அடுத்தொரு இணையக் கருத்தரங்கம் காண வருக!



'கரோனாக் காலத்தில்' எனது

மூன்றாவது 

இணைய உரையாடல் நிகழ்வு

காண, உரையாட வருக!
ஏற்கெனவே 
இரண்டு தலைப்புகளில் பேசிவிட்டேன்.
என்றாலும்,
இப்போது, திருப்பரங்குன்றத்தில் வாழும், நமது
புகழ்பெற்ற ஓவியர் வெண்புறா 
அழைத்த நிகழ்வு இது!
ஒருங்கிணைக்கும் தோழர்கள் - 
காளிதாஸ்,அருணகிரி, முத்துஅழகேசன், சிவா
நேரலையில் கேட்க, இணைய வானொலி-
26-04-2020 ஞாயிறு 
பிற்பகல் 3மணி
(ஒரு மணிநேர உரை 
பின்னர் குழு உறுப்பினர் கேள்வி-பதில்)

எனது தலைப்பு
“நாடென்ப நாடா வளத்தன…”

நீங்களும் கலந்துகொள்ளலாமே!
இணைப்பு கீழுள்ளது-
வருக நண்பர்களே!


குழு இணைய இணைப்பு
 ------------------------------------------------------ 
முன்னர் நான் பேசியுள்ள தலைப்புகள்-
(1) தமிழ்என்பது வெறும் இலக்கியமல்ல
(2) தமிழால் முடியும் தமிழரால் முடியாதா? 
இப்போது
(3) நாடென்ப நாடா வளத்தன...
(திருக்குறள் -எண்-739ஐ முன்வைத்து
கரோனா தீநுண்மி வரையான 
நமது வாழ்வின் செயற்கை பற்றியதாக உரையாடத் திட்டம்) 
தமிழறிஞர் மு வரதராசனார் இக்குறளுக்கு 
எழுதியுள்ள பொருள் :
 “முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் நாடுகள் அல்ல!”  
சேர்ந்து சிந்திப்போம் 
செயல்படுவோம் வாருங்கள்!

--------------------------------------------------- 

இணையத்தால் இணைவோம் வருக!



இன்னொரு புதிய நிகழ்வு
எனது தலைப்பு –

“தமிழால் முடியும், 

தமிழரால் முடியாதா?”

(23-04-2020 காலை 
11மணிமுதல் 12.30முடிய)
பேச்சு, வினா-விடை

இணையத்தால் இணைவோம் வருக!
விவரம் அழைப்பிதழின் கீழுள்ளது

---------------அவர்களது அழைப்பு இதோ ---------------- 


தமிழர் அறம்

தினந்தோறும் நடத்தும்
தேன்தமிழ் உரையாடல்.

23/04/2020
வியாழன்
காலை 11 மணி.

உரையாளர்:

கவிஞர் நா. முத்து நிலவன்

(
தமிழாசிரியர், கவிஞர், இணைய எழுத்தாளர்,
பட்டிமன்ற பேச்சாளர் என 
பன்முகம் கொண்ட தமிழ் ஆளுமை)

தலைப்பு:

தமிழால் முடியும்,
தமிழரால் முடியாதா?

11
முதல் 12-30 வரை கலந்துரையாடலாக நடைபெறும்.

நெறியாள்கை:
வ.கௌதமன்

ஒருங்கிணைப்பு:
தமிழ் இராசேந்திரன்
(9787933344)

கைபேசி இணையதளம் மூலமாக இணையுங்கள்.
Google Play Store
மூலமாக
Team Application
Download
செய்து ,  
கீழே கொடுக்கப்பட்டுள்ள
link ஐ அழுத்தி உள் நுழையவும்

https://m.teamlink.co/9794729914

கரோனா கொடுமைக்கிடையே, இணையக் கருத்தரங்கம் காண, கேட்க வருக!



உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் 
கரோனா தீநுண்மியால் கடந்த ஒரு மாதமாக மட்டுமின்றி இன்னும் ஓரிரு மாதங்களுக்கு நமது இயல்பு வாழ்க்கை பாதிப்பதை நாம் அனுபவித்துத்தான் தீரவேண்டும் போல!  

கரோனா கொடுமைகள் -பேரிடர் காலத்து வழக்கம் போல- ஏழைகளையே பெரிதும் பாதிக்கின்றன.. 
இது பற்றித் தனியே பேசுவோம்
நான் சொல்வது ஊரடங்கு தந்த நேரம்… 

வாழ்க்கையை வணிக லாபநோக்கில் மட்டுமே பார்த்தவர்களுக்கு கரோனா தந்திருப்பது 
மிகப் பெரிய பாடம்தான்!
(இதில் தொடர்பில்லாத நமக்கும் தான்!)
-----------------------------------
“கெட்டதிலும் சில நல்லதுகள்” 
நடக்கத்தானே செய்கின்றன!
-------------------------------------
படிக்க எழுத நினைப்போர்க்கும் 
என்னைப் போல் 
குடும்பத்தோடு நேரம் செலவழிக்க நினைப்போர்க்கும் 
--சிலர் தவமிருந்து பெற்ற சாபம் என்று சொன்னாலும்-- 
இது தவமின்றிப் பெற்ற வரம்தானே?

எந்த நேரத்திலும் –       
போர்க்களத்திலும் புத்தகம் வாசித்த காஸ்ட்ரோ அளவுக்கு இல்லையென்றாலும் – நாமும் ஏதாவது செய்யத்தானே வேண்டும்? 

அப்படி ஒரு வாய்ப்பு இது 
வாருங்கள்
இணையத் தமிழால் இணைவோம்!
முன்னிலும் புதியதோர் உலகம் செய்வோம்!
zoom செயலியைப் பதிவிறக்கி,
என்படத்துடன் உள்ள அழைப்பிதழில் காணப்படும் 
Meeting ID & Password கொடுத்தால்
நீங்களும் இணையலாம்.

ஒருமணிநேரப் பேச்சைக் கேட்பதோடு,
கேள்வி-பதிலிலும் இணையலாம்.
வருக! வருக நண்பர்களே!
இணையவெளியில் சந்திப்போம்!
---------------------------------------
அதோடு ஒரு கூடுதல் 
வானொலிச் செய்தி -
நாளை 16.4.20 (வியாழன்) இரவு10மணி 
செய்திகளுக்குப் பிறகு,
 'ஞாபகம் வருதே!' எனும் 
எனக்குப் பிடித்த திரையிசைத்தொகுப்பு 
ஒருமணிநேரஒலிபரப்பு
102.1ரெயின்போ பண்பலை மற்றும் 

அலைவரிசை 936திருச்சிவானொலி
இரண்டிலும் வருகிறது!
கேட்டுப் பாருங்களேன்🙏
-நா.முத்துநிலவன்

வணக்கம்
---------------------------------

எனது வாழ்வும் இலக்கியமும்


எனது வாழ்வின் 
முக்கியமான 
நேர்காணல் காணொலி இது

அண்மையில் அறம் தமுஎகச நண்பர்கள் 
ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது 
01-03-2020 அன்று எடுக்கப்பட்டது

இலக்கியச் சகோதரி இவள்பாரதிக்கு நன்றி.

எனது  
இலக்கிய வாழ்வு,
தனிவாழ்வு, சமூக-அரசியல் வாழ்வு என 
என்னைப்பற்றிய, 
எனது வாழ்வின் நோக்கம் பற்றிய 
சில முக்கியமான பகுதிகள்-

இணைப்புக்குச் செல்ல -
நா.முத்துநிலவன் நேர்காணல் 
பகுதி-1https://youtu.be/sWnuwXXJEVA
 பகுதி-2- https://youtu.be/8KaIQZxSu9w
பகுதி-3- https://youtu.be/5idBgOIKX8g

பார்த்து, 
கேள்வி கேட்கும், 
கூடுதல் விவரம் அல்லது
தவறான கருத்துப் பற்றிக் கேட்கும் 
நண்பர்களுக்கு 
நன்றியுடன் பதில் தருவேன்
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைகள்


இணையத்தில் வந்த இயல்பான கதைகள்!
(முனைவர் வா.நேரு எழுதியநெருப்பினுள் துஞ்சல்சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம்நா.முத்துநிலவன்)

மதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள்நெருப்பினுள் துஞ்சல்எனும் தொகுப்பாக வந்திருக்கிறது.
வாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றிபெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்கவேண்டிய முன்மாதிரி முயற்சி.

சங்க இலக்கியம் - எளிய அறிமுகம் முழுமையாக (3பகுதிகள்)


சங்க இலக்கியப் பயிற்சி முகாம்
எனது அறிமுக உரை 
முழுமையாக (3பகுதிகள்)
இடம் – ஏற்காடு – அமைதி இல்லம்
ஏற்பாடு – தமுஎகச அறம் கிளை
நாள் - 29-2-2020, 01-03-2020
இணைப்புக்குச் செல்ல:
------------------------------------------------------ 

 YouTube video |Na. Muthunilavan Sanga ilakkiyam-An Intro – Part-2|

இணைப்புக்குச் செல்ல:
------------------------------------------------------ 


YouTube video |Na. Muthunilavan Sanga ilakkiyam -Qn-Ans| 

இணைப்புக்குச் செல்ல:

ஒரு முக்கியமான பின்குறிப்பு:
இவ்வுரை, தமிழாய்வாளர்களுக்கானதல்ல,
எளியமுறையில் சங்கஇலக்கியம் பற்றி அறியவிரும்பும் அனைவர்க்குமானது
நன்றி:
தோழர் உமர் பாரூக் உள்ளிட்ட
தமுஎகச - அறம்  கிளை நிர்வாகிகள்
ஒளிப்பதிவு:
nam tamil media
தோழியர் இவள்பாரதி
----------------------------------------------------- 

சங்க இலக்கியப் பயிற்சி முகாம் – எனது முன்னுரை காணொலி

“தமுஎகச - அறம்கிளை 
 ஏற்பாட்டில் நடந்த 
''சங்க இலக்கியப் பயிற்சி முகாம்  
ஏற்காடு மலை மண்ணில் 
இரண்டுநாள் நடந்தது. 

2020 பிப்ரவரி-29, மற்றும் மார்ச்-01 

 சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் முதல் வகுப்பை நடத்தினேன். (பின்னர் அடுத்தநாள் கேள்வி-பதிலும் சுவையானது இது அடுத்து வெளிவரும் என அறம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.)

காணொலிப் பதிவு NAM TAMIL MEDIA  தோழி இவள் பாரதி 
 
எனது 36 நிமிட உரை காணச் சொடுக்குக -