சிறந்த நூல்கள், திரைப்பட- குறும்பட விருதுகளுக்கான அறிவிப்பு!


புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 
மூன்றாவது ஆண்டாக, 
2018இல்,
 நவம்பர்-24 சனிக்கிழமை முதல் 
திசம்பர்-03 திங்கள்கிழமை வரை 
பத்துநாள்கள்
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 
சிறப்பாக நடக்கவுள்ளது.

புதிய விருதுகள் 
சிறந்த திரைக்கலைஞர்களை,
எழுத்தாளர்களைக் கௌரவிக்க
காத்திருக்கின்றன! 
முழுவிவரம் இதோ...

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018



புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018
கஜா புயல் காரணமாகத் 
தள்ளிவைக்கப்பட்டது
நாள் பின்னர் அறிவிக்கப்படும் 

------------------------------------------------------ 


காரைக்குடி புத்தகவிழா – எனது பேச்சு காணொலி இணைப்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 
காரைக்குடி நண்பர்கள் ஏற்பாடு செய்து நடத்திவரும் “முதலாவது புத்தகத் திருவிழா” நிகழ்வில் 
கடந்த 08-10-2018 அன்று 
நான் பேசிய பேச்சின் காணொலி இணைப்பு இது-
“புத்தகம் புது உலகின் திறவுகோல்”
பார்த்து, கேட்டுக் கருத்திடவும், 
இன்னும் 
எனது வலைப்பக்கத்தில்
FOLLOWER பட்டியலில் இணையாதவர்கள் 
அந்தப் பெட்டியில் 
தமது மின்னஞ்சலைத் தந்து இணையவும் 
அன்புடன் அழைக்கிறேன்.
வணக்கம்.
காணொலி இணைப்பு இது - 

நன்றி -  'K' STUDIO,  புதுக்கோட்டை  
----------------------- 

ஆண்டு முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்! புதுக்கோட்டை மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்.


அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டையொட்டி
ஆண்டு முழுவதும் மத நல்லிணக்க விழாக்கள்!
புதுக்கோட்டை மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம்


     புதுக்கோட்டை, அக்-01 அண்ணல் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி முதல் ஆண்டுமுழுவதும் மக்கள் ஒற்றுமை மதநல்லிணக்க ஆண்டாக கொண்டாடுவது என புதுக்கோட்டை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.