ஸ்ரீபாரதி பொறியியல் (பெ)கல்லூரி விழா தினமணியில் வந்த முத்துநிலவன் பேச்சு


பெண்களின் நிலை மாற வேண்டும்

First Published : 05 May 2013 03:37 AM IST

படித்த பெண்ணின் திறமை வெளியில் தெரிவதே இல்லை. -படிப்பினால் அந்தப் பெண் பெற்ற பெருமை, குடும்பத்துக்குள்ளேயே கரைந்து விடும் நிலை மாற வேண்டும் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்க நிர்வாகியும் கவிஞருமான நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 4-ம் ஆண்டு விழாவில் மாணவிகளுக்குப் பரிசு வழங்கி அவர் மேலும் பேசியது:      
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கிடைத்த புள்ளிவிவரப்படி, கடந்த பத்தாண்டுகளில், இந்திய அளவில் ஆண்களைக் காட்டிலும் வளர்ச்சி வீதத்தில் பெண் கல்வி பத்து சதம் உயர்ந்துள்ளது.
இதற்கு பல்லாண்டுகளாக பெண் கல்வி மறுக்கப்பட்டு வந்ததும் ஒரு காரணம். ஆனால், படித்து முடித்து வெளியேறும் பெண்கள், பிறகு குடும்பம், குழந்தை என்ற கூட்டுக்குள் அடைபடுகிறார்கள்.
தங்களை அடக்கியாளும் ஆணாதிக்க உணர்வைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனால்தான், நாணம் ஒன்றும் அச்சமொன்றும் நாய்களுக்கு வேண்டும்  என்றான் மகாகவி பாரதி. முதலில் அடிமைத்தனத்திலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும் என்றார்.
பாரதிதாசன் பல்கலைகழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்மூர்த்தி பேசியது:
திறமையையும் ஆற்றலையும் வீணாக்காமல் சரியான பாதையில் செல்ல வேண்டும், தனிநபர் ஒழுக்கம் தவறினால் மொத்த சமுதாயமே பாதிப்படையும்.
போட்டி நிறைந்த உலகில் கடுமையாக உழைத்துக் கொண்டே நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி எளிதில் கிடைக்காது, உடனே கிடைத்தாலும் அந்த வெற்றியில் சந்தோஷம் நிலைக்காது என்றார்.
ஸ்ரீபாரதி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ். திலகவதி, அறங்காவலர் உறுப்பினர்கள் கே.ஆர். குணசேகரன்,கே. ரெங்கசாமி, அ. கிருஷ்ணமூர்த்தி, ஏ.எல். செல்லதுரை, அ. செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி வெற்றிச்செல்வி வரவேற்றார். ரஞ்சிதபிரியா நன்றி கூறினார்.
---------------------------------------------
நன்றி - “தினமணி“செய்தியாளர் திரு.மோகன்ராம்,புதுக்கோட்டை      
புகைப்படம்- திரு ஜெயச்சந்திரன், திருவரங்குளம்.
இணைப்பிற்கு - 05-05-2013 தினமணி-திருச்சிப்பதிப்பு.  http://dinamani.com/edition_trichy/pudukottai/2013/05/05/
------------------------------------------------------------- 

2 கருத்துகள்:

  1. அருமையானதொரு நிகழ்ச்சியை கண்முன் காட்டிவிட்டீர்கள்...
    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தொகுத்து வழங்கியமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு