வெங்கடேஸ்வரா பள்ளியில் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தேன்

அரசுப் பள்ளியோடு போட்டியிடும் அளவுக்கு,  மாணவர் மையமாகவே பள்ளியை நடத்தும் தங்கம் மூர்த்தி, எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்பவர் என்று பல்லாண்டுகளாகப் பெயர்பெற்றவர். 

எந்தப் பள்ளி அரசு – ஆசிரியர் – மாணவர் என்னும் முக்கோணக் கல்வி முறையில் மாணவரை மையமாகக் கொண்டு நடக்கிறதோ அந்தப் பள்ளி தான் சிறந்த பள்ளி என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை.

மாநில, ஒன்றிய அரசுகளின் சிறந்த ஆசிரியருக்கான விருதையும், டெல்லியில், ஒரு சிறந்த பள்ளிக்கான விருதையும் பெற்றவர் மூர்த்தி.

ஏற்கெனவே 15ஆண்டு முன்பே  “மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் - புத்தகமில்லா நாள் கொண்டாடும் ஒரு நல்ல பள்ளியின் தாளாளர் என் நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி”  என்று எனது தினமணிக் கட்டுரையில் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேனிலைப் பள்ளியைக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். எனது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலிலும் குறிப்பிட்டதோடு, அவரிடமே அந்த நூலுக்கு முன்னுரையும் வாங்கி வெளியிட்டதை எனது வாசகர்கள் அறிவார்கள்.

இப்போது, பள்ளியிலேயே ஒரு புத்தக விழாவை நடத்தியிருக்கிறார்.

பாருங்கள் – படங்களே இந்த வரலாற்றைக் குறித்துப் பேசும்:

















            கல்வியாளரும் படைப்பாளியும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் 

கல்வி சிறப்பாகப் பயன்படும் என்பது என் கருத்து.

கல்வியாளரே படைப்பாளியாக இருந்தால்..

அந்தச் சிறப்புக்குரியவர்தான்

புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் 

மேனிலைப்பள்ளியை நடத்திவரும்

என் அருமை 

கவிஞர் தங்கம் மூர்த்தி
_________________________________________________