எனது 'புதிய மரபுகள்' கவிதைத் தொகுப்பிலிருந்து...

'ஐஸ்!'

சொறிந்துவிடு! 
சொறிந்துவிடு!

உன் நகங்களில் 
அழுக்குச் சேர 
அவன் முதுகு ரணமாக -
சுகமாக சொறிந்துவிடு!

சொல்லித் தெரிவதில்லை 
சொறிதல்!
மன்மதக் கலையை விடவும் 
ரகசியமானது!
மதுவை விடவும் 
போதையானது!

விரகதாபத்தை விடவும்,
இந்த விரல்களின் தாபம் 
வேகமானது!

நீ கொடுக்கும் 
சுக வெறியில் 
வருகிறவனின்
முகத்தை விடவும்
நகத்தையே எதிர்பார்த்து 
அதோ.. அவன் 
நரங்கிப்போய்விட்டான் பார்!

உனது 
தடவலுக்காய்த் 
தாக வெறி கொண்டு   
மனசெல்லாம் சொறிபிடித்து
சாபம் வேண்டி 
தவமிருக்கிறான் பார்!

இதில் 
பாவம் எது?
பாவி யார்?
அதைப்பற்றி 
நமக்கென்ன? 
சொறிந்துவிடு !
சொறிந்துவிடு!!

4 கருத்துகள்:

  1. தேர்தல் பாட்டு
    சூப்பர்...சார்.
    -மு.மு

    பதிலளிநீக்கு
  2. சும்மா ‘சூப்பர் சார்’ கதையெல்லாம் வேண்டாம் கவிஞரே!
    என்றாலும் உங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி.
    அதோடு -
    14-04-2011 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் திரு.திண்டுக்கல் லியோனி அவர்களின் தலைமையில் நான் பேசிய பட்டிமன்றத்தில்,
    ‘சிரிப்பு –
    மனசு அனுப்பும்
    ரிப்ளை கார்டு’ எனும்
    உங்கள் கவிதையை உங்கள் பெயரோடு சொன்னேன்.
    பார்க்கவில்லை என்றாலும் அதற்கும் சேர்த்து எனது நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. என்ன இருந்தாலும் சொரிவதில் உள்ள சுகமும்
    சொரியப்படுவதில் உள்ள சுகமும்........
    அதை விட சுகம் ஒன்று இருக்கிறதா என்ன ?!

    பதிலளிநீக்கு
  4. என்ன இருந்தாலும் சொரிவதில் உள்ள சுகமும்
    சொரியப்படுவதில் உள்ள சுகமும்........
    அதை விட சுகம் ஒன்று இருக்கிறதா என்ன ?!

    பதிலளிநீக்கு