கருப்புச்சட்டை! சிவப்புச்சட்டை!! நீலச்சட்டை!!!


கவிஞர் சோலச்சியின்
“கருப்புச்சட்டையும்
கத்திக் கம்புகளும்”
சிறுகதை நூல் வெளியீடு

புதுக்கோட்டை-[_ன்,8 புதுக்கோட்டை அருகிலுள்ள வயலோகம் துர்க்கா அரங்கில் நடைபெற்ற கவிஞர் சோலச்சியின் “கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்” நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் நா.முத்துநிலவன், “படித்தவர்கள் வெறும் பார்வையாளராகவே இருந்துவிடாமல், நாட்டில் நடந்துவரும் நல்லனவற்றின் பங்கேற்பா ளராகவும் வரவேண்டும்”என்றார்.

நவகவியின் பாட்டிசைப் பெருவெள்ளம்!




வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாமல், கேட்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும்  அல்லது அவஸ்தைப் படுத்தும் பாடல்கள் சில எல்லாருக்கும் இருக்கும்தானே? அப்படியானவை, கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் மட்டுமல்ல! நவகவியின் பாடல்களும்தான் என்பதைக் கம்பீரமாய்ச் சொல்ல வந்திருக்கும் பாடல் தொகுப்பு ”நவகவி1000”!



இலைகள் அழுத ஒரு மழை இரவு,
     எலும்பும் உறைந்துவிடும் குளிர்பொழுது
  கண்டேன் ஒரு காட்சி, கண்டெனது
    கண்ணில் இறங்கிவரும் நீர்விழுது
இந்த வரிகளை 25வருடமுன்பே முதன்முதலாகக் கரிசல் கிருஷ்ணசாமியின் காந்தக் குரலில் கேட்டபோது ஏற்பட்ட உணர்வு இப்போதும் மாறாதிருக்கிறது!

தமிழக பாஜக தலைவராகிறாரா ரஜினி?

அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எந்த பொறுப்பு கொடுத்தாலும் நேர்மையாக செயல்படுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த்தெரிவித்தார். 

இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ஏன்? -– எமது போராட்ட விளக்கம்


இந்தியும் தமிழும்... 
தமிழின் வயது யாருக்கும் தெரியாது! ஏனெனில், “இவள் என்றுபிறந்தனள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்!” 5,000ஆண்டுகளுக்கும் மேலானது என்பதை ஊரறியும், உலகறியும் மொகலாய அரசன் கோரிமுகமது இந்தியாவின் வடமேற்கு பகுதிகளைக் கைப்பற்றி, அங்குத் தமது ஆட்சியை நிலைநாட்ட தில்லியை மையமாகக் கொண்டு ஆளத் தொடங்கியபோது உருதுமொழியுடன் பிராகிருதம் கலந்துபேசிய மக்களிடம் உருவான கலப்பு மொழியே இந்தி மொழி. இதன் காலம் கி.பி.850!  

டவுசர் கிழியட்டும்!

தெளிவாகச் சொல்லுங்கள்-
“நீட்“டாகப் போன எங்கள் பிள்ளைகளின்
சட்டையைக் கிழித்த
மோடி அரசின்
“டவுசர்” கிழியும்வரை
போராட்டங்கள் தொடரட்டும்!
----நா.முத்துநிலவன்.
------------------------------------------------- 
செய்தி,படத்துக்கு நன்றி - 
தினமணி நாளிதழ்-08-5-2017

“நீட்”தேர்வு – சமத்துவத்துக்கு சாவுமணி!( NEET EXAM DISPUTE)


அய்யா காமராசர் முதல்வராக இருந்தபோது, மருத்துவக் கல்லூரியில் சேரவிரும்பிய சுமார் 100 மாணவர்களின் விண்ணப்பங்கள், முதல்வரின் தனிச் சிபாரிசுக்கு வந்ததாம். 10சீட்டுகள், முதல்வரால் தேர்வு செய்யப்படும் சிறப்பு அனுமதி இடமாகக் கருதி ஏழை மாணவர்க்கு வழங்கப்படுவது வழக்கம்.
பல்வேறு வேலைகளுக்கிடையில் பத்தே நிமிடத்தில் அந்த 10சீட்டுக்குரிய விண்ணப்பங்களைத் தேர்வுசெய்தாராம் காமராசர். இதுகண்ட ஊழியர்கள் “எப்படி இவ்வளவு வேகமாத் தேர்வு செய்தீர்கள்?” என வியந்தார்களாம்.
 “விண்ணப்பத்துல, அப்பா கையெழுத்துப் போடுற இடத்துல கைநாட்டு வச்சிருந்த விண்ணப்பங்களாத் தேடி எடுக்கப் பத்துநிமிசம் போதும்ல ன்னேன்?!” என்று காமராசர் பதில் சொன்னதாகச் சொல்வார்கள்!
அதாவது, “படிக்காத பெற்றோர்களுடைய பிள்ளைகளின் படிப்புக்கே முன்னுரிமை தரவேண்டும்” என்று காமராசர் நினைத்திருக்கிறார்!
இது அப்போ!!!!
ஆனால் இப்போ...?

தானடித்த மூப்பாக மத்திய அரசில் நடப்பதென்ன?
“யாருடைய தந்தை, லட்சம்-கோடிகளைக் கொட்டிக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டும் விண்ணப்பித்தால் போதும்” என அறிவிக்கவில்லையே தவிர, மாநிலங்களின் கருத்தையும் இதுபற்றிக் கேட்காமல், அப்படித்தான் சட்டம் பேசுகிறது மத்திய மோடி அரசு !
“நீட்” தேர்வு என்றால் என்ன? 

மே-தை மாதமே!

(மே தின வாழ்த்துக் கவிதை)


“எட்டுமணி நேர வேலை, எட்டுமணி நேர ஓய்வு,
         
எட்டுமணி நேர உறக்கம் - இதை
கெட்டமன மூலதன வர்க்கமே! தருக”எனக்
         
கேட்டெழுந்த போரின் தொடக்கம்             (1)

இன்று ஜெயகாந்தன் பிறந்தநாள் - அஞ்சலிக் கட்டுரை


மறக்க 
முடியாத
எழுத்தாளனின்
பிறந்த நாளில்

அவரை
வணங்கி,
ஒரு
மறு 
விமர்சனம்!


---------------------------------------         

ஒரு ஜெயகாந்தனும்
சில  ஜெயகாந்தன்களும் - 
-- நா.முத்து நிலவன் --
----------------------------------------------------------------------------
 மணிவிழாக் கருத்தரங்கம் முடிந்தது.
கார்களின் நெரிசலுக்கிடையே நடந்து போய்க்கொண்டிருந்த முனியம்மா, இரண்டு சக்கர வாகனத்தில் கிளம்பிய கங்காவை கவனித்துவிட்டாள்.
 “இன்னாம்மே ! கண்டுக்காத போய்க்கினேகீறியே!” ஹக்கா…ங்”
 “அட ! நம்ம முனிம்மா!” வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டாள் கங்கா.
 “சேச்சே ! என்ன முனியம்மா ? நா பாக்கல.. ஹவ் ஆர்யூ? செமினார்க்கு வந்திருந்தியா?
 “வந்திருந்தி…யாவா? மீட்டங்கி நடக்கச்சொல்ல அம்மாநேரமும் ஒரு மூலையில குந்திக்கினு அல்லாத்தியும் பாத்துகினுதான் இர்ந்தோம்…”
 “அட்ட! உன்னோட வேற யாரெல்லாம் வந்திருந்தாங்க” கங்கா கேட்டு முடியவில்லை நொடித்துக்காட்டினாள் முனியம்மா.
 “அடடே! அல்லாரும் வரமாட்டமாங்காட்டியும்? இந்த மினிம்மா மட்டுமா வந்திருந்தான்னு நென்ச்சிக்கினே ? அக்கட சூடு! நம்ப ‘சித்தாளு’கம்சல, ‘ஒருபுடி சோத்துக்க நாயா அலைஞ்சி லோல்படுற ராசாத்தி, மாரியம்மா, அந்தா ‘ஓவர் டைமு’ ஏலுமல, ‘ டிரெடிலு வினாயகம், இந்தா ‘பாசஞ்சர் வண்டியில’ வந்து ‘பெரளயத்துல மாட்டிக்கின அம்மாசிக் கெயவன், நம்ம பாடகரு பொணத்தக் கட்டிகினு அயுதான? ரிக்சாக்கார கவாலி, அம்மாந் தூரம் ஏன்? நேத்தக்கி வந்தவ… அந்த ‘ரிசிபத்தினி’ பொன்னம்மா அல்லாந்தா வந்துர்ந்தோம்…”
 கொஞ்சம் தள்ளித்தள்ளி, மரத்தடிகளில் நின்று பேசிக் கொண்டிருந்த எல்லோரையும் சுட்டிக் காட்டினாள் முனியம்மா. அவர்களோடு, முனியம்மா சொல்லாவிட்டாலும் - ‘நூறு பேர்’களில் இருவராக நின்றிருந்த பரந்தாமன், ஆனந்தனையும் பார்த்தாள் கங்கா. ஆச்சரியமாகவும் இருந்தது.
அந்த தெருவோர தேசியவாதிளைப் பார்க்க சங்கடமாகவு மிருந்தது.
 ‘தே ஆர் ஆல் செய்லிங் இன்த சேம் போட்..ஈவன் டுடே…’ என்று நினைத்துக்கொண்டவள் ‘ சே ! திங்க் பண்ணுவது கூட இங்கிலீஷில்தானா வரவேண்டும்’, என்று தனக்குள் விவாதித்துக்கொண்டே முனியம்மாவி;டம் கேட்டாள்..
“ரியலி? எல்லாருமா வந்திருந்தீங்க? நா பாக்கலியே. ‘லாஸ்ட் ரோ’ல ஐ வாஸ் சிட்டிங் வித் பிரபு, கௌதம் அன் மாலா ரெண்டு மூணு சீட் தள்ளி கல்யாணியும், ரெங்காவும் கூட இருந்தாங்க. அப்பால…மகுடேசம்பிள்ளை, முத்துவேலர், கணபதி சாஸ்திரிகள், சீதா, சங்கர சர்மா, சாரதா மாமி, தங்கம், ஆதி யெல்லாம் கூட வந்திருந்தாளே ! டோன்ட் யூ நோ தெம்?...”
 “ந்தா இந்த டஸ்ஸ_ புஸ்ஸி_ இங்கிலீசெல்லாம் நம்ம கைல வாணாம் தாயீ! நீங்கள்ளாம் வெள்ளையும் சொள்ளையுமா சோபால குந்திகினு இர்ந்தீங்க…நாங்க எப்பவும்போல அப்டி ஓரஞ்சாரத்துல ஒண்டிக்கினு எட்டி எட்டி பாத்துகிணு இர்ந்தோம்…இன்னா பண்றது? பாயாப்போன மன்சு கேக்லியே?
 அது செரீ…அல்லாரும் பேசவுட்டு கடசீல அவுரு வந்து…அது இன்னாதது?  ஏற்புரையா? ஆங்…அதான்…சிங்க மாட்டமா சொம்மா வெளாசித் தள்ளிகினாரே? ஆமா…அது இன்னாத்துக்கும்மே இப்பப்போயி அல்லாரும் தெகிரியமா இந்தி பட்ச்சிக்கணும்ன்றாரு? ..என்னிய மாரி மினியம்மால்லாம் இன்னிமேல இந்திபட்சி இன்னா ஆவப்போவுது ன்றாரூ…!
 “ஸீ!முனிம்மா, அட்லீஸ்ட் நெக்ஸ்ட்செஞ்சுரியிலாவது…ஸீ…வாட் ஐம் கோயிங் டு சே ஈஸ்…” முனியம்மாவிடமும்  தன் இயல்பில் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டதை உணர்ந்து, தனது நாகரிகமற்ற செயலுக்கு உண்மையிலேயே வருந்தி, நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்திவிட்டாள் கங்கா.
-----------------------------------------------------------------
 போதும்,
 கங்காவும், மற்ற உயிருள்ள பாத்திரங்கள் யாவும், சற்றுநேரம் அப்படியே உறைந்து நிற்கட்டும். நாம், அவர்களைப் படைத்தளித்த நமது அற்புதப் படைப்பாளியோடு சிறிது நேரம்-உரிமையோடு-பேசிவருவோம்.