வெளிநாடுவாழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...


வரும் 11-10-2015 அன்று “வலைப்பதிவர் திருவிழா-2015” புதுக்கோட்டையில் நிகழவிருப்பதை அறிந்திருப்பீர்கள்!
வருவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறீர்கள், சிலர் பயண முன்பதிவு செய்துவிட்டதாகச் சொன்னது மகிழ்ச்சி!

“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தமது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுப்படிவத்தை இதுவரை 50பேர் நிரப்பியிருப்பதாக அறிந்து மகிழ்கிறோம்.

இன்னும் பதிவுகள் தொடர்கின்றன... நீங்கள் இதுவரை படிவம் நிரப்பாமல் இருந்தால் உடன் நிரப்பிவிட வேண்டுகிறேன். ஒருவேளை கடைசிநேரத்தில் வரஇயலாமல் போனாலும் பரவாயில்லை, விவரம் கிடைக்க வேண்டுமல்லவா?

வலைப்பதிவர் கையேடு
இம்முறை ஒரு புதிய முயற்சி எடுக்கிறோம் – 
உலகம் முழுவதும் உள்ள தமிழ் வலைப்பதிவரை அறிந்து கொள்ள உதவும் “தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015“ 

இதற்கு, வருவோர் வரஇயலாதோர் அனைவருமே தத்தம் சுயவிவரம் தருவதால் சரியான –இன்றைய- தகவல்களுடன் அனைவருமறிய ஒரு கையேடு கிடைக்கும் என்பதால் பதிவர்-படிவம் முக்கியத்துவம் பெறும்  முக்கியமாக வெளிநாடு வாழ் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தம் விவரங்களை –அவர்கள் விரும்பினால் தமிழ்நாட்டில் தொடர்புகொள்ளும் முகவரியுடன்- தரலாம்.இதற்கென விழாக்குழுவில் ஒரு குழுவினர் தனியே சுறுசுறுப்பாகச் செயல்பட்டு விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள்.

இதில் ஒரு வேண்டுகோளும் கூட..
15-9-2015 வரை வரும் விவரங்களைக் கொண்டே இக்கையேடு தயாரிக்கப் படவுள்ளது. பக்க அளவு அப்போதுதான் இறுதியாகும். அச்சிடும் செலவும் அப்போதே முடிவாகும். இதனை விழாவுக்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகவே தருவதென்றும், அச்சிடும் செலவை ஈடுகட்ட சில பக்கங்களில் விளம்பரம் வெளியிடலாம் என்றும் விழாக்குழு முடிவெடுத்துள்ளது. எனவே, வாய்ப்புள்ள நண்பர்கள் கடைசிப் பக்கம் மற்றும் உள் அட்டைகள் இரண்டு ஆக 3வண்ணப் பக்கங்களில் இடம்பெறும் விளம்பரங்களைப் பெற்றுத் தந்துதவலாம். உள்பக்கங்களில் ஒரு வண்ணம் மட்டுமே 

வெளிநாடுகளில் இயங்கிவரும் தமிழ்அமைப்புகள் தமிழ்ச் சங்கங்கள்- உதவும் தமிழர்களை அணுகி இதற்கு உதவிசெய்ய வேண்டுகிறோம். இது பற்றிய செய்தி விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டாம் என்பதால் தனியே மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

முக்கியமாக,வெளிநாடுவாழ் தமிழ்வலைப்பதிவர்கள் தமது நிதிஉதவி, 
விளம்பர உதவியுடன்– 
வரஇயலாதவர்–தமது வாழ்த்துரையை, கவிதையை 10,15வரிக்குள் தெரிவித்தால் அதை விழா அரங்கில் அழகாக எழுதி வைக்க விரும்புகிறோம். கவிதையாகவோ வாழ்த்துரையாகவோ தருக!

நேரில்வருவோர் தரும் சுய-அறிமுகத்தை அப்படி அப்படியே நேரலையில் தரவிருப்பதாலும், விழாவில் வெளியிடவுள்ள வலைப்பதிவர் கையேட்டில் அச்சிட்டுத் தரவிருப்பதாலும் தனியே தரவேண்டியதில்லை. (கூகுள் படிவத்தில் பதிவு செய்தல் போதும்)
அப்படியே தங்கள் நல்வரவு(உடன்), 
நல்“வரவும்“ ஆகுக!

அனைத்துத் தொடர்புகளுக்கும் -

bloggersmeet2015@gmail.com
------------------------------------------------------------- 
விழாவுக்கான 
பிரத்தியேக வலைப்பதிவு காண வருக
http://bloggersmeet2015.blogspot.in/ 

வலைப்பதிவர் விழாவுக்கென்று ஒரு தனி வலைப்பக்கம்! பார்க்கவும் பகிரவும் வருக!



புதுக்கோட்டையில் வரும் அக்டோபர்-11 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் “தமிழ்வலைப்பதிவர் திருவிழா-2015நிகழ்வுக்கென்று ஒரு தனி வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை நம் வலைநண்பர்கள் அனைவரும் பார்ப்பதோடு, தமது வலைப்பக்கம், முகநூல், சுட்டுரை மற்றும் கூட்டுமின்னஞ்சல்கள் வழியே அனைவரும் அறியத் தருமாறும், அப்படியே மறவாமல் அவசியம் விழாவிற்கு வருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆலோசனைகளையும் ஐயங்களையும் பகிரலாம். 

வலைப்பக்க முகவரி -

மின்னஞ்சல் முகவரி –

பி.கு.- நல்ல ஆலோசனைகளுடன் நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன. நன்கொடையாளர் பெயர் மட்டும் இப்போது வெளியிடப்பட்டு வருகிறது.
விழா முடிவில் இந்தத் தளத்திலேயே அந்த ஒவ்வொருவரும் தந்த தொகையுடன் மொத்த வரவு செலவுக் கணக்குகளும் வெளியிடப்படும்.

----------------------------------------

இணையத்தில் தமிழ் கற்க...

இணையத்தில் தமிழ் கற்க...

எனது எளிய இலக்கணப் பதிவு ஒன்றை இன்றுவரை எனது வாசகர்பலரும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் –

“மூணுசுழி ண, ரெண்டு சுழி ன என்ன வித்தியாசம்?“ 
என்று அதற்குத் தலைப்பிட்டிருந்தேன். பார்ககாதவர் பார்க்க -

எனக்கே வியப்பளிக்கும் வகையில் அந்தப் பதிவிற்குத்தான் இன்றுவரை சந்தேகக் கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.
எனது பதிவுகள் அனைத்திலும் அதற்கே பின்னூட்டங்களும் அதிகம்!

எனவே, மொத்தமாக அவர்களுக்கும் சேர்த்தே இந்தப் பதிவு-

நானும் தனியாக “எளிய தமிழில் இனிய இலக்கணம்“ எனும் தலைப்பில் ஒரு சிறு நூல் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறேன் என்பதற்கும் இது ஒரு முன்னோட்டமாக இருக்கட்டும்

இலக்கணக் குறிப்புகளைப் புரிந்துகொண்டால் இலக்கணப் பிழையில்லாமல் இலக்கியம் படைக்க முடியும் என்பது ஓர் அடிப்படைத் தகவல்.

அதற்கு எளிய முறையில் இலக்கணத்தைப் புரிய வைக்க வேண்டும். அதற்கு இந்தத் தளம் உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

ஒரு முக்கியமான தகவல் –
“தமிழ் இணையப்பல்கலைக் கழகம்“ என்று முன்னர் இருந்த தளம்தான் தற்போது “தமிழ்இணையக் கல்விக் கழகம்“ என்று மாறியிருக்கிறது.
இதன் தற்போதைய இயக்குநராக, மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது, புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்தவர் மிகுந்த இலக்கிய ஆர்வமுடைய
திரு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் என்பதைத் தமிழுலகம் நன்கறியும்.

இதில் இலக்கியம் மற்றும் இலக்கணம் கற்க விரும்புவோர்க்கு ஏராளமான வாய்ப்பு வாசல் திறக்கப்பட்டுள்ளது! விரும்பினால் இணையக் கல்வி வழியே சான்றிதழ் பெறவும் தமிழ்க்கல்வி பெறவும் முடியும். படித்து ரசித்து மகிழவும் முடியும்!

முக்கியமாக இலக்கணப் பிழையின்றி எழுதவும், சரியாக உச்சரிக்கவுமான மென்பொருள் இங்கே கிடைப்பது பெரிய வரப்பிரசாதமாகும்! இதுதானே இன்றைய சிக்கல்?

இலக்கிய இலக்கண அறிவு பெற்று இணையத்தமிழ் வளர்க்க வருக! வருக! என அன்புடன் அழைக்கிறேன்.

செல்ல வேண்டிய இணைப்பு -

''தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் இலக்கியங்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு” ‘Linguistically Annotated Corpus for Tamil Literature” என்ற திட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் முதற்கட்டமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள 56 நூல்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல்களின் முதற்பதிப்பைப் பற்றி (Version 1.0) உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துகளைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்குத் தெரிவிக்க tamilvu@yahoo.com என்ற இம் மின் முகவரியில் தொடர்புகொள்க''

என்று அந்தத் தளத்தில் அறிவிப்பும் உள்ளது காண்க!
அன்புடன்,
நா.முத்துநிலவன்.
ஒருங்கிணைப்பாளர் - கணினித் தமிழ்ச்சங்கம்,
புதுக்கோட்டை.

பிரகாஷ் ராஜ் இப்படிப் பண்ணலாமா?

பிரகாஷ் ராஜ் இப்படிப் பண்ணலாமா?

நான் பெரிதும் மதிக்கும “பன்மொழிக்கலைஞர்“ பிரகாஷ்ராஜ். வயதை மீறிய கலைஞர். அவரது தயாரிப்பில், மொழி, அபியும் நானும், தோனி போலும் அழகியலும் சமூக உணர்வும் மிக்க திரைப்படங்களைப் பார்த்து நெகிழ்ந்ததும் உண்டு. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர் கூட அவர்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியிருந்தது...
ஆனால்....

அண்மைக்காலமாகத் தொலைக்காட்சி நகைக்கடை விளம்பரம் ஒன்றில் அவர் நடித்திருப்பது, அவரது சமூகப்பொறுப்பு இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டது.

இதுபற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த போது, தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்று மிகச்சரியாக வந்திருப்பதால் நன்றியோடு அந்தக் கட்டுரையை நம் வாசகர் பார்வைக்கு வைக்கிறேன்.
இதோ அந்தக் கட்டுரை. - நா.மு.

வலைப்பதிவர் திருவிழா நடப்பது பற்றிய எனது நேர்காணல் www.ippodhu.com இல்.

’தமிழின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்பவர்கள் வலைப்பதிவர்கள்’
எழுதியவர் நாகா அதியன்-


August 20, 2015
‘‘என்னோட பத்தாவது ரிசல்ட்ட அடுத்தநாள் பேப்பர்ல வந்தபிறகு தான் தெரிஞ்சிட்டேன்” இது 20 வருடங்களுக்கு முன்பு. ஆனால் இன்று ப்ளே ஸ்கூல் போகிற குட்டீஸ் கூட டேப்லட், ஐபேட் கேட்கிற அளவிற்கு காலம் வெகு விரைவாய் பயணிப்பதை நாம் பார்க்க முடிகின்றது, கேட்கவும் முடிகின்றது.
இந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் நிறைந்து இருக்கின்ற இக்காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாய் உயர்ந்திருக்கின்றது. இதில் தங்களுக்கே உரிய தனித்த அடையாளத்தோடு பயணிப்பவர்கள் வலைப்பதிவர்கள்.
முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதல் முதல் மோடியின் வெளிநாட்டுப் பயணம் வரை சரியான புள்ளி விவரத்தோடு உண்மைகளை சுடச் சுட எழுதுவதில் கில்லாடிகள் வலைப்பதிவர்கள். இவ்வலைப்பதிவாளர்களை ஒருங்கிணைத்து புதுக்கோட்டையில் ‘‘வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா” நடத்த மும்முரமாய் இயங்கிகொண்டிருக்கும் கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகத்தோடு இலக்கிய உலகில் பயணிக்கும் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசினோம்.
பட்டிமன்றம், கலை இலக்கிய இரவு என பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் வலைத்தளத்தில் தீவிரமாய் இயங்கக் காரணம் என்ன?
2011 இல் ‘‘வளரும் கவிதை” எனும் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி எழுத ஆரம்பிச்சேன். என்னைப் பொறுத்தமட்டில் தமிழை அறிவியல் பூர்வமாக கொண்டு செல்வதற்கான முயற்சி தான் வலைப்பக்கம். உலகம் முழுவதும் எழுதக்கூடியவர்களோடு நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், நம்மை நாமே அப்டேட் செய்துகொள்வதற்கான ஆரோக்கியமான களம் இதுதான். அதனடிப்படையில் தான் புதுக்கோட்டையில் ‘‘கணினித் தமிழ்ச்சங்கம்” எனும் அமைப்பை உருவாக்கி வலைப்பக்கத்தில் எழுதக்கூடியவர்களை, எழுத முயற்சிப்பவர்களை ஒருங்கிணைத்து இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில், நம் மண்ணில் இளையவர்கள் புத்தம் புதிய சிந்தனைகளுடன் எழுதுகிறார்கள் என்பதை நினைக்கும் போது எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது......

To continue reading- http://ippodhu.com/தமிழின்-வளர்ச்சியை-அடுத/

சுதந்திர தினக் குறும்படம் –“நெய்ப்பந்தம்“



இன்று நம் சுதந்திரநாள்!
பெரும்பாலான தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்களில், விளம்பர இடைவேளைகளில் “சுதந்திரத்தைப் போற்றும்“ நடிகர்களின் பேட்டிகள்... பார்த்தும் படித்தும் சிலிர்த்துப் போனேன்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் திரு முரளி அப்பாஸ் அவர்கள் இயக்கிய ஒரு குறும்படம் நினைவிற்கு வந்தது.
உங்களுக்காக இதோ-
முரளி அப்பாஸ் அவர்களுக்குப்
பாராட்டுத் தெரிவிக்கிறார் திரைக்கலைஞர் டெல்லி கணேஷ்
--------------------------------------------------------------- 
இதில் இறுதிக்காட்சியில் வரும் கவிஞர் தஞ்சை ராகவ் மகேஷ் நம் நண்பர் அவர்தான் இந்த இணைப்பைத் தந்து உதவினார்.
அவருக்கு நன்றி.
குறும்படத் தோழர்களுக்கு நம் பாராட்டுகளைத் தெரிவிப்போம்
வெறும் 13நிமிடங்கள்தாம், வாருங்கள் பார்ப்போம்
உண்மையான சுதந்திர தியாகிகளைப் போற்றுவோம்.

----------------------------------------------
நன்றி - youtube 

“வலைப்பதிவர் திருவிழா-2015“ விழா, விருதுகள் விவரம்

 வலைப்பதிவர் திருவிழா-2015“ 
விழா, விருதுகள் விவரம்

-விழா விவரம்-

வலைப்பதிவர் அறிமுகம்,
கவிதை-ஓவியக்கண்காட்சி,
தமிழ்வலைப்பதிவர் கையேடு வெளியிடல்,
இடையிடையே இன்னிசைப்பாடல்கள்,
நூல்வெளியீடுகள், குறும்பட வெளியீடுகள்,
உரைவீச்சு,
விருதுகள் வழங்குதல்,
என
விழா விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளது

விழாவிற்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகத் தரப்படவுள்ள
தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”
தயாரிப்பதற்கு 
அடிப்படைத் தகவல்கள் தேவைப்படுவதால்,
கடந்த பதிவர் சந்திப்புகளில் கேட்கப்பட்டதை விடவும்
கூடுதலான சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
---------------------------------------------
விழா நடத்தும் முறை,
நிகழ்ச்சிகள்,
விருதுகள் அனைத்தும்
தமிழ்வலைப்பதிவர் பெரும்பாலானவர்
விழாவுக்கு வரவேண்டும்,
மகிழ்ச்சியாக விவரமாகத் தன்பதிவுகளைத்
தொடரவேண்டும்
எனும் நோக்கிலேயே திட்டமிடப்படுகின்றன.
இதில் இன்னும் என்னென்ன செய்யலாம்
என்று நம் நண்பர்கள் தரும்
நல்ல ஆலோசனைகள்
வரவேற்கப்படுகின்றன.
பின்வரும் மின்னஞ்சலுக்கு
உங்கள் ஆலோசனைகளை அனுப்பலாம்.
வரும் 20-8-2015க்குள் மின்னஞ்சல் செய்க.
நன்றி.

-----------------------------------------------------------------------

கையேட்டிற்காக
பதிவர்கள் தாம் வெளியிட்ட
நூல்கள்
குறும்படங்கள்
பெற்ற விருதுகள்,
சிறப்புகள்
விவரங்களைத் தர விரும்பினால் தரலாம்.

கையேட்டில் வெளியிட விரும்பினால்
பதிவர்கள்
தமது செல்பேசி எண், புகைப்படத்தை அனுப்பலாம்.
அல்லது ப்ரொஃபைல் லோகோ இருந்தாலும்
இணைத்து அனுப்பலாம்.
-------------------------- 
விழாவிற்கு வரவிரும்பாதவர் 
யாரும் இருக்கப் போவதில்லை. 
எனினும், வர இயலாதவர்களும் அந்த விவரத்துடன்
தமது வலைப்பக்க விவரங்களைத் தரலாம்.
அவர்களின் வலைப்பக்க விவரம் 
இலவசக் கையேட்டில் சேர்க்கப்படும்.
ஆனால் நேரில் வருவோர் மட்டுமே
விருதுபெறுவோரைத் தேர்வுசெய்வதில்
பங்கேற்க முடியும் என்பதை
இப்போதே தெரிவித்துக் கொள்கிறோம்.
--------------------------------- 

வலைப்பதிவர் திருவிழா-2015“இல்,
கீழ்க்காணும் விருதுகள் மகிழ்வுடன் வழங்கப்படவுள்ளன-
(1)   வளர்தமிழ்ப் பதிவர் விருது
(தமிழ்மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களித்து வரும் பதிவர்)

(2)   மின்னிலக்கியப் பதிவர் விருது” 
(கதை,கவிதைப் படைப்புகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(3)   வலைநுட்பப் பதிவர் விருது” 
( வலைப்பக்கம் எழுத உதவியாகத்
தொழில்நுட்ப விளக்கங்கள் எழுதிவரும் பதிவர்)

(4)   விழிப்புணர்வுப் பதிவர் விருது” 
(சமூக விழிப்புணர்வுப் பதிவுகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(5)   பல்சுவைப் பதிவர் விருது” 
(திரைப்படம், ஊடகம் செய்திகளைச் சுவைபட எழுதும் பதிவர்)

மேற்காணும் பதிவர் விருதுகள்,
விழாவிற்கு வருவோரில் இருந்தே
வருவோரின் கருத்தறிந்தே வழங்கப்படும்

இதே ஐந்து விருதுகளும்
வெளிநாட்டில் வாழும் தமிழ்ப்பதிவர்க்கும் உண்டு.
அவர்கள் மட்டும் விழாவிற்கு வந்தாலும் வராவிடினும் விருதுபெறுவோரின் வலைப்பக்கத்தில் வைப்பதற்கேற்ப
மின்பரிசாக” (டிஜிடல்) வழங்கப்படும்.

இதையும்
விழாவிற்கு வருவோரே தேர்ந்தெடுக்கத்
தகுதியானவராவர்.

தவிர,
சிறந்த பதிவுகளைத் தரும் பெண்பதிவர்விருதுகள்
விழாவுக்கு வரும் மூவருக்கும்,
விழாவுக்கு வந்தாலும் வராவிடினும்,
வெளிநாடு வாழ் பெண்பதிவர் இருவருக்கும்
ஆக ஐந்து விருதுகள் தரப்படவுள்ளன.

இவை தவிர,
விழாவிற்கு வருவோரில்
வயதில் மூத்த  பதிவர் ஐவர்க்கும்,
வயதில் இளைய பதிவர் ஐவர்க்கும்
(அவரவர் பிறந்தநாள் அறிந்து)
விருதுகள் தரப்படவுள்ளன.

மற்றும்  
நமது பாராட்டுக்குரிய
இருபெரும் முன்னோடிப் பதிவர்கள்,
விழா மேடையில்
பாராட்டுடன் கூடிய
விருதுகள் வழங்கிக்
கௌரவிக்கப்படுவர்
(இது சஸ்பென்ஸ்)

(விருதுகள்  பெறுவதில்,
புதுக்கோட்டை மாவட்டப் பதிவர்கள் மட்டும்
விலக்கி வைக்கப்படுகிறார்கள்)

அவற்றை இறுதி செய்து,
விழா அழைப்பிதழ்
விரைவில் வெளிவரும்.

விழா வருகையை உறுதி செய்ய 
இவ்வலைப்பக்கத்தின் மேல்வலது மூலையில் உள்ள
தகவல் பெட்டியைச் சொடுக்கி,
முன்பதிவு செய்திட வேண்டும்.
அந்த முன்பதிவுப் படிவத்தை,
திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில்
சென்று பதிவிறக்கியும்,
உடன் பதிவு செய்திட வேண்டுகிறோம்.

அதற்காக தினமும் உழைக்கும்
நமது வலைச்சித்தருக்கு நன்றி.

“வலைப்பதிவர் திருவிழா-2015“
அனைத்துத் தொடர்புகளுக்குமான மின்னஞ்சல்-

உஸ்... அப்பாடா!
இப்பவே கண்ணக் கட்டுதே!
அம்புட்டு தாங்க...

விழாவிற்கு வருக வருக என
அன்புடன் வரவேற்பது,
புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வலைப்பதிவர்கள்,

கணினித் தமிழ்ச்சங்கம்.