இப்படி இருக்கணும் திருமண அழைப்பு!


நாளிதழ்  “மேட்ரிமோனியல்”களில் இன்ன மதம்-சாதி, 
குலம்-கோத்திரம் எல்லாம் சொல்லி அதில்தான் 
மணமகன் (அ) மணமகள் வேண்டும் என்று வரும் விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு 
எரிச்சலும் கோவமுமாய் வரும்.... 
இப்படி ஒரு கேவலமான சமூகத்தில் 
நாமும் வாழ்கிறோமே என்று!

ஆனால், இதோ 
நம் நண்பர் 
திருச்சிப் பத்திரிகையாளர் வில்வம் விடுத்திருக்கும் 
அழைப்பு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது. 

சாதிமதங்களைப் பாரோம் - உயர்
                           சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
                     வேறுகுலத்தினராயினும் ஒன்றே 
- என்ற பாரதி வாக்கிற்கேற்ப-

மணஇணையராக 
மனிதரை மட்டுமே 
தேடும் நிகழ்வு!

நீங்களும் பாருங்கள்,
உங்கள் நண்பர்கள், உற்றார்-உறவினர்க்கும்
தவறாமல் சொல்லுங்கள்!

வணக்கம் !

"வாழ்க்கைக்குத்  துணை வேண்டும்"
என்பது உங்கள்
 தேடலாக  இருக்கலாம்.

உங்களுக்கு
"மன்றல்" வாழ்த்துகள்! 

வாழ்த்துகள்  மட்டுமல்ல...                                  
                                                                                    
வாய்ப்புகளும்  உண்டு.

பெரியார் சுயமரியாதை
திருமண நிலையத்தின்
"மன்றல் !"

இந்த வாய்ப்புகளை
சென்னையில்,
திருச்சியில்,

மதுரையில்,
நெல்லையில் 
வழங்கியது.

மீண்டும் 
சென்னைக்கு வருகிறது.

உங்களுக்கு,
உங்கள் பிரியமானவர்களுக்கு,

துணைவரை இழந்தோம்
என்போருக்கு,

பிரிந்தோம்
என்போருக்கு,

மாற்றுத் திறனாளி
நண்பர்களுக்கு...

அனைவருக்கும் 
வாய்ப்புகள்.

ஜாதிப் பிரிவுகள் இல்லை.
மதப் பிரிவுகள் இல்லை.

எல்லோரும் கூடலாம் 
இயன்றவரை  தேடலாம்.

பொறுமையாய்ப் பார்க்கலாம்
பொருத்தமாய் இணையலாம்.

நிகழ்ச்சிக்கு
வணிக நோக்கம் இல்லை,
மனித நோக்கம் உண்டு.

ஒரே ஜாதியில்
பணக்காரர் ஒரு ஜாதி
ஏழை ஒரு ஜாதி.

மன்றலுக்கோ ஜாதியும் இல்லை.
ஜாதிக்குள் ஜாதியும் இல்லை .

அனைவரையும்
அழைக்கிறோம்...

வாருங்கள்

வாய்ப்புகளை
வசப்படுத்துங்கள் !

மீண்டும்
வாழ்த்துகள் !   
    
திரு வில்வம் அவர்களது 
வலைப்பக்கம் - http://vilvamcuba.blogspot.in/
அலைபேசி -  98424 87645 (திருச்சி)
மின்னஞ்சல் - vilvamvc@gmail.com     
-------------------------------------------------------------------------------------    
அழைப்பிதழ் மாதிரி கேட்கும் நண்பர்களுக்காக

கடந்த 01-02-2021 அன்று நடந்த 

என் மகள் மு.லட்சியா-இரா.முத்துக்குமார் இணையரின் திருமண அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன். 

நல்ல தமிழில், கூடுமானவரை பெயர்கள், முன்னெழுத்துகள் தமிழில், 

            புலவர் செந்தலை ந.கவுதமன் தலைமையில்,

முனைவர் கு.திருமாறன் வள்ளுவ நெறியில் நடத்திய திருமணம்.

மணமக்களுடன் பெற்றோர்

 பின்குறிப்பு- இந்தத் திருமணத்திற்கு வந்திருந்தோர் அனைவர்க்கும், தேங்காய் பழம் போட்டுத் தருகின்ற பையில் எனது இலக்கணம் இனிது எனும் 96பக்க நூலுடன் கோவில்பட்டிக் கடலை உருண்டை ஒன்றும் வழங்கப் பட்டது என்பதையும் தெரிவித்து மகிழ்கிறேன். 

அந்த நூல் பற்றிய அறிஞர்களின் கருத்தும் இதே வலைப்பக்கத்தில் வேறுசில பக்கங்களில் வெளியிடப் பட்டுள்ளது 

தேடுங்கள் கிடைக்கப்படும்! நன்றி.

------------------------------------------------------------------------------------------------- 

முதல், நான்காம் பக்கங்கள் கீழே

இரண்டாம், மூன்றாம் பக்கங்கள் கீழே

முதல்பக்கம் -


நான்காம் பக்கம் -


இரண்டாம் பக்கம் -
 
 மூன்றாம் பக்கம் -

இந்த அழைப்பிதழ் நன்றாக உள்ளதென்று நண்பர்கள் நினைத்தால்,

முன்மாதிரியாகக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்!

21 கருத்துகள்:

  1. இனிய வணக்கம் ஐயா...
    அமிர்தமான அழைப்பு. எந்தவிதமான வியாபார நோக்கமும் விளம்பர நோக்கமும்
    இல்லாது இயல்பாக விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பிதழ். நல்ல பல இணைகள் இணையட்டும்..
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இந்த செய்தியை நம்மால் இயன்ற அளவுக்கு இன்னுமொருவருக்கேனும் கொண்டு செல்வோம்...
    என் முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன் ஐயா..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.
    வில்வத்தின் அறிவிப்பு சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்......பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா. எனது பக்கம் கவிதையாக- அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்

    பதிலளிநீக்கு
  3. அண்ணா, மன்றல் என்றொரு வார்த்தையை இப்போதான் தெரிஞ்சுகிட்டேன்.
    அருமையான முயற்சியா தெரிகிறதே !

    பதிலளிநீக்கு
  4. வரவேற்கக் கூடிய அற்புதமான முயற்சி
    பதிவாக்கி அனைவரும் அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. திரு வில்வம் போற்றப்பட வேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  6. சமூக அக்கறையுள்ள தங்களின் இந்தப் பதிவைப் பார்த்து விருப்பமுள்ளோர் தொடர்பு கொண்டு பயன்பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  7. ஆகா...!

    திரு.வில்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. இணைத் தேடுவோருக்கு வாய்ப்பாக, அறிவிப்பை வெளியிட்ட தோழர் முத்துநிலவன் அவர்களுக்கு எம் நன்றி ! வி.சி.வில்வம்

    பதிலளிநீக்கு
  9. நல்ல முயற்சி . வரவேற்கத் தக்கது. வில்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  10. இணையைத் தேடும் பொழுதினிலே வினையாய் அமையா
    வார்த்தைகள் நன்றே ! திரு .வில்வம் அவர்களுக்கு என்
    மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் .பகிர்ந்துகொண்ட
    தங்களும் என் பணிவன்பான வணக்கங்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
  11. அருமை...மனமும் மனமும் சேரட்டும்...வாழ்க்கை வளமாகட்டும் பலருக்கு!
    வில்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்! பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  12. புதுமையாக இருந்தது.

    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தாங்கள் அறிமுகம் செய்த படைப்பு
    நாங்கள் விரும்பும் நல்ல மாற்றம்
    "திருச்சிப் பத்திரிகையாளர் வில்வம் விடுத்திருக்கும்
    அழைப்பு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது." என்பதை
    நானும் வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  15. ok... we will see how you print the invitation for your daughter's marriage... parthu.... mappillai veettlla... rendu podu pottu anuppa poranga...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, 2003இல் நடந்த என் மகளின் திருமண அழைப்பு நகலை உங்களுக்கு அனுப்பத் தயாராக இருக்கிறேன். உங்களின் மின்னஞ்சல் முகவரியை உடனே அனுப்புங்கள். அந்தத் திருமணம், காதல் மற்றும் கலப்புத் திருமணம் மட்டுமல்ல சமயச்சடங்கு மற்றும் சாதி மறுப்புத் திருமணமாக நடந்தது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன்

      நீக்கு
    2. இதுபோல் கேட்கும் நண்பர்களுக்காக, கடந்த 01-02-2021 அன்று நடந்த என் மகள் மு.லட்சியா-இரா.முத்துக்குமார் இணையரின் திருமண அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன். நன்றாக உள்ளதென்று நண்பர்கள் நினைத்தால் இதனைப் பயன்படுத்திக் கொள்வதில் எனக்கேதும் தடையில்லை! பின்குறிப்பு- இந்தத் திருமணத்திற்கு வந்திருந்தோர் அனைவர்க்கும், தேங்காய் பழம் போட்டுத் தருகின்ற பையில் எனது “இலக்கணம் இனிது” நூலுடன் கோவில்பட்டிக் கடலை உருண்டை வழங்கப் பட்டது என்பதையும் தெரிவித்து மகிழ்கிறேன். அந்த நூல் பற்றிய அறிஞர்களின் கருத்தும் இதே வலைப்பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது தேடுங்கள் கிடைக்கப்படும்! நன்றி.

      நீக்கு
  16. வில்வ மரம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் நண்பர் வில்வம் அவர்களின் உள்ளே மாமனிதன் இருப்பதை உணர்கிறேன் !

    பதிலளிநீக்கு
  17. தமிழ்ச்சுவை தாண்டவமாடுகிறது ஐயா! அற்புதமான அழைப்பிதழ்!

    பதிலளிநீக்கு