புதுச்சேரியில் ஒரு புதிய பண்பாட்டுத் திருவிழா!
இந்திய நாடு முழுவதும் “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்” என்று “அவசரநிலை” இருள் கவிழ்ந்திருந்த 1975இல், அந்த இருளைக் கிழித்தெழுந்த சிறு
பொறியாய் எழுந்ததுதான், அன்றைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்! இப்போது தமுஎகச என்கின்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்!
இன்றும் அப்படியொரு சூழல்தான் நிலவுகிறது! எழுத்தும், கருத்தும் என்ன சொல்கிறதோ அதற்கு உரிய பதிலை நேர்மையாகச் சொல்ல முடியாத நவீன ‘அவசர’க்காரர்கள், எதார்த்தத்தை எழுதிய எழுத்தாளர் பெருமாள்
முருகனை அசிங்கப்படுத்தினர்,
ஓர் ஆய்வுக்கருத்தை எடுத்தாண்டதற்கு, கவிஞர் வைரமுத்துவின் கட்டுரையை இணையப் பக்கத்திலிருந்து மறைத்ததோடு, மேடைகளிலும் தனிப்பட்ட முறையில் அசிங்கப்படுத்தினர், எங்கள் சுவாசத்தைச் சுரண்டாதே என்று போராடிய வர்களின் வாயில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன! தமிழகத்தின் உரிமை கல்வி, மொழி, அரசியல் எனப் பலவகையிலும் கேள்விக்கு உள்ளாகிய இந்தக் கந்தகச் சூழலில்தான் புதுச்சேரி மண்ணில் தமுஎகசவின் 14ஆவது மாநில மாநாடு எழுச்சியோடும் உணர்ச்சியோடும் நடந்து முடிந்துள்ளது!