நூல்வெளியீட்டில், கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரை
புதுக்கோட்டை, மே.29
புதுக்கோட்டையருகில் மதுரைச் சாலையில் உள்ள ரோட்டரி மகாலில்
நடந்த
புத்தக
வெளியீட்டு
விழாவில்
பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “ஆசிரியர்கள், அடுத்த தலைமுறைக்கான சமூக ஆசிரியர்களாக மாறவேண்டும், தமிழ்நாட்டு ஆசிரியர்களில் சொந்தமாக சிந்தித்து நூல்எழுதுவோர் குறைந்து போனதே தமிழ்வளர்ச்சிக்குத் தடையானது” என்றார்.
புதுக்கோட்டை ரோட்டரி சங்க விழாவுக்கு ரோட்டரித் தலைவர் கே.திருப்பதி தலைமையேற்றார்.செயலர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்றார்.
மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் முனைவர் நா.விஜயரெகுநாதனும், இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் வி.ராஜசரோவும் இணைந்து எழுதிய “யோகாவும் உடல் நலமும்” எனும் நூலை எழுத்தாளரும் பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் வெளியிட்டார். அதே கல்லூரி முன்னாள் முதல்வரும் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் தா.மணி முதல்பிரதியை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
ஆயுள் காப்பீட்டுக் கழக வளர்ச்சி அதிகாரி நா.விஜயகுமார், ஆனந்த யோகா பவுண்டேசன் யோகா செல்வராஜ், மூத்த ரொட்டேரியன் திருப்பதி, பிஎஸ்கே பள்ளித் தாளாளர் பி.கருப்பையா ஆகியோர் நூலின் சிறப்புகளைக் குறித்து, உரையாற்றினர்.
நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றிய நா.முத்துநிலவன் பேசும்போது-