மேலாண்மை காலமானார்!


நான் எழுதிய முதல்சிறுகதை கல்கியில் இரண்டாம் பரிசுபெற்றது! அந்தப் போட்டியில் “சிபிகள்”எனும் அற்புதக் கதைக்காக முதல்பரிசு பெற்றவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி! அதற்கு முன்னரே நானும் அவரும் தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வந்ததால் நல்ல அறிமுகம் உண்டு! அதற்குப் பின்னர் நல்ல நெருக்கமான தோழர்களும் ஆனோம்!  
பின்னர் இவரது சிபிகள் தொகுப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்க்குப் பாடநூலான போது, எனது கவிதைத்தொகுப்பு “புதியமரபுகள்” அதே பல்கலையில் பாடநூலானதும் வாழ்த்துரைத்தார்!
கிட்டத்தட்ட 40ஆண்டுக்காலப் பழக்கம்!

6,00,000 தந்ததற்கு நன்றி நண்பர்களே!

பயணம் தொடரும்!

7ஆண்டுகளாகத் தொடரும் எனது வலைப்பயணத்தில்
750 பதிவுகள்  
11,000 பின்னூட்டங்கள்
442 பின்தொடர் நண்பர்கள்
இப்போது
ஆறுலட்சத்தைத் தாண்டும் பக்கப்பார்வைகள்!

எங்கள் பட்டிமன்றம் காண அழைக்கிறேன் (யூட்யூப் இணைப்புடன்)


கடந்த தீபாவளியன்று (18-10-2017) 
காலை 9மணிக்கும்,
மீண்டும் இரவு8மணிக்கும் 
பாலிமர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய 
எங்கள் பட்டிமன்றத்தை 
வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் பலரும் 
காண இயலவிலலை என்று தெரிவித்ததால் 
அந்தக் காணொலி இதோ -

பாலிமர் டிவியில் தீபாவளிப் பட்டிமன்றம் காண அழைக்கிறேன்

நண்பர்களுக்கு வணக்கம்.
வரும் 18-10-2017 புதன் கிழமை (தீபாவளி) அன்று
காலை 9மணிக்கு, பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்புப் பட்டிமன்றத்தில்
முதல் பேச்சாளராக நான் பேசியிருக்கிறேன்.