1)
வாலிபப் பசங்க யாரு?
வயசானவுங்க யாரு?-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கிறது?
வம்சம்“
பாத்துட்டுத் தூங்கப் போயிட்டா அவங்க வயசானவுங்க.
“ஆஃபீஸ்“ முடியிற வரைக்கும்
முழிச்சிருந்து பாத்தா
வாலிபப் புள்ளைங்க..
(2)
முற்போக்குன்னா என்ன?
பிற்போக்குன்னா என்ன?
நம்ம
பிள்ளைங்க டென்னிஸ் விளையாடுறாங்கல்ல? அதுல,
ஆட்டத்தைப்
பாத்தா முற்போக்கு, ஆடையைப் பாத்தா அது பிற்போக்கு.
(3)
ஆனந்த
விகடன்-அமுதசுரபி ஒப்பிடுக
ஆனந்த விகடன் படிச்சா யூத்து! அமுத சுரபி படிச்சா...மூப்பு..! (நினைப்புல?)
(4)
கடவுள் இல்லன்னு
சிலபேர் சொல்றாங்களே இல்லங்கிறத நிருபிக்க முடியுமா?
நல்லா
இருக்கே கத! இந்த குடத்துல தண்ணி இருக்குன்னு சொல்றவங்கதான நிருபிக்கணும்.
இல்லங்கிறவங்க குடத்தக் கவுத்துக்காட்டினா போதாதா?
(5)
அரசியல் சேவைக்காகவா?
தேவைக்காகவா?
தேச
தேவைக்காக என்று ஆரம்பித்து தேக சேவைக்காகன்னு போயிருச்சே! ஆனா அது அரசியல்
இல்லிங்க... இன்னும் நல்ல அரசியல் வாதிங்க இருக்காங்க.. நீங்க சேவைக்காக்க்
கேக்குறீங்களா தேவைக்கு கேக்குறீங்களா?
(கேள்வியும்
நானே, பதிலும் நானே!-
சத்தியமா
ஆனந்தவிகடனுக்காக எழுதலீங்க...
நம்ம வலைப்பக்கத்துக்காகத்தான்...!)
தொடர்ந்து சீரியஸாவே எழுதிக்கிட்டிருந்தா
நமக்கு வயசாயிட்டதா யாரும் நெனச்சிறக்கூடாதில்ல.. ?