அது, 1940ஆம் ஆண்டு...
உண்மையைச் சொன்னால் உலகம் ஆங்கிலேய வெறித்தனத்தைத் தெரிந்து கொண்டு
காறித்துப்பிவிடுமாம்! அதனால், ஜெனரல் டயர் என்னும் ஆங்கிலப் பிரபுவை நேருக்கு
நேராக நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்காக லண்டன் நீதிமன்றத்தால் தூக்குத்
தண்டனை வழங்கப்பட்டிருந்த அந்த 40வயது இந்தியரைப் பைத்தியம் என்றனர் ஆங்கிலேயர்.
இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களில் சிலர் லண்டனில் நடந்த அந்த
வழக்கிலிருந்து இவரை விடுவிக்க வேண்டுமென்று அன்றைய இந்தியாவின் பிரபல வக்கீல்
கிருஷ்ண மேனனை அணுகினர். அவரும், “அவரைப் பைத்தியம் என்று சொல்லிவிட்டால் வழக்கு
நிற்காது!” என்றார்.
ஆனால், அந்த தேசபக்தர் இதற்கு ஒப்புக்கொள்ள வில்லை! வழக்கு நடந்தது
லண்டன் நீதிமன்றத்தில் அந்தச் சிங்கம் முழங்கியது –
“நான் பைத்தியமல்ல
என்பெயர் முகமது சிங் ஆசாத்!’
ஆங்கில நீதிபதிக்குப் புரிந்தது இப்படி ஒரு பெயர் இந்தியாவில் இருக்க முடியாதென்று!
ஏனெனில், இந்தியப் பெயர்களில் ஏதாவதொரு மதத்தின் பெயரும், உள்ளே சாதியின் பெயரும்
கூட இருக்குமென்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதோடு, முகமது என்பது இசுலாமியப்
பெயர்! சிங் என்பது சீக்கியப் பெயர்! ஆசாத்(சுதந்திரம்)என்பது இந்துப் பெயர்!
இப்படி மும்மதங்களின் சேர்க்கையாக ஒரு இந்தியப் பெயர் இருக்க முடியாதே!?!
“சொல் உன் உண்மையான பெயர் என்ன?”
“நான்
மதமற்றவன், இந்தியன்”
திரும்பவும் சொன்னார் அந்த வீரர்!
“ஆங்கில நாய்களை இந்தியாவிலிருந்து விரட்டுவதே என் நோக்கம்! 1919 ஏப்ரல்-13 அன்று, எனது ஜாலியன் வாலாபாக் மண்ணில் எந்தத் தவறும் செய்யாத சுமார் 20,000
இந்தியர்களைக் காக்கை குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டுக்கொல்ல ஆணையிட்டான் அந்த
மைக்கேல் டயர் எனும் ஆங்கிலேயன். அந்த அழகிய பூங்கா, மதம்கடந்த எமது மக்களின்
ரத்தத்தால் சிவந்துபோனது அப்போது -எனது 20வயதில்-- கண்ணெதிரில் பார்த்த இந்தப்
படுகொலைக்கு பழிவாங்கவே 20ஆண்டுகளாகக் காத்திருந்தேன். 1940 மார்ச்-13 அன்று
லண்டன் மன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த
ஜெனரல் டயரை நான் என் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பழிதீர்த்துக் கொண்டேன்.
ஜாலியன் வாலாபாக்கில் இந்துக்களும் இசுலாமியர்களும் சீக்கியர்களும் அன்று இந்தியர்
எனும் பெயராலேயே கூடியிருந்தனர். நான் மதம்கடந்த அந்தத் தியாகிகளின் அடையாளம்!
எனக்கு மதமில்லை நான் இந்தியன்! முகமது சிங் ஆசாத்!“
என்ன ஒரு தேசப்பற்று! மதம் கடந்த தேசப்பற்று! தூக்குத் தண்டனையை
நிறைவேற்றியதும் சீக்கிய மத இறுதிச் சடங்குகளைக் கூட அனுமதியில்லை!
அந்த மாவீரனின் உண்மைப்பெயர் உத்தம்சிங் என்பது!
அவர்பிறந்த பஞ்சாபின்
அன்றைய ஆங்கிலஅரசு, அவரது தியாகத்தை தேசபக்தியாக ஏற்க மறுத்த்து மட்டுமல்ல, டயரின்
மனைவிக்கு அனுதாபச் செய்தியும் அனுப்பியது!
காந்தியும் நேருவும்கூட “உத்தம் சிங்கின் வழிமுறை தவறு“ என்றனர்!
ஆனால், விஷயம் தெரிந்த பஞ்சாப் மக்கள், அடுத்தமாதம் நடந்த ஜாலியன் வாலாபாக்
-20ஆம் ஆண்டு- நினைவாஞ்சலியில் ஆயிரக்கணக்கில் கூடிநின்று, முழக்கமிட்டனர்
“உத்தம்சிங் வாழ்க!
பாரத் மாதாகீ ஜே!”
நெடுநாள் கழித்து, சுதந்திரம் பெற்றுப் பல்லாண்டுகள் கழித்தே அந்த
உத்தமரின் தியாகம் இந்திரா அரசால் ஏற்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டது.
ஆனால்-
மக்கள் முன்னரே மரியாதை செலுத்திவிட்டனர்!
ஏனெனில்,
“விதைத்தவன் தூங்கலாம்!
விதைகள் தூங்குவதில்லை“அல்லவா?
நாம் உத்தம்சிங்கின் விதையில் முளைத்த-கிளைகள்-மரங்கள் -விழுதுகள்!
நம் தேசபக்தப் பூங்காவைக் குரங்குகளிடமிருந்து காப்போம்!
வாழ்க உத்தம்சிங்குகள்! வளர்க மதம் கடந்த இந்திய தேசபக்தி!
--------------------------------------------------------------- பி.கு. (1) “ஜாலியான் வாலாபாக் படுகொலையில் ஈடுபட்டவன் ஜெனரல் டயர் ( Reginald Edward Harry Dyer ). முகம்மது சிங் சுட்டுக் கொன்ற Michael O'Dwyer என்பவர் அப்போது பஞ்சாபின் கவர்னராக இருந்தவர். ஜெனரல் டயரை காப்பாற்ற முயன்றவர். இவர் தான் சுட்டுக் கொல்லவும் தயங்காதே என்ற உத்தரவை ஜெனரல் டயருக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த தகவல் களையும் இணைத்துச் சொல்வது சில தெளிவுகளையும் பெயர் குழப்பங்களையும் தவிர்க்கும்“- --என்று பின்னூட்டத்தில் தெளிவுறுத்திய எழுத்தாளர் நீலன் அவர்களுக்கும்,
“ஒரு சின்ன
திருத்தம் மட்டும் சொல்ல விழைகிறேன். உத்தம் சிங் கொல்வதற்கு முன்பே நோய்
வாய்ப்பட்டு இறந்து போனான் கொடுமைக்காரன் ஜெனரல் டயர் . உத்தம் சிங் கொன்றது
டயரின் கொடுமைக்கு துணைபோன அன்றைய பஞ்சாப் துணை நிலைய ஆளுநர் மைக்கேல் ஓ டயர்(michael o'dwyer). கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப்
பின் லண்டனில் ஒரு கூட்டத்தில் அந்தக் கயவன் சொன்னான் " வாய்ப்பு
கிடைக்குமானால் இன்னொரு ஜாலியன் வாலாபாக் படுகொலையை இன்று ஆப்ப்ரிக்காவில்
நடத்தவும் தயங்கமாட்டேன் என்று" சொல்ல,
"அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது மைக்கேல்" என்று அவனெதிரில் தோன்றி முழங்கிக்கொண்டே அவனை தனது துப்பாக்கியால் தீர்த்துக் கட்டியது பஞ்சாப் சிங்(கம்)“ – என்று பின்னூட்டத்தில் கூடுதல் தகவல் தந்த எழுத்தாளரும் உதவிக்கல்வி அலுவலரும், வலைப்பதிவருமான நண்பர் தி.ந.முரளிதரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
"அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்காது மைக்கேல்" என்று அவனெதிரில் தோன்றி முழங்கிக்கொண்டே அவனை தனது துப்பாக்கியால் தீர்த்துக் கட்டியது பஞ்சாப் சிங்(கம்)“ – என்று பின்னூட்டத்தில் கூடுதல் தகவல் தந்த எழுத்தாளரும் உதவிக்கல்வி அலுவலரும், வலைப்பதிவருமான நண்பர் தி.ந.முரளிதரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இத இத இதத்தான் நான்
எதிர்பார்க்கிறேன். தகவல்களில் தவறுஇருந்தால் திருத்திக்கொள்வது அவசியம்தானே? நான்
ஒன்றும் குமாரசாமியில்லயே(?)
நன்றி நண்பர்களே!
-----------------------------------
பி.கு. (2) 31-05-2015 - “மறைக்கப்பட்ட இந்திய வரலாறு”இன்றைய வகுப்புக்காக எடுத்த குறிப்புகளிலிருந்து... நன்றி -திருப்பூர் - DYFI