குழந்தையின் அரசியல் கேள்வி!

திருச்சியைச் சேர்ந்த என் நண்பரும் பத்திரிகையாளருமான 
வில்வம் தனது அய்ந்து வயது மகள் கியூபாவுடன், 
திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில்
போய்க் கொண்டிருந்த போது கியூபா கேட்டாராம் -
 " ஏம்ப்பா, நிறைய சுவரில் "அம்மா அம்மா"னு எழுதி இருக்காங்க?”

இதுபோல குழந்தைகள் அப்பா-அம்மாவைக் கேட்கும்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒன்று அவசரத்திற்கு தப்பும் தவறுமாக குழந்தைதானே என்று எதையாவது சொல்லும் வழக்கத்தை மீறி, இவர் தடுமாறி இருக்கிறார்.

மீண்டும் கியூபா  " ஆடு, இலை,   இதெல்லாம்
எப்பப்பா எழுதுவாங்க ?", எனக்  கேட்டாராம்! 

அப்போதும் பதில் சொல்லவில்லை. 

அய்ந்து வயது குழந்தையின் அரசியல் நகைச்சுவையோ...?

என்று நம்மைக் கேட்கிறார்.

குழந்தைதான் மனிதரின் தந்தை என ஒரு மேலைப் பழமொழி உண்டே வில்வம்?

2 கருத்துகள்:

  1. சார் இது செம கலாட்டா.. ஆனால் குழந்தையின் வித்தியாசமான நகைச்சுவையான சிந்தனையும் கூட.

    பதிலளிநீக்கு
  2. தடுமாறிய சொல் தடம் மாற்றாமல் இருந்தால் சரி.

    பதிலளிநீக்கு