நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த 15நாள்களாக,
அரசுப்
பணியாளர் தேர்வுகள்: தொகுதி I, II, II A, TRB, IV And Police
அனைத்திற்குமான தமிழ்ப் பாடப் பகுதிகளை
நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது.
முதலில் என் அன்பிற்குரிய மாணவர் உதயகுமார் நடத்திவரும்
புதுக்கோட்டை ‘சங்கத் தமிழ் ஐஏஎஸ் அகாடமி’ யிலும்,
பிறகு என்அன்பிற்குரிய சகோதரர் திரு குரு.தனசேகரன் அவர்கள் தலைமையில்
நடந்துவரும் பாரதி கல்விக்குழுமத்தைச் சேர்ந்த
ஸ்ரீபாரதி கலை-அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்க்கும் “அரசுப்பணியாளர் தேர்வுகள் ஓர் அறிமுகம்” என்னும் அளவிலும் ஒருமணிநேரம் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது
---------------------------------------
இவற்றில், கடந்த ஆண்டு இந்து தமிழ்
இயர்புக்-2025 வெளியிட்ட
அரசுப்பணியாளர் தேர்வுகள் சிறப்பு வெளியீட்டில் நான் எழுதிய
40பக்கக்
குறிப்புகளின் சாரத்தை அறியத் தந்தேன்.
இவற்றை
தேர்வுக்குத் தயாராகும் மாணவ –மாணவியர் அனைவர் கவனத்திற்கும் கட்டணமின்றித் தருவது
அவசியமாகத் தோன்றியது.
இதோ
நான் தயாரித்த அந்தக் குறிப்புகள்:
“தமிழும் தமிழ் சார்ந்தும்”
(தமிழ் இலக்கியமும்,
வரலாறும்)
குறிப்புகள் – தொகுப்பு
- நா.முத்துநிலவன்
ஐம்பது சிறு தலைப்புகளில் – ஆயிரம் கேள்வி-பதில் சிறுதலைப்புகள் -
------------------------------------------------------------------------------------
1.
தொல்பழங்காலம்
2.
தொல்லியல் சான்றுகள்
3.
தமிழின் தொன்மை
4.
பிராமி-தமிழி, வட்டெழுத்து, கிரந்த எழுத்துகள்
5.
தமிழ்ச் சங்கங்கள்
6.
சங்க இலக்கியம்
7.
எட்டுத் தொகை நூல்கள்
8.
பத்துப்பாட்டு நூல்கள்
9.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
10. திருக்குறள்
11. “செம்மொழி” நூல்கள்
12. தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது
எப்போது?
13.
தமிழ் இலக்கணம்
14. களப்பிரர் காலம்
15. பல்லவர்
16. முற்கால, பிற்காலச் சோழர்கள்
17. முற்கால, பிற்காலச் சேரர்கள்
18. முற்கால, பிற்காலப் பாண்டியர்கள்
19. ஐம்பெருங்காப்பியங்கள்
20. ஐஞ்சிறுகாப்பியங்கள்
21. பக்தி இலக்கியம்
22. சிற்றிலக்கியங்கள்
23. சித்தர்கள்
24. தமிழ்ப்பண்பாடு
25. புகழ்பெற்ற வரிகள் – எழுதியவர்
26. பௌத்தம் வளர்த்த தமிழ்
27. சமணம் வளர்த்த தமிழ்
28. இஸ்லாம் வளர்த்த தமிழ்
29. கிறித்தவம் வளர்த்த தமிழ்
30. தற்காலத் தமிழ்
31. பொதுவான இலக்கியச் செய்திகள்
32. நாவல்
33. சிறுகதைகள்
34. மரபுக்கவிதை
35. புதுக்கவிதை,
36. அய்க்கூ
37. சிறார் இலக்கியம், சூழலியல் நூல்கள்
38. திறனாய்வு
39. உரைநடை
40. அயலகத் தமிழ் இலக்கியம்
41. இசைத்தமிழ், நாடகத் தமிழ்
42. நாட்டுப்புற இலக்கியம்
43. நூல்கள் – ஆசிரியர்கள்
44. தமிழ் இலக்கிய விருதுகள், பெற்ற எழுத்தாளர்கள்
45. தமிழ் இதழ்கள் – ஆசிரியர்கள்
46. தமிழில் பிறதுறை
47. கணினித் தமிழ்
48. தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள்
49. தமிழ்ச் சான்றோர்- குறிப்புகள்
50. தேர்வுக்கான இணைய இணைப்புகள்
----------------------------------------------------------------------------------------------------
தமிழ் இலக்கியமும், வரலாறும்
அன்று முதல் இன்று வரை
சிறுகுறிப்புகள் – நா.முத்துநிலவன்
தொல்பழங்காலம்
·
பெருங்கற்கால மக்கள்.
வேளாண்மை சார்ந்த தொழிற் கருவிகள் அனைத்திலும் இரும்பு உலோகத்தையே அதிகம் பயன்படுத்தினர்.
·
இரும்பைப் பயன்படுத்திய பெருங்கற்காலம் இரும்புக் காலம் எனப்படும்.
·
பெருங்கற்கால மக்கள் பயன்பாட்டில் தங்கம், வெண்கலம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் குறைவாகவே இருந்துள்ளன.
·
கல் பதுக்கை அல்லது கல் திட்டை,
குரங்குப் பட்டடை எனப்படும்.
·
மட்கலங்களில் கருப்பு,
சிவப்பு, கருப்பு-சிவப்பு,
செம்பழுப்புப் பூச்சு என நான்கு வகை மட்கலங்கள் காணப்படுகின்றன.
· ஆதிச்ச நல்லூரில் வேல்(சூலம்), திரிசூலம் என ஆயுதங்கள்
கிடைத்துள்ளன.
·
“சுடுவோர், இடுவோர்,
தொடுகுழிப் படுப்போர், தாழ்வயின் அடைப்போர்,
தாழியிற் கவிப்போர்” என ஈமச் சின்னங்களை மணிமேகலை பாடுகிறது.
·
இந்திய நாட்டைப் பொருத்தவரை விந்திய மலைக்குத் தெற்கேதான் பெருங்கல் சின்னங்கள் அதிகமாகக்
கிடைத்துள்ளன.
·
தமிழ்நாட்டுப் பெருங்கற்கால மட்கலங்களின் குறியீடுகள்,
சிந்துவெளிக் குறிகளுடன் ஒத்துள்ளன,
பிராமி எழுத்துகளில் சிலவற்றை
ஒத்துள்ளன.
·
பெரிய கல்லால் ஆன ஈம
(இறுதிச்சடங்கு) சின்னங்களைப் பயன்படுத்திய மக்கள்
வாழ்ந்த காலம் பெருங்கற் காலம் என்று வரையறுக்கப் படுகிறது.
·
இறந்தவர்க்கு நடப்படும் கல்,
இலக்கியங்களில் நடுகல் எனப்படுகிறது.
·
உணவு ஆக்கலும்,
ஆடை உருவாக்கலும் தவிர்த்த, மனித குலத்தின் பெரிய
கண்டுபிடிப்பு, தன் கருத்தைப் பிறர் அறிய உதவும் மொழியைக் கண்டதே!
·
குமரிக் கண்டம் தமிழர் தோன்றிய நிலம் என்றவர் தேவநேயப் பாவாணர்.
· குமரிக் கண்டம் எனும் நிலம், அறிவியலால் உறுதி செய்யப்பட வில்லை.
பழந்தமிழகம்
·
தமிழ், ஈபுரு,
பாரசீகம், அரபு, சமஸ்கிருதம்,
கிரேக்கம், லத்தீன், சீனம் ஆகிய 8மொழிகள்
உலகின் பழைய செம்மொழிகள் எனப்படுகின்றன
·
சுமேரியா, பாபிலோனியா,
அஸிரியா, எகிப்து, அரபு,
சீன நாடுகள் பழந்தமிழர் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த
நாடுகளாகும்.
· முழுமையாகக் கிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கணநூல் தொல்காப்பியம்.
·
தொல்லியல் சான்றுகள்,
கல்வெட்டுகள், பழந்தமிழ் இலக்கியங்கள்,
மற்றும் வெளிநாட்டார் குறிப்புகளில் பழந்தமிழர்
வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
·
தமிழ்பிராமி,
தமிழி, கிரந்த எழுத்து மற்றும் தற்காலத் தமிழ்
எழுத்துமுறை ஆகியன தமிழ் எழுத்து உருவ வளர்ச்சியைக் காட்டுகின்றன.
·
இண்டிகா, பிளனி, தாளமி, மெகஸ்தனிஸ் முதலான வெளிநாட்டவரின் நூல்கள் பழந்தமிழகம் பற்றிய செய்திகளைத்
தெரிவிக்கின்றன.
· ஆதிச்ச நல்லூர், உத்தரமேரூர், புள்ளிமான் கோம்பை, கீழடி, பொற்பனைக் கோட்டை முதலான ஊர்களில் தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
தமிழ்ச் சங்கங்கள் பற்றிய செய்திகள் -
· மூன்று சங்கங்கள் இருந்ததாக உ.வே.சாமிநாதர், தேவநேயப் பாவாணர், கா.அப்பாத்துரையார், கா.சுப்பிரமணியனார்
போலும் தமிழறிஞருடன் இறையனார் அகப்பொருள் எனும் இலக்கண நூலும்
சொல்கிறது.
· “மூன்று சங்கங்கள் இல்லை, ஒரு சங்கம்
இருந்திருக்கலாம்“ என்பது, கே.ஏ.நீலகண்டனார், சேஷகிரியார், இராமச்சந்திரனார்
கருத்து,
· “தமிழ்ச் சங்கம்
ஓர் அழகான கற்பனை” என்பது, கே.என்.
சிவராஜனார், பி.டி.சீனிவாசனார், எஸ்.வையாபுரியார்,
போலும் தமிழறிஞர் கருத்து.
· சங்கப் பாடல்களில் சங்கம் எனும் சொல் இல்லை.
· பாண்டிய மன்னர்கள், தென்மதுரை, கபாடபுரம்,
வடமதுரை ஆகிய நகரங்களில்
முச்சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்பர்.
· பாண்டிய மன்னர்கள் கடல்கொண்ட தென்மதுரை தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்டு தமிழ் இலக்கிய ஆய்வும், செய்யுள் இயற்றுதலும் நடைபெற்றன. அதுவே முதற் சங்கம் என்பது ஒரு கருத்து.
· கடல் பெருக்கெடுத்து வந்ததால் தென்மதுரை அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கு அமைந்ததே இடைச் சங்கம் என்பது ஒரு கருத்து. கபாடபுரமும் கடலால் அழிவுற்ற பின் இன்றைய மதுரைக்குப் பாண்டியர் தலைநகரை மாற்றினர். இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்று கி.பி.200 வரை அங்கு கடைச்சங்கம் நடந்தது என்பதும் ஒரு கருத்து.
· “சங்கம்“ எனும் சொல் “நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்”
எனும் அப்பர் தேவாரத்தில்
உள்ளது.
· சங்கப் பாடலின் அடிக்குறிப்பில் அரசன் ஒருவனைப் பாடிய புலவரின் அடுத்தடுத்த
பாடல்களில் அவனை அவர் பாடியது என்றே இருக்கும்.
· சின்னமனூர் செப்பேடுகள்,
பாண்டியர்கள் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது பற்றிய குறிப்புகளைத்
தருகின்றன.
·
சங்க காலமும், சங்க இலக்கியமும்
·
பொ.யு.மு.(கி.மு.)5ஆம் நூற்றாண்டு முதல்,
பொ.யு.பி(கி.பி.)3அம் நூற்றாண்டு வரையான காலமே சங்க
காலம் என்பது ஆய்வாளர் பொதுக் கருத்து.
·
எட்டுத் தொகை பத்துப் பாட்டு எனும்
18நூல்களே சங்க இலக்கியம்
· எட்டுத் தொகையில் உள்ள எட்டுத் தொகுப்பு நூல்களும்,
பத்துப் பாட்டில் உள்ள 10 தனிநெடும் பாட்டு நூல்களுமே
பாட்டும் தொகையும் ஆகும். இந்த
18நூல்களுமே தமிழின் பதினெண் மேற்கணக்கு நூல்கள்
ஆகும்.
·
சேரமன்னர் வரலாற்றை அறியத் தரும் சங்க இலக்கிய நூல்
–பதிற்றுப்பத்து.
·
சங்க காலச் சேர மன்னர்களில் முக்கியமானவன் சேரன் செங்குட்டுவன்.
·
சங்க இலக்கியம் என்பது பாட்டும்
தொகையும் இரு தொகுப்பு நூல்களாகும்.
·
சங்க இலக்கியத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை -2381
·
சங்க இலக்கியத்தில் பாடியுள்ள புலவர்களின் மொத்த
எண் – 473
·
சங்க இலக்கியத்தில் அதிக அளவில் பாடிய கபிலரின் பாடல்கள்
-235
· சங்க இலக்கியத்தில் பெண்புலவரில் அதிகம் பாடிய ஔவை
பாடல்கள் -59
·
சங்க இலக்கியத்தில் ஒரு பாடலே பாடிய புலவர்களின்
எண்ணிக்கை – 293
·
சங்க இலக்கியத்தில்,
25 சேர மன்னரை மட்டும் பாடிய புலவர்
எண் -27
· சங்க இலக்கியத்தில்,
21 சோழ மன்னரை மட்டும் பாடிய புலவர்
எண் -24.
·
சங்க இலக்கியத்தில்,
25 பாண்டிய மன்னரை மட்டும் பாடிய புலவர்
எண் -24
·
சங்க இலக்கியத்தில் புலவர் ஒருவரால் மட்டும் பாடப்பட்ட
புரவலர் எண்-194
·
சங்க இலக்கியத்தில் மதுரை பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -35
·
சங்க இலக்கியத்தில் வையை பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -23
·
சங்க இலக்கியத்தில் காவிரி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -28
·
சங்க இலக்கியத்தில் தொண்டி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -12
·
சங்க இலக்கியத்தில் வஞ்சி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -10
·
சங்க இலக்கியத்தில் இமயம் பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -20
· சங்க இலக்கியத்தில் தெளிவாகப் பெயர் தெரிந்த பெண் புலவர்கள் -30
· புறநானூற்றை அச்சுவடிவில் முதலில் பதிப்பித்தவர்
– உ.வே.சாமிநாதர்
·
நற்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு,
புறநானூறு ஆகிய 8நூல்களே எட்டுத்தொகை நூல்கள்.
·
எட்டுத் தொகை நூல்களை நினைவிற் கொள்ள உதவும் பழைய
வெண்பா-
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்து, ஓங்கு பரிபாடல,
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்,புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை. (பெட்டிச் செய்தி)
·
திருமுருகாற்றுப் படை,
பொருநர் ஆற்றுப் படை, சிறுபாண் ஆற்றுப் படை,
பெரும்பாண் ஆற்றுப் படை, முல்லைப் பாட்டு,
மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடு கடாம் ஆகிய இந்தப் பத்து நூல்களும் பத்துப்
பாட்டு நூல்கள் ஆகும்.
· பத்துப்பாட்டு நூல்களை நினைவிற் கொள்ள
உதவும் பழைய
வெண்பா-
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
பத்துப் பாட்டு நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்
· திருமுருகாற்றுப் படை- ஆசிரியர் - நக்கீரர்,
·
பொருநர் ஆற்றுப் படை-
ஆசிரியர் -முடத்தாமக் கண்ணியார்,
·
சிறுபாண் ஆற்றுப் படை-
ஆசிரியர் -இடைக்கழி நாட்டு நத்தத்தனார்,
· பெரும்பாண் ஆற்றுப் படை-
ஆசிரியர் -கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
·
முல்லைப் பாட்டு-
ஆசிரியர் -நப்பூதனார்,
·
மதுரைக் காஞ்சி-
ஆசிரியர் -மாங்குடி மருதனார்,
·
நெடுநல் வாடை-
ஆசிரியர் -நக்கீரர்,
·
குறிஞ்சிப் பாட்டு-
ஆசிரியர் -கபிலர்,
·
பட்டினப் பாலை-
ஆசிரியர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
· மலைபடு கடாம்-
ஆசிரியர் - இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்.
(இந்தப் பத்தியைத் தனியே
எடுத்து பெட்டிச் செய்தியாகவும் தரலாம்)
எட்டுத் தொகை நூல்கள் பெரும்பாலும் பாடல் அடிகளின் எண்ணிக்கை அளவு மற்றும் பாடுபொருள் கொண்டே நூற்பெயர் தரப்பட்டிருக்கலாம்:
ஐங்குறுநூறு, 3-முதல் 5அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· ஐங்குறுநூறு பாடல்கள், திணைக்கு100வீதம் பாடிய புலவர்
எண்-05ஆகும்
·
ஐங்குறுநூறு தொகுத்தவர் புலத்துறை
முற்றிய கூடலூர்க் கிழார்.
· ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரல் இரும்பொறை
குறுந்தொகை, 4-முதல் 8அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
·
குறுந்தொகைப் பாடல்கள் 400, பாடிய புலவர் எண்ணிக்கை 203
·
குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ
· குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்ல
நற்றிணை, 9-முதல் 12அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· நற்றிணைப் பாடல்கள் 400, பாடிய புலவர் எண்ணிக்கை 187
·
நற்றிணையைத் தொகுத்தவர் பெயர் கிடைக்கவில்லை
· நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
அகநானூறு, 13-முதல் 31அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· அகநானூறு, பாடல்கள் 400, பாடிய புலவர் எண்ணிக்கை 158
·
அகநானூறு, தொகுத்தவர் உப்பூரி கிழான் மகன் உருத்திர
சன்மன்.
· அகநானூறு, தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
புறநானூறு, 4-முதல் 40அடிகளை உடைய புறப் பாடல்களைக் கொண்டது
· புறநானூறு, பாடல்கள் 400, பாடிய புலவர் எண்ணிக்கை 157
·
புறநானூறு, தொகுத்தோர், தொகுப்பித்தவர் பெயர்
தெரியவில்லை.
· புறநானூறு தொகுப்பில் அதிக பாடல்(33)பாடல் பாடியவர் ஔவையார்.
பதிற்றுப் பத்து 2
மரபைச் சேர்ந்த 8 சேரமன்னர் பற்றிய புறத்திணை
நூல்
· பதிற்றுப்பத்து
தொகுப்பில் முதற் பத்தும் இறுதிப் பத்தும்
கிடைக்கவில்லை.
· பதிற்றுப்பத்து நான்காம் பத்துப்பாடல்களும் அந்தாதி முறையில் உள்ளன.
· பதிற்றுப்பத்து ஒவ்வொரு பா இறுதியிலும் பதிகம் எழுதிச் சேர்க்கப்பட்டது (இணைப்பு வெண்பாக்கள் பிற்காலத்தவை)
கலித்தொகை, 13-முதல் 31அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· கலித்தொகை, பாடல்கள் 150, புலவர் ஐவர் (இதில்
மாற்றுக் கருத்துண்டு)
· கலித்தொகை தொகுத்தவர் நல்லந்துவனார்
எனும் சங்க காலப் புலவர்
· கலித்தொகை, தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
பரிபாடல், 25முதல் 400 அடிகளைக் கொண்ட இசைப்பாத் தொகுப்பு
·
பரிபாடலில் கிடைத்த 70பாக்களில் 22பாடல்களே இப்போது உள்ளன.
·
பரிபாடல் அகம்,
புறம் எனும் இருதிணைகளிலும் பாடப்பட்டுள்ளது.
·
பரிபாடலில்
6-திருமாலை, 8-முருகனை, 8வையை ஆற்றைப் பற்றியன.
·
சேரர், சோழர்,
பாண்டியர் ஆகிய மூவரே சங்க கால மூவேந்தர்கள்
ஆவர்.
·
பாரி, காரி,
ஓரி, ஆய், அதியமான்,
பேகன், நல்லி ஆகிய எழுவரே - சங்க கால - கடையேழு வள்ளல்கள் ஆவர்.
·
வஞ்சி சேர
மன்னர் காலத்து மாநகரம் ஆகும்
·
மதுரை பாண்டிய
மன்னர் காலத்து மாநகரம் ஆகும்
·
உறையூர்,
பிறகு தஞ்சை சோழ மன்னர் காலத்து மாநகரங்கள்
ஆகும்
·
சங்ககாலத்துறைமுகங்கள்,
பூம்புகார், தொண்டி, முசிறி, கொற்கை,
·
சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்பு அகம் புறம் எனும் இருபிரிவுகளாகும்
·
குறிஞ்சி என்பது மலையும்
மலைசார்ந்த
இடமும் ஆகும்
·
முல்லை என்பது காடும் காடுசார்ந்த
நிலமும் ஆகும்
·
மருதம் என்பது வயலும் வயல்
சார்ந்த நிலமும் ஆகும்
·
நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த
இடமும் ஆகும்
·
பாலை என்பது காடும் மலையும்
திரிந்த வறண்ட பகுதியாகும்
· அகநானூற்றின் மற்றொரு பெயர் – நெடுந்தொகை.
·
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன
–அன்பின் ஐந்திணை
·
ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணை நூறு பாடலைப் பாடியவர்
– கபிலர்.
·
சிறுபாணாற்றுப் படையில் பாடப்படும மன்னன்
– நல்லியக் கோடன்.
·
மலைபடுகடாம் நூலின் மற்றொரு பெயர்
– கூத்தர் ஆற்றுப் படை.
·
பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்
–முல்லைப்பாட்டு(103)
· பத்துப்பாட்டில் அதிக அடிகளைக் கொண்ட நூல் –மதுரைக் காஞ்சி(782அடி)
காப்பியங்கள்
· தமிழின் முதல்காப்பியம், முத்தமிழ்க் காப்பியம் –
சிலப்பதிகாரம்.
· “அடிகள் நீரே அருளுக”என்று இளங்கோவடிகளைக் கேட்டவர்
– சாத்தனார்.
·
சிலப்பதிகாரம் 3 காதைகளையும் 30 காண்டங்களையும் உடையது.
· சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லார் உரையுடன் அச்சில் முதலாவதாக
1892இல் பதிப்பித்தவர்- உ.வே.சாமிநாதர்.
·
“தேரா மன்னா” எனும் வரி இடம்பெற்ற நூல் – சிலப்பதிகாரம்.
·
சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள்
.
·
சிலப்பதிகாரம் மணிமேகலை நூல்களை இரட்டைக்காப்பியங்கள் என்பர்.
· “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே”வரி வரும் நூல்-மணிமேகலை.
அறம்எனப்படுவது,
உண்டி உறையுள் உடை தருதல் என்பது -மணிமேகலை
·
மணிமேகலை பௌத்த சமய நெறிபரப்பும்
நூல்.
·
ஐஞ்சிறு காப்பியங்கள் –
· ஐஞ்சிறு காப்பியங்களில் சூளாமணி ஆசிரியர் - தோலாமொழித் தேவர்
· நீலகேசி, உதயணகுமார காவியம் நூலாசிரியர் பெயர்
கிடைக்கவில்லை
·
வடமொழி யசோதரன் சரிதமே தமிழில் யசோதர காவியம் ஆயிற்று.
· பெருங்கதையில் வரும் உதயணன் வரலாறே உதயணகுமார காவியம்.
· மகதநாடு ராசமாகிரியம் நகரில் தொடங்கும்நூல் நாககுமார
காவியம்.
செம்மொழித் தமிழ் நூல்களாக அரசு அறிவித்திருக்கும்
நூல்கள் பட்டியல்-
(1) தொல்காப்பியம் - 1
(2) பதினெண் மேற்கணக்கு (பத்துப் பாட்டு எட்டுத்தொகை) நூல்கள்-18
(3) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-18
(4) முத்தொள்ளாயிரம்-1
(5) சிலப்பதிகாரம், மணிமேகலை-2
(6) இறையனார் அகப்பொருள்-1
------------------ஆக மொத்தம்-41நூல்கள்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-
·
திருக்குறள்,
நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்று ஐம்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக்
காஞ்சி, ஏலாதி, கைந்நிலை, ஆகிய 18நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாம். (இந்தப் பத்தியைத் தனியே எடுத்து பெட்டிச் செய்தியாகவும் தரலாம்)
நாலடி நானாற்பது ஐந்திணை,முப்
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்
இந்நிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
கைந்நிலைய ஆம்கீழ்க் கணக்கு
· பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால அறநூல்கள் .
· பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், நீதி நூல்கள் 11, புறப்பொருளில் ஒரு நூல், அகப் பொருளில் 6 நூல்கள்
அமைந்துள்ளன.
· முப்பால் என்பது திருக்குறளுக்கு வழங்கும்
மற்றொரு பெயராகும்.
· திருக்குறள் முதலில் அச்சேறிய ஆண்டு
–பொ.யு.பி.(கி.பி.)1812.
· நாலடி இரண்டடி என்பதில் இரண்டடி குறள்,
நாலடி என்பது – நாலடியார்.
· நாலடியாரில் 40 அதிகாரங்கள்,
400 பாடல்கள் உள்ளன.
· பழமொழி நானூறு எழுதியவர் – முன்றுரையரையனார்.
· தொடர்ச்சியான 4 செய்திகளைக் கூறும் அறநூல்
– நான்மணிக் கடிகை.
· பதினெண்கீழ்க்கணக்கில் நாற்பது என்று முடியும்
நூல்கள் 4 உள்ளன.
· பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே புறப்பொருள் நூல்
– களவழி நாற்பது.
· ஐந்து,ஐந்தாக அறக் கருத்துகளைக் கூறும்
அறநூல் – சிறுபஞ்ச மூலம்.
· ஒற்றை அடிக் கொளுக்களால் ஆன கீழ்க்கணக்கு நூல்
– முதுமொழிக் காஞ்சி.
திருக்குறள் -
· திருக்குறளில், ஒரே குறளில் 6 முறை வரும் சொல் - ‘பற்று’
· திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
· திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
· திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்.
· திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி.
· திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
· திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
· திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ‘ஔ’.
· திருக்குறளை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
· திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 380.
· திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700.
· திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250.
· திருக்குறள் மூலத்தை முதலில் 1812இல் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
கல்வெட்டுகள்-
· தமிழை எழுதப் பயன்பட்ட பண்டை எழுத்துமுறை
– பிராமி (எ) தமிழி
·
இன்றைய தமிழ் எழுத்து வடிவம் பல்லவர் காலத்தில் உருவானது.
· தமிழ் பிராமி (தமிழி) கல்வெட்டுகள் ஆய்வாளர்
–ஐராவதம் மகாதேவன்
·
சிந்துவெளி –அரப்பா மொகஞ்சதாரோ-
தொல்லியல் ஆய்வுக்குப் பிறகே இந்தியாவின் தொன்மை
வரலாற்றை உலகம் அறிந்து கொண்டது.
·
சிந்துவெளி போல கீழடி
ஆய்வுக்குப் பிறகே தமிழகத்தின் தொன்மையை உலகம் அறிந்து கொண்டு வருகிறது.
·
ஆதித் தொல்தமிழ்க் குடிகள் பயன்படுத்திய கல்லாயும் புதுக்கோட்டை மாவட்டம் குருவிக்கொண்டான் பட்டி யில் கிடைத்துள்ளது.
·
சித்தன்ன வாசலில் தமிழி (எ) தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்ள்ளன.
·
தமிழக நீர்ப்பாசன அமைப்பு முறை பற்றிய கல்வெட்டுகள்
விழுப்புரம் திண்டிவனம் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்
பட்டுள்ளன.
· சங்க காலப் பாண்டிய மன்னர் பற்றி மாங்குளம் கல்வெட்டு கிடைத்துள்ளது.
· திருக்கோவிலூர்-ஜம்பை கல்வெட்டு அதியமான் நெடுமான் அஞ்சி பற்றியது
·
கரூர் புகளுர் மலைக் கல்வெட்டு பதிற்றுப்பத்து சேரமன்னர் பற்றியது.
·
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கிடைத்துள்ள தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துக் கல்வெட்டுகள் காலத்தால் முந்திய கல்வெட்டுகளாகும்.
·
வேலாயுதம் பாளையக் கல்வெட்டுகள் தமிழருக்கும் ரோமானியருக்கும் இடையில் இருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன.
·
தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகள் கோவிலை உருவாக்க உதவிய பலரைப் பற்றிய செய்திகளை விரிவாகத்
தருகின்றன.
·
திருவரங்கம்,
திருவானைக்கா, சிதம்பரம், திருவாரூர் கோவில்களின் பெரிய மதில் சுவர்களில் கல்வெட்டுகள்
காணக் கிடைக்கின்றன.
· ராஜராஜ சோழனின் 28ஆம் ஆட்சியாண்டு பற்றிய தகவல்களை, திருமழ பாடி கோவில் கல்வெட்டுகள் தருகின்றன.
களப்பிரர் காலத் தமிழகம்
·
சங்க காலத்தை அடுத்து வந்த களப்பிரர் காலத்தை,
சங்கம் மருவிய காலம் என்றும்,
களப்பிரர் இடையீட்டுக் காலம் என்றும் கூறுவர். (இதை இருண்ட காலம் என்கிறார்கள் அது தவறு!)
· வேள்விக்குடி செப்பேடுதான் களப்பிரர் காலம் பற்றி அறியத் தருகிறது.
· இக்காலம் பற்றிய செய்திகளை உறுதியாகக் கூற முடியவில்லை.
எனவே, “களப்பிரர் காலம் இருண்ட
காலம்“ என்பது ஒருசாரார் கருத்து.
·
களப்பிரர் காலத்தில்தான் புகழ்பெற்ற தமிழ்இலக்கிய
இலக்கண நூல்கள் கிடைத்துள்ளன. எனவே அது இருண்ட காலமல்ல
என்ற கருத்தும் உள்ளது.
·
களப்பிரர் முதலில் பௌத்தராக
இருந்து பின்னர் சமணராக மாறினர்.
·
ஆட்சி மாற்றங்களால் சங்ககால முடிவில் மக்களிடை அமைதி குலைந்தது
·
மக்களை அமைதிப் படுத்த,
ஏராளமான அறநூல்கள் எழுதப்பட்டன.
·
களப்பிரர் காலத்தில் தமிழுடன் பாலி, பிராகிருத மொழிகளும் பேசப்பட்டன.
·
களப்பிரர் காலத்தில்தான் பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பெரும்பாலான நூல்கள் எழுதப்பட்டன
என்கிறார் அறிஞர் சீனி.வேங்கடசாமி
·
பாண்டிய அரசர்களிடம் பிராமணர்கள் தானமாகப் பெற்றிருந்த
நிலங்களை களப்பிரர் திரும்பப் பெற்றனர் என்று வேள்விக்குடி
செப்பேடு கூறுகிறது.
பல்லவர் காலம்-
·
பல்லவர்கள் காஞ்சியைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
·
பல்லவர் காலம் கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.850முடிய என்பர்.
·
பல்லவ அரசர் சிம்மவிஷ்ணு முதல் அபராஜிதன் வரை ஆட்சி
செய்தனர்
·
சங்க இலக்கியங்களில் பல்லவர் பற்றிய குறிப்புகள்
ஏதும் இல்லை. எனவே, பல்லவர்கள்
சங்க காலத்திற்குப் பின் வந்தவர் என்று முடிவுக்கு
வரலாம்.
·
பல்லவர் காலத்தைப் பொதுவாக பக்தி இலக்கிய காலம் எனலாம்
·
நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்தி இலக்கியம் பாடினர்
·
நாயன்மார்கள் சிவபெருமானை வழிபட்டு பக்தி இலக்கியம் பாடினர்
·
ஆழ்வார்கள் திருமாலை வழிபட்டு பக்தி இலக்கியம் பாடினர்
·
ஒழுக்கத்தை வலியுறுத்தி,
இல்லற வாழ்வையும் பெண்களையும் இழித்து இலக்கியம் படைத்த சமணர்களை பக்தி இலக்கியம் பழித்துப் பேசியது.
·
சமணர் திருநாவுக்கரசரை சைவராக மாற்றியவர்
–திலகவதியார்.
·
திருநாவுக்கரசரால் சைவ மதத்திற்கு மாறிய மன்னன்
– மகேந்திர வர்மன்.
சோழர் வரலாறும் இலக்கியமும்-
· முற்காலச் சோழர்களில் மிகப் புகழ்பெற்றவன் கரிகால்
சோழன் ஆவான்.
· பத்துப்பாட்டில் பட்டினப்பாலை, பொருநர்ஆற்றுப்படை ஆகிய இரண்டு நூல்களும் கரிகால் சோழனைப் பற்றிய
செய்திகளைத் தருகின்றன.
· கோப்பெருஞ்சோழன் சங்க காலப்புலவர் பிசிராந்தையாரின்
நண்பர்.
· பொதுவாக, விஜயாலய சோழன்
முதல் முதலாம் ராஜராஜன் முடிய 21 மன்னர்களின்
காலமே பிற்காலச் சோழர் காலம் எனப்படுகிறது
· பிற்காலச் சோழர்களில் ராஜராஜ சோழன்,
ராஜேந்திர சோழன் இருவருமே மிகப்
புகழ்பெற்ற மன்னர்கள் ஆவர்.
· ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரியகோவிலுக்கு அவன் இட்ட பெயர் பெருவுடையார் கோவில் என்பதாகும்.
· திருவாரூரில் இருந்து மூவர் தேவாரத்தை மீட்டவன் ராஜராஜசோழன்.
· முதலாம் ராஜராஜ சோழனின் உதவியுடன் நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரு திருமுறைகளை தொகுத்தார்.
· வைணவ ஆழ்வார்களின் பாடல்களை நாதமுனிகள் தொகுத்தார்.
· இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் போலும் தொல்காப்பிய உரையாசிரியர்கள்
பிற்காலச் சோழர் காலத்தவரே ஆவர்.
· சிலப்பதிகாரத்தின் சிறந்த உரையாசிரியரான அடியார்க்கு
நல்லார் பிற்காலச் சோழர் காலத்தவரே ஆவார்.
· நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை,
நம்பியகப்பொருள், நேமிநாதம், தண்டியலங்காரம் இலக்கண நூல்களின் காலம் பிற்காலச்
சோழர் காலமே.
· பிற்காலச் சோழர் காலத்தில்தான் வைதீகமும், வர்ணாஸ்ரமும் தமிழகத்தில் புகுந்து தழைத்தன
இப்போது உள்ள தமிழ் எழுத்து முறை - பல்லவர் காலத்திலிருந்து புழக்கத்தில் உள்ளது
கிரந்த எழுத்ததுகள் - ஜ ஷ ஹ க்ஷ ஸ என்னும் எழுத்துகள் வடமொழி உச்சரிப்பைத் தமிழில் எழுத பல்லவர் காலம் முதல் புழக்கத்தில் உள்ளன. (இவை வடமொழியிலும் இல்லை, தமிழிலும் இல்லை. )
தமிழ் இலக்கணம் -
· முழுமையாகக் கிடைத்த முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்
· தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடியவர் பனம்பாரனார்.
· தொல்காப்பிய இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களும்,
அதிகாரத்திற்கு 9 வீதம் 27 இயல்களும் அமைந்துள்ளன.
· தொல்காப்பியம் காட்டும் திணை ஒழுக்கம்,
அகம் புறம் என இரு வகை.
· ஆண் பெண் காதல், குடும்பம் பற்றியது அகப்பொருள் திணை.
· பொருளியல், அரசியல்,
புகழ்வாழ்வு பற்றியது
புறப்பொருள் ஆகும்.
· தொல்காப்பியம் காட்டும் முதற்பொருள்,
நிலம் பொழுது என இரு வகை.
· தொல்காப்பியம் பொழுது, சிறுபொழுது, பெரும்பொழுது என இரு வகை
· தொல்காப்பியம் காட்டும் சிறுபொழுது 6, பெரும்பொழுது 6 வகைப்படும்.
· தொல்காப்பியம் சுட்டும் ஒரு நாளின் 6 பிரிவுகள்
சிறுபொழுது ஆகும்.
· தொல்காப்பியம் சுட்டும் ஓர் ஆண்டின்
6 பிரிவுகள் பெரும்பொழுது ஆகும்.
· தொல்காப்பியம் தெய்வம், உணவு, விலங்கு,
மரம், பறவை, மக்கள், தொழில், பண்,
யாழ், முதலானவற்றை உரிப்பொருளில் வைத்துள்ளது.
· அகத்திணை சுட்டும் மலையும் மலைசார் நிலமும் குறிஞ்சி
ஆகும்.
· அகத்திணை சுட்டும் காடும் காடுசார் நிலமும் முல்லை
ஆகும்.
· அகத்திணை சுட்டும் வயலும் வயல்சார் நிலமும் மருதம்
ஆகும்.
· அகத்திணை சுட்டும் கடலும் கடல்சார் பகுதியும் நெய்தல்
ஆகும்.
· அகத்திணை மரபின் படி தலைவன் தலைவி பெயர்கள் இடம்பெறா.
· இலக்கியத்தில் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறுவது புறத்திணை ஆகும்.
· புறத்திணையில் வெட்சி என்பது ஆநிரைகவர்தல்
ஆகும்.
· புறத்திணையில் கரந்தை என்பது ஆநிலை மீட்டல் ஆகும்.
· புறத்திணையில் வஞ்சி என்பது வலுச்சண்டைக்குப் போதல்
ஆகும்.
· புறத்திணையில் காஞ்சி என்பது வந்த சண்டையை எதிர்த்து நிற்றல்
· புறத்திணையில் நொச்சி என்பது மதிலைக் காத்து நிற்றல்
ஆகும்.
· புறத்திணையில் உழிஞை என்பது மதிலை வளைத்தல் ஆகும்.
· புறத்திணையில் தும்பை என்பது சமதளத்தில் போரிடுதல்
ஆகும்.
· புறத்திணையில் வாகை என்பது போரில் வெற்றிபெறுதல்
ஆகும்.
· புறத்திணையில் பாடாண் என்பது வெற்றிவீரனைப் புகழ்தல்
ஆகும்.
· தொல்காப்பியத்திற்கு முழுமுதல் உரை கண்டவர் இளம்பூரணர்.
· உயிர்களின் ஆறு அறிவை விளக்கி கூறும் நூல் தொல்காப்பியம்.
புறத்திணைப் போர்முறைகளைக் கூறும் ஒரு பழம்பாடல் -
வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம், வட்கார்மேல் செல்லுதல் வஞ்சியாம்- உட்காது எதிர்ஊன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி, அதுவளைத்தல் ஆகும் உழிஞை – அதிரப் பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கார் செருவென் றது வாகை யாம்
· வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் போல்வன பழந்தமிழின் ஐந்திலக்கண நூல்கள்
ஆகும்.
· தொல்காப்பியத்தின் பிறகு புகழ்பெற்ற இலக்கண நூல் நன்னூல் ஆகும்.
· இறையனார் அகப்பொருள், மாறன்அகப்பொருள், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன பொருளிலக்கண நூல்கள் ஆகும்
· யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பன யாப்பிலக்கணம்
· நன்னூல் இலக்கண நூலின் ஆசிரியர் – பவணந்தி முனிவர்.
· யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்.
· நம்பியகப் பொருள் ஆசிரியர் –நாற்கவிராச நம்பி.
· புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் –ஐயனாரிதனார்.
· தண்டியலங்காரம் நூல் ஆசிரியர் - தண்டியாசிரியர்
· திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி, அபிதான சிந்தாமணி, வேத
கிரியார் சூடாமணி, சிந்தாமணி போல்வன புகழ்பெற்ற தமிழ்நிகண்டுகள் ஆகும்.
தமிழ்ப்பண்பாடு
· “யாதும் ஊரே யாவரும் கேளிர்” முழுப்
பாடலும், நூல்-ஆசிரியர் விவரமும்-
“யாதும் ஊரே
யாவரும் கேளிர், / தீதும் நன்றும் பிறர்தர வாரா,
/ நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன,/
சாதலும் புதுவதன்றே, வாழ்தல்/ இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்/ இன்னாது என்றலும் இலமே, மின்னொடு/ வானம் தண்துளி தலைஇ ஆனாது/
கல்பொருது இறங்கும் மல்லல் பேரியாற்று
/நீர்வழிப் படுஉம் புனைபோல் ஆருயிர் /முறைவழிப்
படுஉம் என்பது திறவோர் /காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்/
பெரியோரை வியத்தலும் இலமே /சிறியோரை இகழ்தல் அதனினும்
இலமே/” --சங்க
இலக்கியத்திலுள்ள புறநானூறு தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல் எண்
-192, பாடலை எழுதியவர் கணியன் பூங்குன்றனார் எனும் புலவர்.
· மக்களிடையே
ஏற்றத்தாழ்வை மறுத்த காதலைப் பாடும் புகழ்பெற்ற குறுந்தொகைப் பாடல்
“யாயும் ஞாயும் யாராகியரோ” பற்றிய
கருத்துகள் –
“யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே” ( குறுந்தொகை-40 – எழுதியவர் பெயர் அறிய இயலாமையின், செம்புலப் பெயல்நீரார் என்றே பெயர் பெற்றார்)
அனைவரின் நலமும்
வேண்டும் பழந்தமிழர் பண்பாடு காட்டும் சங்க இலக்கியம்-
· “அறம் நனி சிறக்க, அல்லது கெடுக!“ - ஐங்குறுநூறு
· “நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!“- ஐங்குறுநூறு
· “மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!“- ஐங்குறுநூறு
· யாதும்
ஊரே யாவரும் கேளிர் – புறநானூறு
· புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின்
உலகு உடன் பெறினும் கொள்ளலர் – புறநானூறு.
· வாழ்தல்
வேண்டிப் பொய் கூறேன் – புறநானூறு
· உண்பது
நாழி உடுப்பது இரண்டே – புறநானூறு.
· பண்பெனப்
படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை.
· உண்டி
கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணிமேகலை
·
ஏறுதழுவுதல்,
மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு என அறியப் படும் பழந்தமிழர்
பண்பாட்டு அடையாளமாக -“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்” எனும் வரிகள் இடம்பெற்ற
சங்க இலக்கிய நூல் – கலித்தொகை.
· கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி! – எனும்
புகழ்பெற்ற நேரிசை வெண்பாவின் முதல் இரண்டு வரிகள்
யாவை? இப்பாடல் இடம்பெற்ற நூல் விவரம்-
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி – என்பதே
அந்த முழுப்பாடல். இடம்பெற்ற நூல்
-புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 - குடிநிலை
எனும் பகுதி.
· ஒன்றே
குலமும் ஒருவனே தேவனும்” எனும் புகழ்பெற்ற வரிகள்
இடம் பெற்ற நூல், முழுமையான பாடல், எழுதியவர்
விவரம் -
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே
நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே
புகுங்கதி இல்லை,நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே”
(பாடல் எண்-
2066- இடம்பெற்ற நூல்- திருமந்திரம், எழுதியவர் –திருமூலர்)
· “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”
என்று பழமையைப் போற்றுவதிலும், புதுமையை வரவேற்பதிலும்
வழிகாட்டுவதாக நூலின்
இறுதிவரிகளைக் கொண்ட இலக்கண நூல் –நன்னூல்.
· நாடக நூல் ஒன்றில், தமிழிலிருந்தே பிற திராவிடமொழிகள் கிளைத்தன எனும் கருத்தமைந்த வரிகள் –“கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலையாளமும், துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும், ஆரியம்போல் உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதையாவுன்
சீரிளமைத்
திறம் வியந்து வாழ்த்துதுமே .. வரிகள் இடம்பெற்ற நூல்
– “மனோன்மணியம்” – எழுதியவர் பெ.சுந்தரனார்.
· மேலும்
சில குறிப்புகள் – அளவுக்காக சுருக்கப்பட்ட பகுதிகள்:
· பெருங்கற்கால மக்கள் பயன்பாட்டில் தங்கம், வெண்கலம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் குறைவாகவே இருந்துள்ளன.
· கல் பதுக்கை அல்லது கல் திட்டை, குரங்குப் பட்டடை எனப்படும்
· உணவு ஆக்கலும், ஆடை உருவாக்கலும் தவிர்த்த,
மனித குலத்தின் பெரிய கண்டுபிடிப்பு, தன் கருத்தைப்
பிறர் அறிய உதவும் மொழியைக் கண்டதே!
· குமரிக் கண்டம் தமிழர் தோன்றிய நிலம் என்றவர் தேவநேயப் பாவாணர்.
· குமரிக் கண்டம் எனும் நிலம், அறிவியலால் உறுதி செய்யப்பட வில்லை.
· வைகை நாகரிகம், சிந்துவெளி நாகரிகத்தை ஒத்திருப்பதை
கீழடி காட்டும்.
· தமிழ், ஈபுரு, பாரசீகம்,
அரபு, சமஸ்கிருதம், கிரேக்கம்,
லத்தீன், சீனம் ஆகிய 8 மொழிகள்
உலகின் பழைய செம்மொழிகள் எனப்படுகின்றன
· சுமேரியா, பாபிலோனியா, அஸிரியா, எகிப்து, அரபு,
சீன நாடுகள் பழந்தமிழர் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளாகும்.
· சங்க காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம்- பாண்டியர் காலம், அயலார் காலம், ஆங்கிலேயர் காலம் என, தமிழக வரலாற்றுக்
காலத்தை ஆறு பெரும் பிரிவு களாகப் பிரிக்கலாம்.
· சங்க இலக்கியத்தில், 25 சேர மன்னரை மட்டும் பாடிய புலவர் எண் -27
· சங்க இலக்கியத்தில், 21 சோழ மன்னரை மட்டும் பாடிய புலவர் எண் -24.
· சங்க இலக்கியத்தில், 25 பாண்டிய மன்னரை மட்டும் பாடிய புலவர் எண் -24
· சங்க இலக்கியத்தில் புலவர் ஒருவரால் மட்டும் பாடப்பட்ட புரவலர் எண்-194
· சங்க காலச் சேரநாடு- தற்போதைய
கேரள மாநிலம் ஆகும்.
· பாண்டிய நாடு– தற்போதைய மதுரை, நெல்லை மாவட்டப் பகுதிகள்,
o பிரிபடாத தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டப் பகுதிகள் சோழ நாடாகும்.
· சங்க இலக்கியத்தில் மதுரை பற்றிய பாடல்களின் எண்ணிக்கை
-35
· சங்க இலக்கியத்தில் வையை பற்றிய பாடல்களின் எண்ணிக்கை
-23
· சங்க இலக்கியத்தில் காவிரி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை
-28
· சங்க இலக்கியத்தில் தொண்டி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை
-12
· சங்க இலக்கியத்தில் வஞ்சி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை
-10
· சங்க இலக்கியத்தில் இமயம் பற்றிய பாடல்களின் எண்ணிக்கை
-20
------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பிடத் தக்க நூல்களும் ஆசிரியர்களும்
நாவல்கள்-
· பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
· தில்லானா
மோகனாம்பாள் – கொத்தமங்கலம் சுப்பு
· பொன்னியின்
செல்வன் – கல்கி
· “நெஞ்சில் ஒரு
முள்“– மு.வரதராசன்.
· ‘யவன ராணி’
- சாண்டில்யன்
· ‘குருதிப் புனல்’
– இந்திரா பார்த்தசாரதி
· அகிலன் – சித்திரப்பாவை (ஞானபீட விருது
பெற்ற நாவல்)
·
பஞ்சமர் – டேனியல்
· வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
·
மோகமுள் – தி. ஜானகிராமன்
·
குறிஞ்சித்தேன் –ராஜம் கிருஷ்ணன்
·
பஞ்சும் பசியும் – ரகுநாதன்
·
தேநீர் – டி.செல்வராஜ்
·
தாகம் – கு.சின்னப்ப பாரதி
·
சில
நேரங்களில் சில மனிதர்கள்– ஜெயகாந்தன்
·
ஒரு
மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
·
தலைமுறைகள் – நீல பத்மநாபன்
·
புயலிலே
ஒரு தோணி – பா.சிங்காரம்
·
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
·
கருக்கு – பாமா.
·
கரிப்பு
மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
·
கள்ளிக்
காட்டு இதிகாசம் - வைரமுத்து
·
வாடாமல்லி – சு.சமுத்திரம்.
·
கல்மரம் – திலகவதி.
·
பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்ரன்
·
தலைமுறைகள் – நீல.பத்மநாபன்
·
தலைகீழ்
விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
·
சாய்வு
நாற்காலி – தோப்பில் முகமது மீரான்
·
மானுடம்
வெல்லும் – பிரபஞ்சன்
·
ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
·
புதிய தரிசனங்கள் – பொன்னிலன்
·
வேள்பாரி – சு.வெங்கடேசன்
·
கோவேறு கழுதைகள் – இமையம்
·
கருக்கு – பாமா
·
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
·
மாதொரு பாகன் – பெருமாள் முருகன்
· ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
குறிப்பிடத் தக்க சிறுகதைகள், எழுத்தாளர்கள்-
சிறுகதைகள்-
· முதல் சிறுகதை வ.வே.சுப்பிரமணியர் எழுதிய குளத்தங்கரை அரசமரம்.
· பாரதியாரின் “ஆறில்ஒரு பங்கு“
தான் முதல் சிறுகதை என்பாரும் உண்டு.
· “பார்க்கப் போனால் நான் மரம்தான்” இது முதல்சிறுகதையின் முதல்வரி.
· “சிறுகதையின் பொற்காலம்“ எனுமளவுக்கு வந்த சிற்றிதழ் மணிக்கொடி.
· புகழ்பெற்ற “பொன்னகரம்“
சிறுகதையை எழுதியவர் புதுமைப்பித்தன்.
· ‘கடவுளும் கந்தசாமிப்
பிள்ளையும்’ சிறுகதை – புதுமைப்பித்தன் எழுதியது.
· சிறுகதைச் சித்தர் எனப் பெரும்புகழ்பெற்றவர் ஜெயகாந்தன்.
· சிறுகதைக்காக அகாதெமி விருதுபெற்ற ஒரே பெண் எழுத்தாளர் – அம்பை
· ‘செவ்வாழை’– அண்ணாதுரை
· ஆற்றாமை – கு.ப.ராஜகோபாலன்
· பாயசம் – தி.ஜானகிராமன்
· அன்பளிப்பு – கு. அழகிரிசாமி
· கதவு. கி.ராஜநாராயணன்
· துண்டு – கந்தர்வன்
· அக்னிபிரவேசம் –ஜெயகாந்தன்
· தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி
· அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
· நகரம் –சுஜாதா
· இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்
அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்
· வனம்மாள் -அழகிய பெரியவன்
· வாளின் தனிமை – தமிழ்செல்வன்
· இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
· திருச்செங்கோடு – பெருமாள் முருகன்
· கொலை
– மேலாண்மை பொன்னுச்சாமி
மரபுக் கவிதைகள்
· உள்ளத்து உள்ளது கவிதை என்றவர் - கவிமணி தேசிக விநாயகனார்
· தமிழுக்கும் அமுதென்று பேர் என்றவர் – பாரதிதாசன்
· தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று பாடியவர் – நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
· கனிச்சாறு, நூறாசிரியம்,
மகபுகு வஞ்சி – பெருஞ்சித்திரனார்
· காசி ஆனந்தன் கவிதைகள் – காசி ஆனந்தன்
· பழமலய் கவிதைகள் – சண்முக சுந்தரம் (தொ.ஆ.)
· எனது பழைய பனை ஓலைகள் - வைரமுத்து
புதுக்கவிதைகள்
· புதுக்கவிதைக்கென்றே சி.சு.செல்லப்பா நடத்திய இதழ் எழுத்து
· வெளிச்சங்கள் – (வானம்பாடி இதழ்க்
கவிதைகள்) வானம்பாடிகள்
· புதுக்குரல்கள் – (எழுத்து இதழ்க்
கவிதைகள்) – சி.சு.செல்லப்பா
· வணக்கம் வள்ளுவ – ஈரோடு தமிழன்பன்
(சாகித்திய அகாதெமி விருது)
· வெ.நா.திருமூர்த்தி கவிதைகள் – சங்கை வேலவன்(தொ.ஆ,)
· தமிழ்ஒளியின் சிறந்த கவிதைகள் – சாகித்திய அகாதெமி.
· முப்பட்டை நகரம் – இந்திரன்.
· முலைகள் - குட்டிரேவதி
பிரபல கவிஞர்களின் மொத்தக் கவிதைத் தொகுப்புகள், வெளிவந்த ஆண்டு
· வைரமுத்து கவிதைகள் – வைரமுத்து (2000)
· தணிகைச் செல்வன் கவிதைகள் – தணிகைச் செல்வன்
(2001)
· கந்தர்வன் கவிதைகள் – கந்தர்வன்(2002)
· மு.மேத்தா கவிதைகள் – மு.மேத்தா(2007)
· பாவேந்தம் – பாரதிதாசன் (2009)
· சிற்பி கவிதைகள் (2தொகுப்புகள்) – சிற்பி பாலசுப்பிரமணியன்(2011)
· கவிக்கோ கவிதைகள் (2தொகுப்புகள்) – அப்துல் ரகுமான்(2013)
· மீரா கவிதைகள் – மீரா (2015)
· ஒவ்வொரு புல்லையும் – இன்குலாப் (2017)
· ஞானக்கூத்தன் கவிதைகள் – ஞானக்கூத்தன் (2018)
· நா.முத்துக்குமார் கவிதைகள் – நா.முத்துக்குமார்(2020)
· மீனாட்சி கவிதைகள் – மீனாட்சி
· யுகபாரதி கவிதைகள் – யுகபாரதி.
· ஜெயபாஸ்கரன் கவிதைகள் – ஜெயபாஸ்கரன் (2023)
· நவகவி ஆயிரம் – நவகவி
l தனிப்பாடல் திரட்டு - ஈரோடு தமிழன்பன்
l தங்கம் மூர்த்தி கவிதைகள் - தங்கம் மூர்த்தி
திறனாய்வு நூல்கள்
· அசலும் நகலும் – அ.முத்துசிவன்
· இலக்கியக் கலை – அ.சா.ஞானசம்பந்தன்
· இலக்கியக் கலை – மு.வரதராசன்
· தமிழ்க் காதல் – வ.சுப.மாணிக்கம்
· சமுதாய நாவல்கள்
– தா.வே.வீராசாமி
· தமிழில் சிறுகதையின்
தோற்றமும் வளர்ச்சியும் –கா.சிவத்தம்பி
· புதுக்கவிதை முற்போக்கும்
பிற்போக்கும் – நா.வானமாமலை
· புதுக்கவிதையின் தோற்றமும்
வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்
· இலக்கியத் திறனாய்வு
– சு.பாலச்சந்திரன்
· புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை – பாலா –இரா.பாலச்சந்திரன்
· கம்பன் தமிழும் கணினித் தமிழும் – நா.முத்துநிலவன்
· இலக்கிய மானிடவியல்
– பக்தவத்சல பாரதி
· இருபதாம் நூற்றாண்டு
வரலாறும் கவிதையும் – வீரபாண்டியன்.
· தமிழ்க் கவிதைகளில்
சமகால வரலாறு – வா.மு.சே.ஆண்டவர்.
· தமிழின் கவிதையியல் – கா.சிவத்தம்பி
· இரு மகாகவிகள் - க.கைலாசபதி
· பொற்காலங்கள் – ஆ.சிவசுப்பிரமணியன்
· பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ.வேல்சாமி
· தமிழ்க் கவிதை – ஞானி.
· மேலை நோக்கில் தமிழ்க் கவிதை –ப.மருதநாயகம்
·
சொல்லில் நனையும் காலம் – எஸ்.வி.ராஜதுரை
------------------------------------------------------------------------------------------
“தமிழும் தமிழ் சார்ந்தும்”
(தமிழ் இலக்கியமும், வரலாறும்)
சிறுகுறிப்புகள் – தொகுப்பு - நா.முத்துநிலவன்
(சிறு தலைப்பு- குறிப்புகளை இணைத்தால் கட்டுரையாகும்)
தொல்பழங்காலம்
·
தொல் பழங்காலத்தில் இந்திய நாடு முழுவதும் பேசப்பட்ட மொழி பழந் திராவிட மொழி (Protop-Dravidian) என்று கூறுவர்.
·
வடகிழக்குக் கணவாய் வழியாக துரானியரும்,
வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியரும் வந்து, வடஇந்திய மக்களோடு கலந்து வாழ்ந்து வந்தனர்.
·
வடமேற்கு இந்தியாவின் பிராகூய் மொழி திராவிடமொழிக் குடும்பமாகும்.
·
தமிழ், கன்னடம்,
தெலுங்கு, மலையாள மொழிகளுக்குள் இன்றும் ஒற்றுமைக் கூறுகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 5,000 சொற்கள் பொதுவாக உள்ளன
·
பெருங்கற்கால மக்களின் வேளாண்மை சார்ந்த தொழிற் கருவிகள் அனைத்திலும் இரும்பு
உலோகத்தையே அதிகம் பயன்படுத்தினர்.
·
இரும்பைப் பயன்படுத்திய பெருங்கற்காலம் இரும்புக் காலம் எனப்படும்.
·
தொல்பழங்காலத் தமிழர் ஈமச்சடங்கின்போது பயன்படுத்திய மட் கலங்களில்
1.கருப்பு, 2.சிவப்பு,
3.கருப்பு-சிவப்பு,
4.செம்பழுப்புப் பூச்சு என நான்கு வகை மட்கலங்கள் காணப்படுகின்றன.
·
“சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர், தாழ்வயின் அடைப்போர், தாழியிற் கவிப்போர்” என ஈமச் சின்னங்களை மணிமேகலை பாடுகிறது.
·
விந்திய மலைக்குத் தெற்கே பெருங்கல் சின்னங்கள் அதிகம் கிடைத்துள்ன.
·
தமிழ்நாட்டுப் பெருங்கற்கால மட்கலங்களின் குறியீடுகள், சிந்துவெளிக் குறிகளுடன் ஒத்துள்ளன,
பிராமி எழுத்துகளில் சிலவற்றை ஒத்துள்ளன.
·
பெரிய கல்லால் ஆன ஈம (இறுதிச்சடங்கு)
சின்னங்களைப் பயன்படுத்திய மக்கள் வாழ்ந்த காலம் பெருங்கற் காலம் என்று
வரையறுக்கப் படுகிறது.
· இறந்தவர்க்கு நடப்படும் கல், இலக்கியங்களில் நடுகல் எனப்படுகிறது.
தொல்லியல் சான்றுகள்
·
நம்பத்தக்க தொல்லியல் சான்றுகளை பட்டயங்கள் தருகின்றன.
·
திருப்பரங்குன்றம் சமணப் படுகையில் அந்துவன் எனும் பெயர் உள்ளது.
·
குடுமியான் மலையில் இசைக் கல்வெட்டு, பட்டயங்கள் கிடைத்துள்ளன.
·
மலையமான் - பாரிமகளிர் மணம் திருக்கோவலூர் பட்டயத்தில் உள்ளது.
· பழந்தமிழகத்தின் வணிகச் சான்றாக ரோம, சீன காசுகள் கிடைத்துள்ளன.
· தமிழக இரும்புக்காலச் சான்று அரிக்கமேடு, ஆதிச்ச நல்லூரில் கிடைத்தன.
·
கீழடி அகழாய்வு காட்டும் முற்கால எல்லை பொ.யு.மு. (கி.மு.) 600 ஆகும்
·
பழங்கால எழுத்துகளை அறிய பானைக் கீறல்கள் உதவுகின்றன.
·
கீழடி கழிவுநீர்க் கால்வாய்ககள் சிந்துவெளியிலும் காணப்படுகின்றன.
·
வெளிநாட்டவர் குறிப்பில் மெகஸ்தனிசின் இண்டிகா முக்கியமானது
·
செங்குட்டுவன் காலத்தை அறிய இலங்கை நூல் மகாவம்சம் உதவுகிறது
·
கீழடி வைகை நாகரிகம் 2600 ஆண்டு பழமை வாய்ந்தது.
·
அசோகரின் 2, 13ஆம் பாறைக் கல்வெட்டுகள் சோழ பாண்டியர், சத்ய புத்ர, கேரள புத்ர அரசுகள் பற்றிக் கூறுகின்றன.
·
கீழடியில் தமிழ்பிராமி – கீறல் - உள்ள மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன
·
கீழடி மட்பாண்டங்களில் குவிரன் ஆதன் பெயர்கள் அறியப்பட்டுள்ளன.
·
கீழடி மட்பாண்டங்களின் வண்ணங்கள் கருப்பு, சிவப்பு, கருப்புசிவப்பு.
·
கீழடி கிமு 6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு இருந்ததைக் காட்டுகிறது.
·
மனித குலத்தின் மிகத் தொன்மையான கலைவடிவம் சுடுமண் உருவம்.
·
கீழடியில் வழிபாடு தொடர்பான தொல்பொருள் எதுவும் கிடைக்கவில்லை.
·
கீழடி ஆய்வுகள் சங்க காலத்தை கி.மு.600வரை கொண்டு செல்கின்றன இது, சங்க காலம் கிமு.300-கி.பி.300 என்பதை மறு ஆய்வுக்குட்படுத்துகிறது.
· கற்றறிந்த புலவர்கள் மட்டுமின்றிச் சாதாரண மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்ததை கீழடி மண்பானைக் கீறல்கள் காட்டி நிற்கின்றன.
·
தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், பழந்தமிழ் இலக்கியங்கள், மற்றும் வெளிநாட்டார் குறிப்புகளில் பழந்தமிழர் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
·
இண்டிகா, சுட்ரோபோ, பிளனி, தாளமி, மெகஸ்தனிஸ், பெரிப்ளுஸ் முதலான வெளிநாட்டவரின் நூல்கள் பழந்தமிழகம் பற்றிய செய்திகளைத் தருகின்றன.
·
ஆதிச்ச நல்லூர், உத்தரமேரூர், புள்ளிமான் கோம்பை, கீழடி, பொற்பனைக் கோட்டை முதலிய
தமிழக ஊர்களில் தொல்லியல் சான்றுகள் கிடைத்தன.
------------------------------------------------------------
தமிழின் தொன்மை
·
தமிழ், சமஸ்கிருதம்,
கிரேக்கம், லத்தீன்,
ஈபுரு, பாரசீகம் சீனம் ஆகிய மொழிகளை,
உலகின் மிகப் பழைய செம்மொழிகள் என்கிறார்கள்.
·
குறைந்த மாறுதலுடன் 2000ஆண்டுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருப்பது தமிழ்.
·
இந்தியாவில் கிடைத்துள்ள லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. இவற்றில், 95 விழுக்காடு தமிழி எழுத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
·
தமிழ்நாடு மட்டுமின்றி இன்றைய கேரளம்,
ஆந்திரம், கர்நாடக மாநிலங்களின் நிலப் பகுதிகளில்
–ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழ் பேசும் மக்கள் இருந்துள்ளனர்.
(கீழடி ஆய்வு முடிவு 2600 ஆண்டுகள் என்கிறது)
·
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை, தமிழ்கூறும் நல்லுலகு” என்பது தொல்காப்பியம்
·
காலப்போக்கில் தமிழுடன் வடமொழி கலந்ததால், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய திருந்திய மொழிகள் கிளைத்து வளர்ந்து நிலைத்தன.
·
அயர்லாந்தில் பிறந்து, தமிழ்நாட்டுக்கு வந்து வாழ்ந்து மறைந்த பன்மொழி அறிஞர் கால்டுவெல்(1814-1891),
தமது “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) எனும் ஆய்வுநூலில் கூறுகிறார்.
·
திராவிடம் : ஆங்கிலேயர்
- மதுரையை மெஜூரா என்றும் குமரியை கொமரீன் என்றும் உச்சரித்தது போல, தமிழைத் தமிழ் என உச்சரிக்கத் தெரியாமல் திரமிளம்- திரமிடம் - திராவிடம் என்றதே “திராவிட மொழி“ எனும் கருத்து உருவாகி, திராவிட மொழிக் குடும்பம் பற்றிய ஆய்வில் செலுத்தியது.
·
திராவிட மொழிகளில் சமஸ்கிருதச் சொற்களைக் கழித்தால் தமிழ்ச் சொற்களே அதிகம் இருக்கும். ஆனால், தற்போதும்,
தமிழில் கலந்துள்ள சமஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்களைக் கழித்தாலும், தமிழில் தமிழ்ச் சொற்களே அதிகமிருக்கும். இதுவே தமிழின் தொன்மை- தனித்தன்மையின் அடையாளம்.
·
இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியம்,
‘என்ப’ ‘என்மனார்’ என்று தனக்கு முற்பட்ட இலக்கண நூலார் சொன்னதாகச் சொல்வதால்,
தொல்காப்பியத்திற்கும் முன்பே தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருந்திப்பதை உணர முடிகிறது.
·
“கீழடி” ஆய்வில் கிடைத்த பானை ஓடுகளில் “ஆதன்“, “குவிரன்“ எனும்
தமிழ்ப் பெயர்கள் கிடைத்திருப்பதும், அங்குக் கிடைத்த தொல்லியல் பொருள்களின் காலம் இன்றிலிருந்து சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தியது என்பதும் தமிழ் மொழியின் பழமைக்கு, மிக அண்மையில் கிடைத்த முக்கியமான சான்றாகும்.
·
"சங்க இலக்கியமான கலித்தொகையில் சொல்லப்படுவது போன்ற தாயக் கட்டைகள் இங்கே கிடைத்திருக்கின்றன. சங்க காலத்தையும், கீழடியையும் இதை வைத்து இணைத்துப் பார்க்க முடியும்" என்கிறார் தொல்லியல் தமிழறிஞர் ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., (பிபிசி தமிழ் 20-9-2019)
·
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஆட்சிமொழியாக இருக்கும் தமிழ், இந்திய அரசின் அரசேற்புப் பெற்ற 22 மொழிகளில் ஒன்றாக உள்ளது.
·
இந்தியா தவிர சிங்கப்பூர்,
மலேசியா, இலங்கை நாடுகளில் ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் தமிழ் மொழி உள்ளது.
·
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்சு,
ஜெர்மனி, நார்வே,
சீனா, தென்னாப்பிரிக்கா,
அரபு நாடுகள், பிஜி, கொரியா,
ஜப்பான், ரீயூனியன்,
மொரீசியஸ், ஜாம்பியாத் தமிழர்களின் தாய் மொழியாக தமிழ் உள்ளது.
·
திசம்பர்-2, 2017-இந்து-தமிழ் நாளிதழ் செய்தியின்படி, உலகில் உள்ள 155 நாடுகளில் ஏறத்தாழ 10 கோடித் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
·
விக்கிப்பீடியா இணையப் பயன்பாட்டில், இந்தியாவில் முதல் இடத்தில் தமிழ் மொழி உள்ளதாக 2017ஆம் ஆண்டு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பிராமி-தமிழி, வட்டெழுத்து, கிரந்த எழுத்துகள்
·
உலகில் பேசப்படும் ஏறத்தாழ ஏழாயிரம் மொழிகளில் சில நூறு மொழிகளுக்கே எழுத்து வடிவம் உள்ளது. இதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள்
-மலாய்மொழி போல- ஆங்கில எழுத்திலேயே எழுதப்படுகின்றன. தமிழ் வரிவடிவம் பழமையனது.
·
தமிழ் எழுத்துகளின் ஒலி வடிவத்தில் தொல்காப்பியர் காலத்திலிருந்து பெரிய மாற்றமில்லா விட்டாலும் எழுத்தின் வரி வடிவம் மாறியுள்ளது. கல்வெட்டுகள், குகைகள், கற்படுகைகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரைகள், பானையோடுகள், பனையோலைகளில் இந்த வடிவ மாற்றங்கள் தெரிகின்றன.
·
தமிழை எழுதப் பயன்பட்ட பண்டை எழுத்துமுறை – தமிழ் பிராமி (எ) தமிழி.
·
வட்டெழுத்து என்பது தமிழிக்கு முந்திய பழைய தமிழ் எழுத்து வடிவமே.
·
இன்றைய தமிழ் எழுத்து வடிவம் பல்லவர் காலத்தில் உருவானது என்பர்.
·
தமிழ் பிராமி பற்றி விரிவான ஆய்வு செய்தவர்
– ஐராவதம் மகாதேவன்
·
பிராமி என்பது வடமொழி எழுத்து வகை. தமிழ்-பிராமி என்பது பண்டைக்காலத் தமிழ் எழுத்து முறையாகும். இதனைத் தற்போது தமிழி என்றே சொல்கிறார்கள்.
·
தமிழி எழுத்துகள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலம், இலங்கை, தாய்லாந்து, எகிப்து நாடுகளிலும் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில், கொடுமணல், மாங்குளம், தேனூர், ஆதிச்சநல்லூர், போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன.
· தற்காலத்து அரேபிய எண் முறையும் தமிழ் எழுத்திலிருந்தே தோன்றியிருக்கக் கூடும், சுழியம் (ஜீரோ, சைபர்) எண்ணின் தோற்றமும் தமிழில் இருந்தே வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
·
தமிழி எழுத்துகள் கோடுகளைக் கொண்டிருந்ததாலும், அவற்றை பனை ஓலைகளில் எழுதும்போது அவை கிழிந்துவிடக் கூடியவையாக இருந்ததாலும், வட்டெழுத்து எனும் எழுத்து முறையும் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.
·
சேர, பாண்டிய நாடுகளில் வட்டெழுத்துமுறை 6ஆம் நூற்றாண்டுவரை இருந்துள்ளது பின்னர் பல்லவர் கைஓங்க, வட்டெழுத்து வழக்கிழந்து புதிய எழுத்து முறைகள் உருவானதை, இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவர் காலத்து -காஞ்சி கைலாசநாதர் கோவில்- கல்வெட்டுகள் காட்டுகின்றன.
· தற்கால எழுத்து முறை, பல்லவர் காலத்தில் தோன்றியதாகத் தெரிகிறது. ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ போலும் கிரந்த எழுத்துகள் அக்கால சமஸ்கிருத எழுத்துகளைத் தமிழில் எழுத உருவாக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது. தமிழ், சமஸ்கிருத மொழிகளில் இவை இல்லாததை நோக்க, இது சிந்திக்கத் தக்கதே.
தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது
எப்போது?
தமிழக முதல்வராக மு.கருணாநிதியும், இந்தியப் பிரதமராக பி.வி.நரசிம்ம ராவும் இருந்த போது, இந்திய நாடாளு மன்றத்தில் 06-6-2004 அன்று, அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களால், இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்பட்டது.
தமிழ்ப்பண்பாடு
· “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
--சங்க இலக்கியத்திலுள்ள புறநானூறு
தொகுப்பில் இடம்பெற்றுள்ள
பாடல் எண் -192, பாடலை எழுதியவர்
கணியன் பூங்குன்றனார் .
· மக்களிடையே ஏற்றத்தாழ்வை
மறுத்த காதலைப் பாடும் புகழ்பெற்ற பாடல் “யாயும் ஞாயும் யாராகியரோ” குறுந்தொகை-40 –
எழுதியவர் பெயர் அறிய இயலாமையின், செம்புலப் பெயல்நீரார் என்றே பெயர் பெற்றார்)
·
ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு என அறியப் படும் பழந்தமிழர் பண்பாட்டு அடையாளமாக
-“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்” எனும் வரிகள் இடம்பெற்ற சங்க இலக்கிய நூல் – கலித்தொகை.
· கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி! – எனும் புகழ்பெற்ற
நேரிசை வெண்பாவின் முதல் இரண்டு வரிகள் யாவை? இப்பாடல் இடம்பெற்ற நூல் விவரம்-
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
இடம்பெற்ற நூல்
-புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 - குடிநிலை எனும் பகுதி.
· சங்க இலக்கியத்தில்
கற்போடு தொடர்புடையதாக வரும் பூ –முல்லை
· நாளங்காடி என்பது – பகல் கடை, அல்லங்காடி என்பது இரவு கடை
· வ.உ.சி.யால்
கண்டறியப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல் - இன்னிலை
· ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” எனும் புகழ்பெற்ற வரிகள் இடம் பெற்ற நூல், எழுதியவர் விவரம் - பாடல் எண்-
2066, நூல்- திருமந்திரம், திருமூலர்)
· “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” நூலின் இந்த இறுதிவரிகளைக் கொண்ட இலக்கண நூல்
–நன்னூல்.
· நாடக நூல்
ஒன்றில், தமிழிலிருந்தே பிற திராவிடமொழிகள் கிளைத்தன எனும் கருத்தமைந்த வரிகள் சீரிளமைத் திறம் வியந்து வாழ்த்துதுமே .. வரிகள் இடம்பெற்ற நூல் – “மனோன்மணியம்” – எழுதியவர் பெ.சுந்தரனார்.
புகழ்பெற்ற வரிகள் – எழுதியவர்
· ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே - தொல்காப்பியர்
· யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறநானூறு-192 -கணியன் பூங்குன்றனார்
· செய்தி கொன்றார்க்கு
உய்தி இன்று – புறநானூறு-34 –ஆலத்தூர் கிழார்.
· அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறநா- பாண்டியன் நெடுஞ்செழியன்
· உண்டால் அம்ம இவ்வுலகம் – புறம்-182 –கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.
· மறுமை நோக்கின்றே
அன்றே, பிறர் வறுமை நோக்கின்று – புறம்-141-பரணர்.
· அறவிலை வாணிகன் ஆய்அலன் – புறம்-134, ஏணிச்சேரி முடமோசியார்.
· இன்னாது அம்ம இவ்வுலகம் – புறம்-194- பக்குடுக்கை நன்கணியார்.
· “எவ்வழி நல்லவர்
ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” – ஔவையார்.
· “உண்பது நாழி
உடுப்பவை இரண்டே“ – புறநானூறு189 – நக்கீரனார்.
· வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன் – புறம்-139, மருதன் இளநாகன்.
· தேரா மன்னா – சிலப்பதிகாரம் –வழக்குரை காதையில்- கண்ணகி
· மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – திருஞான சம்பந்தர்.
· பித்தா பிறைசூடி
பெருமானே அருளாளா –தேவாரம் -சுந்தரர்
· பால்நினைந்தூட்டும் தாயினும்
சாலப் பரிந்து – மாணிக்க வாசகர்
· சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது இனியே – மாணிக்கவாசகர்.
· யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் – திருமந்திரம் - திருமூலர்
· மதமான பேய் பிடியாது இருத்தல் வேண்டும் – இராமலிங்க வள்ளலார்.
பௌத்தம் வளர்த்த தமிழ்
·
பௌத்த மதம் வட இந்தியாவில் தோன்றிய காலம் கிமு 5ஆம் நூற்றாண்டு
·
நற்றிணையில் 72ஆம் பாடலை எழுதிய பௌத்தர் இளம்போதியார்
·
இலக்கண நூல்களில் புத்த மித்திரர் எழுதியது வீர சோழியம்.
·
மகத அரசன் பிம்பிசாரன் பற்றிய நூல் நீலகேசி
·
பௌத்தர்களின் ஆதார மொழி பாலி
சமணம் வளர்த்த தமிழ்
· சமணர் என்னும் சொல்லிற்குத் துறவிகள் என்பது பொருள்
· சமண மதம் களப்பிரர் ஆட்சியில் தமிழகத்தில் வளர்ச்சியடைந்தது.
· சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகியன சமணக்காப்பியங்கள்
· ஐஞ்சிறு காப்பியங்களும், பெருங்கதையும் சமணம் சார்ந்தவையே.
· கீழ்க்கணக்கு சமணநூல்கள் - பழமொழி, நாலடி, ஏலாதி, சிறுபஞ்சமூலம்.
· நரிவிருத்தமும், அறநெறிச் சாரமும் சமண முனிவர் எழுதிய நூல்கள்
· தொல்காப்பியரும் திருவள்ளுவரும்
சமணரே
என்றொரு கருத்துண்டு.
· நன்னூல், நேமிநாதம்,
நம்பியகப்பொருள்
– சமணர் இலக்கணநூல்கள்.
இஸ்லாம் வளர்த்த தமிழ்
· பீர்முகமது அப்பா எழுதிய இஸ்லாமிய ஞானப்பாடல் நூல் ஞானப்புகழ்ச்சி
· நபிகள் நாயகத்தின்
வரலாறு கூறும் தமிழ்க்காப்பியம் சீறாப்புராணம்.
· சீறாப்புராணம் 3 காண்டம், 92படலம், 5027 விருத்தங்களைக் கொண்டது.
· சீறாப்புராணம் எனும் நபி காப்பியத்தை எழுதியவர் உமறுப்புலவர்.
· வண்ணக் களஞ்சியப்
புலவர் எழுதிய நபி காப்பியம் ராஜநாயகம்.
· நபிகளை விவசாயியாக
எழுதியவர், குணங்குடி மஸ்தான் சாகிபு.
· இஸ்லாம் எங்கள்
வழி இன்பத் தமிழெங்கள் மொழி – காயிதே மில்லத்
· ”சதாவதானி”புகழ் பெற்ற
இஸ்லாமியப் புலவர் செய்கு தம்பிப் பாவலர்
கிறித்தவம் வளர்த்த தமிழ்
· தமிழில் உரைநடையை
அறிமுகப்படுத்தியவர் கிறித்துவர்களே.
· தமிழில் செய்தித்
தாள்களை முதலில் வெளியிட்டவர் கிறித்துவர்களே.
· வீரமாமுனிவரின் இயற்பெயர்
கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி.
· வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம் தேம்பாவணி.
· தமிழில் ஏ ஓ எழுத்து களைச் சீர்திருத்தம் செய்தவர் வீரமாமுனிவர்.
· ஐந்திலக்கண நூலான தொன்னூல் விளக்கம் எழுதியவர் வீரமாமுனிவர்.
· வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதைகள் புகழ்பெற்ற உரைநடை.
· வீரமாமுனிவர் எழுதிய சதுர்அகராதி
தமிழின் முதல் அகராதியாகும்.
· வீரமாமுனிவரின் தமிழாசிரியர்
கிறித்துவானவர் – சுப்பிரதீபக் கவிராயர்.
· தமிழில் அனைவருக்கும்
அச்சுநூல் கிடைக்கச் செய்தவர் சீகன் பால்கு.
· திருக்குறளை முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யூ.போப்
· திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணம் தந்தவர் ராபர்ட் கால்டுவெல்.
தற்காலத் தமிழ்
பொதுவான இலக்கியச்
செய்திகள், இதழ்கள்
·
இந்தியாவிலேயே, முதலில் அச்சான தமிழ்நூல். தம்பிரான் வணக்கம் (1578)
· சென்னை மாகாணம் வேப்பேரியில் முதல் அச்சகம் 1786இல் தோன்றியது.
· கூடியவரை பேசுவது போலவே எழுதுவதே உத்தமம் என்றவர் பாரதியார்.
· தனித்தமிழில் எழுதியவர்கள்
பரிதிமாற்கலைஞர், மறைமலைஅடிகள்.
· தொழிற்சங்க முன்னோடி, தமிழறிஞர் திரு.வி.கலியாண சுந்தரனார்.
·
தரங்கம்பாடியில் ஒரு அச்சகத்தை நிறுவியவர் சீகன்பால்கு
·
ஐரோப்பிய
மொழிகளை அடுத்து அச்சேறிய இந்திய மொழி தமிழ்
·
தனித்தமிழ்
இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் ஆவார்.
·
தமிழிசைக்கு
முக்கியத்துவம் கொடுத்தவர் ஆபிரகாம் பண்டிதர்
·
சூரிய
நாராயண சாஸ்திரியார் பரிதிமாற் கலைஞர் ஆனார்.
·
சுவாமி
வேதாசலனார் மறைமலை அடிகள் ஆனார்.
·
திருக்குறள்
முதன்முதலாக அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
·
திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர் ராபர்ட் கால்டுவெல்
· ஆனந்தரங்கனார் எழுதிய நாட்குறிப்பு
புதுவை வரலாற்றுக் குறிப்பாகும்
· 1926-ஈவெராவின் சுயமரியாதை இயக்கம், 1948-அண்ணாவின் தி.மு.க. போலும் அரசியல் இயக்கங்கள்
தமிழ் உரைநடையைப் பாதித்தன.
· ரகுநாதனின் சாந்தி, விஜயபாஸ்கரனின் சரஸ்வதி
முன்னோடி இதழ்கள்
· தாமரை, செம்மலர் தமிழின் இடதுசாரி எழுத்துக்கு முன்னோடி இதழ்கள்.
· மணிக்கொடி காலம் எனும அளவுக்குப் புகழ்பெற்ற இதழ் மணிக்கொடி.
· புதுச் சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், எழுதியவர்
– வாழ்வினில் செம்மையைச் செய்தவள் நீயே – பாரதிதாசன்.
இசையமுது,
· ‘9-16 நூற்றாண்டுத் தமிழ்’ எனும்
8தொகுப்பு எழுதியவர் – மு.அருணாசலம்.
· ‘20ஆம் நூற்றாண்டின்
அப்பர்’ எனப்படுபவர் – குன்றக்குடி அடிகளார்.
· கம்பன் கழகம் வைத்து, தமிழ் வளர்த்த நீதியரசர் - மு.மு.இஸ்மாயில்
· சுந்தர ராமசாமி நடத்திய இலக்கிய அமைப்பு – காகங்கள்.
· ஜெயகாந்தனின் முன்னோடி
எனத் தக்க எழுத்தாளர் – விந்தன்.
· ‘தொல்காப்பியப் பூங்கா’ நூலாசிரியர் – கலைஞர் மு.கருணாநிதி
· காலமான பிறகும் அதிகம் விற்கும் தமிழின் நவீன எழுத்தாளர் – சுஜாதா.
· அறிவியல் தமிழ்நூல்
அதிகம் எழுதிய வழக்குரைஞர் – பெ.நா.அப்புஸ்வாமி
· 90மொழிபெயர்ப்புகளைப் படைத்த பன்மொழிப்புலவர் -கா.அப்பாத்துரை
· மொழிபெயர்ப்பு நூல்விற்பனையில் சாதனை படைத்த ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலை இந்தியில் எழுதியவர் ராகுல சாங்கிருத்தியாயன்.
தமிழ் இலக்கிய விருதுகள், பெற்ற எழுத்தாளர்கள்
· தமிழில் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் இருவர் அகிலன், ஜெயகாந்தன்
· சாகித்திய அகாதெமி விருதுபெற்ற பாரதிதாசன் நூல் – பிசிராந்தையார்.
· அகாதெமி விருதுபெற்ற
வைரமுத்து நூல் – கள்ளிக் காட்டு இதிகாசம்
· அகாதெமி விருதுபெற்ற
அப்துல் ரகுமானின் கவிதை நூல் – ஆலாபனை.
· ‘காவல்கோட்டம்’ நாவல், அகாதெமி விருதுபெற்றவர் – சு.வெங்கடேசன்.
· இருமுறை அகாதெமி விருதுபெற்ற கவிஞர் – சிற்பி பாலசுப்பிரமணியன்
· ”வணக்கம் வள்ளுவ”அகாதெமி விருதுபெற்ற கவிஞர் – ஈரோடு தமிழன்பன்
· நாவலுக்காக அகாதெமி விருதுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி – திலகவதி
· நாவலுக்காக அகாதெமி விருதுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி – மு.ராஜேந்திரன்.
நாவல்
· ‘பிரதாபமுதலியார் சரித்திரம்“ முதல் நாவலாசிரியர்
முன்சீப் வேதநாயகர்
· தமிழின் முதல் பெண் நாவலாசிரியர் வை.மு.கோதைநாயகி அம்மாள்.
· பள்ளிக்கூடமே போகாமல் 115நாவல் எழுதியவர்
வை.மு.கோ.அம்மாள்
· ரங்கோன் ராதா, பார்வதி பிஏ. நாவல்களின் ஆசிரியர் – அண்ணாதுரை.
· லட்சம் பிரதிக்குமேல்
விற்ற ‘ஆயிஷா’ குறுநாவல் ஆசிரியர் – நடராசன்.
சிறுகதைகள்
· தமிழின் முதல் சிறுகதை, ஆசிரியர்
– குளத்தங்கரை அரசமரம், வ.வே.சு.
· “செவ்வாழை“ சிறுகதை ஆசிரியர்
– அண்ணாதுரை
· “பொன்னகரம்“ சிறுகதை ஆசிரியர்
– புதுமைப் பித்தன்
· புதுமைப்பித்தன், சிறுகதையின் மூலவர் என்று மௌனி யைச் சொன்னார்
· “சினிமாவுக்குப் போன சித்தாளு” எழுதியவர் – ஜெயகாந்தன்
· “அரும்பு“ சிறுகதை ஆசிரியர்
– மேலாண்மை பொன்னுச்சாமி
· கதவு சிறுகதையால் புகழ்பெற்ற கரிசல் எழுத்தாளர் – கி.ராஜநாராயணன்
· எழுதிய 212சிறு கதைகள் 3தொகுப்பாக வந்துள்ள ஆசிரியர் –பிரபஞ்சன்
· தலித்திய சிறுகதையாகப்
புகழ்பெற்ற கந்தர்வனின் சிறுகதை- துண்டு.
· தலைகீழ் விகிதங்கள்
சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர் – நாஞ்சில்நாடன்.
· “தமிழ்ச் சிறுகதையின்
தடங்கள்” கட்டுரைத் தொகுப்பு – ச.தமிழ்ச்செல்வன்.
மரபுக்கவிதை
· பாஞ்சாலி சபதம் – காப்பிய ஆசிரியர்
– மகாகவி பாரதி
· புரட்சிக்கவி – காப்பிய ஆசிரியர்
– பாரதி தாசன்
· நூறாசிரியம், மகபுகு வஞ்சி நூல்களின் ஆசிரியர் –பெருஞ்சித்திரனார்
· கவிதை என் கைவாள் எனும் நூலின் ஆசிரியர் – கே.சி.எஸ்.அருணாசலம்.
· “மாதவி காவியம்”
காப்பிய நூலாசிரியர் – தமிழ்ஒளி
· “பூங்கொடி” காப்பிய நூலாசிரியர்
– முடியரசன்.
· ராஜராஜன் விருது பெற்ற சுத்தானந்த பாரதி நூல் – பாரதசக்தி காவியம்
புதுக்கவிதை, வரிகளை எழுதியவர்
· “கறுப்பு மலர்கள்“
–புகழ்பெற்ற புதுக்கவிதை நூலாசிரியர் – நா.காமராசன்.
· பாரதியின் வரலாற்றைப்
புதுக்கவிதையில் பாடிய நூல் – கவிராஜன் கதை.
· “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்“
ஆசிரியர் - வல்லிக்கண்ணன்
· ஈழத்து மகாகவி எனப்படுபவர் – உருத்திர மூர்த்தி
· “ஏ ராம்”
புதுக் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் – புதிய மாதவி
· “ஊரைக் கூட்டிக்
கொள்ளையடித்தனர்- கல்யாணம்“ – இளம்பிறை
· “மீனாட்சி நீ
எப்படி உலாப்போனாய்?” கவிதை – இரா.மீனாட்சி
· “தைரியமாகச் சொல்வேன் நான் பறச்சி என்று“ – சுகிர்தராணி
· “அடிபட அடிபட
அதிரும் பறை - தலைமுறைக் கோபம்” – மித்ரா
அய்க்கூ
· ஜப்பானிய ஒக்கூ என, அய்க்கூவை அறிமுகம் செய்தவர் – பாரதியார்.
· ஜப்பானிய அய்க்கூவை
தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர் – சி.மணி.
· அய்க்கூ- வாமனக் கவிதை, மின்மினிக் கவிதை என்றவர் – அப்துல்ரகுமான்
· ‘புள்ளிப் பூக்கள்’
எனும் முதல் அய்க்கூ தொகுப்பைத் தந்தவர் –அமுதபாரதி
· அய்க்கூ ஆய்வு முன்னுரையோடு,’சூரியப் பிறைகள்’
தந்தவர் – தமிழன்பன்
· அய்க்கூவில், முனைவர் பட்ட ஆய்வு முதலில் தந்தவர்- நிர்மலா சுரேஷ்
· ‘தமிழ் அய்க்கூ
ஆயிரம்’ அகாதெமி நூலைத் தொகுத்தவர்
– இரா.மோகன்.
சிறார் இலக்கியம், சூழலியல் நூல்கள்
· ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ சிறார் நூலுக்காக “பால புரஸ்கார்
விருது“ பெற்ற எழுத்தாளர் – மு.முருகேஷ்.
· பால சாகித்ய புரஸ்கார் விருது” பெற்ற “ஆதனின் பொம்மை“ உள்ளிட்ட நூற்றுக்கு மேலான நூல்களை எழுதிக் குவித்த எழுத்தாளர் – உதயசங்கர்
· ‘யுவ புரஸ்கார்’
விருது பெற்ற ‘திருக்கார்த்தியல்’
ஆசிரியர் –ராம் தங்கம்.
· “கீழடி வைகை
நாகரிகம் “ எனும் சிறார் கதை நூலாசிரியர் – க.சுபாஷினி
· “கடல்பூதம்” சிறார் நாடக
இயக்குநர் – வேலு.சரவணன்.
· சிறுவர் இலக்கிய படைப்புக்கான “சேஷன் சன்மான்“ விருதாளர் - விழியன்
· 'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' சிறார் நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் – எஸ்.பாலபாரதி
· “விஞ்ஞான விக்கிரமாதித்தன்
கதைகள்“நூலுக்காக “பால சாகித்திய அகாதெமி“
விருது பெற்ற எழுத்தாளர் – ஆயிஷா நடராசன்.
·
வலசை வரும் பறவைகள், சரணாலயங்கள் குறித்த சூழலியத் தமிழ் நூல் “நாராய் நாராய்” நூலின் ஆசிரியர்
– ஆதி.வள்ளியப்பன்.
· சூழலில் நிகழும் பல்வேறு ஆபத்துகளை விளக்கும் “உயிர்ப்புதையல்“ நூலின் ஆசிரியர் – கோவை சதாசிவம்.
· “தமிழ் ஒரு சூழலியல் மொழி“ நூலின் ஆசிரியர் – நக்கீரன்.
· பசுமை நூல் “அதோ அந்தப்
பறவை போல“ எழுதியவர்
– ச.முகமது அலி.
· “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக”ஆசிரியர் – சு.தியடோர் பாஸ்கரன்
திறனாய்வு மற்றும் நூல் –நூலாசிரியர்
·
திறனாய்வில் புகழ்பெற்ற ஈழத்தமிழறிஞர் இருவர் –கைலாசபதி,சிவத்தம்பி
·
“ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்”
நூலாசிரியர்- மகாகவி ருத்திரமூர்த்தி.
·
தமிழ்ச் சமூகவியல் ஆய்வாளர் நா.வானமாமலை நடத்திய
இதழ் – ஆராய்ச்சி.
·
“மெல்லத் தமிழினிச் சாகும்“என்று பேதை சொன்னதாகச் பாடியவர் – பாரதி.
·
அறியப்படாத தமிழகம் எனும் ஆய்வுநூலின் ஆசிரியர் – தொ.பரமசிவன்.
·
“அந்தக் காலத்தில் காப்பி இல்லை” நூலாசிரியர்- ஆ.இரா.வேங்கடாசலபதி.
·
“பொற்காலங்களும் இருண்ட காலங்களும்”நூலாசிரியர்- பொ.வேல்சாமி.
·
“ஒரு பண்பாட்டின் பயணம்” பெருநூலின் ஆசிரியர்- ஆர்.பாலகிருஷ்ணன்.
·
“புதியகோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம்“- க.பஞ்சாங்கம்
·
‘வைக்கம் போராட்டம்” ஆய்வு நூலாசிரியர் – பழ.அதியமான்.
·
வைக்கம் போராட்டம் கலந்து கொண்ட கவிஞர் – நாமக்கல் இராமலிங்கனார்
இசைத்தமிழ், நாடகத் தமிழ்
·
“குழல்வழி நின்றது யாழே“ என்ற முத்தமிழ்க்காப்பியம் – சிலப்பதிகாரம்
·
1998இல் பாரத ரத்னா விருது பெற்ற இசையரசி – எம்.எஸ்.சுப்புலட்சுமி
·
ஏழு இசை மாநாடுகளை நடத்தியவர் – ஆபிரகாம் பண்டிதர்.
·
“யாழ்நூல்“ எனும் இசைத்தமிழ் நூலை எழுதியவர் – விபுலானந்த அடிகள்.
·
‘தமிழிசை வேர்கள்“ எனும் இசைத்தமிழ் வரலாற்று நூலாசிரியர் – மம்மது.
·
“பண்ணாய்வான் பசு“ எனப்பட்ட இசையறிஞர் –குடந்தை ப.சுந்தரேசனார்
·
பண்மரபு, ஆடல்மரபைப் போற்றி வளர்த்த பெண் கலைஞர் –
பாலசரசுவதி.
·
“ஈழத்து நாடக
வரலாறு” நூலாசிரியர் – கலாநிதி.சி.மௌனகுரு.
·
‘தமிழ்நாடகத் தந்தை“ என்று புகழப்படுபவர் – பம்மல் சம்பந்தனார்.
·
‘கிந்தனார்“அங்கத நாடகத்தை நடத்தியவர் – என்.எஸ்.கிருஷ்ணன்.
·
‘ஔவை’ நாடகத்தால் மிகப்புகழ்பெற்ற கலைஞர் –
டி.கே.சண்முகம்
·
தாகூரின் “கண்கள்“ நாடகம் நடத்திப் புகழ்பெற்றவர் – எஸ்.வி.சகஸ்ரநாமம்.
·
பெண்களே பங்கேற்ற நாடகக் குழுவை நடத்தியவர் – குடந்தை பாலாமணி
·
“தண்ணீர் தண்ணீர்“நாடகத்தின் வழி புகழ்பெற்றவர் – கோமல் சுவாமிநாதன்
·
‘ஔவை நவீன நாடகம்’ எழுதியவர், இயக்கியவர் – இன்குலாப், அ.மங்கை.
·
தமிழ் ஒளியின் ‘வீராயி’
காவியத்தை நாடகமாக்கியவர் – பிரளயன்.
·
ஞாநி நடத்திய நவீன தமிழ் நாடகக் குழுவின் பெயர் – பரீக்ஷா.
·
“வானம்பாடிக் கவிஞர்“ புவியரசு நாடகத்திற்கென நடத்திய இதழ் – காற்று.
·
“கூத்துப் பட்டறை” எனும் நாடகப் பட்டறை நடத்தியவர்
– ந.முத்துசாமி.
·
நவீன நாடக முன்னோடி, தஞ்சை நாடகத்துறைத் தலைவர் –
மு.இராமசாமி
·
“மண்ணிசை”யில் பெரும்புகழ்
இணையர் – செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி
·
கலைஞர்களைப் பாராட்டி, தமிழக அரசு தரும் பட்டம் – கலைமாமணி.
--------------------------------------------
அரசுடைமை ஆக்கப்பட்ட தமிழ் நூல்கள் பட்டியல் –
https://tamilvalarchithurai.tn.gov.in/tamil-nadu-nattudaimai-noolgal/
---------------------------------------------------------------------
சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் நூல்கள் பட்டியல் – ஆண்டுவாரியாக- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
-----------------------------------------------------------------------------------
செம்மொழித் தமிழ் நூல்கள் எவை?
o தொல்காப்பியம் -01
o எட்டுத்தொகை நூல்கள் – 08
o பத்துப்பாட்டு நூல்கள் -10
o பதினெண்கீழ்க்கணக்கூ18
o சிலம்பும் மேகலையும் -02
o முத்தொள்ளாயிரம் -01
o இறையனார் அகப்பொருள் -01
o ---------------ஆக மொத்தம் -41
செம்மொழி நூல்கள்
------------------------------------------------------------
சங்க இலக்கிய நூல்கள் எவை? பாட்டும் தொகையும் எனும் நூல்கள் எவை
/ பதினெண் மேற்கணக்கு
நூல்கள் எவை? / சங்க இலக்கிய நூல்கள்
எவை? எனும் இந்த
மூன்று கேள்விகளுக்கும் ஒரே விடைதான்.
சங்க இலக்கியம், ஓரளவு தமிழறிந்த பலருக்கும் தெரிந்த நூல்தான். ஆனால், எழுதிய காலத்திலும், தொகுத்த காலத்திலும் இப்பெயர் இல்லை! இன்றைய தென்னிந்திய நிலப்பகுதியில்
ஏறத்தாழ, பொதுயுக(மு) 300ஆம் ஆண்டு
தொடங்கி, பொ.யு. 300 முடிய வாழ்ந்த 30பெண்கள் உள்ளிட்ட- 473புலவர்கள் எழுதிய, 2381 பாக்களின் இரண்டு தொகுப்பே பாட்டும் தொகையும் என்னும் சங்க இலக்கியம்! இதுவே தமிழின் ஆதி இலக்கியம். இவை இரண்டு பிரிவில் அடங்கும் (1) பத்துப் பாட்டு, (2) எட்டுத்தொகை இவற்றைத்தான் பழந்தமிழ், பாட்டும் தொகையும் என்கிறது. “சங்க இலக்கியம்“ என்பது இந் நூல்களின் தற்காலப் பெயர்.
இவற்றுள், 1889இல் பத்துப்பாட்டை ஒரே நூலாக, உ.வே.சாமிநாதர் அச்சேற்றினார். 2012இல் சாகித்திய
அகாதெமி வெளியீடாக, பத்துப்பாட்டு ஆராய்ச்சி உரையை வெளியிட்டார் மா.இராச மாணிக்கனார். 2022இல் தமிழறிஞர் எழுவர் உரையுடன், “தமிழ்நாடு பாடநூல் கழகமும், தமிழ் வளர்ச்சி இயக்ககமும்” இணைந்து, தனித்தனி நூல்களாக, எளிமையான உரையோடு சிறப்பாக வெளியிட்டுள்ளது.
1920இல் அகநானூறு
தொடங்கி, எட்டுத் தொகை நூல்களைத் தனித் தனியாகப் பலரும் பதிப்பித்துள்ளனர்.
“சங்க இலக்கியம் – பாட்டும் தொகையும்” எனும் பெயரில் முதலில்
(1940) பதிப்பித்தவர் ச.வையாபுரியார்.
“சங்க இலக்கியம், மக்களின் அன்றாட வாழ்வியலை,
மனித உணர்ச்சியின் பல்வேறு தன்மைகளை, அகவாழ்க்கை, புறவாழ்க்கை என்ற இரு பரிமாணங்களில் அணுகிய பட்டறிவு இலக்கியம்” என்கிறது, “ஒரு பண்பாட்டின் பயணம்:
சிந்து முதல் வைகை வரை” எனும் ஆய்வு நூல். (ஆர்.பாலகிருஷ்ணன் - ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக வெளியீடு) சங்க இலக்கியத்தோடும், சிந்துவெளி, கீழடி தொல்லியல் தரவுகளோடும் வந்துள்ள இந்நூல் சங்க இலக்கியம் படிப்பவர்க்கு, ஒரு புதிய
வெளிச்சம் தருகிறது!
கிறித்துவுக்கு முன்பே எழுத்து வடிவம் கண்டிருந்த தமிழின் நீண்ட வரலாறு, சிற்றரசர், மூவேந்தர் வரலாற்றுக் குறிப்புகளாக எழுதப் பட்டுள்ளதே அன்றி,
சமூக வரலாறாக எழுதப்படவில்லை. அதை எழுத, இன்றியமையாத சான்றுகள் பலவற்றைக் கொண்டிருப்பது சங்க இலக்கியமே!
ஒரு குறிப்பை
மட்டும் பார்ப்போம்-
சங்க இலக்கியத்தில், மிகச்சிறிய ஆசிரியப் பாக்களால் ஆன அகநூல்
ஐங்குறுநூறு. இதன் முதல் பத்துப் பாக்களின், இரண்டாம் வரிகள்-- “நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க”(1),
“பசி இல்லாகுக பிணிசேண் நீங்குக(5)”, “அறம்நனி சிறக்க, அல்லது கெடுக”(7), என --2000ஆண்டுகளுக்கு முன்பே-- உலக நன்மை நாடுவதைப் பாடுவதைக் காண வியப்பாக உள்ளது!
சங்கம் மருவிய நூல்கள் – பதினெண்கீழ்க் கணக்கு
சங்க இலக்கியம்
எனும் -18நூல்களை-
அடுத்து வந்த தொகுப்பு, பதினெண் கீழ்க்கணக்கு. எனவே, இதனை “சங்கம் மருவிய நூல்கள்” என்றும் சொல்வர்! நீதிநூல்கள், அகத்திணை நூல்கள், புறத்திணை நூல் என மூன்று பிரிவுகள்
அற நூல்கள் – (நீதி நூல்கள்)
(1)
திருக்குறள் (எ) முப்பால் (1330) - ஆசிரியர் திருவள்ளுவர். தமிழுக்கு உலகப்புகழ்
பெற்றுத்தந்த திருக்குறளில் உள்ள அறக் கருத்துகள், தமது அகிம்சைக் கொள்கைக்கு உரம் சேர்ப்பதாக எண்ணிய காந்தியடிகள், திருக்குறளை மூல மொழியில் படிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்றார். “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி”
என்று தமிழில் கையொப்பமிட வைத்த நூல் திருக்குறள். நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு,
இன்றும் தமிழில் அதிகமானோர் மேற்கோள் காட்டும் நூலாகவும் உள்ளது திருக்குறளே ஆகும்.
பிரிவுகள் -1.அறத்துப்பால்,
2.பொருட்பால்,
3.காமத்துப் பால். பால்
பிரிவுகளில் வராத பாயிரம் எனும் நூல்முகப் பகுதியில்
4அதிகாரங்கள் உள்ளன.
அறத்துப்பால் - இல்லறவியல்,
துறவறவியல், ஊழியல் என 3இயல்கள் 38அதிகாரங்களில்
380குறட்பாக்களைக் கொண்டது.
பொருட்பால் - அரசியல்,
அங்கவியல், ஒழிபியல் என 3இயல்கள் 70அதிகாரங்களில்
700குறட்பாக்களைக் கொண்டது.
காமத்துப்பால் (எ) இன்பத்துப்பால்
- களவியல், கற்பியல் என 2இயல்கள், 25அதிகாரங்களில் 250குறட்பாக்களைக் கொண்டது
ஆக, திருக்குறள் முப்பால் பிரிவுகளில், அதிகாரத்திற்கு 10குறள் வீதம், 133அதிகாரம், 8இயல்களில் 1330குறள் வெண்பாக்களைக் கொண்டதாகும்.
(2)
நாலடியார் (400வெண்பா)-சமண முனிவர்கள் இயற்றியவை.
திருக்குறளைப் போன்றே முப்பால் பிரிவில் இந்நூலைத் தொகுத்து உரையெழுதியவர் பதுமனார், மதிவரர், தருமர் என்பது தனிப்பாடல் கருத்து.
அறத்துப்பால்- துறவறவியல்7, இல்லறவியல்6 என 13அதிகாரங்கள் உள்ளன.
பொருட்பால்- அரசியல்7,
நட்பியல்4, இன்பியல்3, துன்பியல்4, பொதுவியல்1, பகையியல்4, பன்னெறியியல்1, என 7இயல்களில் 24அதிகாரங்கள் உள்ளன.
காமத்துப்பால்- இன்ப துன்ப இயல்1, இன்பவியல்2 என 3அதிகாரங்கள் உள.
ஆக, 3பால், 9இயல்கள், 40அதிகாரம் என 400வெண்பாக்களைக் கொண்ட நாலடியார், திருக்குறளுக்கு அடுத்த படியாகப் புகழ்பெற்ற அறநூலாகும்.
எடுத்துக் காட்டு-
கல்வி கரையில, கற்பவர் நாள்சில,
மெல்ல நினைக்கின்
பிணிபல, தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய
கற்பவே, நீர்ஒழியப்
பால்உண் குருகின்
தெரிந்து -(நாலடியார்-135)
(3)
நான்மணிக்கடிகை(101வெண்பா)-விளம்பி நாகனார்.
(4)
இன்னா நாற்பது(40+1வெண்பா)-கபிலர்
(5)
இனியவை நாற்பது(40+1வெண்பா)-பூதஞ்சேந்தனார்
(6)
திரிகடுகம்(100) –நல்லாதனார்
(7)
ஆசாரக்கோவை(100+1)-பெருவாயின் முள்ளியார்
(8)
பழமொழி(400)-முன்றுறை அரையனார் –
தொல்காப்பியர் கூறும்
இலக்கிய வகை ஏழில் ஒன்று பழமொழி. இன்றும் முதியோர் பட்டறிவுச் சொல்லாகப் புழக்கத்தில் உள்ள பழமொழிகள் நமது பழந்தமிழ்ப் பண்பாட்டின் உரைகற்களாக உள்ளன.
இப்பழமொழிப் பாடல் ஒவ்வொன்றின் இறுதியிலும் ஒரு பழமொழி உள்ளது. முதலிரண்டு அடிகள் பொருள் விளக்கம், மூன்றாம் அடியில் முன்னிலை,
நான்காம் அடியில் முன் விளக்கத்திற்கு ஏற்ப ஒரு பழமொழி அமைந்துள்ளது.
(9)
சிறுபஞ்ச மூலம்(102) –காரியாசான்
(10)ஏலாதி(80)-கணிமேதாவியார்
(11)முதுமொழிக் காஞ்சி(100)-கூடலூர் கிழார்
அகத்திணை நூல்கள் –
1.
ஐந்திணைஐம்பது(50) –மாறன் பொறையனார்(அகப்பொருள்)
2.
திணைமொழிஐம்பது(50) –கண்ணன் சேந்தனார்
3.
ஐந்திணை எழுபது(50) -மூவாதியார்
4.
திணைமாலை நூற்றைம்பது(150)-கணிமேதையார்
5.
கைந்நிலை(60)-புல்லங்காடனார்
6.
கார்நாற்பது(40வெண்பா)-கண்ணங்கூத்தனார்
புறத்திணை நூல்
1.
களவழி நாற்பது(40வெண்பா)–பொய்கையார் (புறப்பொருள்)
இவற்றை நினைவில்
வைக்க, பின்வரும் பழைய வெண்பா உதவும்-
நாலடி, நான்மணி, நால்நாற்பது, ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை, பழமொழி,மா மூலம்
இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
கைந்நிலைய ஆம்கீழ்க் கணக்கு
தொல்காப்பியம்
· தொன்மை - தமிழின் தொன்மையான
இலக்கண நூல். இயற்றியவர் தொல்காப்பியர். அவர்
பெயராலேயே தொல்காப்பியம் எனப்படுகிறது.
இன்றும் புழக்கத்தில் உள்ள உலகின் பழமையான இலக்கண நூல் என்பர்
· காலம் - காலம் சரியாக
வரையறுக்க இயலவில்லை எனினும் பொ.யு. (கி.மு.)500
என்பர். கிறித்துவுக்கு முற்பட்டது என்பதை மறுக்க இயலாது.
· பகுப்பு -எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்கள்,
ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது இயல்கள் வீதம் 27இயல்கள், மொத்தமாய் 1610நூற்பாக்கள் கொண்ட தொல்காப்பிய இலக்கணமே இன்று வரை தமிழை அழியாமல் காத்து நிற்கும்
இலக்கண அரண் எனலாம்.
· சிறப்பு -தொல்காப்பியம் கற்காமல் தமிழில் புலமை பெறமுடியாது. “எழுத்தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப” என்று,
உயிர் எழுத்தும், மெய்
எழுத்தும் ஆகிய முப்பது எழுத்துகளே தமிழின் முதல் எழுத்துகள் என்று தொல்காப்பியர் வரையறுத்ததே இன்றுவரை உள்ளது. தமிழரின் பெருமைக்குரியதாக விளங்கும் அகம், புறம் எனும் இலக்கியப் பகுப்பும் தொல்காப்பியர் வரையறை செய்ததே! அதிலும் வாழ்க்கைக்கான இலக்கியப் பகுப்பாக - காதல் மற்றும்
குடும்ப வாழ்க்கை பற்றிய -
அக இலக்கணம் வேறு மொழிகளில் இல்லாத தமிழின் பெருமை எனில், அந்தப் பெருமை தொல்காப்பியர் தந்ததே!
அறிவின் பரிணாம வளர்ச்சியை டார்வின் சொல்வதற்கு 2000ஆண்டுக்கு முன்னரே சொன்னவர் தொல்காப்பியர் என்பது,
வியப்புக்குரியது.
ஒன்றறி வதுவே
உற்றறி வதுவே,
இரண்டறி வதுவே அதனொடு நாவே,
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே,
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே,
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே,
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
(தொல்காப்பியம்-பொருளதிகாரம்-மரபியல்-நூற்பா எண்-1526)
(1) ஓரறிவுயிர்கள் -தொடுதலை உணரும் ஓரறிவு அறிவுடையவை
(2) ஈரறிவுயிர்கள் – அதனொடு, சுவை உணரும் ஈரறிவு உடையவை
(3) மூவறிவுயிர்கள் – அவற்றொடு, மோப்ப உணர்வு மூவறிவு உடையவை
(4) நாலறிவுயிர்கள் –அவற்றொடு பார்வை உணரும் நாலறிவு உடையவை
(5) ஐந்தறிவுயிர்கள் – அவற்றொடு செவி உணரும் ஐந்தறிவு உடையவை
(6) ஆறறிவுயிர்கள்–அவற்றொடு மனத்தால் அறியும் பகுத்தறிவும் உடையவை
தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டது எப்போது?
தமிழக முதல்வராக கலைஞர் மு.கருணாநிதியும், இந்தியப் பிரதமராக பி.வி.நரசிம்ம ராவும் இருந்த போது, இந்திய நாடாளு மன்றத்தில் 06-6-2004 அன்று, அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களால் இந்தியாவின் முதல் செம்மொழியாக தமிழ்மொழி அறிவிக்கப்பட்டது. (பிறகுஈ 11இந்திய மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தனி அரசியல் வரலாறு)
தொல்காப்பியத்திற்குப் பிந்திய தமிழ் இலக்கண நூல்கள் –
தொல்காப்பியத்திற்கு முன்பே
அகத்தியம், ஐந்திரம் முதலான இலக்கண நூல்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும்
அவைபற்றிய கருத்துகள் நம்பத்தக்கன அல்ல தொல்காப்பியத்திற்குப் பின் வந்த பட்டியலைப் புலவர் இரா.இளங்குமரனார் தருகிறார்- (நூல்-“இலக்கண வரலாறு“) “முக்கியமான நூல்கள் - புறப்பொருள் வெண்பாமாலை (புறப்பொருள் இலக்கணம் மட்டும்), யாப்பருங்கலக் காரிகை, (யாப்பிலக்கணம் மட்டும்) நம்பியகப் பொருள் (அகப்பொருள் மட்டும்), தண்டியலங்காரம் (அணிகள்)” என்பதே போதுமானது. மற்றவை பட்டியல்
தமிழின் தொன்மையை மறுத்தும் வடமொழியிலிருந்தே தமிழ்மொழி தோன்றியது அல்லது தமிழும் வடமொழியும் சமமான தொன்மையானவை என்னும் கருத்தைப் புகுத்திய -பிற்கால - இலக்கண நூல்கள் குறிப்பிடத் தக்கவை இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம்.
------------------------------------------------------------------------------
தமிழ்நாடு அரசு
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
பிரிவு : TNPSC ஒருங்கிணைந்த
குடிமைப் பணிகள் தேர்வு– 4 (தொகுதி 4 & வி ஏ ஒ)
6-12ஆம் வகுப்புப் பாட நூல்கள் அனைத்தும்
தமிழ்நாடு அரசின் தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.
தேடுபொறியில் இட்டுத் தேடிப் பெறலாம்.
--------------------------------------------
பணியாளர் தேர்வுக்காக மட்டுமின்றி
பொதுவான தமிழ் ஆர்வத்திற்காகவும்
இவற்றைத் தெரிந்திருப்பது
தமிழர் அனைவரின் கடமை
-------------------------------------------------------------------------------------------------


மொத்தத் தமிழ் வரலாற்றையும் 40 பக்கத்தில் அடக்கி விட்டீர்களா 🤩🤩!! எவ்வளவு பெரிய விதயத்தையும் சுருக்கித் தருவதில் நீங்கள் மன்னர் என்பதை மீண்டும் மீண்டும் நிறுவுகிறீர்கள் ஐயா 🫡! நாளைக்கே உலகம் அழியப் போகிறது என்றால் இன்று காலை உங்களிடம் சொல்லிவிட்டால் போதும். மறுநாள் காலைக்குள் காலப்பெட்டகத்தில் வைக்கத் தோதாக உலக வரலாற்றைச் சுருக்கி எழுதி அனுப்பிவிடுவீர்கள்! 👏🏽👏🏽
பதிலளிநீக்குஇந்தக் கட்டுரை நான் நூற்குறியிட்டுக் கொள்கிறேன். ஐயம் வரும்பொழுது பார்த்துக்கொள்ள இந்த நூற்குறியிடல் உதவும். நனி நன்றி ஐயா!😊❤️🤝🏽🙏🏽
மிக அருமை, அருமையான தொகுப்பு. உங்கள் கடின உழைப்பு இத்தொகுப்பின் வழி தெரிகிறது. இவை அனைவரையும் சென்றடையச் செய்யும் தங்களின் நற்பணி வாழ்க.
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள செய்திகள் வாழ்த்துக்கள்.... சங்க இலக்கியங்கள் பற்றிய நூல்கள் பெரும் தகவல் களஞ்சியம் நன்றி சார்
பதிலளிநீக்கு