1991-92 ஆம் ஆண்டுகளில்
புதுக்கோட்டை
மாவட்டத்தில் நடந்த
“அறிவொளி இயக்கம்”
மாபெரும் மக்கள் இயக்கமாக நடந்தது.
மாவட்டம் முழுவதும் உள்ள
2,90,000 புதியகற்போர்க்கு
29,000 தொண்டர்கள்
(பெரும்பாலும் மாணவிகள், மாணவர்கள்!)
தத்தம் ஊர்களில் தெருக்களில் ஒவ்வொருவரும்
( 30 வயது முதல் 60 வயதுக்கும் மேற்பட்ட
10 முதல் 20 புதிய கற்போர்க்கு )
ஓராண்டு முழுவதும் நாளொன்றுக்கு
ஓரிரண்டுமணி
நேரம்
வகுப்பெடுத்து, கற்பித்த மாபெரும் சேவைப்பணி!
5 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,
13 ஒன்றிய / 2 நகராட்சி ஒருங்கிணைப்பாளர்கள்,
ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 5 உதவி ஒருங்கிணைப்பாளர்கள்
இவர்களோடு,
அரசு அதிகாரிகள்,
அறிவொளித் தொண்டர்கள்,
மக்கள்
எனும்
முக்கோண ஒற்றுமையின்
வெற்றி அது!
அதில்,
இரண்டாண்டுக்காலம் நானும்
பணியாற்றியதை எனது வாழ்நாள்
பெருமைகளில் ஒன்றாக நினைக்கிறேன்.
அந்தப் பொன்னான பொழுதில்,
திருமிகு ஷீலாராணி சுங்கத் இ.ஆ.ப.,அவர்கள்
மாவட்ட ஆட்சியர்/அறிவொளி இயக்கத் தலைவராகவும்,
திருமிகு ஆர்.விவேகானந்தன்
(TIIC Manager)
திருமிகு கவணகன், (RMS Employee)
திருமிகுடி. சிவராமகிருஷ்ணன் (LIC Employee)
திருமிகு கண்ணம்மாள் (LIC Employee)
இவர்களுடன்
நா.முத்துபாஸ்கரன் எனும் இயற்பெயருடன்(!)
அரசுப் பள்ளி ஆசிரியராகிய நானும்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாகப்
பணியாற்றினோம்.
முதற்கட்ட அறிவொளிக் காலத்தில்(1991-92)
முனைவர் ஆர்.இராஜ்குமார்
அவர்கள்
எங்கள் மாவட்ட அலுவலக மேலாளராகவும்,
பின்னர் தொடர்அறிவொளியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் (1993-94)
பணியாற்றினார்.
திருமிகு மாணிக்கத்தாய் கவணகன்,
திருமிகு வே.இராமலிங்கம்
ஆகியோர்
முறையே மகளிர், இளைஞர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பணியாற்றினார்கள்.
ம்… அது ஒரு
மறக்கவியலாத
மாபெரும் நினைவுகளைச் சுமந்த காலம்!
அப்போது நான் அந்த மாபெரும் மக்கள் இயக்கத்தின்
நாடகம்-பாடல்-பிரச்சாரங்களுக்குப் பொறுப்பாகவும்,
பத்திரிகை ஊடகத் தொடர்பாளராகவும் பணியாற்றினேன்.
அந்தப் பணிகளின் நினைவுகள் மகத்தானவை!
அந்தப் பாடல்கள் நாடகங்களின் உருவாக்கத்தில்
சென்னைக் கலைக்குழுத் தலைவர்
பிரளயன்
அவர்களின் பங்களிப்பு மகத்தானது!
பாடல்களை நமது மக்கள் கவிஞர்கள் எழுத,
பெரும்பாலான இசையை
கரிசல்குயில் கிருஷ்ணசாமி வழங்கினார்.
25,000 பாடல் ஒலிநாடாக்கள் உருவாக்கத்தில்
அன்றைய
மாவட்ட
ஆட்சியரின்
தனிஉதவியாளர்
திருமிகு ஸ்டாலின் அவர்கள்
(பின்னாளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வு)
ஒத்துழைப்பு மகத்தானது.
அந்தப் பாடல்கள் , நாடகங்களில்
பங்களித்தவர்கள்
அதன்பின் கடந்த 30ஆண்டுகளில்,
மகத்தான கலைஞர்களாகிப்
புகழ்பெற்றுவிட்டார்கள்!
அறிவொளி இயக்கத்தில்,
நான் எழுதிய இரண்டு
பாடல்கள்
மாவட்டம் முழுவதும் அப்போது பிரபலம்!
“சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி”
எனும் பாடலைப் பாடிப் புகழ்சேர்த்த
திருமிகு
செந்தில் குமார் அவர்கள்,
இப்போது, செந்தில்தாஸ் எனும் பெயரோடு,
“தர்மதுரை“ படத்தில்
“ஆண்டிப்பட்டி கணவாக் காத்து ஆளை தூக்குதே!”
எனும் புகழ்பெற்ற பாடல்
உட்பட
நூறுபாடல்களுக்குமேல்
பாடி,
திரைப்படப் பாடகர்
ஆகி, இப்போது
இசையமைப்பாளராகவும்
ஆகிவிட்டார்!
இதேபோல,
“சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டோம்
அண்ணாச்சி”
பாடலைப் பாடிய
கீரனூர் அன்றைய அரசுப்பள்ளி இசையாசியர்
திருமிகு லலிதா அவர்கள்
தமிழ்த்திரையின் புகழ்பெற்ற நட்சத்திரமான
ஜோதிகா நடித்த
36வயதினிலே படத்தில்,
“வாடி ராசாத்தி..” பாடலைப் பாடிப் புகழ்பெற்றுவிட்டார்!
(இப்போது இவரது மகன் சந்தோஷ் திரைப்பட இசையமைப்பாளர் )
https://www.youtube.com/watch?v=K0UwXuW-DwA
----------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கத்தில்
மாவட்ட ஆட்சியர் சேர்த்த
பெண்கள் சைக்கிள் ஓட்டுவது
எனும் புதிய கல்வி
மாவட்டம் தாண்டியும் புகழ்பெற்றது
எனது பாடல், இந்தி, தெலுங்கு முதலான பிற பல இந்திய மொழிகளில் ஆக்கப்பட்டதை
நானே கண்டேன். இதற்குக் காரணம்,
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எங்கள் ஆட்சியர் திருமிகு ஷீலாராணி அவர்கள்தான்!
அதோடு,
இந்த சைக்கிள் இயக்கம் பற்றிய பாடம்
பிரபல எழுத்தாளர் சாய்நாத் அவர்கள் எழுத, கர்னாடகா மாநில 12ஆம் வகுப்புப் பாடநூலிலும் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது!
------------------------------------------------------------------------
இதோடு,
நமது
அறிவொளி இயக்க நாடகக் குழுவில்
நடித்த
கலைஞர்கள்
திருமிகு பிரகதீஷ்வரன்-செந்தில்குமார் இருவரும்
“புதுகை
பூபாளம் குழுவினர்” என
மிகப்பெரும்
புகழ்பெற்ற மேடைக்கலைஞர்கள்
என்பது
அறிவொளி இயக்கத்தின் பெருமை!
இந்த
எனது அறிவொளிப் பாடல்,
நாடக அனுபவங்களை இதுவரை
நான் எங்கும் பதிவு செய்யவில்லை!
இப்போது
வரும்
01-09-2020 அன்று
வலையரங்க
நிகழ்வாக
இசை-உரை
நிகழ்த்தப் போகிறேன்-
வருக
நண்பர்களே!
நிகழ்வைக் காண வருக நண்பர்களே!
------------------------------------------------
அதோடு,
கடந்த 29-9-2020 அன்று
“தேசியக் கல்விக் கொள்கையின்
அரசியல் பின்னணி”
தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சங்கத்தின்
தமிழ்மாநிலக்குழுவின் (BSNLEU-TNC)
முகநூல் நேரலையில்
எனது உரையின் இணைப்பு
இது-
வாருங்கள் பாருங்கள் நண்பர்களே!
------------------ -------------------
இனி
அறிவொளிப் பாடல்கள் சில...
|
(இந்தப் பாடல்- பேரா.ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டை) |
|
இந்தப்பாடலை எழுதியவர் - ச.தமிழ்ச்செல்வன் |
|
(இந்தப் பாடல் எனது - நா.முத்துபாஸ்கரன்)
---------------------------------------------
அறிவியல் இயக்கம், பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பெரும்பணியைச் செய்தது, ஆனால், பெரும்பாலான தொகுப்புகளில் எழுதியவர் பெயரைப் போட மறந்துபோனது எழுதிய கவிஞர்களுக்கு வருத்தம்தான். அறிவொளி வெற்றிவிழா மலர், நான் தொகுத்தது என்பதால் அதில், எழுதியவர் பெயர்களைச் சேர்த்துப் போட்டேன் மற்ற பாடல்களையும் இனி நமது வலைப்பக்கத்தில் தொடர்ந்து வெளியிட முயற்சி செய்கிறேன். நன்றி. |