- நா.முத்துநிலவன் -
(கடிதஇலக்கியம்)
(கடிதஇலக்கியம்)
என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு
உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய
பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்? என்று உனக்கு வியப்பாக
இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ
முன்பை விடவும் –அதாவது நீ பள்ளியில் படித்த
காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம்
முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.
கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான நேர்வழி
என்பது ஒரு பகுதிதான். அதைவிட, வகுப்பிலும், விடுதியிலும் இருக்கும்போது, மற்றவர்களோடு எப்படிப் பழகுவது, நல்லது கெட்டது எது? என்று தெரிந்து கொள்வதுதான்
உண்மையான பயன்தரும் கல்வி. சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் ஆசிரியர்கள் வழியாகப்
பாதியும், ஊடகம் மற்றும்
செய்தித்தாள்களின் வழியாகவே மீதியும், கற்றுக்கொள்வதுதான் உண்மையான கல்விஅறிவு! அப்பாவும் அம்மாவும் கற்றுத்தர
முடியாத பலப்பல விஷயங்களைப் பள்ளிக்கூடமும், கல்லூரியும் கற்றுத்தரும் என்பதற்காகத்தான் பிள்ளைகளைப்
பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்க
அனுப்புகிறார்கள்.
ஆனால் உன்போலும்
பதின்பருவ (teen-age) பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தை செல்பேசி, கணினி, தொலைக்காட்சியுடனே
செலவிடுகிறீர்கள். ஒருவகையில் அதுவும் படிப்புத்தான் என்றாலும், என்ன
கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம்.
நீ எனது செல்பேசியில் திருக்குறளையும்
பாரதியார் கவிதைகளையும் பதிவிறக்கம் செய்து விரும்பிய போதெல்லாம் விரும்பிய
பக்கத்தை எப்படிப் படிக்கலாம் என்றும் சொல்லித்தந்ததை நான்என் நண்பர்களிட மெல்லாம்
காட்டிக்காட்டி மகிழ்கிறேன். அவர்கள் வியப்புடன் “இது எப்படிங்க? என்செல்பேசியிலும்
வச்சுத் தாங்களேன்?“ என்று சொல்லும் போது “இது என்மகள் வச்சுத் தந்தது, எனக்குத்
தெரியலையே! அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது என்மக கிட்ட கத்துக்கிட்டு
உங்களுக்கும் சொல்லித் தர்ரேன்”என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
இப்படி மின்-நூல்களைப் படிப்பது, மின்-இதழ்களைப் படிப்பது என்பன போலும்
பயன்பாடுகள் ஒருபக்கமிருக்க,வேறுதிசைகளில் நேரவிரயத்துடன், நம்மைப்
புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் அவற்றில் அதிகம் எனும் எச்சரிக்கை மிகவும் தேவை.
அதுவும் முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக் கொண்ட
யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும்
மறந்து விடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான்
இருப்பாய்! இருக்க வேண்டும்.
இன்றைய பதின்பருவப் பிள்ளைகள் பலர், பன்முகத் திறமைசாலிகளாக இருப்பதை, சில பத்திரிகைச் செய்திகள் தொலைக்காட்சிகளில்
பார்த்து வியந்து மகிழ்ந்துமிருக்கிறேன்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம், நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள், விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயாநானாவிவாதங்கள்,சூப்பர்சிங்கர், கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் வரும் சில நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறைப பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
அப்போதெல்லாம், இவர்கள், நமது சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், கம்பர், பாரதி, பட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்து மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர், ஈ.வெ.ரா.பெரியார், நியுட்டன், கலிலியோ, ஷேக்ஸ்பியர், கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும் பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து மகிழந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம், நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள், விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயாநானாவிவாதங்கள்,சூப்பர்சிங்கர், கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் வரும் சில நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறைப பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.
அப்போதெல்லாம், இவர்கள், நமது சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், கம்பர், பாரதி, பட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்து மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர், ஈ.வெ.ரா.பெரியார், நியுட்டன், கலிலியோ, ஷேக்ஸ்பியர், கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும் பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து மகிழந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!
இதுபோல் நல்லநிகழ்ச்சிகளை பார்த்துரசிக்காமல், குறும்புசெய்து
திட்டும்குட்டும் வாங்காமல்,
நல்ல
விஷயங்களை எல்லாருமாய்ப் பேசி சிரித்து மகிழாமல், வெளியில் போய் விளையாடி மகிழாமல், வீட்டுக்குள் உட்கார்ந்து “ஓடிவிளையாடு பாப்பா” என்று மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்குதை எப்படிச்
சாதனைஎன்று சொல்லமுடியும்? அவர்கள் குழந்தைப் பருவத்தையே
படிப்புக்காகத் தியாகம் செய்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்க விரும்புகிறேன்.
முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும் விளையாட்டு, ஓவிய, இசை முதலான பலப்பல வகுப்புகளையே
அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதானே? பல பள்ளிகளில் முக்கியமாக “மாநில முதலிடம்,
இரண்டாமிடம், மற்றும் 450க்கு மேல் 800பேர்” என்று விளம்பரம் செய்து
கல்லாக்கட்டும் தனியார்பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு அரசாங்கப் பாடத்திட்டத்தில்
இருக்கும் ஓவியம்,விளையாட்டு,சுற்றுச்சூ ழல் கல்வி
வகுப்புகளே நடத்தப்படுவதில்லை! ஒரே புத்தகத்தை இரண்டுவருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளிபிசகாமல் “வாந்திஎடுத்து” எழுதிக் காட்டுவதுமாய்க்
கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வேண்டுமானால் சாதனைதான்.
பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டு, எந்தத்திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம், முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான். பிடித்த துறையில் தேர்ச்சிபெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமா? முதல்மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா? நீயே யோசித்துப் பார்.
பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டு, எந்தத்திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம், முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான். பிடித்த துறையில் தேர்ச்சிபெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமா? முதல்மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா? நீயே யோசித்துப் பார்.
இதனால்தான் மகளே, எனது உரைவீச்சு மற்றும் பட்டிமன்றப் பேச்சுகளின ஆரம்பத்தில் எந்த
இடத்திலும் நான், “என் எதிரே மலர்ந்த முகங்களோடு
அமர்ந்திருக்கும், இன்றைய மாணவர்களான- எதிர்கால
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான, எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே!
மத்திய-மாநில அமைச்சர் பெருமக்களே! பாரத நாட்டின் பிரதமர்களே!
குடியரசுத்தலைவர்களே! கவி பாரதிகளே! காரல்மார்க்ஸ்களே! அண்ணல் அம்பேத்கார்களே!
தந்தை பெரியார்களே! கல்பனா சாவ்லாக்களே, அன்னை தெரஸாக்களே!” என்று சொல்லும்போது கூட்டமே
ஆரவாரித்து கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்து போகும். இது பேச ஆரம்பிக்கும்போதே, பார்வையாளர்களைக் கவர நான்
செய்யும் உத்திதான் எனினும்,
அதில்
இருக்கும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பும் பொய்யல்லவே?
ஆனால்,
எனதுநண்பர்
ஒருவர் -மத்திய அரசின் விருதுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- சொன்ன ஒரு கருத்தும், மற்றொரு பக்கம் உறுத்தத்தான்
செய்கிறது. அவர் சொன்னார் – “சார், நாங்கள்ளாம் 1985மற்றும் 89ஆம்
ஆண்டுகளில் நடத்திய பெரும்பெரும் போராட்டங்களால், இப்போது எங்கள் சம்பளமும் சரி பென்ஷனும் சரி உயர்ந்து நிற்கிறது.
நான் 37ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ.60,000 சம்பளத்தை,
என்மகன்
தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்” “ஆகா, இதுவல்லவா மகிழ்ச்சி” என்று நான்சொல்ல, அவர் சற்றும்
மகிழ்ச்சியில்லாமல், உச்சுக்கொட்டிக்கொண்டு, “அட போங்க சார், வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சிக்கறதுக்கு முந்தியே
வாழ்ந்துமுடிச்சிடுறாங்கெ சார்! பெரியபடிப்பு, கைநெறய சம்பளம், ஆனா வாழ்க்கைன்னா என்னன்னே
தெரியலசார்! அல்பவிஷயத்த பூதாகரமாக்கி அடிச்சிக்கிறது, பெரிய விஷயங்கள புரிஞ்சிக்காமயே
லூஸ்ல விட்டுர்ரதுன்னு இருந்தா என்ன சார் அர்த்தம்? சும்மா டென்ஷன் டென்ஷன்னு... 27வயசுக்காரன் சொன்னா, 60வயசுல நா என்ன சொல்றது?” என்று அவர் சொன்னது எனக்கு
அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்காமலே
போனதற்குக் காரணம் என்ன? அந்தப் பாவத்தை நமது
பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அல்லவா செய்துவிட்டன என்று தான் சொல்லவேண்டி
இருக்கிறது! குதிரைக்குக் கண்படாம் போட்டது போல, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காமல் “நேராக“பார்! மதிப்பெண் மட்டும்
தெரிகிறதா? சரி என, பயிற்சிபெறும் யாரும் யதார்த்த
உலகத்தை விட்டு அந்நியப் படுவதன் காரணமும் பள்ளியில் –புரியாமலே- மனப்பாடம் செய்வதில்
தொடங்கிவிடுகிறது அல்லவா?
இன்றைய இளைய சமுதாயம் நன்றாகப் படிக்கிறது ஆனால், படிப்பை எப்படிப் புரிந்து
வைத்திருக்கிறது?
எதை, எதற்காகப் படிக்கிறார்கள் என்று
தெரிந்துதான் படிக்கிறார்களா?
எம்.பி.பி.எஸ்.படித்தால்,மருத்துவர்ஆகலாம், பி.ஈ.படித்தால்பொறியாளர்ஆகலாம்.
பி.எல்.படித்தால்வழக்குரைஞர்ஆகலாம்,
ஐ.ஏ.எஸ்.படித்தால்மாவட்டஆட்சியர்ஆகலாம்,
எதுவுமேபடிக்காமல்மந்திரியும்ஆகலாம்.
ஆனால்,என்னபடித்தால்மனிதர்ஆகலாம்? மனிதரைப் படித்தால்தான் மனிதராகலாம் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.
அதனால், நீ என்ன வேண்டுமானாலும் படி, எல்லாவற்றுக்குள்ளும் மனிதரை
மட்டும் மறக்காமல் படி, அல்லது மனிதருக்காக
எதுவேண்டுமானாலும் படி. ஆனால்,
நேர்
எதிராகச் சிலர், படிப்பு ஏற ஏற மனிதரை
மறந்துவிடுகிறார்கள் அல்லது மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறந்து போகிறார்கள்!
கலை-இலக்கியவாதிகள் பலர் பெரிய அளவில் பள்ளி கல்லூரிப் படிப்புப் படிக்காதவர்கள்தான்!. ஆனால், அந்தப் “படிக்காதவர்கள்“தான் பல நூறு பேர்களுக்குப்
பட்டங்களையே தருகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? நான் சொல்வது படிக்காமலே பல கல்லூரிகளை நடத்திப் பட்டம் வழங்கும் –கல்வி வள்ளல்கள் எனும் பெயரோடு
உலவிவரும் “கல்வி முதலாளி”களை அல்ல! அது இன்றைய நம்
சமூகத்தின் முரண்பாடு! அவர்களிலும் நல்லவர் சிலர் –விதிவிலக்குகளாக- இருக்கிறார்கள் என்றாலும் நான்சொல்லவந்தது
அவர்களையும் அல்ல. கல்லூரிப்படிப்புப் படிக்காத –ஆனால் சமகால மனிதர்களைப் படித்த- மேதைகளான எழுத்தாளர்களைச்
சொல்கிறேன். ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும்
அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு
மட்டும்தான்! சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி
3ஆம் வகுப்புத் தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துகளை ஆய்வு செய்த படிப்பாளிகள்
பலநூறுபேர் “முனைவர்” (டாக்டர்) பட்டங்களைப்
பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு
மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?
பட்டம் பெற்ற மனிதர்களுக்கான பணிகளும் பதவிகளும் மாறிமாறி
வரும், போகும், பதவிகளில் ஏற்றத்தாழ்வுகள்
இருக்கலாம், ஆனால், பதவிகளை வகிக்கும் மனிர்களில்
ஏற்றத்தாழ்வுகள் இல்லை. “சிறப்பொவ்வா செய்தொழில்
வேற்றுமையான்”-குறள் இதைத்தானே சொல்கிறது? பதவிகளுக்காகவே வாழும்
மனிதர்களைப் பற்றி ஒரு சொலவடை இருக்கிறது-
”தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு
வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய்கூட வராதாம்!” இது எப்படி இருக்கு? ரொம்ப எதார்த்தமா இருக்குல்ல?
ஆமாம் அவ்வளவுதான், பதவிக்காலத்தில் ஆடுகிறவர்கள் அதை இழந்ததும், மனத்தளவில் செத்துப் போவது
அதனால்தான்! பதவிகளை மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தவாய்ப்பு என்றுநினைக்கும்
இடதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் முதலமைச்சராக இருந்தால் கூட “தோழர்” எனும் ஒரு சொல்லுக்குள் அடங்கி
நிற்பார்கள். இடதுசாரித் தலைவர்களை மட்டும்தான் இன்னமும் ”தா.பா.வர்ராராமில்ல?” ”ஜி.ஆர்.பேசுறாராமில்ல?” என்று பெயர்ச் சுருக்கத்தைச் சொல்லிச்
சாதாரணத் தொண்டர் அழைப்பதைப் பார்க்கலாம். மற்ற கட்சிகளில் வட்டம், மாவட்டங்களையே பெயர் சொல்லி
அழைக்க முடியாது! அவர்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட பெரியவர்களாகி விட்டார்கள்
என்று அர்த்தம். அதாவது அவர்கள் மனிதர்களாகவே இல்லை என்பது பொருள்!
சிறந்த சிந்தனையாளரும் நல்ல தமிழறிஞருமான சாலய்.இளந்திரையன்
அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இதோ
அந்தக்கவிதை -
“எழுதிவைத்த புத்தகத்தில்
முழுகிப் போவாய்
எதிரிருக்கும்மானுடரைபபடிக்கமாட்டாய்,
கழுதைகளும் புத்தகத்தை மேயும், பின்னர்
கால்முட்டி இடித்திடவே நடக்கும் தோழா” –
புத்தகங்களைப் படிக்கத்தான் வேண்டும். அதற்காகப்
புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை அதை நடைமுறைப்படுத்த, மனிதர்களுக்காக அந்தச் சிந்தனைகளைப்
பயன்படுத்த வேண்டும்.
முதல்வகுப்பில் சேர்ந்தது முதல், “முதல்மதிப்பெண்“ மயக்கத்தை மண்டையில் ஏற்றி, மதிப்பெண் வாங்குவதையே
லட்சியமாக நினைக்க வைத்த பாவம் நமது கல்விமுறை தந்த சாபமன்றி வேறென்ன? எழுத்துகளை மேய்ந்த
அஜீரணத்திற்கு மருந்து தேடி, இவர்கள் தொலைத்தது கருத்துகளை என்பது புரிவதற்குள் படிப்பே
முடிந்து விடுகிறதே! நல்ல கவிதை தேமா, புளிமா, பண்புத்தொகை, வினைத்தொகைகளுடன் இருக்கலாம். ஆனால், இந்த இலக்கணக் குறிப்புகளை
அறிந்து மதிப்பெண் பெறும் பதட்டத்தில், அனுபவிக்க மறந்தது உயிர்க் கவிதைகளின் அழகை, ஆழமான அர்த்த்த்தை என்பதை
அறிந்துகொள்வதற்குள் படிப்பே முடிந்துவிட்டதே!
இதைத்தான் நமது மகாகவி பாரதி –
“அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”என்றான். இது புரியவில்லை என்றால், குளத்துக்குள் எத்தனை நாள்
கிடந்தாலும் தவளை அறிவதில்லை தாமரையின் அழகையும், பயனையும் என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த பருவத்தேர்வுகளில் நீ நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், ஒருபாடத்தில் மட்டும்தான்
முதல்மதிப்பெண் எடுக்கமுடிந்தது என்று வருத்தப்பட்டதாக உன் அம்மா கூறினார். அதுபோதும்
மகளே! முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக உனது நேரத்தை யெல்லாம்
வீணாக்காதே! உனக்கு மட்டுமல்ல,
வழக்குரைஞராக
இருக்கும் உன் அக்காவுக்கும்,
கணினிப்
பணியிலிருக்கும் உன் அண்ணனுக்கும் -அவர்கள் படித்தபோது- இதையே சொல்லியிருக்கிறேன்.
பாடப் புத்தகங்களைப் படித்துப்படித்து “உருப்போட்டு“, முதல் மதிப்பெண் எடுப்பது
அப்போதைக்குப் பெரிய சாதனையாகத் தோன்றும். ஆனால், அப்படி முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பின்னால் என்ன
சாதித்தார்கள் என்று யோசித்துப் பார்த்துத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த பல
பத்தாண்டுகளாக “மாநில அளவில் முதல்மதிப்பெண்“ பெற்ற மாணவர்களுக்கு –அவர்களின் முதல்மதிப்பெண்
சாதனைக்காக- பலப்பலப் பரிசுகள் தரப்படுகின்றன. அன்று அவர்கள்தாம் தொலைக் காட்சிகளின்
கதாநாயக/ நாயகியர்! இனிப்பு ஊட்டுவதென்ன? தோழர்-தோழியர் தூக்கிவைத்துக்
கொண்டாட புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, தொலைக் காட்சிகளுக்கு பேட்டியும் கொடுப்பதென்ன?!!! எல்லாம் அந்த ஒரு நாளோடு சரி.
அதன் பின் ஏற்றிவைத்த கிரீடத்தை இறக்கி வைக்கவே சிரமப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில்
அந்தச்சாதனைகள் அவர்களுக்கே மறந்துபோய் விடுவதுதானே ஆண்டுதோறும் நடந்துவருகிறது
அல்லவா?
நன்றாக யோசித்துப் பார்த்தால், பத்தாம் வகுப்புச் சாதனையின் போது, “பன்னிரண்டாம் வகுப்பிலும் நான் மாநிலமுதன்மை எடுப்பேன்“ என்று வாரிவழங்கும்
உறுதிமொழியைப் பெரும்பாலும் –அனேகமாக யாருமே- நிறைவேற்றியதாக
எனக்கு நினைவில்லை.
இப்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேனென்றால், கடந்த சிலபல நாள்களாக, பள்ளியிறுதி (SSLC) மற்றும் மேல்நிலை (+2) வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்து, செய்தித்தாள்களின் பக்கங்களையெல்லாம் தனியார் பள்ளி கல்லூரிக் “கல்விவள்ளல்” விளம்பரங்களே ஆக்கிரமித்துக்
கொண்டிருப்பதை நீயும் பார்த்திருப்பாய்! மாநில முதன்மை பெற்ற மாணவர்களின்
பேட்டிகளால் செய்தித்தாள்கள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இந்த ஆண்டு
பத்தாம்வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை வாரிக் குவித்து விட்டார்கள் போ!
மாநிலஅளவில் முதல்மதிப்பெண்ணே ஒன்பது பேர்! இரண்டாமிடத்தில் 32பேர்
மூன்றாமிடத்திலோ 148பேர்!
இந்த மாணவர்கள் மீண்டும் இதே அளவுக்குச் சாதிக்கா விட்டாலும், நன்றாகவெ படித்து, விரும்பும் உயர்கல்வியை
விரும்பும் கல்விநிறுவனத்தில் முடித்து, நல்ல தேர்ச்சிகாட்டி, மருத்துவராகவோ,
பொறியாளராகவோ, மாவட்டஆட்சியராகவோகூட
வந்துவிடலாம் ஆனால், அந்த மதிப்பெண் சாதனையாளர்கள்
வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்றால்... பெரும்பாலும் ஏமாற்றம்தான்... ஏனெனில், வாழ்க்கையில் வெற்றி என்பது
கைநிறையச் சம்பளம் தரும் நல்ல வேலைக்குப் போவது, நல்ல வாழ்க்கைத் துணையை
அமைத்துக் கொள்வது, குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்வது, கார்வாங்குவது, பங்களா கட்டுவது என்று “செட்டில்” ஆவதில் இல்லை! அது சுயநலமிக்க
வாழ்க்கை. அது நமக்குத் தேவையுமில்லை மகளே! இதைத்தானே பாரதிதாசன் மண்டையில் அடித்தாற்போலச் சொன்னார்?
“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்
டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம்
கொண்டோன்
தெருவார்க்கும்
பயனற்ற சிறிய வீணன்”
--நல்லகுடிமகனாக, சிறந்தமனிதராக, புகழ் பெறாவிட்டாலும் பரவாயிலலை, வாழும்போதும் வாழ்ந்து மறைந்த பிறகும் அடுத்தவர் நினைவில்
தோன்றும்போது (IMAGE) நல்லமனிதராக வாழ்ந்து
காட்டுவதுதான் வாழ்வின் அடையாளம். இதைத்தான் வள்ளுவரும், “தோன்றின் புகழோடு தோன்றுக” என்று சொல்லி யிருக்க வேண்டும்.
மதிப்பெண், அறிவின் அளவீடல்ல, நமது கல்விமுறையில் எந்த
அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை.
அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக்கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது. அது இன்னும் மாறி 100மதிப்பெண்ணும் பல்திறனறிவைச் சோதிக்கவே என்றாகும் காலம் விரைவில் வரும். மாணவர்களின் பன்முக ஆற்றல் வெளிப்பட வேண்டும். அதில் தன் தனித்திறமையைக் கண்டறிந்த மாணவர் அதில் கூர்மையேற்றவும் பயிற்சி பெறவேண்டும்.
அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக்கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது. அது இன்னும் மாறி 100மதிப்பெண்ணும் பல்திறனறிவைச் சோதிக்கவே என்றாகும் காலம் விரைவில் வரும். மாணவர்களின் பன்முக ஆற்றல் வெளிப்பட வேண்டும். அதில் தன் தனித்திறமையைக் கண்டறிந்த மாணவர் அதில் கூர்மையேற்றவும் பயிற்சி பெறவேண்டும்.
தேர்வில் தோல்வியடைந்தாலும் போராடி வென்று இந்தச் சமுதாய
முரண்பாடுகளைப் புரிந்து கொண்டு “சமூக மனிதனாக” நாலுபேருக்கு நன்மை செய்து,சாதாரணமாகவே வாழ்பவன்தான் உண்மையில் வெற்றி பெறுகிறான். தேர்வில் வெற்றிபெறுவது
முக்கியமா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது
முக்கியமா என்று கேட்டால் கிடைக்கும் “வாழ்க்கைதான் முக்கியம்” எனும் விடை இதை உனக்கு இன்னும்
விளக்கிவிடும். ஆனால், என்று கேட்டால் பெருவெற்றி
பெற்ற பலரின் வாழ்க்கையை மதிப்பெண் தீர்மானிக்கவில்லை என்னும் வரலாற்று உண்மையை நீ
புரிந்துகொள்வாய். தனது பள்ளிப்படிப்பில் –மற்ற பாடங்களை விடவும் குறைவாகவே வரலாற்றுப் பாடத்தில் மதிப்பெண்
எடுத்த காந்திதான் இந்திய வரலாற்றையே தன் வாழ்க்கையால் மாற்றி எழுதினார். இன்னொரு
பக்கம் தனது கல்லூரிப் படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கிய லெனின் அதற்குத்
தொடர்பில்லாத அரசியலில்தான் சோவியத்து நாட்டு வரலாற்றை மட்டுமல்ல, உலக வரலாற்றையே புதிதாக
எழுதிவிட்டார்!
படிப்புக்குப் பிறகு நீ வேலைக்குப் போனாலும் சரி, நீயே உன்
திறனுக் கேற்ப வாழ்க்கையைத் திட்டமிட்டுக் கொண்டாலும் சரி. எப்படி ஆயினும், கல்லூரிப் படிப்பு முடிந்தபின்
இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு சிலர்பலரின் சுயநலம், மூடநம்பிக்கை, பொறாமை சூழ்ச்சிகளின் இடையிலும்
நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரை கற்றுக்கொண்டு
வா. சாதாரணமான மதிப்பெண்களோடும், அசாதாரணமான புரிதல்களோடும் உனது
கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே!
அப்புறம் பாடப்புத்தகம் தவிரவும் என்ன புத்தகம் புதிதாகப்
படித்தாய் என்றும், மின் உலகில் புதிதாக எனக்கென்ன
கற்றுக்கொடுக்கப் போகிறாய் என்றும் எனக்குச் சொல்லு.
சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க...
நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க...
சித்தர்களும் யோகியரும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி
வச்சாங்க...
எல்லாம்தான் படிச்சீங்க... என்ன பண்ணிக் கிழிச்சீங்க...
–
பட்டுக்கோட்டையார் பாடல்
அவ்வளவுதான் மகளே!
அன்புடன்
உன் அப்பா.
---------------- --------------------------
கட்டுரை ஆசிரியர்
நா.முத்துநிலவனுடன் பேச- 94431
93293
மின்னஞ்சல்-muthunilavanpdk@gmail.com
இந்த நம்
வலைப்பக்கத்தில்
கட்டுரை வெளிவந்த நாள்-10, சூன், 2013.
தினமணியின் வலைப்பக்கத்தில்
இதே கட்டுரை வெளிவந்த நாள் -20, மார்ச், 2014
------------------------------------------------------------------------------
வரவேற்கத்தக்க அறிவுரை .இது எல்லா பெற்றோருக்கும் அவர்தம் மக்களுக்காக நீங்கள் எழுதியமைக்கு நன்றி
பதிலளிநீக்குபாடம்...
பதிலளிநீக்குபாராட்டுக்கள்...
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்” என்று சொன்னான். இதுவும் புரியவில்லை என்றால், குளத்துக்குள் எத்தனை நாள் கிடந்தாலும் தவளை அறிவதில்லை தாமரையின் அழகையும், பயனையும் என்றுதான் சொல்ல வேண்டும்.
பதிலளிநீக்குதந்தை மகளுக்கு எழுதிய காவியக்கடிதம்..!
அனுப்புனர்: Murugesh Mu
பதிலளிநீக்குபெறுநர்: MUTHU NILAVAN
தேதி: 10 ஜூன், 2013 7:07 PM
தலைப்பு: Re: [வளரும் கவிதை] முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே
அன்புத் தோழரே...
இது லட்சியாவுக்கு
அவரது அப்பா எழுதிய கடிதம் மட்டுமல்ல...
எல்லா அப்பாக்களின் சார்பில்
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் எல்லாக் குழந்தைகளுக்குமான அன்புக் கடிதம்.
மனம் முழுக்க உங்கள் வரிகளுக்குள்ளேயே
இன்னமும் மாட்டிக் கிடக்கிறது.
-மு.மு
C.p. Mani Kandan 8:53pm Jun 10
எம்.பி.பி.எஸ். படித்தால், மருத்துவர் ஆகலாம், பி.ஈ. படித்தால் பொறியாளர் ஆகலாம். பி.எல். படித்தால் வழக்குரைஞர் ஆகலாம், ஐ.ஏ.எஸ்.படித்தால் மாவட்டஆட்சியர் ஆகலாம், எதுவுமே படிக்காமல் மந்திரியும் ஆகலாம். ஆனால், என்ன படித்தால் மனிதர் ஆகலாம்? மனிதரைப் படித்தால்தான்நாமும் மனிதராகலாம். என்பது எனதுஆழ்ந்த நம்பிக்கை.
Arumai ayya... Antha kaditham ungal magaluku matum alla, engalukagavum..
சி.பி.மணிகண்டன்,
https://www.facebook.com/c.p.manimech
கல்வி ஏன் மதிப்பெண்ணுக்குள் அடங்கிப்போனது என்பதை அருமையாக ஒரு தந்தையாக எழுதியிருப்பதற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகல்வி இடந்த 20 வ்ருடங்களில் எந்த நிலையில் இருக்கிறது? யார் காரணம் என்றெல்லாம் அடுத்தக்கட்ட நகர்வுக்கு உங்கள் கட்டுரை என்னை நகர்த்தியது.
ன் படிக்கும்போது டியூசன் போனால் அவமானம், மக்குப்பிள்ளைகள் தான் போவார்கள் என்ற ஒரு புரிதல் இருந்தது.
இன்று?
வகுப்பில் சொல்லிக்கொடுத்தை சரியாக கவனித்தாலே போதும் பாஸாகிவிடலாம் என்ற நிலை மாற யார் காரணம்?
பள்ளி நிறுவனங்கள் கார்ப்பரேட் ஆகி டுடோரியல் போய் கோச்சிங் களாஸ் வந்து அவர்களும் மில்லியனர்கள் ஆகிவிட்ட காட்சியை நாம் எல்லோரும் அமைதியாக பார்க்கிறோம்!!
இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட இந்த நாட்டில் ஒரு தலைவனும் இல்லை, மனிதர்களும் இல்லை.
<நன்றாக யோசித்துப் பார்த்தால், பத்தாம் வகுப்புச் சாதனையின் போது, “பன்னிரண்டாம் வகுப்பிலும் நான் மாநிலமுதன்மை எடுப்பேன்“ என்று வாரிவழங்கும் உறுதிமொழியைப் பெரும்பாலும் –அனேகமாக யாருமே- நிறைவேற்றியதாக எனக்கு நினைவில்லை."
பொத்தம் பொதுவாக ஒரு கருத்தை வைத்திருபது இன்று வேண்டுமானால் சரியாக இருக்கலாம், ஆனால் எங்கள் காலத்தில் அது பொய்யாக்த்தான் இருந்தது. உதாரணம் நான் தான்.
SSLC - merit holder
PUC - university I rank
B.A - universoity first rank
M.A.- university I rank, gold medalist.
இதெல்லாம் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் ரொம்பவும் சர்வ சாதாரணமாக அன்றைக்கு ஊடக வெளிச்சம் இல்லாத காலத்தில் எம் தலைமுறைக்கு சாத்தியபட்டது!
உங்கள் கட்டுரை வரியைப் படிக்கும்வரை நான் கூட என்னைப் பற்றிய இந்த தகவலை எண்ணிப்பார்க்கவில்லை.
என் பிள்ளைகளை மதிப்பெண்கள் உலகத்தில் நீங்கள் எழுதியிருக்கும்படி
மதிப்பெண் மட்டும் வாழ்க்கை அல்ல என்றுதான் வளர்த்திருக்கிறேன். ஆனால்
ஒரு தாயாக இச்சமூகத்தை அணுகும்போது "வாழ்க்கை ஒரு போராட்டகளம்" என்பதை உணர்கிறேன்.
உங்கள் கட்டுரைக்கு நன்றி சார்.
அனுப்புனர்:
பதிலளிநீக்குபெறுநர்: "muthunilavanpdk@gmail.com"
தேதி: 13 ஜூன், 2013 7:28 AM
Sent from my Nokia phone
i read ur article "letter to my daughter". Very nice sir./ mugavai n raja
VIA FACE BOOK COMMENTS -------
பதிலளிநீக்குGnana Vadivel அருமையான கட்டுரை
கடித வடிவில்
நேரு மகளுக்கு எழுதியதுபோல்
5hours ago via mobile· Like
Prasannakumar Menon, Volga Chezhian and 2 others like this.
vanakkam.kaditham yen ilamaikkala natkalai ninaivuttukirathu.indraiya ilaiya samuthayathirkku thevaiyana seithikal.sirappudan ullathu.
பதிலளிநீக்குviduthi maanavikalukku mattumalla.anaiththu maanaviyar kulaththukkum,samukaththukkum poruththamaana karuththup pettakam.thodarungkal..thozhamai vanakkam
பதிலளிநீக்குகருத்துத் தெரிவித்த தோழர்கள் கவியாழி கண்ணதாசன், திண்டுக்கல் தனபாலன், இராஜேஸ்வரி,பிரபல ஐக்கூ கவிஞர் மு.முருகேஷ், எனது மாணவர் சி.பி.மணி, விரிவாக எழுதிய மும்பைக் கவிஞர் புதிய மாதவி, முகவை ராஜா, பிரசன்ன குமார், துபையிலிருக்கும் என்அன்பு மகள் வால்கா,சகோதரியும் கவிஞருமான கீதா, தோழரும் கவிஞருமான ஆரிசன் மற்றும் தனியஞ்சலில் பாராட்டி மகிழ்ந்த அருமைத் தோழர் ச.தமிழ்ச்செல்வன் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி,நன்றி,நன்றிகள். உங்கள் அன்பான உற்சாகத் தேன் தடவிய வார்த்தைகளால்தான் என்னால் தொடர்ந்து எழுத முடிகிறது... இக்கட்டுரையை ஜனசக்தி இதழுக்கு அனுப்பியிருக்கிறேன்... பார்க்கலாம்...
பதிலளிநீக்குஇன்று மதியம் என் அருமை நண்பரும் சென்னைச் சுற்றுச் சூழல் துறை அலுவலராகப் பணியாற்றும் புதுக்கோட்டைக்காரருமான கி.கணேஷ் இந்தப் படைப்பைத் தனது அலுவலக நண்பர்களுக்கெல்லாம் படித்துக் காட்டியதாக மிக மகிழ்ச்சியாகக் கூறினார்... பெயர் தெரியாத ஆசிரியர்கள் சிலர் நேரில் பாராட்டினார்கள்... எல்லாருக்கும் நன்றி... ஆனால் இன்னும் ஜனசக்தி வெளியிடவில்லையே!!!! ஏன்? (முன்னர் கம்பனும் காரல்மார்க்சும் கட்டுரையை 4நாளில் வெளியிட்டு மிரட்டிய ஜனசக்திக்கு இதை அனுப்பி 10நாளாகியும்... பார்க்கலாம், இன்னும ்நம்பிக்கை இருக்கு...
பதிலளிநீக்குஅருமை அருமை அழகாகச் சொன்னீர்கள்..
பதிலளிநீக்குஎன் மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல பல அரிய சிந்தனைகளை, வாழ்வியல் உண்மைகளை எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி அய்யா, இந்த கட்டுரையை நான் என் மாணாக்கர்களுக்கு படித்துக் காட்டினேன்..... நல்ல வரவேற்பு...
பதிலளிநீக்குநன்றி நண்பர் குணசீலன் அவர்களே, உடுமலை அறிவியல் இயக்க நண்பரே, இதையே ஒரு சிறு புத்தகமாக்கலாம் என்று நண்பர்கள் சிலர் தொலைபேசியில் சொன்னார்கள். கல்வி தொடர்பான எனது கட்டுரைகளைத் தொகுத்து இந்தத் தலைப்பையே வைக்கலாமா என்று யோசிக்கிறேன்.. உளப்பூர்வமாகப் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நமது நட்புடன், சிந்தனைகளையும் சேர்த்து வளர்ப்போம்
பதிலளிநீக்குGOOD AND BEST LETTER
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குஅருமையான கடிதம், உங்கள் மகளுக்கு மட்டுமல்ல இளைய சமுதாயத்திற்கே எழுதிய கடிதம். இந்த கடித்தத்தை எனது குடும்ப உறுப்பினர்களுக்கு வாசித்து காண்பித்தேன், அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்கள். அந்த பாரதிதாசனின் கவிதை என்னை மிகவும் பாதித்தது.
பாரதியும் சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாவதுகண்டு சிந்தை இரங்காரடி கிளியே என்பான்.
வாழ்த்துக்கள்! உங்கள் அனுமதியோடு பல நண்பர்களுக்கு இதை மின்னஞ்சலில் அனுப்புவேன்.
Pandiaraj S
பதிலளிநீக்குபதிலளி: Pandiaraj S
பெறுநர்: "muthunilavanpdk@gmail.com"
தேதி: 20 ஜூன், 2013 3:52 PM
தலைப்பு: Fw: முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!
நன்றி நா.முத்துநிலவன் தங்களின் விழிப்புணர்வு கட்டுரைக்கு.
தங்களின் பார்வை என்னைப்போன்ற பலமனிதர்களின், பல பெற்றோர்களின் ஆதங்க மூச்சாக உணர்கிறேன்.
உங்களின் கட்டுரையிலிருந்து நீங்கள் சிறந்த சிந்தனையாளரும், பேச்சாளரும் என அறிகிறேன்.
வளரட்டும் தங்களின் மனித மேம்பாட்டுத்தொண்டு!
அன்புடன்,
ச. பாண்டியராஜ்
யேமென் வாழ் இந்தியன்
நன்றி நண்பர் உறரிஉறரன் அவரகளே, நீங்கள் அனுப்பியதைப் பார்த்து, படித்த நண்பர் ஏமன் பாண்டிய ராஜன் கடிதம் பார்த்துத்தான் நீங்கள் நண்பர்களோடு பகர்நது கொண்டதை அறிந்தேன். மிக்க நன்றி, நான் அனுமதிப்பதென்ன? நன்றியல்லவா சொல்ல வேண்டும்.. நன்றி நன்றி தோழரே! நாம் இணைந்தே பயணிப்போம்...
பதிலளிநீக்குsariyaaga ezhuthi irukkireergal aiyaa...
பதிலளிநீக்குavasiyamaanap pathivu..
nanri.
தேர்வு முடிவுக்கு மறுநாள்,,,,சில தற்கொலைச் செய்திகள் வரும்போதெல்லாம்,,,? துள்ளத்துடிக்கும் நெஞ்சினை இறுகப் பற்றிய படி,,,,இருக்கும்,,சாதாரணன் நான் ?
பதிலளிநீக்குஎன் இரு குழந்தைகளும் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென ஆசைப்படுகிறவன் தான் .ஆயினும்,,,
தெர்வு முடிவிற்க்குப் பிறகு ?,,,
இது வரை, பசங்களைத் திட்டியதே இல்லை,,,,,,,,,மனசுக்குள்ள ஒரு பயம்தான்,,
முடிஞ்ச வரை,,,
நல்ல மனிசங்களா ஆக்குவோம் !
அழகாய்,,,கோர்வையாய்,,,ஒரு கடிதம்,,,,நன்று !
சகோதரரே !
அய்யா! அருமை அருமை!
பதிலளிநீக்குஇதை மட்டும் ஒரு சிறு நூலாக்கி வெளியிட்டா நான் நூறு படிகள் வாங்கிக்கொள்கிறேன்.
பிராய்லர் பண்ணைகளுக்கும் இன்றைய நாமக்கல் ரக பள்ளிகளுக்கும் வேறு பாடில்லை.உள்ளீடு இல்லாத மாணவனை இத்தகைய பள்ளிகள் உருவாக்கி வருகின்ற வேளையில், உங்களையும் அனந்தர் அய்யா சிவந்த பெருமாள் அய்யா, ஆசிரியரான எனது தந்தை போன்ற நல்ல சமூக உணர்வுமிக்க ஆசிரியர்களை நான் பெற்றது என் பேறு.இந்த கடிதம் நம்ம இலட்சியாவிற்கு மட்டுமே எழுதப்பட்ட கடிதமாக நான்
நினைக்கவில்லை..நல்ல சமூகப்பொறுப்புள்ள லட்சிய இளைஞர்களை உருவாக்கப்படஎழுதப்பட்ட கடிதமாக எண்ணுகிறேன்.நேரு இந்திரா பிரியதர்சிணிக்கு எழுதிய கடிதம் போல இல்லை அதற்கும் மேலே என்று சொல்லத்தோன்றுகிறது.
கருத்துகள் தெரிவித்த நண்பர்கள் தெமமாங்குப்பாட்டு, வேலுப்பிள்ளை ஆகியோருக்கு நன்றி.
பதிலளிநீக்குஆமாம் அன்பு... இது என் மகளுக்காக மட்டுமே எழுதப்பட விலலை. அப்படின்னா எதுக்கு வலைப்பக்கத்தில் இடுகிறேன். சில நேரம் பெற்ற பிள்ளைகள் கேட்காததை, மற்ற பிள்ளைகளாவது கேட்கும். என் இரண்டுவகைப் பிள்ளைகளும் கேட்கும் என நம்பி எழுதினேன்... புத்தகமாகப் போடுவோம். அப்படி நண்பர்கள் சிலரும் கேட்டிருக்கிறார்கள்.. நன்றிய்யா.. நா.மு.
மீண்டும் ஒரு முறை என் அப்பாவோடு பேசிக்கொண்டிருந்ததை போல் உணர்ந்தேன் அண்ணா.இந்த கடிதத்தை உங்கள் அன்பு மகள் படித்திருபார் அல்லவா!இது போன்ற பெற்றோர் அமைவதை தான் வரம் என்பார்கள் போலும்.பெற்றோர் படிக்க வேண்டிய பாடம்.இதைத்தான் என் பிள்ளைகளுக்கும் (மாணவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன் )சொல்கிறேன்.இனி அது இன்னும் தெளிவாக இருக்கும்.நன்றி
பதிலளிநீக்குஆம் மகிவதனா, என் மகளுக்குப் படித்துக் காட்டுவதற்கு முன் என் மனைவியையும படிக்கச் சொன்னேன். அவரும், அவர்சார்ந்த -தொலைத்தொடர்புத் துறை- சங்கத்தின் மகளிர் பிரிவுத் தலைவர்தான் என்பதால் இயல்பாகவே புரிந்து கொண்டார். என் மகளுக்கும் ரொம்பவே பிடித்ததாகக் கூறித் தன் தோழிகளுக்கெல்லாம் காட்டியதாகச் சொன்னார். என் மூத்த மகள் வால்காவும் (தற்போது துபையில் இருக்கிறார்)முகநூலில் “லைக்” போட்டுவிட்டு என்னிடம் பேசினார்... ஆக, என் பெற்ற பிள்ளைகளோடு, பெறாத -வகுப்பு- பிள்ளைகளுக்குமான இக்கட்டுரை சரியாகவே வந்திருப்பதாக உணர்ந்தேன். ஆசிரியர்தானே பள்ளியில் பெற்றோராக இருக்கிறோம்? வீட்டில் நம் பிள்ளைகளுக்கு ஆசிரியராக இருக்கிறோம்... சரிதானே? நன்றி தங்கை கவிஞர் மகி!
பதிலளிநீக்குஎண்களில் மதிப்பு இல்லை எண்ணங்களில் உள்ளது என்பதை அழகாக உணர்த்தி விட்டீர்கள் ஐயா! தொடக்கமும் சிறப்பான முடிவும் கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன.சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். நீளமாக இருந்தாலும் நிச்சயம் நெஞ்சில் நிறுத்த வேண்டியவை
பதிலளிநீக்குமுனைவர் நேரு அய்யாவினுடைய வலைப்பக்கத்தினைப் படித்த போது உங்கள் க்ருத்துரையும்,வலைப்பக்க முகவரியும் கிடைத்தது. அன்பு மகளே..என்றழைத்து ஒட்டுமொத்த முற்போக்காளர்களின் மனத்தினை தேளாகக் கொட்டும் கல்விமுறையை,மதிப்பெண் பயமுறுத்தலை நல்லவண்ணம் எடுத்து சொல்லிய்ள்ளீர்கள்.எங்களில் ஒருவரான உங்கள் கருத்துக்களை முகநூலிலும், வலைப்பதிவிலும் பகிர்ந்துள்ளேன்.முகநூலில் https://www.facebook.com/murugan.anandam , வலைத்தளத்தில் http://www.akil-tamilvalka.blogspot.in/
பதிலளிநீக்குஅன்புத் தோழர் ஆனந்தன் அவர்களுக்கு வணக்கம். “எங்களில் ஒருவரான உங்கள் கட்டுரையைப் பகிர்ந்துள்ளேன்” என்று சரியாகச் சொல்லிவிட்டீர்கள். நம்மை வழிநடத்துவது மார்க்சும், அம்பேத்கரும், அய்யா பெரியாரும்தானே? அதனால் நமக்குள் நன்றி சொல்லிக் கொள்வதைத் தவிர்க்கின்றேன்.
பதிலளிநீக்குஉங்கள் தளமும் அருமையாக உள்ளது. முனைவர் அய்யா நேரு அவர்களுடைய தளத்தை நானும் பின்பற்றி வருகிறேன். இனி உங்கள் தளத்தையும்... வணக்கம். (உங்கள் தளத்தில் கருத்துத் தெரிவிக்க முடியவில்லையே? comments பகுதியைக் காணவில்லையே? ஏன்?
sir, super katturai. vaalthukkal. vaalkaiyin arthathai edhaarthamaaga kadidha vadivil solli indha aakkathirku oliyootti ulleergal.
பதிலளிநீக்குungalin pira padhivigalaiyum padikka aarvam yerpattullathu..indha thalathai indru than facebook il oru nanbar padhivu seithu irundha pozhuthuthaan paarka mudinthathu..avarukkum vaalthukkal.
முகநூல் நண்பரின் வழியாக வந்து, கட்டுரையைப் படித்துக் கருத்தும் எழுதிய திரு அகமது மொய்தீன் அவர்களின் அன்புக்கு நன்றி.
பதிலளிநீக்குஇந்த காலை வேளையில் படித்த இந்த கடிதம் இன்றைய பொழுதை நல்ல சிந்தனைகள் ஆக்ரமிக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் அளவுக்கு தெளிவான சிந்தனை. உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தனபாலனுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஜோதிஜி. நண்பரை அறிமுகப்படுத்துவதில் என்றுமே முன்னிற்கும் நம் நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு என்றுமே என் நன்றி உரித்தாகுக.
நீக்குஐயா!
பதிலளிநீக்குதங்கள் "மாநில முதல் மதிப்பெண் வாங்கிய பெண் கொலைகாறியானாள் எனும் பதிவு படிக்க வந்தே இதைப் படித்தேன்.
காலத்திற்கேற்ற பதிவு! பிரதியெடுத்து இந்தியா மாத்திரமல்ல இலங்கையிலும் (நான் இலங்கைத் தமிழன்)மாணவர்,ஆசிரியர், பெற்றோருக்குக் கொடுக்கப்பட வேண்டியது.
60 ஆயிரம் சம்பளம் பெறும் இன்றைய இளைஞரின் நிலை பற்றிய ,தங்கள் சக ஆசிரியரின் கணிப்பு. மிகச் சரியானது. அனுபவ பூர்வமான கணிப்பு.
மிகச் சிறந்த கட்டுரை(கடிதம்),தினசரியிலோ, சஞ்சிகையிலோ வெளியிடப்படவேண்டியது.
தினசரியில் வரவிலலை. நம் தளத்தில்தான் வந்தது. மிக அதிகமான நண்பர்களை எனக்கும் பெற்றுத்தந்த எனது பெருமைக்குரிய படைப்பு. தங்கள் கருத்திற்கு நன்றி யோகன்.
நீக்குஅருமையான கடிதம்...
பதிலளிநீக்குநன்றி சகோதரி. நீங்கள் படித்துக் கருத்திட்டதோடு, வலைச்சரத்திலும் அறிமுகப்படுத்தியதில் நிறைய நண்பர்கள் இதைப்படித்திருக்கிறார்கள். அவர்களுக்கும், வலைச்சரத்திற்கும், அறிமுகப்படுத்திய தங்களுக்கும் எனது நன்றிகலந்த வணக்கம்.
நீக்குவரும் மே மாதம் ஆசிரியப் பணியிலிரு்ந்து ஓய்வுபெறவிருக்கும் நான், பணிஓய்வின் (விடைபெறு) விழாவில் வெளியிடவிருக்கும் நூல்களில் கல்வி பற்றிய கட்டுரைத் தொகுப்பிற்கு இந்தக் கடிதத்தலைப்பே வைக்கலாம் என்னும் கருத்து, உங்களைப் போன்ற நல்லமனம் கொண்டவர்களின் பாராட்டுரைகளால் வலுப்பெறுகிறது. மீண்டும் நன்றி சகோதரி.
நீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?
நன்றி நண்பரே. நன்றி மிக்க நன்றி.
நீக்குதேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மிகவும் பயனுள்ள கட்டுரை... என் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்.. அறிமுகப்படுத்தியமைக்கு கிரேஸிக்கும் நன்றி
பதிலளிநீக்குநன்றி எழில். தங்கள் முகநூல் பார்க்க முடிந்தால் மேலும் மகிழ்வேன். நண்பர்களின் கருத்தை அறியவும் ஆவல்.
நீக்குKangalai kalanga vaithathu..... puthiyaiyum theliya vaithathu sir. Super pathivu.....
பதிலளிநீக்குநன்றி நண்பரே, ஆனால் அழுவதால் அல்ல எழுவதால்தான் இந்தக் கல்விமுறையைப் பயனுள்ளதாக மாற்ற முடியும். நான் படித்த காலத்தில் இருந்ததை விடப் பலப்பல மாற்றங்கள் நடந்து வந்தாலும், நாம் நினைக்கும் வகையில் மாறும்வரை நம் கருத்துப் போராட்டம் தொடரவேண்டும். வணக்கம்
நீக்குஅருமையான அழுத்தமான பதிவு . மிக்க நன்றி
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஐயா, என்னமா...........சொல்லிடிங்க ஒருசில இடங்களில் எனக்கு பேசவாய்ப்புக்கிடைக்கும்பொழுது ' பிள்ளைகளை துன்புருத்தாதீங்க புத்தகம் மட்டும் அவன்வாழ்க்கைஎன்றாக்கிவிடாதீர்கள் பத்து +12படித்தால்அவன் தொ.கா பக்கம் திரும்பக்கூடாது என்பார்கள் அவர்கள்படிக்கும் நேரத்தில்நாம் பார்க்காமல்இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'என்று கூறுவதுண்டு என்பிள்ளைகளுக்கும் கடிதத்தைவசித்துக்காட்டுவேன்.நன்றி
பதிலளிநீக்குநன்றி சகோதரீ... நீங்கள் நல்ல ஆசிரியர் மட்டுமன்றி நல்ல அம்மாவாகவும் இருக்கிறீர்கள் என்றெண்ணுகிறேன். பாராட்டுகள்
நீக்குella kalathukum porunthum arumayana karuthu ayya
பதிலளிநீக்குநன்றி சகோதரரே
நீக்குஇலக்கியங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளர்க்கு "டாக்டர்" பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்கள், அவ்விலக்கியங்களைப் படைத்த படைப்பாளிகளுக்கல்லவா முதலில் "டாக்டர்" பட்டத்தை வழங்கவேண்டும்? ஒரு படைப்பாளியின் படைப்புகளை முன்வைத்து ஏழு பேர்க்கு"டாக்டர்" பட்டம்! ஆனால், அவற்றைப் படைத்த படைப்பாளியான எழுத்தாளர்க்கோ ஒன்றுமில்லையாம்? இனிமேல் பல்கலைக்கழகங்கள், எப்படைப்பை முன்வைத்து ஆய்வாளர்க்கு "டாக்டர்" பட்டம் வழங்குகிறதோ, அப்பொழுதே அப்படைப்பைப் படைத்திட்ட படைப்பாளியான எழுத்தாளர்க்கும் "டாக்டர்" பட்டம் வழங்கவேண்டும். பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை பயின்ற காலத்தில் என்னுள் எழுந்த இவ்வெண்ணத்தை இதுகாறும் பலரிடமும் பகிர்ந்துள்ளேன்; பலனில்லை. காத்திருக்கிறேன், முதன்முதலாகப் படைப்பாளியை "டாக்டர்" பூமணி, என்று அழைக்கும் நாள்களை எதிர்நோக்கி . . . . . . .
பதிலளிநீக்குஆகா மிக அருமையான சிந்தனையாக இருக்கிறதே! படைப்பாளியைப் பெருமைப் படுத்தாமல் அதைப் பாராட்டுவதால் என்ன பயன்? மிகவும் சரியான கருத்து அய்யா. வாய்ப்புள்ள இடங்களில் இதைப் பகிர்ந்து கொள்வேன் தங்கள் கருத்திற்கு மிக்கக நன்றி அய்யா.
பதிலளிநீக்குNalla oru kaditham. Ovovoru ilaiya thalaimurayum padikkavendiyathu. Nalla vazhi kaati.
பதிலளிநீக்குNalla Karuthu. intha kalathu ovovoru ilaya thalaimuraikalum padithu purinthu kollavendum.
பதிலளிநீக்குஏற்கனவே இந்தக் கடிதத்தைப் படித்து அகமகிழ்ந்து எனது மகள்களுக்கு இதைப் படிக்க அனுப்பியிருக்கிறேன். இன்று மீண்டும் வலைச்சர அறிமுகத்தின் மூலம் வந்து படித்தேன். புதிதாய் படிப்பது போலவே இருந்தது.
பதிலளிநீக்குஆகா... புனைபெயருடன் புறப்பட்டிருக்கும் புலவரே! வருக.. அப்படியே ஒரு வலைப்பக்கம் வரைக. பயிற்சியை நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம். நன்றி
நீக்கு2013ல் தானே நாங்கள் அதுவும் 6 ஆம் மாதத்தில்தான் வலையுலகில் அடி எடுத்து வைத்தோம். அதனால் இதை வாசிக்க முடியவில்லை. இப்போது வாசித்தோம். அருமையான இந்தப் பதிவை (உங்கள் புத்தகம்) மகளிர் தின பதிவாக எடுத்துக் கொள்ளலாமே. அதனால் இதைப் பகிர்கின்றோம் மீண்டும்...முகநூலிலும், கூகுள் + லும். தேர்வு சமயமும் கூட. பொருத்தமாக இருக்கும் இல்லையா?!!!
பதிலளிநீக்கு