வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுப் பெருமையும் மிகுந்த
தமிழ்நாட்டு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க இடத்தைக்
கொண்டிருப்பது
புதுக்கோட்டை மாவட்டம்
அதிலும் தொல்லியல் சான்றுகள் அதிகமுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம்!
மனிதகுல வரலாற்றில் ஆதி இனக்குழு மக்கள் வாழ்ந்த
சான்றுகளைக் கொண்டிருக்கும் உலகின் மிகச்சில இடங்களில்
புதுக்கோட்டைப் பகுதியும் ஒன்று!
உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருப்பது
இந்தியாவில் தான்.
இந்தியாவிலேயே அதிகமான கல்வெட்டுகள் 60
விழுக்காட்டுக்கும் மேலாக, தமிழில்தான் உள்ளன
என்பது ஒரு பெருமை எனில்,
தமிழ்நாட்டிலும் மிக அதிகமான தொல்லியல் சான்றுகள்,
குறிப்பாக சமணச் சான்றுகள் அதிகமாக உள்ள மாவட்டம்
புதுக்கோட்டைதான் என்பது தனிப் பெருமை!
இந்த எமது மாவட்டப் பெருமை இந்திய வரலாற்றில் சரியாகச் சொல்லப்பட வில்லையோ எனும் சந்தேகம் எனக்குண்டு!
மன்னர்
வரலாறுகளையே சொல்லிக்கொண்டிருக்கும் நாம், அதற்கும் முந்திய நம் ஆதித் தமிழர் வரலாற்றை எப்போது சொல்லப் போகிறோம்
எனும் கவலை எப்போதும் என்னைக் குடையும்!
அதைப் போக்கக் கூடிய வாய்ப்பு ஊடகத்திற்குத்தான் உண்டு!
அந்தப் பெருமைக்குரிய புதுக்கோட்டை மாவட்ட
ஊடக நண்பர்கள் தற்போது, சங்கமாகச் சேர்ந்து, இணைந்து
இயங்கிட ஓர் அலுவலகமும் பிடித்து,
சூட்டோடு சூடாக ஒரு கையேட்டையும்
சிறப்பான முறையில் கொண்டுவந்திருக்கிறார்கள்!
அதுவும் எல்லாவற்றிலும், சாதி மற்றும் கட்சி-அரசியல் புகுந்து
தமிழரின் பெருமைகளைப் பின்னுக்கு இழுத்து வரும்
இன்றைய சூழலில்
இது
எனக்குப் பெரிதும்
மன
நிறைவைத்
தருவதாக உள்ளது.
பாராட்டுக்குரிய புதுக்கோட்டை மாவட்டப்
பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள்
மிகுந்த பாராட்டிற்குரியவர்கள் –