| நன்றி - The Hindu Daily இணையம் ----------------------------------------------------------- |
"பாயும் ஒளி நீ எனக்கு - நந்தலாலா" ஆவணப்படம்
https://youtu.be/pEyrtUsUuks - 46 நிமிடம்
-------------------------------------------------------
ஆவணப்பட வெளியீட்டு விழா
நிகழ்வுகள் - காணொலி இணைப்பு: 20நிமிடம் -
https://www.youtube.com/watch?v=fe22VFEwynA
வெளியீட்டு விழா உரைகள் அனைத்தும் இடம் பெற்ற
ஸ்ருதி டிவி இணைப்பு:
https://youtube.com/@
இந்த இணைப்பில் போய்,
"பாயும்ஒளி நீ எனக்கு நந்தலாலா - ஆவணப்படம் வெளியீட்டு விழா"
என்று தட்டினால் விழா உரை அனைத்தும் கிடைக்கும்
-----------------------------------------
இதில்
எனது 45 ஆண்டுக்கால நண்பன் பற்றிய
எனது 9நிமிட உரை:
My Speech - https://youtu.be/Tx5xJ3aYn1Q?
-----------------------------------------------
காற்றின் ஒலியிலெல்லாம் நந்தலாலா! - உன்றன்
காந்தக்குரல்
கேட்குதையா நந்தலாலா!!
சீற்றக் கனலிலெல்லாம் நந்தலாலா! - உன்றன்
செஞ்சினம்
தெறிக்குதையா நந்தலாலா!
நேற்றுச் சிரித்தமுகம் நந்தலாலா! - இன்று
நிழற்படம்
ஆனதையோ! நந்தலாலா!
தேற்ற முடியவில்லை நந்தலாலா! - எங்குத்
தேதி
கொடுத்துச்சென்றாய்? நந்தலாலா!
(நந்தலாலா மறைவின் போது கவிச்சுடர் எழுதியது -
ஆவணப்படத்தின் இறுதியில் பயன்படுத்திய விதம்
கவிதையைப் போலவே நெகிழவைக்கிறது)
----------------------------------------






*நந்தலாலா எனும் நடைமுறையாளர்!*
பதிலளிநீக்குபேச்சு என்பதும் பல்வேறு கலைகளில் ஒன்று! அது ஒரு Stage performance.
மேடையில் அது நாடகம்!
ஒருவர் மட்டுமே நடத்தும் நாடகம்!
நமது நந்தலாலா அதில் வல்லவர்!
குருவாக யாரையும் ஏற்றுக் கொள்ளாத ஏகலைவன்! சுயம்பு!
அவர் உயரமாக இல்லா விட்டாலும் கூட, நூல்களைத் தேடித் தேடிப் படித்துப் படித்தே தன்னை பிரம்மாண்டமாகச் செதுக்கிக் கொண்ட சிற்பி.
பாரதி!
பெரியார் !
காமராசர்!
காந்தி!
என...
இன்னும் பாமர மக்களால் அறியப் படாத தலைவர்கள் பலரையும் உயிரோடு தமிழ்நாட்டு கிராமத்து மேடைகளிலும் கூட விடிய விடிய உலவ விட்டார்!
கிராமத்து மேடைகளில் வேளாண் குடி மக்களிடம் எல்லாம் கல்வியின் அவசியம் பற்றிப் பேசிப் புரிய வைப்பார்.
கல்வி நிறுவனங்களின் மேடைகளில் வேளாண்மையின் அவசியம் பற்றிப் பேசி இடித்து உரைப்பார்.
மக்களின் எதிரிகளை மேடையில் விளாசுவதில் அவருக்கு நிகரில்லை.
பிம்பங்களை உடைக்க வேண்டும்! என்பது அவரது மேடைகளின் தவறாத முழக்கம்!
1996 தேர்தல்!
இருண்ட காலம் என்று பட்டம் பெற்ற ஆட்சி!
அதற்கு எதிராக பட்டி தொட்டி எங்கும் அவர் செய்த முழக்கம் மக்களிடம் பலத்த ஆரவாரத்தை எதிரொலித்தது
அறைகளிலும் அரங்குகளிலும் பேசிக் கொண்டிருந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், மருத்துவர் சிவராமன் போன்ற அறிஞர்களை அழைத்து ஆயிரக் கணக்கான மக்கள் மத்தியில் பேச வைத்தார்.
தந்தை பெரியாரை ஏற்கத் தயங்கிய நண்பர்களை எல்லாம் தொடர்ந்து முயன்று, விடாமல் பேசிப் பேசி ஏற்க வைத்தார்.
கல்வியாளர்களை எல்லாம் மதித்து நட்புக் கொண்ட பண்பாளர்.
அந்தக் கல்வியாளர்களே வியந்து போற்றும் பல் துறைத் திறனாளர்.
எவ்வளவு பிரம்மாண்டப் பணியையும் ஏற்று, அதற்காக சிறப்பாகத் திட்டமிட்டு, அந்தத் திட்டப்படி தானும் உழைத்து, மற்றவர்களையும் உழைக்க வைத்து வெற்றிகளை ஈட்டிய சாதனையாளர்!
உலகத் தமிழ் மாநாட்டில் த.மு.எ.க.ச.வின் சார்பாகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
செல்ல வாய்ப்பு இல்லாத எங்களுக்கு அங்கே நடந்தவைகளைக் காட்சிகளாகவே விவரித்தார்.
எத்தனை சிறப்புகள் அடைந்தாலும் உள்ளூரில் தன்னை எளிய இனிய நண்பனாகவே அடையாளப் படுத்துவார்.
எல்லா அமைப்புகளையும் சமமாக மதிப்பார்.
அவர்களை தன்னை நோக்கி ஈர்த்ததன் மூலம் த.மு.எ.க.ச. என்ற அமைப்புக்கும் பயனும் பெயரும் புகழும் பெற்றுத் தந்தார்.
தான் மட்டும் சிறப்படைந்து தனிமரமாக இல்லாமல் த.மு.எ.க.ச. என்ற தோப்பில் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த மரமாகத் திகழ்ந்தார்.
ஒவ்வொரு தோழரையும் அவரவர் திறனுக்கு ஏற்ப வளர்த்து எடுத்தார்.
தோழர்களின் குடும்பங்களோடும் தொடர்ந்து உரையாடிய பண்பாளர்.
சொல் வல்லார் என்று பட்டம் பெற்று இருந்தாலும் அவர் கூர்மையான செயல்வீரர்.
அவர் வறட்டுக் கொள்கைவாதம் பேச மாட்டார்.
சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையைத் தகவமமைத்து வாழ வேண்டும் என்பார்.
எவ்வளவு பெரிய தலைவர்களையும் பெயர் சொல்லி தோழமையோடு அழைக்கும் தோழர் அவர்.
ஆனால் சார் என்றும், அண்ணே என்றும் அழைக்கப்பட விரும்புபவர்களை அப்படியே அழைத்து திருப்திப் படுத்துவார்.
அதே நேரம் பதவிகளுக்கு உரிய மரியாதையைச் செயல் படுத்துவதில் சிறப்பாகச் செய்து விடுவார்!
அவரது விருந்தோம்பல் சிறப்பானது.
அவர் செய்த அந்த விருந்தோம்பலுக்குப் பலனாக
அவர் செல்லும் ஊர்களில் எல்லாம் பதில் மரியாதை பலமாகவே செய்யப் படும்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு.
ஓசூரிலும் நண்பர் திருஞானம் இருந்தார்.
இறுதியிலும் அவர் எந்த அசவுகரியமும் இல்லாமல்தான் அவரது அன்பின் நட்புகள் அவரைக் காத்தன.
என்னிடம், "நீங்க ஒரு குழந்தை குமார். எல்லாவற்றையும் நம்புகிறீர்கள்!" என்பார்.
ஆமாம் தோழர்! தங்களையும் நம்பினேன்.
தங்கள் அறிவின் உச்சத்தையும், வாழும் நடை முறைகளையும் கண்டு இன்னும் பல்லாண்டுகள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் என்று நம்பினேன்.
நன்றி ஐயா.
பதிலளிநீக்குதரவிறக்கம் செய்து பார்க்கிறேன்