிக்கும் அதைப் பேசுகிற மக்களுக்கும் பயன் தர முடியும்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும் அவரவர் சமூகத்தின் விளைச்சலே ஆவர். அவர்கள் மனிதர்களிடம் பேசுகிற மனிதர்கள். அவர்களுக்கு உள்ள ஒரே ஒரு சிற்ப்பம்சம் என்னவென்றால் அவர்களிடம் எழுச்சி கொள்கிற  உணர்ச்சி வேகத்தில் மக்களிடம் அவர்கள் கஷ்டங்களையும் அறியாமையையும் துன்பங்களையும் எடுத்துச் சொல்வதனால் மக்களுக்கு அவர்கள்ச் சுற்றியுள்ள அசிங்கம் எது.அழகு எது என்று புரிந்து கொள்ள உதவுகிறார்கள் என்பதற்கிணங்க அழகையும் அசிங்கத்தையும் அடையாளம் காட்டவந்த கவிஞர்களை தன்னைப் பற்றிய கர்வம் மீற எழுதி அழகைப்பாடும் அசிங்கங்களாகிப் போன சோகமும் புதுக்கவிதையில் உண்டு!

     காதல் தோல்விப் பொருளில் புத்தகம் புத்தகமாகப் புலம்பித் தீர்த்து ஒருகாலத்தில் மாணவக்கவிகளின் கதாநாயகக் கவிஞராயிருந்தவர் மேத்தா அவர்கள். ஆரம்பத்தில் இவர் கண்ணீர் பூக்களையே அதிகமாகச் சிந்தி, பிரபலமான பிறகு, என்னுடைய பேனாவே என்மீது பெறாமைப்பட்டது (ஊர்வலம்) என்ற கூறி மக்களைவிட உயரமாகப் போய்விடுகிறார். பிறகு, புதுக்கவிதை எழுதாதே (ஆனந்தவிகடன் கட்டுரை) என்று கறுப்புச்ச சட்டங்களை இயற்றினார்.

இப்பொதெல்லாம் புதுக்கவிதை எழுதுவது-மாலை நேர உலாப் போல இளைஞர்களின் பொழுது போக்காக மாறிவிட்டது. என்றாலும் எழுதாதே என்று கூறுவதற்கு கவிதைச் சுரங்கம் யாருக்கும் குத்தகைக்கு விடப்படவில்லையே!
         சுட்டியில் வெளிவந்த ஒரு கவிதையை தினமலர்-வாரமலரில் ஒரு பெண் திருடிப்போட்டு விட்டாள் என்று அங்கலாய்த்துக்கு கொண்டது-அந்தப்பத்திகை. உண்மை என்னவென்றால் சுட்டியில் வெளி வந்ததே திருட்டுக்கவிதைதான். திருப்பூர் நடராஜன் அவர்களின் 'விழிப்பு" இதழில் கவிஞர் டி.என்.துரை அவர்கள் எழுதிய
எம்ப்ளாய்மெண்ட நியூஸ் எனும் தலைப்பிட்ட
வாராவாரம் வாங்கிச்சலித்த
அப்பாவி எம்.ஏ..கேட்டான்
 அயுள் சந்தா எவ்வளவு? எனும் கவிதைதான் ஒரிஜினல்! இந்த மூளைத் திருடர்களைத்தான் தடை செய்ய வேண்டுமே யன்றி முளைக்குருத்துகளையல்ல 9 நூறு பூக்கள் மலரட்டும் என்பதுதானே நமது விருப்பம்!

நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்-
ஆடை வாங்குவதற்காக" -  என்று விலை மாதர்களின் நிலையை  எதார்த்தகவிதையில் காட்டி கறுப்பு மலர்களில் வெற்றி பெற்ற நா.காமராசன் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களில் அனுபவ முத்திரைகளோடு வளர்ந்த“ பிறகு திரைப்படப் பாடல்களிலேயே திருப்பங்களைத் தந்து மக்கள்கவியாக மலர்ந்திருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையே 'கொச்சைக் கவிஞன்……அவன் பாடியது இலக்கியமே யாகாது" என்று தத்துவ முத்துக்களை உதிர்த்துவிட்டு சினிமாவில்கிளப்பு டான்ஸ்களில் தத்துவம் படைத்தவராயிற்றே!        
முற்போக்குக் கவிஞர்களின் முன்னிற்கும் பணிகள்:-
        மேற்கண்டவாறு எளிமையிலும் ஆழத்திலும் இலக்கியப் பயன்பாட்டிலும் தெளிவோடு  இருக்கும் முற்போக்குக் கலை இலக்கியவாதிகளின் முன் ஏராளமான கடமை காத்து நிற்கிறது.

        நமது முற்போக்குக் கவிஞர்களிடம் மட்டுமே பாரம்பரியமிக்க தமிழின் பரிணாமக் கருத்தான புதுக்கவிதை நமக்கே உரித்தான -- சொல் ஜாலமில்லாத எளிமை--  வரக்தியில்லாத வீரம் -- கிண்டல் நயம் -- தத்துவத் தெளிவு ஆகிய அனைத்தும் இணைந்து சொற்புனை நலத்தாலும் கற்பனை வளத்தாலும் சிறந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. 

      சுஜாதா போன்ற சுக இலக்கியவாதிகள் வேண்டுமானால் புதுக்கவிதையை நெல்லை கோவை வாணியம்பாடி சிவகங்கை எனும் நாலே திசைகளில் அளவிட்டு (12) நிறுத்திக் கொள்ளட்டும். அது நாம் போகும் திசையெல்லாம் வெளிச்சத்தை விதைத்துக் கொண்டே போவதை சுஜாதா அல்லசூரியனே நினைத்தாலும் தடுக்க முடியாது.

       முதலாளித்துவ ஜனநாயகத்தின் விளை;சலான புதுக்கவிதை அதன் உச்சகட்ட வளர்ச்சியில் அரசியல்-சமூக விடுதலை இயக்கங்களோடு இணைந்து சமத்துவ சமூகத்தை அமைப்பதை முதலாளித்துவத்தாலேயே தடுத்துவிட முடியாது.

         இவ்விடம்-நாம் நினைவிலிருந்த வேண்டிய கருத்து ஒன்று நம் இளைய கவிஞர்கள் எழுது எழுது என எழுச்சியுறச் செய்யும் போதே எழு உட்கார் என்பன போன்ற ஆணை கவிதைகள் அல்ல இன்றைய தேவை போர்க்குணமிகுந்த கருத்தும் பூக்களைப் போன்ற அழகும் இணைந்து வரும் எழுத்துகளே என்பதை உணரவைத்து எழுச்சியுறச் செய்வதே அது!
         இப்போது புதுக்கவிதை வெற்றிபெற்றுவிட்டது என்பதைச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒரு காலத்தில் கவிதை என்றாலே அது இலக்கண மரபுதான் என்றிருந்தது. இப்போதோ “மரபுக்கவிதை“ எனும் புதியசொல் இலக்கணக்கவிதையையும் கவிதை எனும் சொல் புதுக்கவிதையையும் காட்டுவதாக வந்துவிட்டதல்லவா?

கவிஞர் மீரா 


எனவே, இரண்டாயிரம் ஆண்டுக்கால மரபுக்கவிதை ஒருபக்கம் செல்வாக்கு இழந்து வந்தாலும், அது தன்னைத்தானே தகவமைத்துக்கொண்டு, புதுவடிவமெடுத்து, வெற்றி நடை போட்டே வருகிறது. இன்னும் நுங்கும் நுரையும் ஆங்கேங்கே வந்தாலும், வெள்ளப் பெருக்கு வருகிறது என்பதை விளங்கிக்கொள்வோர் விளங்குவர்.


கவிஞர் மீரா சொல்வது போல -
ஆம்! எனக்கு நம்பிக்கை இருக்கிறது என் காலத்தில் ஒரு பாப்லோ நெருடாவை நான் இங்கும் பார்க்கத்தான் போகிறேன்

விழப்போகும் சுவர், வண்ண மேல் பூச்சால் நிலைக்காது!
அழப்போகும் பசிக்குழந்தை, அம்புலியைச் சுவைக்காது
தொழப்போகும் வேலையினைத் தூக்கி எறிந்துவிட்டு>
எழப்போகும் புதுஉலகம் எவன் தடுத்தும் நிற்காது! – நா.மு.
------------------------------------------------------------------------------------------------------------------(இருபத்தைந்தாண்டுகளின் முன் எழுதப்பட்ட கட்டுரை  
நன்றி - செம்மலர் - பொங்கல் மலர் ஆண்டு நினைவில்லை)

24 கருத்துகள்:

  1. " சந்தைக்காக வேணும் படிப்பைப் பரவலாக்குவது வெகுஜனங்களையும் படிப்பையும் தவிர்க்க முடியாமல் இணையச் செய்துவிட்டது "

    யதார்த்தமான உண்மை !

    " நிஜம் நிஜத்தை... "

    முன்னவர்களின் பிராய்டிசம் போல, ஆத்மா நாம் " A rose is a rose is a rose " என்பது போன்ற‌ அர்த்தத்தில் இந்த கவிதையை படைத்திருப்பாரோ ?!

    “இந்தச்சீருக்கு அடுத்த சீரும் அடியும் இப்படித்தான் அமையவேண்டும். என மரபுக்கவிதையின் வழக்கம். இது எழுதுவோரின் எண்ண ஒட்டத்திற்கு இடையூறு எனினும் படிப்போர் நினைவில் நிறுத்தற்கு எளிது. ‘எந்தச் சீரும் எந்த அடியும் மிகுந்தும் குறைந்தும் வரலாம்’ என்பது புதுகவிதையின் வழக்கம். இது எழுதுவோரின் எண்ண ஒட்டத்திற்கு எளிது எனினும் படிப்போரின் நினைவில் நிற்காமல் வார்த்தைகள் மாறிப்போகும்."

    மனதில் பதிந்துகொள்ளவேண்டிய ஒப்பீடு.

    இருபத்தைந்தாண்டுகளின் முன் எழுதப்பட்ட கட்டுரை என்றாலும் புதுக்கவிதையின் வரலாற்றை முற்றிலும் அறியாத என்னை போன்ற‌வர்களுக்கு இன்றும் உதவும் கட்டுரை.

    நன்றி
    சாமானியன்




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, உங்கள் தளம் வந்து பார்த்தேன். “சாமானியன்“ எனும் பெயருக்கேற்ப கருத்தோவியர் ஆர்.கே.லட்சுமணன் அவர்களின் படம் மிகமிகப் பொருத்தம்! வாழ்த்துகள். உங்கள் கட்டுரை தமிழினி மெலல வளரும் எனும் நம்பிக்கையைத் தந்தது. தொடர்வேன், தொடருங்கள், தொடர்வோம்.

      நீக்கு
  2. புதுக்கவிதை பற்றி ஓர் அற்புத திறனாய்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. நலமா? தங்களின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கினால் பல்கலைக்கழகத்தில் பாடமாகும். விரைவில் செய்யுங்கள். (நான் எனது அடுத்த நூல்களைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன், விரைவில் வெளிவரும் என்பதை இந்த எனது பின்னூட்டத்தில் புரிந்திருப்பீர்களே?) நன்றி வணக்கம். நம் தாய் தந்தையர்க்கு என் வணக்கத்தைக் கூறுங்கள்.

      நீக்கு
  3. // எதுவும் புரியவில்லை என்பது மட்டும் நிஜம்... //

    உண்மை தான் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கட்டுரையில் வந்த மேற்கோள் மாதிரித் தெரியலயே வலைச்சித்தரே, எனது கட்டுரை பற்றிய விமர்சனம்தானே??

      நீக்கு
  4. இருபத்தைந்தாண்டு முன்னமே இப்படி ஒரு கட்டுரையா...? என்று வியந்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? நாற்பது ஆண்டுக்கு முன், நான் கல்லூரியில் சேர்ந்த முதல்வருடமே, “தஞ்சை அமுதம்“ எனும் இதழில் எழுதி வந்த கட்டுரைத் தொடர் இப்போது கிடைத்தால் என்ன சொல்வீர்கள்?

      நீக்கு
  5. வணக்கம் ஐயா!

    அழகியதொரு ஆய்வுக் கட்டுரை ஐயா!

    இருபத்தைந்தாண்டுக்கு முன்பே எழுதினானும் இன்றும் இதன் அவசியம், அருமை, தேடல் இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

    நல்ல பதிவும் பகிவும்!.. அருமை!

    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி. தங்கள் கவிதைகளைப் பார்த்துககொண்டுதான் இருக்கிறேன். முன்போலக் கவிதைகளை உடனுக்குடன் எழுத இயலவில்லை. எனவே உங்கள் கவிதைகளுக்கு எழுதவேண்டும் என நினைத்தவற்றறை எழுதாமல் விட்ட பின்னூட்டங்களை நினைத்து வருந்துகிறேன். கவிதை எழுதும் பெண்களே குறைவு, அதிலும் மரபுக்கவிதை எழுதும் பெண்கள் மிகவும் குறைவு, அன்பு கூர்நது தொடர்நது எழுதுங்கள் சகோதரி

      நீக்கு
  6. இருபத்தைந்தாண்டுகளின் முன் எழுதப்பட்ட கட்டுரை என்றாலென்ன, இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து போனாலென்ன, இக்கட்டுரையின் உள்ளடக்கம் சிறந்த வழிகாட்டல் என்பதை எவரும் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

    கவிதை ஆக்க முன் இந்தக் கட்டுரை படித்துச் சென்றால் தரமான கவிதை ஆக்க வழிகாட்டுமென நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. கவிதையெனும் மகாநதி பொங்கிப்பிரவகித்து ஓடிக்கொண்டுதான் இருக்கிறது... நாம்தான் அதில் வரும் நுங்கு நுரை எல்லாவற்றையுமே சிலாகித்து மகிழ்ந்து புதுவெள்ளத்தைக் காணாமலே புளகித்து நின்றுவிடுகிறோம்... என்ன சரிதானா?

      நீக்கு
  7. அறிவு ஜீவிகளுக்காக எழுதிய கட்டுரை போல்படுகிறது....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா.. உங்களுக்குத்தான் அதில் சந்தேகமென்ன?
      பொதுவான வாசகர்களுக்குச் சில... புத்திசாலி வாசகர்களுக்கும் சில என்று தொடர்வதுதானே சரியானது. எல்லாப் பதிவுகளையும் எல்லாரும் படிப்பதில்லையே! இந்தப் பதிவுக்கே, “நமீதா ரசித்த நல்ல கவிதைகள்” என்று தலைப்பிட்டிருந்தால் ரேட்டிங் எங்கேயோ போயிருக்கும்... அது நல்ல தலைப்பாகாதே உஙக்ளைப் போல ஒரு சிலர் படிக்கவும் எழுத வே்ணடுமன்றோ?

      நீக்கு
  8. எது கவிதை என்று படித்தாலென்ன?
    http://paapunaya.blogspot.com/2014/07/blog-post_11.html
    என்ற தலைப்பில் தங்கள் பதிவை
    எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக இந்தப் பெருந்தன்மை எல்லாருக்கும் வராது.
      தங்களின் அன்புக்கு எனது தலைதாழ்ந்த நன்றிகலந்த வணக்கம் நண்பரே.

      நீக்கு
  9. புதுக்கவிதை பற்றிய விரிவான கட்டுரை. நான் அறியாத பல தகவல்கள், கவிதைகள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் எழுதியது, இன்றும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறதே..

    // விழப்போகும் சுவர், வண்ண மேல் பூச்சால் நிலைக்காது!
    அழப்போகும் பசிக்குழந்தை, அம்புலியைச் சுவைக்காது
    தொழப்போகும் வேலையினைத் தூக்கி எறிந்துவிட்டு>
    எழப்போகும் புதுஉலகம் எவன் தடுத்தும் நிற்காது! // மிகவும் அருமை ஐயா. உங்களின் விவேகமும் தீர்க்கமும் கட்டுரை முழுதும் தெரிகிறது.

    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொல்லப்போனால், எனது “நம் தமிழைத் தெரிந்து கொள்வோம்“ பதிவில் எழுந்த கேள்விகளுக்கான விளக்கத்தை மீள நினைக்கும்போது இந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது தங்கையே எனவேதான் எடுத்து வெளியிட்டேன். இந்தத் தகவல்கள் எல்லாம் தெரிந்துதான் கவிதை எழுத வேண்டும் என்பதில்லை, தெரிந்தால் நல்லது. அவ்வளவே, கவிதை தனீ... உள்ளத்திலிருந்து ஊறவேண்டும்.

      நீக்கு
  10. இப்படியே அண்ணன் கிட்ட ட்யுஷன் கத்துக்கவேண்டியது தான். உங்கள் கவிதை அற்புதம் அண்ணா! சுஜாதாவின் புனை கதைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் புதுக்கவிதை பற்றி குறிப்பிடும் போது அது எனக்கு எங்கே வாய்க்கப்போகிறது என கவலைப்பட்ட நாட்கள் உண்டு. அண்ணன் கருத்தை படித்தவுடன் எவ்ளோ அறியாமையை கவலைப்பட்டுவிட்டோம் என தோன்றுகிறது. அண்ணன் தங்கைக்கு கொடுத்த ஆகச்சிறந்த பரிசுக்கு நன்றி அண்ணா! அப்புறம் விஜூ அண்ணாவிற்கு நீங்கள் தந்த பின்னோட்டம் இப்போ இந்த பதிவை மறுபடி வெளியிட காரணமோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜூ அண்ணாவிற்கு நீங்கள் தந்த பின்னோட்டம் இப்போ இந்த பதிவை மறுபடி வெளியிட காரணமோ?: - ஆமாம்பா. ஊருக்கே மறைச்சாலும் உன்கி்ட்ட முடியுமா? பதிவுகளை வெளியிட ஒரு சாக்கு வேண்டியிருக்கிறது, அதைத் தூண்டல் என்றும் சொல்லிக கொள்ளலாம். ஒரு நல்ல கவிதை இன்னொரு நல்லகவிதையை எழுதத் தூண்டுமாம், அதுபோல நண்பர் விஜூவின் பின்னூட்டம் இநத்ப்திவை மறுபதிவு செய்ய வைத்துவிட்டது. தங்கை கிரேசுக்குச் சொன்னதுதான் உனக்கும் “எல்லாம் படித்தபிறகுதான் கவிதை எழுதவேண்டும்“ என்பது தவறாகிவிடும். படைப்பு வேறு, விவரம் வேறு. “காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்“ என்னும் கருத்து இதனால் உருவானதே. அறிவார்ந்த செய்திகளை, உணர்ச்சிபூர்வமாகச் சொல்வதே நல்ல கவிதை. சரிதானா பா?

      நீக்கு
  11. இந்தப் பதிவிற்கு ஏற்கனவே கருத்திட்டிருந்தேன். காணவில்லையே

    புதுக் கவிதையின் வரலாற்றை சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.
    நிறைவாக நீங்கள் குறிப்பிட்ட கவிதை மிக அருமை.
    புதுக் அவிதையின் கட்டற்ற சுதந்திரமே அதன் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. ஒருவருக்கு பிரமாதமாகத் தெரியும் ஒரு கவிதை மற்றவர்க்கு மிக சாதரணமாக தெரிகிறது.
    சமீபத்தில் மீரா அவர்களின் கவிதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது கவிதைகளில் பல மிக சாதாரணமாகவே தெரிந்தது.(நம்ம ரசனை அவ்வளவுதான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவேயா? என்ன ஆச்சு தெரியலயே? நம்ம ரசனை அவ்வளவுதான் என்பது பற்றிக் கவலை வேண்டாம். நண்பர் விஜூ சரியாகவே சொல்லியிருக்கிறார் பாருங்கள். நன்றி முரளி

      நீக்கு
  12. அய்யா வணக்கம்!
    முதலில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலுக்கு உதாரணமாய் அமைந்து இந்தக் கட்டுரை. பருந்துப் பார்வையில் மரபு மற்றும் மரபை மீறிய ஆக்கங்கள் தோன்றிய சூழல், வடிவம், உள்ளடக்கம் இவற்றை அலசும் தங்களின் கட்டுரை காலத்தால் புதிய மொந்தையின் பழைய கள். இன்றும் மாறாத உண்மையும் அதிக சுவையும் பயனும் கொண்டது.
    நம் நாட்டில் மக்கள் தொகையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். அவர்களுள் நானும் ஒருவன் தான்.
    கவிஞர்களாக எல்லோரும் இருந்து விட்டுப் போகட்டும். எழுதப்படுவது கவிதையா என்பதுதான் பிரச்சனை!
    இலக்கணப் பாவிற்கான வடிவம் கொண்டதால் மரபில் எழுதப்படுவது எல்லாம் கவிதை என்றோ, அந்த வடிவம் இல்லாததால் சாதாரண நடையில் எழுதப்படுவது கவிதை இல்லை என்றோ எழுப்பப்பட்ட விவாதம் தோற்றுப்போய் வெகுநாளாகி விட்டது. ஆக இங்கு பிரச்சனை வடிவத்தில் இல்லை. மரபோ புதுமையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
    மரபானாலும் புதுக்கவிதை ஆனாலும் அதில் சொல்லப்பட்ட கருத்தைத் துல்லியமாக உரைநடையில் சொல்லிவிட முடியாது என்று வரும் போது அது கவிதையாகி விடுகிறது என்பதை நான் கவிதைக்குரிய வரைவிலக்கணமாக இனம் கண்டிருக்கிறேன். இது என் கருத்துத்தான். மற்றவர்கள் வேறு வைத்திருக்கலாம்.
    மொழிவடிவத்தின் வார்த்தை எனும் நிலைகடந்து ஒருவரின் உணர்வில், அனுபவத்தில் எதனோடாவது அது ஒன்றி, எதனையாவது தூண்டிக் கிளர்த்தும் போது ( வலியோ சுகமோ எதுவானாலும்) அது ரசிப்புத் தரத்தைப் பெற்றுவிடுகிறது. சில கவிதைகளைச் சிலர் ஆகா ஓகோ என்று போற்றுவதும் பலருக்கு ஒன்றும் புரியாமல் அதில என்னப்பா இருக்கு ! குழப்புறானே! எனச் சொல்வதும் இதன்பாற் பட்டதே எனவும் கருதுகிறேன்! மிக எளிமையானவற்றைச் சுற்றி வளைத்துச் சொல்வதும் அப்படித்தான்! திரு. டி. என்.முரளிதரன் அவர்கள் மீராவின் கவிதைகளைப் படித்தபோது மிகச் சாதாரணமாகத் தெரிவது அவருடைய உணர்வோடும் அனுபவத்தோடும் அது ஒன்றாததால் தான். மீராவின் கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் எனும் கவிதைத் தொகுப்புப் பதினைந்தாண்டுகளுக்கு முன்பு என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இன்று திரு. முரளிதரன் அவர்கள் நிலைப்பாடே எனதும். அது வாசிப்பனுபவத்தில் உணர்வது. ஒரு வடிவம் கவிதை என்று காட்டப்படும் நேரங்களில் நான் கொண்ட வரைவிலக்கணங்களைப் பொருத்திப் பார்த்து “ இதை அப்படியே உரைநடையில் சொல்ல முடியுமா எனப் பார்ப்பேன்” முடிந்தால் அங்கு கவிதை எனும் பிரதி இறந்திருக்கும். அது வாழவும் அவசியம் இல்லை. அதே நேரம் என்னால் முடியாததை வேறொருவர் தம் வாசிப்பில் அனுவித்தால் அவருக்கு அது கவிதை தான்!
    பாரதியின் பிரபலமான ஒரு பாடல்,
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே-அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே-அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே-இதை
    வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
    வாயுற வாழ்த்தேனோ-இதை
    'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
    என்று வணங்கேனோ?
    இதை “ எங்கள் தாய்தந்தை பிறந்து வாழ்ந்தது இந்தநாடு! அவர்கள் முன்னோர் வாழ்ந்தது இந்தநாடு! அவர் சிந்தனையில் ஆயிரம் கருத்துக்கள் வளர்த்துச் சிறந்த நாடு இது! அதனை மனதில் இருத்தி வாழ்த்துவேன். வந்தே மாதரம் என்று கூறி வணங்குவேன்.“ என உரைநடையில் அமைத்தால் கவிதை எங்கே? .இங்குப் பாடல் உள்ளது ! ஓசை உள்ளது! இலக்கணம் உள்ளது! கருத்தும் உள்ளது. எனக்குக் கவிதை தென்பட வில்லை. தென்படுவோர்க்கு இது கவிதையாகக் கூடும்.
    அதே நேரம், பாரதியின்,
    அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
    அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு தழல்
    வீராதிற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ?
    தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
    எனும் கவிதையை அவ்வாறு உரைநடையில் கொண்டு விளக்க என்னால் கூடவில்லை. உரைநடையுள் அடங்கா ஏதோ ஒன்று இதில் இருப்பதாக எனக்குப் படுகிறது. மிகப் பிரபலமான கவிஞர்களின் கவிதைகளில் கூட இப்படிப் பார்த்தால் தேறுவது சொற்பம் தான்!
    கவிதை என ஒரு காலத்தில் நான் எழுதித்திரிந்த பலநூற்றைக் குப்பை எனப் பிரித்துணரத் துணைசெய்த, சவுக்கால் அடித்து கவிஞன் நான் என்ற மாயையைத் தகர்த்த, எழுபதுகளில் வெளியிடப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு வாசிக்கக் கிடைத்த தமிழவனின் இரு புத்தகங்கள்,
    1) இருபதில் கவிதை
    2) புதுக்கவிதை நான்கு கட்டுரைகள்
    என்னும் இரு நூல்களையும் புதுக்கவிதை மரபுக்கவிதை இரண்டையும் இணையத்து எழுதுவோரும் எழுத முயல்வோரும் படிக்க வேண்டுகிறேன்.
    எனக்கு முன்பே வாசிக்கக் கிடைத்திருந்தால், கவிதை என நான் படுத்திய தொல்லையில் இருந்து தமிழ் கொஞ்சமாவது தப்பித்திருக்கும்.
    முத்துநிலவன் அய்யா கோபம் கொள்ள மாட்டார் என்ற அதிகப்படியான உரிமையை எழுத்துக் கொண்டு பின்னூட்டத்தை மிக நீட்டி விட்டேன்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதேது விஜூ... பின்னூட்டம் எனும் பெயரில் கட்டுரையே எழுதுகிறீர்களே! மிக்க நன்றி நண்பரே. பொ.செ.நாவலுக்கு ராஜாஜி முன்னுரைதான்.“குரங்குக்குத்தான் வால் நீளக்கூடாது, மயிலுக்குத் தோகை நீண்டால் மகிழ்ச்சிதானே? நன்றாக இருக்கிறது விஜூ என் பதிவுகள் பற்றிய உங்கள் பின்னூட்டம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. எழுதும் உரிமை உங்களுக்கு உண்டு... தாராளமாக எழுதலாம். உங்கள் 2நூல் பட்டியலில் அ.மார்க்ஸின் “எது கவிதை?”, நா.வானமாமலையின் “புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்”, பாலாவின் “புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை” மீரா-பாலா கவிதை குறித்த உரையாடல் (ஆனந்த விகடனில் வந்து தனிநூலானது) முதலான நூல்களையும் சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக உங்கள் கவிதைகளை நீங்களே குறைத்து மதிப்பிடுவது சரியலலவே? காலம் பதில் சொல்லும் தொடர்ந்து உங்கள் பதிவுகளுடன், பின்னூட்டமும் நீளட்டும். நன்றி நண்பா.

      நீக்கு